இந்திய விசேட குழு இந்த வாரம் இலங்கை பயணம் : சிதம்பரம்

இந்தியாவின் விசேட பிரதிநிதிகள் குழு ஒன்று இந்தவாரம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் ப.சிதம்பரம் இன்று காலை தெரிவித்தார். ஜூலை 22ம் திகதி மன்மோகன் சிங் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டபடி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
இலனங்கைத் தமிழர் புனவாழ்வில் கருணாநிதியின் பங்களிப்பைப் பாராட்டும் முகமாகவே அவரைச் சந்தித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்திய மத்திய அரசு, கருணாநிதி, இலங்கை அரச கூட்டு நடவடிக்கையான வன்னிப் படுகொலைகளின் பின்னர் நேற்றுவரை தமிழ்ப் பேசும் மக்கள் தமது நிலங்களைவிட்டுத் துரத்தப்படுகின்றனர். நாளாந்தம் ஆக்கிரமிப்பும், கொலைகளும், சூறையாடல்களுமாக தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் சூறையாடுப்படுவதை மறைக்கும் நிகழ்ச்சிப்போக்காக நிவாரணம், புனர்வாழ்வு என்பன மாறியுள்ள நிலையில், இனப்படுகொலையின் சூத்திரதாரிகளான கருணாநிதி – இந்திய அரச கூட்டு ஈழத் தமிழர் குறித்துப் பேசும் அனைத்தும் சந்தேகத்திற்குரியதாகவே கருதப்படுகிறது.

3 thoughts on “இந்திய விசேட குழு இந்த வாரம் இலங்கை பயணம் : சிதம்பரம்”

  1. தமிழாய் இருக்கும் கலைஜரை ஒற்ற வார்த்தையில் கருணாநிதி என நீங்கள் உச்சரிக்கலாமா.தமிழல்லவா,நம் தாய்ப்பாலல்லவா முதுமையடைந்த மூத்த தமிழரல்லவா, அன்பின் உறவே என் இன்மே கன்னடனை சூப்பர் ஸ்டார் என் கிறாய்,மலையாளீயை தல என் கிறாய் தமிழனை ஒற்ற வார்த்தையில் நீ உச்சரிக்கலாமா?

    1. கருணாநிதியை நாய்என்றால் தகும். நரிஎன்றால் இன்னும்தகும். பேய்என்றால் தகும், பெருச்சாளி என்றால் இன்னும் தகும், பாம்பென்றால் தகும் பன்றிகளின் தலைவனென்றாலும் இன்னும்தகும், தெலுங்கென்றால்தகும், தென்னகத்தின் கழிவென்றால் இன்னும்தகும்,

  2. வன்னிப் படுகொலைகளை அரசியல் சாணக்கியத்துடன் கலைஞர் கருணாநிதி மேற்கொண்டதன் காரணமாக இன்று இலங்கையில் தமிழரும் சிங்களரும் ஐக்கியமாக இணைந்து ஒற்றுமையாக வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தி முள்வேலியை பூவேலியாக்கி, புத்தபிரானை வணங்கும் தமிழர்கள், முருகக்கடவுளை வணங்கும் சிங்களர் அடங்கிய ஒளிப்பதிவுகள், செய்திகளோடு மகிந்தபரிவாரம் கொடுக்கும் விருந்தையும் உண்டுகளித்து மகிந்தவுக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்ந்து, இலங்கை செல்லும் இந்தியாவின் விசேட பிரதிநிதிகள் குழுவானது கருணாநிதியின் சாணக்கியத்தை மேலும் பாராட்டி அறிக்கைகள் வெளியிடும். தமிழில்பேசி, தமிழில்எழுதி, தமிழனாக உலகெங்கும் வாழும் மாந்தர்கள் இதனை உற்சாகத்துடன் ஏற்றுக்கொள்வார்கள். புலம்பெயர் நாடொன்றில் 01.08.2010 அன்று நடைபெற்ற நிகழ்வொன்றை இதற்கு ஆதரமாக தருகிறேன்.

    யேர்மனிநாட்டில், சுற்காட் என்னும் நகரில், இந்துமன்றம் என்றபதிவில் சிறீ சித்திவினாயகர் ஆலயம் ஒன்று உருவாக்கப்பட்டு அங்கு தமிழர்களாக தங்களை பதிவுசெய்துகொண்ட ஈழத்து இந்து பக்தர்கள் திருவிழாக்களையும் நடாத்தி வருகிறார்கள். இவர்கள் இவ்வருடம் 01.08.2010 அன்று நடைபெற்ற தேர்த்திருவிழாவின் போது இலங்கைத் தூதரகத்தை சேர்ந்த, சிங்கள பண்பாட்டு உடையணிந்து வருகைதந்த உயரதிகாரிகளுடன் சிங்கள புத்தபிக்கு ஒருவருக்கும் முன்னுரிமை அளித்து, வரவேற்று, திருவிழாவை சிறப்பித்து பரவசமடைந்தார்கள். இதில் குறிப்பிடக்கூடிய அம்சம் என்னவெனில் நான் மேலே குறிப்பிட்ட கருணாநிதியின் செயற்பாடுகள் மக்களுடைய அங்கீகாரத்தை பெற்று வருவதுதான்.

    முள்ளிவாய்க்கால் படுகொலைகளை அநீதியான முறையில் உலகம் நடாத்தி தமிழரின் ஆயுதப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வரையில், “எங்கள் தலைவன் பிரபாகரன’’, “தமிழரின்தாகம் தமிழீழத் தாயகம்’’ என வீதியெங்கும் முழங்கிவந்த தமிழர்களும் இத் திருவிழாவில் பங்குபற்றி பரவசமடைந்துள்ளார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக இன்றும் தங்களை தக்கவைத்து வருபவர்களும் இதற்கு மறைமுக ஆதரவு தெரிவித்துள்ள செய்திகளும் கசிந்துவருகின்றன.

Comments are closed.