இந்திய மேலாதிக்கம் குறித்துப்பேச ஈழத் தமிழர்களுக்கு உரிமையில்லை – து.ராஜா : சபா நாவலன்

drajaவன்னி இனப்படுகொலை நிகழ்ந்து மாதங்கள் நகர்ந்துவிட்டன. சாரி சாரியாக மனிதகுலத்தின் ஒருபகுதி அழிக்கப்பட்டு தடையங்களே இல்லாமல் எலும்புக்கூடுகளும் உருக்கப்பட்ட மயானங்களின் மேல் தென்னாசியாவின் வியாபார நலன்கள்களுக்கான பேரம் இன்னமும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மயான அமைதியின் மறு எல்லையில் சித்திரவதை முகாம்களிலிருந்து அவலக்குரல்கள். இந்தச் சிறிய நிலப்பரப்பில் அனாதையான மனிதர்களை வைத்துக்கொண்டு ஒவ்வொரு மனிதர்களுக்கும் அவர்களது நலன்களின் அடிப்படையில் நியாயங்களும் அனியாயங்களும் தோன்றுகின்றன.
இலங்கைத் தமிழர்கள் மீதான சிங்கள பெருந்தேசிய வாதிகளின் அடக்குமுறையின் ஒவ்வொரு கட்டத்திலும் தமிழகத்தில் தமிழர்கள் தமது வேறுபாடுகளை எல்லாம் மறந்து எழுந்து நின்று குரல் கொடுத்திருக்கிறார்கள். தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவளித்து வரவேற்றிருக்கிறார்கள்.

உலகம் முழுதும் பரந்து வாழும் இலங்கைத் தமிழ் பேசும் மக்களுக்கு, அவர்களின் பிரதேச முரண்பாடு, சாதி முரண்பாடு, வர்க்க முரண்பாடுகளை எல்லாம் தாண்டி தீர்மானகரமான ஒரே நம்பிக்கை தமிழகத்தமிழர்கள் தான்.

ஆனால் தமிழக மக்களின் வாழ்வலங்களின் மீது கட்சி அரசியல் நடாத்தும் அரசியல் வியாபாரிகளுக்கோ, ஈழத் தமிழர்களின் அழுகுரல்களும், மரண ஓலமும் வெறும் வாக்குத் திரட்டியாகவும் காய் நகர்த்தலுக்கான ஆயுதமாகவுமே பயன் பட்டிருக்கிறது. ஒரு மனித கூட்டத்தின் மரணக் குரலை முன்வைத்து அரசியல் வியாபாரம் நடத்தும் தமிழகத்தின் வாக்குக் கட்சி அரசியல் வாதிகள் மௌனமாயிருந்தாலே மக்கள் தெருவுக்கு இறங்கி படுகொலைகளைத் தட்டிக்கேட்பார்கள். வன்னிப் படுகொலை நடந்துகொண்டிருந்த போது கருணாநிதி அரசு பாடசாலைகளுக்கும் அலுவலகங்களுக்கும் போராட்டங்கள் எதிலும் ஈடுபடக்கூடாது என்று உத்தரவு போட்டிருந்தது. மக்கள் எழுச்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் அவதானமாகச் செயற்பட்டிருந்தது.

இலங்கைத் தமிழர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், அவர்கள் எல்லாருமே பயங்கரவாதிகள் என்றும் பகிரங்கமாக அறிவித்துவந்த ஜெயலலிதா வாக்கு வேட்டைக்காக புதிய வேடமிட்டதெல்லாம் போக, இவர்களோடு தேர்தல் கூட்டு வைத்துக்கொண்ட தொல்.திருமாவளவன், வை.கோ போன்றவர்களின் வேடங்களும் கலைந்து போயின.
இவர்கள் அனைவருமே மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் அதிகார சக்திகள் என்பதை எல்லா முற்போக்கு சக்திகளும் மறுபடி மறுபடி எச்சரித்து வந்தனர்.

தவிர, தமிழகத்தில் ஈழத் தமிழர் பிரச்சனை பற்றிப் பேசியவர்களுள் குறித்த பாத்திரம் வகித்த மற்றுமொரு கட்சி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. நாடளுமன்றக் வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளான CP(I), CP(M) ஆகியவற்றை போலிக் கம்யுனிஸ்ட்டுக்கள் என மாவோயிஸ்டுக்களும் இடது அமைப்புக்களும் திட்டும் போதெல்லாம் இவர்களொலெல்லாம் அதி தீவிரமாகத் திட்டித் தீர்க்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றும்.

அதிலும் அகில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஒரு தமிழர் மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட மக்கட்பிரிவைச் சார்ந்தவர். அணுசக்தி ஒப்பந்தம், தலித் அடக்குமுறைக் போன்ற பல முக்கிய பிரச்சனைகளுக்கு முன்னின்று குரல் கொடுத்த ஆளுமை மிக்க தலைவர். தலித் மக்களின் பிரச்சனைகளிலும் துணிந்து புதிய கருத்துக்களை முன்வைத்தவர். இலங்கைத் தமிழர் இனப்படுகொலையின் அனைத்து சூத்திரதாரிகளும் மூன்று மாதகாலத்துள் ஒரு லட்சம் மக்களைக் கொன்று போட்டுவிட்டு இன்றும் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கும் சூழ் நிலையில் இந்திய அரசியல் வாதிகள் அரசியற் சட்ட வரை முறைகளுக்கு உட்பட்டாவது இதையெல்லாம் தட்டிக்கேட்க மாட்டார்களா என்ற ஆதங்கம் உந்தித் தள்ள நான் முதலில் சந்தித்த இந்திய அரசியல் வாதிதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தூ.ராஜா. இலங்கை இனப்படுகொலையை ராஜபக்ஷ அரசு திட்டமிட்டு நிறைவேற்றிக் கொண்டிருந்த போதும் முகாம்களில் மக்கள் அடைத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுக்கொண்டிருந்த போதும் பல தடவைகள் அமைச்சரவையில் குரல் கொடுத்தவர் டீ.ராஜா.

