இனி அபிவிருத்திதான் முக்கியம் : மகிந்த

mahinthaநெருக்கடியான காலகட்டத்தை நான் கடந்து விட்டேன். அடுத்து என் முன்னால் இருப்பது அபிவிருத்திக்கான வேலைத் திட்டமாகும் என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேர்தல்கள் செயலகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு வெளியேறுகையில் செயலகத்திற்கு வெளியே குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள், ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் புடைசூழ்ந்திருந்த நிலையில் அவர் மேலும் கூறுகையில், மிக நெருக்கடியான காலக்கட்டத்தை கடந்து விட்டேன் அடுத்து என்முன்னாள் இருப்பது அபிவிருத்திக்கான வேலைத்திட்டமேயாகும் என்றார்.