இந்திய தூதரகத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார் எம்.எஃப். ஹூசைன்

 கத்தார் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் தனது இந்திய பாஸ்போர்ட்டை ஓவியர் எம்.எஃப். ஹூசைன் (95) ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு நேற்று நேரில் வந்து, தனது பாஸ்போர்ட்டை ஹூசைன் ஒப்படைத்தார் என்று ‘கல்ஃப் டைம்ஸ்’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

கடவுள் உருவங்களை அவர் ஆபாசமாக வரைந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், சில இயக்கங்கள் அவருக்கு மிரட்டல் விடுத்ததால் கடந்த நான்கு ஆண்டுகளாக ஹூசைன் வெளிநாடுகளில் வசித்து வந்தார். இந்நிலையில், கத்தார் அரசு கௌரவ குடியுரிமை வழங்கியதால் அவர் துபையிலிருந்து கத்தார் சென்றார். இதையடுத்து, அவர் நேற்று தனது இந்திய பாஸ்போர்ட்டை தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார்.