ராஜாவின் தொலைபேசி எண்ணைத் தேடிய போது ஒன்றிற்கு மேற்பட்ட நண்பர்கள் உடனடியாகவே அவற்றைக் கொடுத்து உதவியிருந்தார்கள். சந்திப்பதற்கு மூன்று நாட்கள் முன்னதாக அவரைத் தொலைபேசியில் அழைத்த போது எனக்கு நேர்காணல் ஒன்றை வழங்குவதற்குச் சம்மதித்திருந்தார். ஆனால் நேரில் அவரைச் சந்தித்தபோது எந்தக் காரணத்தைக் கொண்டும் நேர்காணல் வழங முடியாதென்றும் நாங்கள் பேசவிருப்பதை எங்கும் எழுதவோ பதிவுசெய்யவோ கூடாதெனக் கேட்டுக்கொண்டர். ராஜாவிற்கும் எனக்கும் இடையிலான உரையாடல் என்பது சமூகப் பிரச்சனைகளை பற்றி மட்டுமானதே. இரகசிய உடன்படிக்கைக்கானதோ அல்லது வியாபார ஒப்பந்தத்திற்கானதோ அல்ல.

இந்த அடிப்படையிலேயே ராஜாவுடனான உரையாடலைப் ஒலிப்பதிவு செய்துவிட வேண்டுமென்றும் அதனை எங்காவது எழுத்தில் பதிவுசெய்துவிட வேண்டுமென்ற உந்துதலும் ஏற்பட்டது.

சுமார் பத்து மணியளவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மானில அலுவலகத்தில் உரையாடல் ஆரம்பமானதுமே கே.பி யின் கைது பற்றிப் பேசவாரம்ப்பித்தோம். உடனேயெ இடைமறித்த ராஜா, தனக்குக் கே.பி யாரென்றே தெரியாதென்றும் அதனைப்பற்றிப் பேசுவதில் பயனில்லை என்றும் தெரிவிக்க இலங்கப்பிரச்சனையில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்பாக பேச்சுக்களை ஆரம்பித்தேன். இந்திய மேலாதிக்கமா? இலங்கைத் தமிழர்கள் தான் அவ்வாறு சொல்கிறார்கள் என்று ஆரம்பித்தார் ராஜா.
ஜனநாயகம் என்பதே மேலாதிக்கம் தான்! பாக்கிஸ்தானிய ஜனநாயகம், பங்களாதேஷிய ஜனநாயகம், இலங்கை ஜனநாயகம் இவற்றையெல்லாம் விட இந்திய ஜனநாயகம் தாழ்ந்ததல்ல. ஆக ஜனநாயகம் என்றால் மேலாதிக்கமும் இருக்கும்.

ஆனால் இலங்கைத் தமிழர்கள் மட்டும்தான் அதைப்பற்றித் திரும்பத்திரும்பப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்திய முதலாளிகளுகு எதிராகப் பேசுங்கள் அதைப்பற்றி நாம் அலட்டிக்கொள்ளப் போவதில்லை. இந்திய மேலாதிக்கம் என்று ஒரு நாட்டிற்கு எதிராகப் பேசுவதற்கு உங்களுக்கு(இலங்கைத் தமிழர்களுக்கு) எந்த உரிமையும் கிடையாது” என்று தனது முதலாவது கம்யூனிஸக் குண்டைத் தூக்கி இலங்கைத் தமிழர்களின் தலையில் வீசினார் ராஜா.

நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி என்ற அடிப்படையில் ….. என்று நான் தயக்கத்துடன் தொடர்ந்த போது, ராஜா சற்று உணர்ச்சிவசப்படு இடை மறித்தார்.
“நீங்கள் எல்லாம் எப்படிக் கம்யூனிசத்தைப் பற்றிப் பேச முடியும்? பொது உடமை இயக்கங்களை வடக்கிலும் கிழக்கிலுமிருந்து அழித்தவர்கள் நீங்கள் தான், நான் ரஷ்யா வழியாக நெல்லியடி வரை சென்று வந்தவன். பீட்டர் கெனமனைச் சந்திதிருக்கிறேன். புலிகளுக்குப் பயத்தில் மல்லிகை டொமினிக் ஜீவா கொழும்பில் மறைந்து வாழந் போது சந்தித்திருக்கிறேன். உங்களுக்கு வசதி ஏற்படுகிறபோது இந்தியாவிற்கெதிராகவும் இனப்படுகொலை பற்றியும் பேசும் நீங்கள் யாழ்ப்பாணத்தில் பொதுவுடமை வாதிகள் புலிகளால் அழிக்கப்பட்ட போது எங்கு போயிருந்தீர்கள்.” என்று தனது உணர்ச்சிகளை இந்திய மேலாதிக்கத்திற்கு ஆதரவாக வெளிப்படுத்திய ராஜாவை இடை மறித்த நான், நான் புலிகள் சார்பாகப் பேச வரவில்லை. என்று மறுபடி பேச முனைந்த போது, புன்னகைத்துவிட்டு மறுபடி தொடர்ந்தார்.
செல்வாக்கு மிகுந்த இந்திரா காந்தி குடும்பத்திலிருந்து ராஜீவ் காந்தி தமிழக மண்ணில் வைத்துக் கொல்லப்பட்டிருக்கிறார். எனக்கும் ராஜீவிற்கும் எந்த உடன்பாடும் இல்லை ஆனால் இவ்வாறு தேர்தல் சமயத்தில் மக்கள் தலைவன் ஒருவன் கொல்லப்பட்டது தொடர்பாக ஈழத்தமிழர்கள் கண்டித்திருக்கிறார்களா? இன்றும் கூட இந்தியா இலங்கைகையில் சித்திரவதை முகாம்களில் இருப்பவர்களுக்கு இலங்கை அர்சின் ஊடாகப் பண உதவி செய்வதை மறுக்கமுடியாது ஆனால், இவ்வுதவிகள் மக்களுக்குச் சென்றடைகிறதா என்று கேள்வியெழுப்புபவர்கள் நாங்கள் தான். இந்தியாவைப் பற்றியும் அதன் அரசியலைப் பற்றியும் பேசுவதற்கு முன்னர் அந்த மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்று சிந்தியுங்கள். இனிமேல் என்ன செய்ய முடியும் என்று சிந்திப்பதை விடுத்து நீங்கள் கடந்த காலத்தைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.” என்று தொடர்ந்த போது இடை நிறுத்திய நான் இலங்கை அரசின் அமைப்பு மயப்படுத்தப்பட்ட இனவாதம் பற்றியும் ஆசியப் பொருளாதார நலன்கள் நிகழ்த்திய இனப்படுகொலை தொடர்பாகவும் பேச விழைந்த போது இடை நிறுத்திய ராஜா,
“இப்படித்தான் “அன்டன் பாலசிங்கம் அவரது வெள்ளைக்கார மனைவியுடன் தமது அலுவலகத்திற்கு வந்து சுய நிர்ணய உரிமை பற்றி லெனினும் ஸ்டாலினும் பேசியிருக்கிறார்கள் என்று எமக்கு அறிவுரை கூறினார்கள் உங்களுக்குத் தேவையேற்படும் போது மட்டும் மார்க்சியத்தைத் துணைக்கழைத்துக் கொள்கிறீர்கள்” என்று தொடர்ந்தார்.

