இனக்கொலை அரசு : ஒபாமா நிர்வாகத்தின் இரட்டை முகம்

வெளிவிகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மனித உரிமை தவிர வியாபாரத்திலும் கவனம் செலுத்துமாறு அமரிக்காவிற்கு இவ்வாரம் அழைப்புவிடுத்திருந்தார். இன்று ஒபாமா அரசு இலங்கைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்புத் தடையை நீக்கியுள்ளது. 19. நவம்பர் 2009 இல் அமரிக்க அரசாங்கத்தால் பாதுகாப்புத் தடை ஆலோசனை அமரிகச் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்டுவந்தது. இவ்வுத்தரவு இன்று நீக்கப்பட்டுள்ளது.  இலங்கையில் நிலமைகள் சீரடைந்துள்ளதால் இதனை நீக்குவதாக ஒபாமா அரசு தீர்மானித்துள்ளது அமரிக்க வெளியுறவுப் பேச்சாளர் தெரிவித்தார். அமரிக்காவிற்கான இலங்கத் தூதர் ஜாலிய விக்கிரமசூரிய இதனை வரவேற்றுள்ளார்.