இந்திய மீனவர்களைத் தடுக்க போர்க்கப்பல்கள்? : இலங்கை

வேகமாகத் தாக்குதல் நடத்தக் கூடிய 6 கப்பல்களை அடுத்த வருடம் இஸ்ரேலிடமிருந்து கடற்படை கொள்வனவு செய்யவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடற்படை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துமுகமாக இவற்றைக் கொள்வனவு செய்யவிருப்பதாகக் கடற்படை கொமாண்டர் வைஸ் அட்மிரல் திசேர சமரசிங்க இன்று காலை நிருபர்களிடம் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் ஊடுறுவதைத் தடுப்பதற்கேற்ற வகையில், பலத்த காவல் நடவடிக்கையில் இவை ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதே வேளை இலங்கை மீனவர்கள் குழு ஒன்று இந்திய கரையோர காவல்துறையைச் சேர்ந்த இருவரைப் பணயம் வைத்த சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.