இதுவரைக்கும் இந்திய வாக்குக் கட்சி அரசியல் வாதிகள் பேசியதெல்லாம் இலங்கை அரசின் மீதான எந்த அழுத்தத்தையும் பிரயோகிப்பதாக அமையவில்லை. ஆக, அனுதாபமுள்ள தமிழ் வாக்காளர்களைத் தமக்கு ஆதரவாகத் திசை திருப்பவே பயன்பட்டிருக்கிறது.

இந்த அடிப்படையில் முழு உலகமுமே மௌனமாய்ப் பார்த்துக்கொண்டிருக்க மனிதப்படுகொலையை நடாத்தி முடித்திருக்கும் பேரின வாதிகளை குறைந்த பட்சம் சர்வதேசச் சட்டங்களுக்கு முன்னால் தண்டனை வாங்கிக் கொடுக்கும் செயற்பாடானது தடுப்பு முகாம்களில் வதைபடும் மக்கள் மீதான அரச பயங்கர வாதத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்தக் கூடும் என்ற நோக்கத்தில் இது தொடர்பாக ராஜாவிற்கு முன்னதாக ம.க.இ.க உடனும் இவர்கள் போன்ற இடது குழுக்களுடனும் பேசியிருக்கிறேன். இவர்களுடனெல்லாம் முன்னதாகப் பேசியிருந்ததை ராஜா தெரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றாலும் சட்ட நடவடிக்கை குறித்து ராஜா கூறிய பதில் என்னை மிகவும் அதிர்ச்சிக்குட்படுத்துவதாக அமைந்தது.

“எமது போராட்டங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் வரை முறை உண்டு. இந்தியப் பிரதமராக இருந்தவரைக் கொன்றவர்களையும் இந்தியாவிற்கெதிராகச் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களையும் எவ்வாறு நியாயப்படுத்தி இலங்கை அரசிற்கெதிராக சர்வதேச நீதிமன்றம் செல்வது. நீங்கள் உங்களுடைய பிரச்சனை என்று வரும் போது மட்டும்தான் கம்யூனிஸ்ட் கட்சியைச் சர்வதேசக் கட்சியாகப் பார்க்கிறீர்கள். எங்களுடைய பிரச்சனைகள் பற்றி நீங்கள் புரிந்து கொள்வதில்லை” என்றார்.

இனி ராஜா என்னிடம் புலம்பெயர் தமிழர்கள் குறித்து விசாரிக்கிறார். வேலை நிமித்தம் வேற்று நாடுகள் செல்வதென்பது வேறு, சொந்த நாட்டில் பாதுகாப்பாக வாழ முடியாமல் வேற்று நாடுகளில் வாழ்தல் என்பதன் வலியைத் தான் புரிந்து கொள்வதாகக் கூறிய ராஜா, மேற்கு நாடுகளின் சிறைகளிலிருப்பவர்களில் பெரும் பாலனவர்கள் இலங்கைத் தமிழர்கள் தான் என்று தான் கேள்வியுற்றதாகக் கூற அது தவறானது என நான் திருத்துகிறேன்.

இப்போது, பேசியவாறே ராஜாவுடன் தெருவரை வந்துவிட்டேன். உலகமயம் ஏற்படுத்திய அழுக்குகளின் துர் நாற்றம் நடு நிசியிலும் ஏற்படுத்திய அருவருப்புடன் ராஜாவிடமிருந்து விடைபெறும் போது இலங்கைத் தமிழ்ப்பேசும் மக்களை எண்ணி நெஞ்சம் கனத்தது.
ராஜா என்னுடன் பேசியதெல்லம் உண்மையான அவரது கருத்துக்களா அல்லது ஏதாவது உள் நோக்கமுடைய தந்திரோபாய நடவடிக்கையா என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை.
ஆனால் இவையெல்லாம் இரகசியமாக வைக்கப்படுவதற்கு நாம் துப்பறியும் நாடகம் எதையும் நடாத்தவில்லை. சாட்சியின்றிச் செத்துப் போன இலட்சம் மக்களின் துயர வரலாறு. அதை நடத்திமுடித்த் இந்திய இலங்கை அரசுகளின் குரூரம் குறித்த விசாரணை.

இவ்வுரையாடலின் போது என்னோடு பிரசன்னமாயிருந்த இன்னொரு எழுத்தாள நண்பர் நான் இப்பதிவை எழுதுவதைத் தீவிரமாக எதிர்த்ததையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

என்னுடனிருந்த எழுத்தாளர் உட்படபல சமூக உணர்வுள்ள நண்பர்களின் வேண்டுகோள்களையும் பொருட்படுத்தாது இப்பதிவை எழுதுவது இன்றைய அரசியற் சூழலில் அவசியமானதாகவே கருதுகிறேன்.

இது தூ.ராஜா மீது சேறு பூசுவதற்காக எழுதப்பட்டதல்ல மாறாக அவர் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து தனது ஈழத்தமிழர்கள் குறித்த போராட்டத்தைச் செழுமைப்படுத்த வேண்டும் என்ற ஆதங்கத்திலேயே பதியப்படுகிறது.என்னைப் பொறுத்தவரை திருமாவளவன், பழ.நெடுமாறன், வை.கோ, கருணாநிதி போன்ற அரசியல் வியாபாரிகளுடன் ஒப்பிடும் போது ராஜாவிடம் இன்னமும் ஒரு குறைந்த பட்ச நேர்மை உறைந்து கிடப்பதாகவே நம்பிக்கைகொள்கிறேன், தவிர அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டம் இனியொரு முறை யாருடைய சொந்த அரசியல் இலாபங்களுக்காகவும் பயன்படுத்தப்படக் கூடாது.

