இந்திய வங்கதேச உறவை சீர்குலைக்க தீவீரவாதிகள் சதியாம்- சொல்கிறார் ப்ரணாப் முகர்ஜி.

அமெரிக்காவின் அடியாளாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியா நேபாளம், வங்கதேசம், இலங்கை, பூடான் போன்ற நாடுகளை தனது அறிவிக்கப்படாத காலனியாக கட்டுப்படுத்தி வருகிறது. வங்கதேசத்தில் நிலவும் வறுமையைப் பயன்படுத்தி இந்தியா வங்கதேசத்தை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர பல முயர்ச்சிகளையும் எடுத்து வருகிறது. இந்தியாவங்கதேசம் இடையே வங்கிக் கடன் ஒப்பந்தம் சனிக்கிழமை கையெழுத்தானது. அதன்படி, இந்திய அரசின் எக்ஸிம் வங்கி, வங்கதேசத்தின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக |5,000 கோடி கடனுதவி அளிக்கிறது.வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஜனவரியில் தில்லி வந்தபோது இந்த ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒருநாள் பயணமாக வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு சனிக்கிழமை சென்றார். அவரது முன்னிலையில் இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.வெளிநாடுகளில் இருந்து வங்கதேசம் பெறும் அதிகபட்ச கடன்தொகை இதுதான். இந்த நிதியின் மூலம் ரயில், சாலை போக்குவரத்து, தகவல் தொடர்பு மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது.ஆனால், இந்த கடன் ஒப்பந்தத்தை வங்கதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.பன்னாட்டு வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டியை விட 7 மடங்கு அதிகமாக இந்திய வங்கி வட்டியை நிர்ணயித்துள்ளது. இந்தியாவிடம் அநியாய வட்டிக்கு இப்படி கடன் வாங்கி நாட்டை இந்தியாவின் காலனியாக மாற்றுவது வங்க மக்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள நிலையில், இந்த எண்ணங்கள் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களாகவும், இந்தியாவுக்கு நாட்டை அடகு வைக்கும் வங்க ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான போராட்டங்களாகவும் வெடிக்கின்றன. இதை உள்ளூர் அரசு இருபுக்கரம் கொண்டு ஒடுக்கும் அதே நேரம் மீண்டுமொருமுறை வங்கத்தில் ரத்த ஆறை இந்தியா ஓட விடுவதற்கான எல்லா சூழலும் அங்கு உருவாகிக் கொண்டிருக்கிறது.

பயங்கரவாதிகள் சதியாம்- ப்ரணாப்முகர்ஜி.

தனது உண்மையான ஆக்ரமிப்பு முகத்தை மறைத்து இது தொடர்பாகப் பேசிய ப்ரணாப் முகர்ஜி ’’வங்கதேசத்தில் 14 திட்டங்களை செயல்படுத்த அந்நாட்டுக்கு இந்தியா | 5 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் மத்திய நிதி அமைச்சர் பிராணாப் முகர்ஜி முன்னிலையில் டாக்காவில் சனிக்கிழமை கையெழுத்தானது. தீவிரவாதத்தை ஒடுக்குதல், எல்லையில் நிகழும் குற்றங்களை விசாரிக்க இரு நாடுகளும் பரஸ்பர சட்ட ஒத்துழைப்புடன் செயல்படுவது, கைதிகள் பரிமாற்றம் ஆகியவை தொடர்பாக 3 ஒப்பந்தங்களும் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானது. மின் துறையில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதை அடுத்து செய்தியாளர் கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி பேசினார். அப்போது அவர் கூறியது: “இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது. இதைக் கெடுக்க சில தீவிரவாத இயக்கங்கள் முயற்சிக்கக் கூடும். எனவே இரு நாடுகளுக்கு இடையேயான நெருங்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடரும். பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இரு நாடுகளுமே முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாதம் இரு நாடுகளுக்குமே பொதுப் பிரச்னை ஆகும். அதை ஒடுக்குவதில் வங்க தேசம் மேற்கொண்டுள்ள அணுகு முறை இந்தியாவுக்கு திருப்தி அளிக்கிறது. வங்கதேசத்தின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையை இந்தியா ஊக்குவிக்கும்என்றார் பிரணாப் முகர்ஜி.