இன்று ஈழ, மலேஷியத் தமிழர்களுக்கு ஏற்பட்ட கதி நாளை நமக்கும் ஏற்படலாம்- நெடுமாறன்.

பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில், கர்நாடகத் தமிழர் இயக்கம் சார்பில் நேற்று(18ந் தேதி) நடைபெற்ற ஒருங்கிணைந்த தமிழ் தேசிய இன விடுதலை எழுச்சி மாநாட்டில், இது குறித்து அவர் பேசுகையில்,”உலகத் தமிழர்களின் வரலாற்றில் இது மிகவும் சோதனைக்காலம். தமிழன் என்ற அடையாளமே தெரியாமல் தமிழர்களை அழிக்கும் பணியில் இந்தியா உள்ளிட்ட சில உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அந்த நாடுகள் சேர்ந்து இலங்கைப் போரில் 2 லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்ய உதவின. இதை உலக நாடுகள் வேடிக்கை பார்த்தன.எந்த ஒரு இனத்தையும் வல்லரசு நாடுகள் ஒடுக்கியதாக வரலாறு கிடையாது. பிரெஞ்சு மற்றும் அமெரிக்கப் படைக்கு எதிரான போரில் வியட்நாமும், வெள்ளையர்களுக்கு எதிரான போரில் தென்னாப்பிரிக்காவும் வெற்றிபெற்றதைப் போல ஈழத்தமிழினமும் வெற்றிபெறும்.இலங்கையில் நடந்து முடிந்த போர்,உலகத் தமிழர் விடுதலைக்கான முதல் கட்ட போராட்டமாகும். இலங்கையில் தமிழர்களுக்கு நேர்ந்த கதி மலேசியா நாட்டுக்கோ தமிழ்நாட்டுக்கோ பிற மாநிலத் தமிழர்களுக்கோ நேரலாம்.இனியும் எந்த ஒரு நாட்டின் உதவிக்காகவும் காத்திருக்காமல், ஏமாறாமல் உலகிலுள்ள 10 கோடித் தமிழர்கள் ஒன்று சேர்ந்து உலகத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை நடத்தி வெற்றிகாண வேண்டிய தருணம் வந்துவிட்டது” என்று பழ.நெடுமாறன் குறிப்பிட்டார்.

10 thoughts on “இன்று ஈழ, மலேஷியத் தமிழர்களுக்கு ஏற்பட்ட கதி நாளை நமக்கும் ஏற்படலாம்- நெடுமாறன்.”

 1. தமிழர்கள் ஒற்றுமையாக?????? கி…கீகிகீகீ….கீ

 2. “இனியும் எந்த ஒரு நாட்டின் உதவிக்காகவும் காத்திருக்காமல், ஏமாறாமல் உலகிலுள்ள 10 கோடித் தமிழர்கள் ஒன்று சேர்ந்து உலகத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை நடத்தி வெற்றிகாண வேண்டிய தருணம் வந்துவிட்டது” / ஐயா நெடுமாறன் அவர்களே, இதைச் சொல்ல ஏன் பெங்களூருக்குப் போகணும்? வாங்களேன் ஒரு நடை உத்தபுரம் போய் சொல்லிவிட்டு வரலாம்… என்று நான் கூப்பிட்டால் இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு என்று உங்களுக்கு கோபம் வரும். அங்கே வந்து பேசிப்பாருங்கள்.

  எப்படி. என்ன திட்டத்தின் கீழ் ஒன்று சேர்வது, ஊரையும் சேரியையும் தனித்தனியே வைத்துக்கொண்டா, தமிழர் என்ற அடிப்படையில் எந்தவொரு சாதியாரும் தமக்குள்ளே முடங்கிப்போகாமல் பிறசாதியினரோடு ரத்தசம்பந்தம் வைத்துக்கொள்ளலாமா என்றெல்லாம் கொஞ்சம் விலாவாரியாக பேசுங்கள். அதைவிட்டு இப்படி பொத்தாம்பொதுவாக தமிழன் என்று இன்னும் எத்தனை நாளைக்குப் பேசி இன்னும் எவ்வளவு பேரை சாகக்கொடுப்பீர்கள்?