44 thoughts on “இந்திய மேலாதிக்கம் குறித்துப்பேச ஈழத் தமிழர்களுக்கு உரிமையில்லை – து.ராஜா : சபா நாவலன்

 1. ராஜாவின் போலித்தனத்தை அம்பலப் படுத்தியதற்கு நன்றி

 2. போலிக் கொம்யூனிஸ்ட் ராஜா போன்றவர்கள் சுயநலத்திற்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள். இவர்கள் அம்பலப்படுத்த வேண்டியவர்கள் தான். ஜெயலெலிதாவுடன் கூட்டுவைத்துக் கொண்டு மார்க்சியம் பேசும் இந்தக் கயவர்களுக்கு இது நல்ல பாடம்.

 3. தோழர் சபாநாவலன் அவர்களே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் உள்ளவர்களை நீங்கள் இடதுசாரி கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்களாக கருதியதை என்னவென்பது? இவர்கள் இடதுசாரி வியாபாரிகள். மாவோயிஸ்டு அமைப்hக்களை சேர்ந்த தோழர்கள் இவர்களை போலிக் கம்யூனிஸ்ட்டுக்கள் என்று வர்ணிப்பதில் என்ன தவறு? இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள்தான் இந்திய ஒடுக்கப்ட்ட மக்களின் முதல் எதிரிகள். இவர்களை உங்களைப்போன்ற தோழர்கள் அம்பலப்படுத்தவேண்டும்

 4. உரையாடலின் ஒலிப்பதிவினை பொதுவில் வெளியிடுங்கள். அல்லது உங்கள் இந்த தகவலின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குரியதாகவே இருக்கும்.

 5. good morning,

  the questions raised by mr.t.raja are very relevant. Instead of finding fault with him or attempting to belittle him in the eyes of others, it would do well to introspect and find answers in fair and just manner to his questions.

  Expecting the indians to go on abusing their own land is not fair and just. India is not the only country that has brought about the defeat of eelam. there are many factors involved and refusing to accept this and squarely blaming India for the sad state of affairs of the hapless eelam people is not the right approach.

  In the gruesome assassination of Rajiv Gandhil many others were also killed and wounded but none cares to even mention a word about them. I am not justifying the gruesome killings of thousands of Eelam Tamils but accusing India alone for their misfortune and expecting the Tamils in India to abuse their own motherland, trying to turn them against their own country, trying to creat a ‘divide and rule’ situation by brainwashing them that they are treated as secondary citizens in India would never serve the purpose.
  latha Ramakrishnan

 6. ஏட்டுசுரைக்காய் கரிக்கு உதவாது என்பது யாருக்கு பொருந்துமோ இல்லையோ இந்தியாவில் இருக்கும் கம்யூனிஷ்டுகளுக்கு மிக சரியாக பொருந்தும்.

 7. Latha Ramakrishnan, aren’t you tired of singing the same song over and over. Please take a break!!

  Of all the politicians in India, I had very high regards for Rajah. I am shocked and disappointed that he too belongs to the category of the other Indian Politicians ie. corrupt. In fact, I am saddened beyond description that we have no one left in India to support us, except the poor men and women who have no voice and whose support is systematically exploited by these corrupt politicians. Now there’s only Pandiyan of CPI left. I hope he doesn’t fall into the same category.

 8. போலிக் கம்யூனிஸ்டுகளை நீங்கள் அம்பலமாக்கியது வரை சரியான செயல்.
  ஆனால் கீழ்கண்ட வரிகளில் உள்ளவற்றை மட்டும் பரிசீலியுங்கள்.
  அது சரியான மதிப்பீடு அல்ல CPI,CPM பற்றி மேலும் அறிய தோழர் ரயாகரன் தளத்தை பாருங்கள் அவர்களை ப‌ற்றி நிறைய அறிந்துகொள்ளலாம்.

  /////இது தூ.ராஜா மீது சேறு பூசுவதற்காக எழுதப்பட்டதல்ல மாறாக அவர் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து தனது ஈழத்தமிழர்கள் குறித்த போராட்டத்தைச் செழுமைப்படுத்த வேண்டும் என்ற ஆதங்கத்திலேயே பதியப்படுகிறது.என்னைப் பொறுத்தவரை திருமாவளவன், பழ.நெடுமாறன், வை.கோ, கருணாநிதி போன்ற அரசியல் வியாபாரிகளுடன் ஒப்பிடும் போது ராஜாவிடம் இன்னமும் ஒரு குறைந்த பட்ச நேர்மை உறைந்து கிடப்பதாகவே நம்பிக்கைகொள்கிறேன், தவிர அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டம் இனியொரு முறை யாருடைய சொந்த அரசியல் இலாபங்களுக்காகவும் பயன்படுத்தப்படக் கூடாது/////

 9. as per your interview with D.Raja, he should be exposed to the people. so that D.Raja like politicians could never be elected.

 10. PESAVIRUPPATHAI EZUTHAVO ALLATHU PATHIVIDAVO KOODATHU ENDRU RAJA AVARKAL KETTU KONDA PIRAKUM ITHAI PATHIVITTA UNGALAI ENTHA THAKUTHIYIL VAIPPATHU.ITHU THAAN UNGALAIPPONDRA EZA THAMIZARKALIN MUTHUKIL KUTHTHUM KUNAMO?

 11. தமிழர்களின் படுகொலையினை முதலில் அம்பலப்படுத்தியதே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தான் து.ராஜாவை இப்பொழுது பேசவிடாமல் முடக்கும் சக்தி இந்திய மேலாதிக்கமா அல்லது
  சீன ரஸ்சிய கியுப மேலாதிக்கமா தெரியவில்லை ஆனால் ஒன்று. எல்லா மேலாதிக்கத்திற்கும் மேல் தமிழன் தமிழனாக வாழ்ந்தாலே போதும் சிங்களவன் சிங்களவனாக வாழ்கிறான் கிந்திகாரன் கிந்திகாரனாக வாழ்கிறான் மலையாளி மலையாளியாகவே வாழ்கிறான் கர்னடன் கர்னடனாகவே வாழ்கிறான் எல்லோரும் எல்லோரும்போல் வாழும்போது தமிழன் மட்டும் ஏன் தமிழன் தமிழனாக வாழமுடியாதா? தமிழன் தமிழனாக வாழமுடியும் ஆனால் காலத்தால் செய்த உதவியாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தான் து.ராஜாவுக்கு ஈழதமிழினம் கடமைப்பட்டுள்ளது!இதனுடைய உண்மை தன்மையை அறிய அவருடைய ஒலிநாடாவை ஒலிபரப்பவேண்டும் இல்லாது விட்டால் என்னால்
  இதனை ஏற்க முடியாது எது எப்படி இருப்பினும் டி ராஜாவுக்கு எனது நன்றி பாராட்டுக்கள்

 12. It is a shame that the Tamils in Tamilnadu is still living without knowing their strength. It is unfortunate after Hon. Anna. all the DMK leadership is selfish and corrupt. The Tamils in Tamilnadu must get rid of these corrupr politicians and they must wake up and vote for the best candidate.

