இந்திய ஆக்கிரமிபிற்கு எதிரான போராட்டம் : ஈழத் தமிழர்களுக்கும் அழைப்பு

முற்போக்கு நேபாள சமூகம் (Progressive Nepalese Society) என்ற அமைப்பு தெற்காசியாவில் இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், நேபாளத்தில் இந்தியத் தலையீட்டிற்கு எதிராகவும், பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசபடைகளின் தாக்குதலுக்கு எதிராகவும் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் திங்கள் பன்னிரண்டு மணிக்கு லண்டனில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது.

இந்த எதிர்ப்பு நிகழ்வானது, Second Wave Publication, Democracy and Class Struggle, World People’s Resistance Movement (Britain) ஆகியவற்றின் ஆதரவுடன் நிகழ்கிறது.

முற்போக்கு நேபாள சமூகம் என்ற அமைப்பிற்கும் புதிய திசைகள் அமைப்பிற்கும் இடையே நிகழ்ந்த கலந்துரையாடலின் பின்னர் இலங்கை இந்திய அரசுகள் இணைந்து நடத்திய இனப்படுகொலைக்கு எதிரான சுலோகங்களையும் எதிர்ப்பு நிகழ்வில் முன்வைப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கள்  மதியம் பன்னிரண்டு மணிக்கு ஆரம்பிக்கும் ஆர்ப்பாட்ட நிகழ்வு இலண்டன் ரவல்கர் ஸ்குரில் ஆரம்பமாகி இந்தியத் தூதரகம் வரை செல்லும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இந்திய ஆக்கிரமிபிற்குகும் இனப்படுகொலைக்கும் எதிரான சுலோகங்களுடன் புலம் பெயர் ஈழத் தமிழர்களை இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு புதிய திசைகள் அமைப்பினரும், முற்போக்கு நேபாள சமூகமும் அழைப்பு விடுக்கின்றனர்.

Date & Time: Monday, 15th February 2010 at 12:00 PM

Venue: The rally will start from Trafalgar Square, North Terrace and march towards the Indian Embassy.

முற்போக்கு நேபாள சமூகத்தின் தொடர்பாளரான கே.சி.ரணா, இனியொருவிற்கு வழங்கிய நேர்காணலில், தெற்காசியப் பிராந்தியத்தில் இந்திய மேலாதிக்கமானது அப்பாவி மக்கள் மீதான அடக்குமுறையாக விரிவடைந்துள்ளது எனத் தெரிவித்தார்.

இலங்கை இனப்படுகொலையின் பின்புலத்தில் இந்தியாவே செயற்பட்டுள்ளது என்றும், இலங்கை அரசின் பாசிசத்தை இந்தியாவே ஊக்குவிக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இது தவிர சென்னையில் 20/02/2010 அன்று ம.க.இ.க வினால் நடத்தப்படும் எதிர்ப்பு நிகழ்விற்கு தமது அமைப்பும் நேபாள மாவோயிஸ்டுக்களும் முழு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவின் மக்கள் மீதான தாக்குதல் இந்திய எல்லையைக் கடந்து இலங்கை நேபாளம் என்று விரிர்ந்து செல்வதன் ஒரு பகுதியாகவே நேபாள மக்கள் மீதான தாக்குதலும் நோக்கப்பட வேண்டும். இந்திய அதிகாரவர்க்கம் நேபாளத்தை ஒரு காலனி போலவே நடத்தி வருகின்றது. 60 வருடங்களுக்கு மேலாக சிறுகச் சிறுக அழிக்கப்படும் நேபாளத்தில் இந்தியா எதை வேண்டுமானாலும் நிகழ்த்தி முடிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கும் இதே நிலை உருவாகிவிட்டது. என்று அவர் மேலும் தெரிவித்தார்.

