இனக்கொலையான ஈழ மக்களுக்கு புதிய தமிழகம் அஞ்சலி.

வன்னி மீதான் யுத்தம் முடிவடைந்து ஒரு வருடம் ஆகிற நிலையில் போரின் போதும் முகாம்களுக்குள்ளும் படுகொலையான ஈழத் தமிழர்களுக்கு புதிய தமிழகம் கட்சி அஞ்சலி செலுத்தியுள்ளது. அஞ்சலி செலுத்தும் வகையில் மே- 

12ம் தேதி முதல் 18ம் தேதி வரை புதிய தமிழகம் கட்சி சார்பில் வலி சுமந்தவாரம் கடைபிடிக்கப்படுகிறது. பெரும்பாலான புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் ஈழ மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.