 13. ராஜாவை மட்டுமல்ல ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது அனைத்து ஈழத் தமிழர்களும் பயங்கர வாதிகள் என்று கூச்சல் போட்ட தா.பாண்டியன் போன்றோரும் வை.கோ போன்ற கோடீஸ்வர வியாபாரிகளும் கூட அம்பலப் படுத்தப் பட வேண்டும். உங்கள் கருத்துக்கள்களை ராஜா மறுப்பாரானால் அதை எழுத்து வடிவில் முன்வைக்க வேண்டும்.

 14. திரு ராஜாவா இவ்வாறு கூறினார். இதனை நம்பமுடியவில்லை. நம்பினால், உலகில் எந்தவொரு அரசியல் வாதியையும் நம்பிப் பயனில்லை. பாவம் ஈழத்தமிழன்!

 15. திரு ராஜா தமது பேட்டியில் ,தாம் ரஷ்யா முதல் நெல்லியடிவரை சென்றுவந்ததாயும்,பீட்டர்கெனமனைச் ச்ந்தித்ததாயும் குற்ப்பிட்டுள்ளார். அவர் பீட்டர்கெனமனைச் சந்தித்து என்னதான் பேசினாராம்? பீட்டர்கெனமனும் அவரது சகாக்களும் ‘சிங்கள மேலாதிக்கத்தை” வழிமொழிந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் 1965 இலேயே இரண்டறக்கலந்து தங்கள் சுயத்தை இழந்து விட்டார்களே!
  இலங்கையின் முக்கிய சுதந்திர மார்க்சிய ஆய்வாளர், குமாரி ஜெயவர்த்தனா தனது “இலங்கையின் இன வர்க்க முரண்பாடுகள்” என்னும் நூலில் கூரியிருப்பதை ராஜாவும் படித்திருப்பார் என்றே எண்ணுகிறேன். இல்லையாயின் இனிமேலாவது படியுங்கள்.
  அவர் தனது நூலின் 131/132 ம் பக்கங்களில் எழுதியிருப்பவை இவைதாம்; “ 1965 ம் ஆண்டுகளில் பிரதான இடதுசாரிக் கட்சிகள் இனவாத அரசியலைச் சரணடைந்தன. 1970 ம் ஆண்டுகளிலும் 1980 இன் முற்பகுதியிலும் சிங்கள மேலாதிக்க வெறிவாதத்தின் ஆதிக்கம்; சமூகத்தின் சகல வர்க்கத்தினரிடையேயும் செறிந்து பரவியது. தொழிலாளர் வர்க்க கட்சிகளுடைய கொள்கைகள் மேலாதிக்கம் பெற்று மக்களால் பரவலாகப் படிக்கப்பட்ட இடதுசாரிப் பத்திரிகைகளால் இனவெறி ஊக்குவிக்கப்பட்டது………………….
  1966 ஜனவரி 8 ல் தமிழ்மொழி விசேடவிதிகளுக்கு எதிராக “ தல தெல், மசாலவடே அப்பிட்ட எப்பா” ( நல்லெண்ணெய் மசால் வடை எமக்கு வேண்டாம்) என கோஷத்தை முன்வைத்தது சிங்கள் இடது சாரிக்கட்சிகள்தாம்.” ரைதுதான் இலங்கை இடதுசாரிகளின் ”சிங்களசாரி” வரலாறு.
  இவர்களை விடுதலைப்புலிகள் பூரணகும்பம் வைத்து வரவேற்றிருக்கவேண்டும் என்று ராஜா எதிர்பர்க்கிறாரா?

 16. இவர் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர் ,WHO IS THE ORGANISER OF THE “INI-ORU”. FIRST SHOW YOUR IDENTITY-LIKE NAME,AGE ,PLACE OF BIRTH,LANGUAGE STUDIED,YOUR FAVOURITE LEADERS. THEN I WILL GIVE THE DATA OF YOUR MOTIVENESS.,IN THIS.

 17. சபா நாவலன்.
  முக்கியமான பதிவு.
  இந்தியாவில் “இந்திய வல்லரசு” என்ற மாயையில் பல்வேறு தரப்பினரும் இணைந்திருப்பது தெளிவாகிறது. அதற்கெதிரான ஒரு போராட்டக்குரலை அறியமுடியாமலுள்ளது.
  புலிகளை அழிப்பது -அணுசக்தி நாடாக மாறுதல் – மக்களின் துயரங்களைப் பேசாமை போன்றவை இந்திய ஏகாதிபத்தியக் கனவுகளின் அங்கங்களாகவே விளங்குகின்றன.

  இலங்கைத் தமிழர் அழிப்பில் இந்திய நிலைப்பாடுகளுக்கெதிராக குரல் கொடுத்தவரும் மற்றும் இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தினை எதிர்த்தவரும் தலித்துக்கள் பற்றிப் பேசிவருபவரும் என்ற வகையில் ராஜா மீது நம்பிக்கை ஏற்படுவது இயல்பே.

  ஆயினும் அவர்களும் இந்திய ஏகாதிபத்தியக் கனவுகளுடன் வாழ்வது குறித்து அறியும் போது ஏமாற்றமே மிகுந்துவிடுகிறது. இந்தப் போக்கு இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போரட்டத்தை நசுக்கிவிடும் !.
  மற்றொரு புறம் மக்கள் படுகொலைகள் இன்றைய உலகில் கண்டுகொள்ளப்படத்தக்கவை அல்ல என்ற புதிய பரிமானம் முன்னெழுவதைக் காணமுடிகிறது.
  ஆயிரக்கணக்கானோரை கொன்றொழித்து – ஆயிரக்கணக்கானோரின் வாழ்வுரிமையை அழித்து ஏகாதிபத்தியங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயன்று வருகின்றது என்பது ஆசியாவில் – இலங்கையில் தமிழர் அழிப்பினூடாக உணர்த்தப்பட்டுள்ளது.
  இம் மனிதப் படுகொலைகளுக் கெதிராக – வாழ்வுரிமை அழிப்பிற்கெதிராகப் போராடுதல் ஏகாதிபத்தியங்களுக் கெதிராகப் போரடுதலாக அமையும் .

