இந்திய ஜனாதிபதி உருவபொம்மை எரிப்பு 7 பேர் கைது

தமிழகத்தில் தமிழை நீதிமன்ற மொழியாக்கக் கோரும் போராட்டங்கள் தீவீரமடைந்துள்ளன. இக்கோரிக்கையை வலியுறுத்தி போராடிய வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்க அங்கும் அவர்கள் உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார்கள். இந்நிலையில் செம்மொழி மாநாட்டிற்கு வருகை தரும் இந்திய ஜனாதிபதிக்கு எதிராகவும் சில போராட்டங்கள் உருவாகியிருக்கின்றன. சேலத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லியின் உருவ பொம்மையை எரித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாகவும், அலுவல் மொழியாகவும் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாகவும், அலுவல் மொழியாகவும் அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலத்தல், தமிழ் மக்கள் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த 7 பேர் சேலம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்தய குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி ஆகியோரது உருவ பொம்மைகளை எரித்தனர். அந்த இயக்கத்தின் மாநில தலைவர்பூ மொழி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.தமிழில் வாதாட தடையில்லை ஆனால்

சிறையில் இருக்கும் வழக்கறிஞர்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரும் மனு இன்று  உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி என்.ஜி.ஆர்.பிரசாத், இன்று சென்னை தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி முருகேசன் ஆகியோர் கொண்ட முதல் பென்ஞ் முன்பு மனு கொடுத்தார். அப்போது மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, நீதிமன்றங்கள் வழக்கறிஞர்களின் சொத்து, நீதிபதிகள் வருவார்கள், போவார்கள். நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகள் காப்பாற்றப்பட வேண்டும். தமிழில் வாதாட நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அறிக்கையாக கொடுக்க முடியாது. இதை அனைத்து நீதிபதிகளிடமும் அறிவுறுத்துகிறோம் என்றார்.