இன்னும் சில மணி நேரங்களில் கைது செய்யப்படுவேன் : உதுல்

இலங்கைப் பாதுகாப்புப் படைகள் தன்னைக் கைது செய்வதற்காகத் தேடிவருவதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரமட்ண இனியொருவிற்குத் தெரிவித்தார். இன்னும் சில மணி நேரங்களில் தான் கைது செய்யப்படலாம் என மேலும் தெரிவித்த அவர், கைதின் பின்னதாக இலங்கை தழுவிய போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைதொடர்பான ஜே.வி.பி யின் நிலைப்பாட்டிலும் வேறுபல விடயங்களிலும் தனக்கு விமர்சனங்கள் இருப்பினும் இன்றைய சூழலில் வேறு தெரிவு இல்லை என்று தெரிவித்தார்.

One thought on “இன்னும் சில மணி நேரங்களில் கைது செய்யப்படுவேன் : உதுல்”

  1. இனியோருவிற்கு!

    நடைபெறப் போகும் கைதின் எதிரொலியாக,சர்வதேச அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு,இணையத்தளத்திலாவது கையெழுத்து சேகரிப்பு செய்து,பல்வேறு ராஜதந்திரீகளுக்கும்,மனித உரிமை அமைப்புகளுக்கும் அனுப்ப ஆரம்ப ஏற்பாடுகளை செய்யுங்கள்.

Comments are closed.