  இதற்கான சக்திகளை – அவர்களின் குரலை வலுப்படுத்துவது சாத்தியமானதொரு வழியாகும்.
  வி.ஆர்

 18. kooda irunthey kuzhipparikkum gumbal thaan,intha “INI-ORU”,KAYAVARGAL.

  IMMEDIATE ACTION IS TO ERADICATE FUNCTIONS.

 19. I won’t agree with what has been accused about Raja commenting about Elatamils. He need not have hidden interviiew with you and there was no necessasaity for the same. CPI has taken bold intiiative and changed the secenariio in Tamil nadu Politics. Even now CPI has not changed its stand. The context underwhich the discussion went has not been placed properly. The way inwhich you published is motivated with preconceived notiion. Any way Raja should reply and clarify the same then only ur statement will be taken to account.

 20. Raja instead of supporting the indian govt should tell the govt to request the deportation of KP in connection with rajiv case.. with out doing that there is no point in speaking about the srilankan issue.. you pressurise the govt regarding KP you will see a show down between srialanka and the ruling congi. peple wiill involve them and the srilankan tamil problesm will be solved in no time.s o

 21. ராஜா இப்படிப் பேசியதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இதுவும் பேசுவார்கள் இன்னமும் பேசுவார்கள். நீங்கள் சந்தித்த இடம் தி. நகர் அலுவலகம் என்றால் மேலதிகமான ஒரு தகவல். அக்கட்சி அலுவலகத்தை இடித்துவிட்டு விரைவில் “மல்டி காம்ப்ளெக்ஸ்” கட்ட இருக்கிறார்கள். கொச்சியில் ஏற்கனவே அப்படிச் செய்திருக்கிறார்கள். அப்புறமென்ன உலகமயமாதலும் வெங்காயமும். ஆனாலும் நன் கொடை கேட்டு, சிகப்பு பக்கெட் (உண்டியல் போய் பக்கெட் வந்துவிட்டது) எடுத்துவருவார்கள் கேடுகெட்ட இந்த சிகப்புத் துண்டுக்காரர்கள்.

 22. து.ராஜா இயல்பிலே தப்பானவர் கிடையாது. அன்றய நிலையில் என்ன மனநிலையில் இருந்தாரோ தெரியாது. சபா நாவலன் கேட்டுக்கொண்ட படி இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்வதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு தனது அவப்பெயரைக் கழுவிக்கொள்வார் என்றே எண்ணுகிறேன்.

 23. //து.ராஜாவுக்கு ஈழதமிழினம் கடமைப்பட்டுள்ளது// – ஏகலைவன். இந்திய மேலாதிக்கவாத்தை தமிழ் மக்கள் மீது வாந்தி எடுக்கும் ராஜா வுக்கா தமிழினம் கடமைப்பட்டுள்ளது. ?

 24. அன்பானவரே முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் சிங்க இனவாதரசுடன் சேர்ந்து நாராயணும்
  சிவசங்கர்மேனனும் பிரனாப்முகர்ச்சியும் சேர்ந்து புலிகளின்கட்டுப்பாட்டு பிரதேசத்தில் 70ஆயிரம் தமிழர்கள் தான் மாத்திரம் உள்னர் என திரும்ப திரும்ப கூறினர் மிகுதி தமிழரை அழிக்கவேண்டும்
  என திட்டமிட்டனர் ஆனால் புலிகளின்கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து வந்தவரோ மூன்று இலட்டத்திற்கு மோல் புலிகளும் மக்களின் பாதுகாப்பை முன்னிட்டு தாக்குதல் நடத்தாமல் விட்டனர் மற்ரயது தமிழர்கள் துன்பப்படும் போது அவர்கள்து உயிரை பாதுகாப்பதுக்காக இரவுபகல் பாராம்ல் உழைத்த பல கட்சிகளுக்குள் அகில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிரும் முதன்மையானவர்கள் அல்லாதுவிட்டால் இலங்கை இந்திய ஏகாதிபத்தியத்திற்கும் அழிக்கப்பட்ட ஒருஇலட்டம் தமிழரைவிட இன்னும் இரண்டு இலட்சம்மக்கள் அழிக்கப்பட்டிருப்பார்கள் காலத்தால் தமிழினத்தை காப்பாற்றிய டி ராஜாயுக்கும் தாபாண்டியனுக்கும் ஈழதமிழர் சார்பில் கோடி நன்றிகள்

 25. ஏகலைவன், தங்கன்…
  முதலில் ஏகலைவன் எங்கே வில் வித்தையைக் கற்றுக் கொண்டாரோ? பாருங்கள், ராஜவுக்கு மட்டுமல்ல, கலைஞர், திருமா, வைகோ,நெடுமாறன் ஆகியோரும் இப்ப்படித்தான் உரிமை கோருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால், ஈழத்தில் அரச கைக் கூலியான ஆனந்த சங்கரியும் தாந்தான் முத்தலில் சரியான எண்ணிக்கையை குறிப்பிட்டதாகச் சொல்கி|றார். எல்லோருக்கும் இன்று வரைக்கும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இனம்நன்றி சொல்ல வேண்டுமாம்.. என்னையா வித்தை இது?
  தங்கன்.. ராஜா தப்பானவரா இல்லையா என்பது பற்றி யாரும் விவாதம்நடத்த இல்லை அவர் கருத்துக்கள் குறித்தே இங்கு பிரச்சனை..
  இந்திய சமாதானம் காக்கும் படை இலங்கைத் தமிழர்களை அழித்த பொதும் ராஜாவின் கட்சி இப்படித் தான்நடந்து கொண்டது.

 26. போலி கம்யூனிஸ்டுகளின் முகத்திரை நேருக்கு நேர் கிழிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்குச் சென்று சப்பாத்தி தின்றதால் வந்த வினையாக இருக்கலாம். துனிந்து உரைத்த சபா. நாவலனுக்கு நன்றி. அவர் து.ராஜா அல்ல, “ப்தூ…” ராஜா.

