இன்று மாலைக்குள் பதவி விலக வேண்டும்- மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை.

தங்களுக்கு அளித்த வாக்குறுதியின் படி இன்னும் இரண்டு நாட்களுக்குள் பதவி விலகாவிட்டால கடுமையான மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும் என்று இந்திய வம்சாவளி பிரதமரும் இந்தியாவின் பொம்மை பிரதமருமான மாதவ்குமார் நேர்பாளுக்கு மாவோயிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது இன்னும் 48 மணி நேரத்திற்குள் பதவி விலகிவிடுவேன் என்று கொடுத்த உத்திரவாதத்தை செயல்படுத்தாமல் இந்தியாவின் அறிவுரையின் பெயரால் பதவியை விட்டு விலகாமல கபடியாடிக் கொண்டிருக்கிறார் மாதவ் குமார் நேர்பாள். இது

குறித்து மாவோயிஸ்டுகள் தலைவர் நாராயண்காஜி ஸ்ரீஸ்தா ஹிமாலயா டைம்ஸ் பத்திரிகையில் கூறியிருப்பது: தற்போது 22 கட்சிகள் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இதில் பிரதமர் தலைமையில் பல கட்சிகள் நேபாள மாவோயிஸ்டு கட்சியில் பிளவை ஏற்படுத்த சதி செய்கின்றனர். மேலும் ஆட்சி அமைக்கும் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரதமர் மாதவ் குமார் தவறி விட்டார். இதன் மூலம் அவர் எங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார். எனவே செவ்வாய்க்கிழமை (ஜூன் 1) மாலைக்குள் பதவி விலகாவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக நேபாளத்தின் முக்கியமான 3 கட்சிகளான சிபிஎன் மாவோயிஸ்டு, நேபாள காங்கிரஸ், பிரதமர் மாதவ் குமாரின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. ஆனால் இதில் சுமுகமான முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. எனவே ஆட்சிக்கு மாவோயிஸ்டுகள் அளித்து வரும் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வும், நாடாளுமன்ற பதவிக் காலம் நீட்டிப்பு மசோதாவை நிறைவேற்றும் விஷயத்துக்காகவும் பிரதமர் மாதவ் குமார் நேபாள் பதவி விலக முன்வருவார் என்றே தெரிகிறது.