இந்திய ராணுவத்தின் ஆயுதத்தயாரிப்பில் மூலப் பொருளாக மாறும் மிளகாய்!

 இநதியாவின் வடகிழக்கில் உற்பத்தியாகும், உலகிலேயே மிக மிகக் காரமான மிளகாய் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற பூட் ஜோலோகியா மிளகாய், இந்திய ராணுவத்தின் ஆயுதத்தயாரிப்பில் மூலப் பொருளாக மாறுகிறது. கைபெருவிரல் பருமனுள்ள பூட் ஜோலோ கியாவை கண்ணீர்ப் புகைக்குண்டு போன்ற கையெறி குண்டுகளில் பயன்படுத்துவதென இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. இதற்குரிய சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. சந்தேகத்துக்குரிய நபர்களைச் செயலற்றுப் போகவைக்க இந்த மிளகாய் கலந்த குண்டுகள் பயன்படுத்தப்படும்.

2007ம் ஆண்டில் கின்னஸ் சாதனைப்பட்டியலில் உலகிலேயே மிகக் காரமான மிளகாய் என்று பூட் ஜோலோகியா இடம் பெற்றுள்ளது. வடகிழக்குப் பகுதி களில் இவை உணவுக்காகவும், ருசிக்காகவும் ஏராளமாக விளைவிக்கப்படுகின்றன. வயிற்றுக் கோளாறுகளுக்கும், வெயிலின் உக்கிரத்தைக் குறைக்கும் மருந்தாக வும் இது பயன்பட்டு வருகிறது.

மிளகாயின் காரத்தை ‘ஸ்கோவில்லி’ என்ற அலகு களால் கணக்கிடுகிறார்கள். பூட்ஜோலோகியாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்கோவில்லி அலகுகள் உள்ளன. பாரம்பரியமான டாபஸ்கோ சாஸில் 2500 முதல் 5000 ஸ்கோவில்லி அலகுகள் உள்ளன. இந் தியாவின் ஜாலபெனோ மிளகில் 2500 முதல் 8000 ஸ்கோவில்லி அலகுகள் உள்ளன.

“இந்திய பாதுகாப்பு சோதனைச் சாலைகளில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த மிளகாய் கையெறி குண்டு பயன்படுத் தத்தக்கது என்று கண்டறி யப்பட்டுள்ளது. இதை பாது காப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் உறுதி செய்துள்ளது என்று அசாமில் உள்ள ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் ஆர்.காளியா கூறி யுள்ளார்.

இது ஒரு கூர்மையான விஷத்தன்மையற்ற ஆயுதமாகும். இதனுடைய காரமான நெடி பயங்கரவாதி களைத் திணறடிக்கும்; பதுங் குமிடங்களை விட்டு வெளி யேற வைக்கும் என்று டிஆர் டிஓ தில்லி தலைமையகத்தின் ஆயுள் அறிவியல் துறை தலைவர் ஆர்.பி.ஸ்ரீவத்சவா கூறினார். காவல்துறையின் பயன்பாட்டுக்கும், பெண் கள் பயன்பாட்டுக்கும் உரிய வகையில் இதனைத் தயாரிக்கும் முயற்சிகள் நடை பெற்று வருகின்றன என்றும் அவர் கூறினார்.