 27. WE WANT THE ANSWER WE WANT TO HERE,THAT SHOLDNT BE THE ANSWER ANY MORE,RAJAH IS POLITICIAN NOT A COMMUNIST,THEY DONT WANT TO HEAR THE TRUTH SO CUT US OFF,AM NOT INTREST IN IT,I DONT WANT TO TAIK ABOUT,AND THE END THEY EVEN SAY THEESE PEOPLE TROUBLING US.I THINK WE TRY AND STAND OUR OWN FEET.

 28. ராஜ போன்ற போலிக் கம்யூனிஸ்டுக்கள் இந்தியாவின் தேசிய இனங்களுக்குள் சுயணிர்ணய உரிமை உள்ளது என்பதை மறுத்துக் கொண்டே இலங்கை தமிழர்களுக்காக போராடப்புறப்பட்டமை வாக்கு போறுக்கித்தனமே தவிர வேறுன்றும் இல்லை இவர்களை போன்றவர்களை தேலுரித்துக் காட்டுவது நேர்மையான கம்யூனிஸ்டுக்களின் கடமையாகும்.

 29. அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்;கும்.
  இது இ—யா சொல்லி த்தந்தது.

 30. இந்த இணைய தளத்கிற்க்கு இது தான்நான் வரும் முதல் மற்றும் கடைசி முறையும் ஆகும். ONe of the strongest principles of journalism is to maintain the promises made by the journalist to an interviewee. By publishing the interview inspite of Mr Raja’s requests, you have violated one of the fundamental principles. Sorry, and good bye.

 31. இந்த ராஜா மட்டுமல்ல இன்னும் பல ராஜாக்கள் இருக்கிறார்கள் இனம் காணவேண்டியது எங்களுடைய கடப்பாடு

 32. I RATHER AROGANT THAN TOLLERANT HOW ITS SOUND? THAT WHAT JAWAHAR ON ABOUT. SO THAT MENT RAJAH IS SAINT YOU CANT DO,OR SAY ABOUT HIM.BROTHER WE LIVE IN A WORLD WITH DEMOCRACY,NOT WITHOUT.
  COMMUNIST RUSIA AND CHINA ALSO HAVE A DEMOCRACY,SORT OF.WHAR ABOUT JAWAHAR WORLD.
  HAVE SOMETHING TO PLEASE DONT GO,DONT WAIK OUT PLEASE?

 33. போர் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்று எமக்குப் புரிந்துவிட்டநிலையில் வன்னி மக்களை குறைந்த சேதங்களுடன் காப்பாற்றமுடியுமா? என்று நாம் ஏங்கிய நிலையில் மேலே கருத்துகள் தெரிவித்திருக்கும் தூய்மையான கம்யூனிஸ்ட்டுகளும் என்ன செய்துகொண்டிருந்தீர்களோ எமக்குத் தெரியாது. ஆனால் பிரபாகரன் அந்த மக்களை ஒன்றுதிரட்டி இலங்கை இராணுவத்திடம் ஒப்படைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கினீர்கள் என்பதை மறுக்க முடியுமா?
  தமிழ்நாட்டில் ராஜாவோ> பாண்டியனோ கருணாநிதியோ எமது மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? உங்களைப் போல வறட்டு மார்க்சியம் பேசிக் கொண்டிருந்தால் அந்த மக்கள் அநாதைகளாக நின்றிருப்பார்கள். ராஜா தனது சொந்த நாட்டில் வாழ்பவர்> அவரை வேறெந்த நாட்டின் அரசியல் தேவையும் வழிநடத்த முடியாது. அவர் மார்க்சியத்தை விஞ்ஞானபூர்வமாகச் செயற்படுத்துவராக இருக்கலாம் உங்களைப் போல வறட்சியாகப் பேசி வாழ்பவராக இருக்க முடியாது.
  இந்திய மேலாதிக்கம் என்று நாம் சொல்வது உண்மை. ஆனால் எமது பிரச்சினையைத் தீர்க்க நாம் இந்தியாவைத் தேடுகிறோம். மற்றவர்களைப் பைத்தியக்காரர்களாக்கும் உங்கள் அரசியல் புலிகளுக்குத்தான் உகந்தது. அவர்கள் தான் உங்களைத் தேடி வருவார்கள். மக்கள் அதிகம் துன்பப்பட்டால் புரட்சிக்கு நாள் நெருங்கிவிட்டது என சந்தோஷப்படுபவர்கள் வறட்டு மார்க்சிஸ்டுகள். அவர்களில் சிலர்தான் கட்டுரையாளரும் இங்கே பின்னூட்டம் விடுபவர்களும்.
  தயவுசெய்து யதார்த்தத்திற்கு இறங்கி வாருங்கள். உங்கள் மேதாவித்தனத்திலிருந்து மக்கள் பிரச்சினையை அணுகாதீர்கள். மக்களின் பிரச்சினையைக் கண்டுகொள்ளுங்கள். உங்களைப் போலத்தான் அவர்களும் தமது பிள்ளைகளை நன்றாக வாழவைக்க விரும்புகிறார்கள். உண்மையில் நீங்கள் உண்மையானவர்கள்> மக்கள் மத்தியிலிருக்கும் போலித்தனமான அரசியல்வாதிகளைத் தூக்கி எறிய வாருங்கள். ஆனால் மக்களை எதிர்ப்புரட்சி அரசியலுக்கு பலியிட்டு விடாதீர்கள்.

 34. குறைந்தபட்ச நேர்மை கூட இல்லாமல் ஒருவருடைய கருத்தில் அத்துமீறிப் புகுந்து அடாவடித்தனம் பண்ணி பெற்றுக்கொண்ட செய்தியைப் பிரசுரிக்கும் இது போன்ற இணையத்தளங்களும் எழுத்தாளர்களும் புலம்பெயர் தமிழர்களிடம் உருவாகி வருவது வருந்தத்தக்கது. பத்திரிகா தர்மத்திற்கு மாறாக மனித உரிமைகளை மீறும் வகையில் தனிமனித வக்கிரத்தன்மையான செயற்பாடு இது.
  மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத பணத்திற்கும் பகட்டுக்குமாக அலையும் மேற்கத்தைய புலம்பெயர் தமிழர்களின் கலாசார பண்புகள் குறித்து இலங்கைத் தமிழர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அண்மையில் இலங்கைக்கு வந்துசெல்லும் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் பொதுநிகழ்வுகளில் பேசும்போது அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்களை கையாள்வதையும் கண்டிருக்கிறோம்.

