இன்று காலை 9.30 மணியளவில் முல்லைத்தீவுப்பகுதியில் விமானத்தாக்குதல்

8/22/2008
முல்லைத்தீவு விஸ்வமடுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது இலங்கை விமானப்படையினரின் ஜெட் ரக விமானங்கள் விமானத்தாக்குதலை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

முல்லைத்தீவு விஸ்வமடுவில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது இன்று காலை 9.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இத்தாக்குதலில் விடுதலைப்புலிகளின் சில தளங்கள் தாக்கியழிக்கப்பட்டதாக விமானி உறுதிப்படுத்தியுள்ளதாகவும் விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது..

அதேவேளை விமானப்படையினருக்கு சொந்தமான MI-24 வானூர்திகள் இன்று காலை 6.30 மணியளவில் துனுக்காய் பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் பயிற்சி நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் விமானபடை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்