இந்திய இலங்கை கடற்படைக் கூட்டுப்பயிற்சி ஆரம்பம்

இந்திய இலங்கைக் கடற்படைகள் திருகோணமலையில் நேற்று கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்துள்ளன. இந்தியக் கடற்படையின் “திர்’, “சர்துல்’ கப்பல்களிலும் “வருண’ என்ற கடலோரக் காவல்படைக் கப்பலிலும் உள்ள 135 இந்தியக் கடற்படை பயிற்சி அதிகாரிகளுக்கான சிறப்புப் பயிற்சிகள் நேற்றுக்காலை ஆரம்பமாகின.

அதேவேளை, இலங்கைக் கடற்படையின் திருகோணமலை கடல்சார் பயிற்சி அக்கடமியில் பயிற்சி பெற்று வரும் 128 அதிகாரிகளுக்கு இந்தியக் கடற்படைக் கப்பல்களில் கடற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்தியக் கடற்படையின் பயிற்சி நிலை அதிகாரிகளுக்கு நேற்று திருகோணமலை கடல்சார் பயிற்சி அக்கடமியில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

திருகோணமலைத் துறைமுகத்தில் இலங்கைக் கடற்படைப் பயற்சி அதிகாரிகளுக்குப் பயிற்சிகளை வழங்க ஆரம்பித்துள்ள இந்தியக் கடற்படைக் கப்பல்கள் மூன்றும் நேற்று கொழும்புத் துறைமுகம் நோக்கிப் புறப்பட்டன.

நாளை 12 ஆம் திகதி இந்தக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடையும்.

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கிய பயணத்தின் போது இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு இந்தியக் கடற்படைக் கப்பல்களில் நடைமுறை கடல் பயிற்சிகள் வழங்கப்படும்.

One thought on “இந்திய இலங்கை கடற்படைக் கூட்டுப்பயிற்சி ஆரம்பம்”

  1. இந்தியாவில் அதிகமானோர் ஆங்கிலம் பேசினாலும் குயீன் இங்லீஸ் பேசுறது என்றூ இலங்கையையும்,சிங்கப்பூரையும் இன்டிபெண்டன் நாளேட்டுக் கட்டுரை குறீப்பிட்டிருந்தது.என் உச்சி எல்லாம் குளீர்ந்து ஒரு சந்தோசம்.இலக்கணமாகவும்,தெளீவான உச்சரிப்புடனும் ஆங்கிலம் பேசுவதாய் ஆங்கிலேயரே கூறூம்போது அத விட்ச் ச்ந்தோசம் உண்டா?/

Comments are closed.