  -ஆதவன் தீட்சண்யா

  1. ஆதவன் ஒரு உத்தமபுரத்தை வைத்தி நீங்கள் பேசுகிறீர்கள் ஆனால் சேரியில் வாழும் மன நிலயை நீங்கள்தானே வைத்துருக்கிறீர்கள்.ராசா மந்திரியாகவில்லை.இளயராசா இந்தியாவின் இதயங்களீல் வாழவில்லை.நாராயணன் இந்தியாவின் சனாதிபதி ஆகவில்லை.உங்கள் சிந்தனையை மாற்றாமல் எங்கள் நெடுமாறன் அய்யாவையா வைவது?

 3. தமிழர்கள் ஒரு பொது அடையாளத்தின் கீழ ஒன்று சேர முடியாது என்பது உண்மைதான். ஆனால் இந்த சாதீய முரணை நீங்கள் நெடுமாறனுக்கு எதிராக பிரயோகிக்கிறீர்களா? அல்லது ஈழ அரசியலுக்கு எதிராக. அதாவது ஈழ விடுதலை என்ற ஒன்றின் கீழ் தமிழர்கள் ஒன்றிணைவதை சிதைப்பதற்கு பயன்படுத்துகிறீர்களா? என்று தெரியவில்லை. சில நேரம் சி.பி.எம்மின் மார்சியத்துக்கு எதிராகவும் இது சென்று விடும் ஆமோதிக்கிறீரா?

  1. மன்னன்,”தமிழர்கள் ஒரு பொது அடையாளத்தின் கீழ ஒன்று சேர முடியாது என்பது உண்மைதான்” என்று நீங்கள் சொல்லியிருப்பதைத்தான் நானும் சொல்கிறேன். நிலவும் இந்த சாதீய முரணை எப்படி சமன் செய்யப்போகிறோம் என்பதுதான் என் கேள்வியேயன்றி அதை நெடுமாறனுக்கு எதிராகவோ நீங்கள் நம்பும் ஈழ விடுதலை என்ற ஒன்றின் கீழ் தமிழர்கள் ஒன்றிணைவதை சிதைக்கவோ பயன்படுத்தும் உடனடித்திட்டம் ஏதும் எனக்கில்லை. அதன்றி இப்படியெல்லாம் சிதைக்கும் வல்லமை எனக்கில்லை என்பதை நம்புங்கள்.. தவிரவும் வெளியிலிருந்து ஒருவர் வந்துதான் சிதைக்கமுடியும் என்கிற நிலையிலா ஈழவிடுதலைக்கான இயக்கங்கள் இருக்கின்றன?
   – ஆதவன் தீட்சண்யா.

  2. மன்னன்
   “சி.பி.எம். மார்க்சியம்” என்று சொல்லுகிறீர்களே.
   கருணாநிதியுடனும் ஜயலலிதாவுடனும் கோபாலசாமியுடனும் காங்கிரசுடனும் கூட்டணி வைக்கிறது தான், சி.பி.எம். மார்க்சியம்.
   பயப்படாதீர்கள் அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள்.

