இன்டர் போல் இணையத்தில் பொட்டு அம்மான்

இன்ரபோல் நிறுவனத்தால் சென்னையில் வழங்கப்பட்ட கைது உத்தரவிற்கு அமைய போட்டு அம்மானைத் தேடுவதாக இன்டபோல் உளவு நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த வைகாசி மாதம் பதினெட்டாம் திகதி தமிழர் தாயகத்தில் புலிகளின் பலம் சிதைக்கப்பட்டது ஆனால் கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச காவல்துறையான
இன்டெர்போல் பொட்டம்மானையும் அவருடன் இணைத்து இருவரையும் தேடியது.
இறுதி யுத்தத்தின் போது பொட்டம்மானும் அவரது மனைவியும் தம்மை தாமே தற்கொலை தாக்குதல் மூலம் அழித்ததாக தற்போது சிங்கள் அரசு கூறியுள்ளது.
அதனால் தான் அவர்களது உடல்களை மீட்க முடியவில்லை எனவும் பிரபாகரனின் உடலை தாம் மீட்டு அவரது மரண சான்றிதழை வழங்கியதாக இலங்கை தெரிவித்துள்ள நிலையில் தற்போது பொட்டம்மானை சர்வேதேச பொலிஸார் மீண்டும் தேடி வருகின்றனர்.
இந்த புதிய தேடுதலை இன்டெர் போல் தமது இணையத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இலங்கை பெரும் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளது .

பொட்டம்மானும் அவரது மனைவியும் தற்கொலை தாக்குதல் மூலம் தம்மை தாமே அழித்ததினால் அவர்களது மரண சான்றிதழ் பத்திரத்தை தம்மால் தர முடியவிலையென இலங்கை கூறியுள்ளது. ஆனல் ராஜிவ் காந்தியின் படுகொலையில் தொடர்பு உடைய பொட்டம்மான் இறந்து விட்டார் என இலங்கை தெரிவித்த நிலையில் தற்போது இன்டெர் போல் தேடுவது ஏன் என இராஜதந்திரிகள் கேள்விகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
அப்படியானால் அவர் இன்னும் உயிருடன் உள்ளார் என்ற செய்தி சர்வேதேச மற்றும் இந்தியா றோவிற்கு தெரிந்த நிலையிலேயே இந்த தேடுதல் படலம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி பெரும் பரப்பரப்பை இலங்கை அரசியல் வட்டத்தில் உருவாக்கியுள்ளது. என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளத

இனியொரு வாசகர் ஒருவர் பொட்டு அம்மான் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மருத்துவர் ஒருவரை ஆதாரம் காட்டி கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.