இனக்கொலையாளி மகிந்த மீண்டும் ஜனாதிபதியாக…

mahindha_inioru_webஇலங்கை சர்வாதிகாரியும் இனக்கொலையின் சூத்திரதாரியுமான மகிந்த ராஜபக்ச மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதாக இலங்கை அரசு தெரிவிக்கிறது. 1945 ஆம் ஆண்டு பிறந்த மகிந்த ராஜபக்ச 1970 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுகின்றார். ஏப்பிரல் மாதம் ஆறாம் திகதி 2004 ஆம் ஆண்டு சந்திரிக்கா குமாரணதுங்கவினால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச 2005 வரை பிரதமராகப் பதவி வகிக்கிறார். சந்திரிக்காவின் கைப்பொம்மை போன்று செயற்பட்ட மகிந்த தோல்வியடைவதற்காகவே 2005 தேர்தலில் சுத்தந்திரக் கட்சியால் நிறுத்தப்பட்டார்.

தேர்தலில் தனது போட்டியாளர் ரனில் விக்கிரசிங்கவிடம் தோல்வியடைவார் என எதிர்பார்க்கப்பட்டார். இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஜே.வி.பி ஆகியவை வழங்கிய ஆதரவின் காராணமாக ஜனாதிபதியாக ஒரு லட்சம் வாக்குகள் வேறுபாட்டில் வெற்றிபெற்றார். ரனில் விக்கிரமசிங்கவிற்கு 48.43 வீதமான வாக்குகளும் மகிந்த ராஜபக்சவிற்கு 50.29 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் ரனில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிப்பார்கள் என எதிர்வு கூறப்பட்ட போதிலும் விடுதலைப் புலிகள் வாக்களிக்கக் கூடாது எனத் தடைவிதித்திருந்தனர். விடுதலைப் புலிகளுடனான எழுதப்படாத பண ஒப்பந்ததின் அடிப்படையிலேயே மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கப்பட்டது.

புலிகள் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாகச் செயற்படுவதற்கு பிரித்தானியாவில் வசித்த புலிகளை வழி நடத்திய அன்டன் பாலசிங்கம் பிரதான காணமாக அமைந்தார். அதே வேளை இலங்கையில் இன்று இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக்கொள்ளும் சில பிரமுகர்கள் புலிகளின் மகிந்த ஆதரவு நிலைப்பட்டை வரவேற்றனர். மகிந்த ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் எனக் குறிப்பிட்ட போலி இடதுசாரிப் பிரமுகர்கள் மகிந்த ராஜபக்ச என்ற பாசிஸ்ட் ஆட்சிக்கு வருவதற்கு ஆதரவாகச் செயற்பட்டனர்.

2005 ஆம் ஆண்டு மகிந்த ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதும் அமெரிக்கப் பிரசாஉரிமை பெற்று அங்கு வசித்துவந்த அவரின் இரண்டு சகோதரர்களான பசில் மற்றும் கோத்தாபய ஆகியோர் நாடுதிரும்பினர். பிரித்தானிய, அமெரிக்க, இந்திய இராணுவக் கல்லூரிகளில் பயிற்சிபெற்ற முன்னை நாள் இராணுவ அதிகாரி கோத்தாபய நந்தசேன ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

கோத்தாபய ராஜபக்சவின் தலைமையில் அமெரிக்கா, இந்தியா பிரித்தானிய ஆகிய நாடுகளின் பின்னணியில் வன்னி இனப்படுகொலை திட்டமிடப்படுகிறது. முப்படைகளின் தளபதியான மகிந்த ராஜபக்ச கடந்த தசாப்தத்தின் கோரமான மனிதப்படுகொலைகளுக்கு உத்தரவிடுகிறார். மக்களும் புலிகளும் சிறிய ஒடுக்கமான நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டு சாட்சியின்றிச் சாரிசாரியாக அழிக்கப்படுகின்றனர்.
மகிந்தவின் வழிகாட்டலில் கோத்தாபயவின் தலைமையில் நடைபெற்ற மனிதப்படுகொலைகளின் பின்னர் சர்வாதிகாரியும் பாசிஸ்டுமான மகிந்த ராஜபக்ச சிங்கள மக்கள் மத்தியில் கதாநாயகனாகச் சித்தரிக்கப்படுகிறார். உலகின் சர்வாதிகார பாசிஸ்டுக்களுக்கு மகிந்த முன்னுதாரணமாகிறார். மனித குலத்தின் விரோதி இலங்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் கொள்ளையிட்டு அன்னிய நாடுகளின் அடியாளாகிறார்.

இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக ஆட்சி நடத்திய மகிந்த ஐ.நாவையும் புலம்பெயர் புலிகளையும் முன்வைத்து தனக்கான அனுதாப வாக்குக்களைத் தேடிக்கொள்கிறார்.

இப்போது மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மகிந்த தயாராகிவிட்டார்.
‘ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றும், அதனை எவரும் சவாலுக்கு உட்படுத்தினால், நீதிமன்றத்தின் ஊடாகத் தீர்வு பெறப்படும்’ என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவை போட்டியிட முடியாது என்று தொடர்ச்சியாக கூறப்பட்டால் ஜனாதிபதி உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தைக் கோருவார் என்றும் அவர் குறிப்பிட்டார். ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மனித குலத்தின் விரோதி மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு ஏகாதிபத்திய நாடுகளும், ஐ.நாவும், புலம்பெயர் தலைமைகளும் உதவிபுரிகின்றன.

3 thoughts on “இனக்கொலையாளி மகிந்த மீண்டும் ஜனாதிபதியாக…”

  1. மகிந்தாவுக்கு கிடைத்த பெரும்பான்னை வாக்குகள் 180,786 ஏறக்குறைய 2 இலட்சம் வாக்குகள். வி.புலிகள் சனாதிபதி தேர்தலைப் புறக்கணித்திருக்கக் கூடாது அது தவறு என்பதுதான் இன்றைய மதிப்பீடு. ஆனால் புலிகள் அமெரிக்காவுடன் ரணில் விக்கிரமசிங்கி நெருக்கமாக இருக்கிறார் அவர் பதவிக்கு வந்தால் அதனால் தங்களுக்கு ஆபத்து என்று நினைத்திருக்கிறார்கள். அதே நேரம் மகிந்த இராஜபக்சே ஒரு நாட்டுக்கட்டை அவரை சமாளிக்கலாம் என்பது புலிகளது கணிப்பு. மகிந்த இராஜபக்சேயின் தமிழின அழிப்பு தொடருமானால் உலக நாடுகள் தமிழர்களுக்கு சுயாட்சி அரசியல் அமைப்பை வழங்க முன்வரலாம். புலிகளுக்கு 500 மில்லியன் இராஜபக்சே கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதுபற்றிய சரியான தரவுகள் பெறப்பட வேண்டும்.

    1. This is the conclusion most people can come up with including the one about the money. It is also true VP overly underestimated MR. Like you said the continued arrogance of MR may lead to some reasonable solution to the Tamils.

  2. உரு எத்த எழுதிய மாதிரி இந்த கட்டுரையை எழுதி உள்ளீர்கள். பெயரும் இல்லை. ஊரும் இல்லை.
    கோபம், கோபமாக வருகின்றது விடுதலை புலிகளை நினைக்கையில். ரணிலுடன் அரசியலாக மோத முடியாமலா நேரம் கெட்டநேரத்தில் உலக பயங்கர வாதத்துக்கு உலகம் ஒன்று திரண்ட சந்தர்பத்தில் அயுத தீர்வை தூக்கி பிடித்த ஜனாதிபதியை பதவி அமர்தினார்கள்? வலை விரித்தவனெ சூழ்சியில் மாட்டுபட்டால் போல் கதை முடிந்தது. பாம்புக்கு எப்படி அடித்தார்களோ, அப்படித்தான் பல்லு புடுங்கிய பாம்புக்கும் அடிப்பார்கள்.
    இனி வரும் ஜனாதிபதி தேர்தல் எல்லா இனத்துக்கும் முக்கியமானது. “இனி” தனி தொடர்சியான தர்கீகத்தை வகுக்கும் இத்தால் கேட்டு கொள்கிறேன்.

Comments are closed.