இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத்தின் “லால்மஹல்” நிறுவனம் பசில் ராஜபக்சவின் அனுசரணையுடன் இயங்கியுள்ளது!

alokeprasadeஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத், இலங்கையில் பணியாற்றிய காலப்பகுதியில் அரசாங்க செயற்பாட்டாளர்களுடன் இணைந்து வர்த்தகக் கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபட்டுள்ளதாக தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர்ஸ்தானிகருக்குச் சொந்தமான  லால்மஹல்  நிறுவனத்திற்கு பசில் ராஜபக்ச  ஊடாக விசேட அரச அனுசரணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு எரிபொருள், அரிசி, சீனி, மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு  லால்மஹல்  நிறுவனத்திற்கு வழியமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
 
  அத்துடன், தொடர்ச்சியாக மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருட்களுக்கு தடையை ஏற்படுத்தி  லால்மஹல்  நிறுவனத்திற்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக தொலைபேசி சேவை மற்றும் வடக்கின் ரயில்வே மார்க்கத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தம் உள்ளிட்ட ஏராளமான சேவைகள் ஆலோக் பிரசாத்தின்  லால்மஹல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தக் கொடுக்கல் வாங்கல்களின் இணைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நிரூபமா ராஜபக்சவின் கணவர் திருநடேசன் என்பவரே செயற்பட்டுள்ளார்.

மேலும் பசில் ராஜபக்சவின் மகள் ஒருவர் இந்தியர் ஒருவரை மணம்முடித்து தற்போது இந்தியாவில் வசித்து வரும் நிலையில், அவர்கள் இருவரும் அலோக் பிரசாத்தின் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

One thought on “இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத்தின் “லால்மஹல்” நிறுவனம் பசில் ராஜபக்சவின் அனுசரணையுடன் இயங்கியுள்ளது!”

  1. Can you please supply some evidence or details of reliable source for this story. Without such information this story cannot be quoted to others.
    It will be appreciated if you can provide supporting evidence in English so that we can quote this information with confidence. Thanks

Comments are closed.