  இது எனது நண்பனின் கருத்து.

 35. அன்பரே அசோக் இனப் படுகொலை நிகழ்ந்து கொண்டிருக்கும் தேசத்திலிருந்து நேர்மை பற்றியும் பத்திரிகா தர்மம் பற்றியும் பேசுவதாகத் தெரியவில்லை. சாகடிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் பிணங்களின் மேல் ஏறி நின்று தர்மம் நேர்மை நியாயம் எல்லாம் பேசுவது போல் தெரிகிறது. சற்றே கீழே பாருங்கள் உங்கள் காலடியில் பிணங்கள் தெரியும்.
  -தீ

 36. என்ன வெட்கக்கேடு,
  இலங்கையில் உலகறிய ஒரு இனப்படுகொலையை
  நடத்தியதும் அதன் பிற‌கு இப்போது வாயில்லா
  ஜீவன்களாகிவிட்ட‌ அந்த மக்களை மேலும்,மேலும்
  பூச்சிகளை போல நசுக்குவதுமான அனைத்து குற்றங்களிலும்
  முதல் கிரிமினல் குற்றவாளி இந்தியா தான்.

  தன்னை ஒடுக்குகிற‌வனை,மேலாதிக்கம் செய்கிற‌வனை பற்றி
  ஒடுக்கப்படுகிறவன் பேசக்கூடாதாம்..
  இதை சொல்பவன் கம்யூனிஸ்டாம் !
  தூ.. மானம் கெட்டவர்களே உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லை
  கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொல்வதற்கு ?

 37. Your objective of presenting this interview is well understood……apreciate it…but what hurts me is you mentioning Thiruma’s name and paza nedumarans name…….pls understand if at all there is somebody who really cares about eelam tamils it is them. in the process of reviewing let us not shutdown the one or two firing guns that are still firing with loud voices unto the ears of the deaf world community……..iam saddened by mr.raja’s attitude..if what you have written is true then i plead Mr.raja to chagne his attitude
  Thanks

 38. வணக்கம் தோழர்களே, இப்படி வரைமுறை இல்லாமல், வாத பிரதி வாதங்கள் கருத்துக்கள் என்ற பெயரில் அநாகரிகமாக எழுதுவதை
  நிறுத்துங்கள். சரியான தெளிவை தாங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள். உணர்ச்சிவசப்படுவதில்பயணில்லை. அதிகாரத்தின் எத்தனையோ மிரட்டல்களுக்கு அப்பாற்பட்டு ஈழ எழுச்சிப் போராட்டத்தை பெரு வீச்சோடு எடுத்துச் சென்றது இந்திய பொதுவுடமைக் கட்சிதான், அதன் பின்பே ஈழத்திற்கான கள்ம் அமைக்க ஏனைய அமைப்புகளையும், பிரிந்து கிடந்தோரையும் ஒன்றிணைத்தது. மேலும் கட்டுரையில் சபாநாவலன் குறிப்பிட்டதுபோல இந்திய பாராளுமன்றத்தில் ஈழம் சம்பந்தமாக மிக அதிகமாகவும், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான அவசியத்தையும். அதற்கான அக புற சூழல்களையும் பட்டியலிட்டு அதிகமாக பேசிய தமிழ்நாட்டு உறுப்பினர் இவர் ஒருவரே… மேலும் இஙுகு கருத்துரை இடுகிறவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்திய சனநாயகம் எப்பொதோ சரிந்தும், அதிகாரத்தின் கைப்பாவையாகவும் மாறிவிட்டது. அதில் ஆட்சியை பணம் கொடுத்து கைப்பற்றுகிற கயவர்கள். ஓட்டுக்கு நோட்டு பெறும் மக்கள், இதற்கு துணைபோகும் ஏதொவொரு விதத்தில் எமக்கு உறவாகப் பெற்ற அந்தந்த பகுதி ஒன்றிய பிரம்மாக்கள், மாவாட்ட மாகான் கள், அதன் பின் மந்திரி மாமாக்கள் , சில பகுதிநேர மக்கள் தலைவர்கள். இவையெல்லாவற்றையும் வைத்துக்கொண்டு மேலாதிக்கம் எனற வார்த்தையில் து.ராஜா வழுவிப்போய்விட்டார் என்று புலம்புவதில் பயணில்லை. மேலும் நீங்கள் எல்லோரும் மேலாதிக்கம் என்பதை எந்த அளவுகொலின்படி கணிக்கிறீர்கள். மேலாதிக்கமும், ஒன்றின் மீது இன்னொன்று செலுத்துகிற ஏகாதிபத்தியமும், ஏற்கமுடியாத ஒண்ரு என்பதைநான் உறுதிபட ஒப்புக்கொள்கிறேன். மேலும் மேலாதிக்கம், அரசுகள் தங்களுக்கிடையில் ஏற்படுத்திக் கொள்கிற எழுதா உடன்படிக்கைகள் அரசுகளின் கள்ள உறவுகள், இப்படிநீளும் பட்டியலில்நான் குறிப்பிடாதது ஏராள்ம். இப்படி ராசாவெல்லாம் போலிகள் என்றால், களத்தை சந்திக்காது இணையத்தில் அமர்ந்து நாகரீகமற்ற முறையில்நாலு வார்த்தை பேசி களித்து கலைந்து போகிறவர்களும் போலிகள்தான். உண்மையில் எம் மக்களுக்கான துயரை பகிர்ந்து கொள்ள என்ன வழி என பயனுள்ள முறையில் ஆராய்வதுதான் சாலச் சிறந்தது. கப்பலில் சென்ற பொருள்களே கரை சேரவில்லை யெனில் அதன் காரணமும், கட்டுடைப்பும் எங்கு என அறிய முற்படுங்கள். இப்பொது தேவை வெறும் உணர்ச்சிகள் அல்ல. உரிய செயல்கள்.

 39. தமிழவன்,

  ஈழப்போராட்டத்தில் மட்டுமல்ல ஒடுக்க்ப்பட்ட உலக மக்களின் போராட்டங்களில் கூட சந்தர்ப்பவாதிகளையும் மக்களின் எதிரிகளையும் அம்பலப் படுத்துவதே உண்மையான சக்திகளை முன் கொண்டுவர சரியான வழி முறை.

Comments are closed.