 4. இந்த வோட்டுப் பொறுக்கி அரசியலே இப்படித்தான்.
  தமிழர் ஒற்றுமையின் பேரால் ஏமாற்றுகிற ஒரு கூட்டம் போல தொழிலாளர், ஒடுக்கப் பட்டோர் என்று பேசிக்கொண்டே சி.பி.எம். மேற்கு வங்கத்தில் பண்ணி வந்துள்ள அட்டுழியங்களையும் கேரளத்தில் அதன் சாதியத் தில்லு முல்லுகளையும் பிற ஏமாற்று வேலைகளையும் பற்றிப் பேசலாம்.
  யாருக்கும் குறையாமல் ராஜபக்சவுக்குக் குடை பிடித்தவர்கள் தான் சி.பி.எம். யெச்சுரியும் காரத்தும் சி.பி.ஐ. பாண்டியனும்.
  கட்சி மாநாட்டுக்கு இனவெறி ஜே.வி.பிக்கு அழைப்பு விடுத்தவர்கள் தான் சி.பி.எம். காரர்கள்.
  இந்த வோட்டுப் பொறுக்கி அரசியலை நிராகரித்தால் நக்சலைட் தீவிரவாதி என்று எல்லாரும் கூடிக் கூப்பாடு போடுவார்கள்.

  1. கரம்மசாலாவுக்கு, நெடுமாறன் பேசியது குறித்த எனது ஐயங்களை முன்வைத்தேன். ஒன்று, நீங்கள் அதற்கு பதில் சொல்லியிருக்கலாம். அல்லது எனது கருத்து தவறென நிறுவியிருக்கலாம். ஆனால் நீங்கள் பின்னூட்டத்திற்கு பின்னூட்டம் போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அதிருக்கட்டும்,
   நீங்கள் வேட்டுப் பொறுக்கி அரசியல் நடத்துகிறவரா? இதுவரை எத்தனை பேரை சுட்டுப் பொசுக்கி எத்தனை பேருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்திருக்கிறீர்கள்? மாசத்துக்கு குறைந்தபட்சம் ஏழெட்டு லோடு வெடிமருந்து செலவாகுமா உங்களுக்கு? யெச்சுரியும் காரத்தும் ராஜபக்சவுக்குக் குடை பிடித்துக் கொண்டிருக்கும் போது நீங்கள் யாருக்கு எதைப் பிடித்துக் கொண்டிருந்தீர்கள்? சி.பி.எம். அரசியல்ரீதியாக தவறு செய்கிறது என்று நீங்கள் நம்பும்பட்சத்தில் அதை விமர்சிப்பதற்குரிய உங்களது உரிமையை யார் மறுக்கமுடியும்? அக்கட்சியின் மின்னஞ்சல் முகவரி: cc@cpim.org, தொலைபேசி எண்கள்: (91-11) 23344918, 23363692, 23747435/36
   fax: (91-11) 23747483. தொடர்புகொண்டு தெரிவியுங்கள். போகிறபோக்கில் பாவம் தா.பாண்டியன் மீதும் சேறடிக்கிறீர். அவர் கொஞ்சகாலமாய் உங்களோடுதான் இருக்கிறார் என்பதையும் மறந்துவிட்டீர்களாக்கும்.
   -ஆதவன் தீட்சண்யா

  2. ஆதவன் தீட்சண்யா குறிப்பிட்ட கருத்துக்கள் தமிழகத்தில் இருந்து முதலைக் கண்ணீர் வடிக்கிற ஒரு கூட்டத்தைப் பற்றியும் நினைவூட்டத் தூண்டியது. இந்தக் கூட்டத்தின் களவாணித தனங்களைக் கொஞ்சம் தொட்டுக் காட்டினாலே ஆ.தீ.யிடமிருந்து அர்த்தமற்ற வசை மாரி பொழிகிறது.
   ஏன்னைத் திட்டி சி.பி.ஐ., சி.பி.எம். பாவங்களைக் கழுவ முடியாது. அவர்களை அம்பலப் படுத்துவோர் குறுகிய தமிழ்த் தேசியவாதிகளாக இருக்க அவசியமுமில்லை.
   மடியில் கனமிருந்தால் …
   உங்கள் இடுகை மிகப் பரிதாபமானது. என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

 5. பலர் தத்துவ ஜானிகளப் போலப பேசுகின்றனர் ஆனால் மூடர்களப் போல வாழ்கின்றனர்.தமிழரிடையே இல்லை ஒற்றூமை மலர வேண்டும் மாறாத ஒற்றூமை.

Comments are closed.