16 thoughts on “இந்திய ஆக்கிரமிபிற்கு எதிரான போராட்டம் : ஈழத் தமிழர்களுக்கும் அழைப்பு”

 1. புதிய திசையில் ஈழப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் தனி நாடு கோரும் போராட்டம், உலகெங்கிலும் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள், மற்றும் புதிய சக்திகளோடு இணைக்கப்பட வேண்டும். வாழ்த்துக்கள்

 2. நேபாளத்தை அடிபணிய நினைக்கும் இந்திய மேலாதிக்கத்திற்கு எதிராகவும், மத்திய இந்தியாவில் பழங்குடி மக்களுக்கெதிராக உள்நாட்டுப் போரை தொடுத்திருக்கும் இந்திய அரசுக்கெதிராகவும் நடக்கும் இலண்டன் ஆர்ப்பாட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்!

 3. ஈழத்தில் இன்றுவரை தமிழ் மக்களை அடக்குவதிலும் அழித்தொழிப்பதிலும் புலிகள் உட்பட அனைத்துச் சக்திகளையும் இந்திய இந்துத்துவ அதிகாரம் தனது வல்லமையைச் செலுத்தியது. இப்போது அது தானே கேள்விக்குறியாகும் நிலமைக்குள் வந்துள்ளது. ஆனால் இந்தப் பூனூல் போட்ட புழுக்கள் நெளியத்தான் செய்யும்.

 4. கருத்தைச் சொல்லி விடுகிறேன், கல்லெறீயாதீர்கள், சப்பையர்களூம், சப்பையர்களூமாக ஒன்றூ சேர விரும்புகிறார்கள் ஆனால் காலாச்சார, பண்பாட்டு பினைப்பில் இந்தியாவோடு இருப்பதையும் பலர் விரும்புகிறார்கள்.நேபாளம் பல்வேறூ சிறூ இனக் குழுக்களாக பிரிந்து உள்ளது இவர்கள் அழகான இந்துப் பெயர்கலைக கொண்டவர்கள் உதாரணத்திற்கு பிரகாஸ், சீதாராம், பகவான், ஆனால் சீனர்கள் போலவே இருப்பார்கள்.இந்தியாவின் சார்பாக நேபால் இருப்பதையே நான் விரும்புகிரேன்.

 5. இணைந்து கொள்ளுங்கள்,உறவுகளே! நாளை நாமும் இவ்வாறான ஒன்று கூடல்களை நிகழ்த்தும் போது அவர்களும் தோள் கொடுப்பார்கள்!எனவே முடிந்தவர்கள் கரம் கொடுங்கள்!!!

 6. இந்திராவை கொன்றவர்களை தியாகிகளாக்கி கவுரவம்

  முன்னாள் பிரதமர் இந்திராவை சுட்டுக் கொன்ற கொலையாளிகளை, தியாகிகள் என, கவுரவித்து நியூசிலாந்தில் உள்ள சீக்கிய குருத்வாராவில் மரியாதை செலுத்தப்பட்டதால், கடும் சர்ச்சை எழுந்துள்ளது.

  முன்னாள் பிரதமர் இந்திராவை, அவரது பாதுகாவலர்கள் சத்வந்த் சிங், பியாந்த் சிங், கேகர் சிங் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இவர்களில் சத்வந்த் சிங்கும், பியாந்த் சிங்கும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். கேகர் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.இந்நிலையில், நியூசிலாந்தில் மனுகாவு என்ற இடத்தில் உள்ள மிகப் பெரிய சீக்கிய குருத்வாராவில், இவர்கள் மூவரையும் தியாகிகள் என, கவுரவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அவர்களின் படங்கள், குருத்வாராவில் மாட்டப்பட்டு, அவற்றுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இது, நியூசிலாந்தில் வாழும் மற்ற இந்திய சமூகத்தினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  இதுகுறித்து நியூசிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள் சங்கத் தலைவர் வீர் கார் கூறுகையில்,”பயங்கரவாதிகளை சிலர் கவுரவிக்க வேண்டும் என நினைத்தால், அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். அதே நேரத்தில், பொதுஇடங்களில் அவர்களின் படங்களை மாட்டி கவுரவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது கடும் கண்டனத்துக்குரிய செயல்’ என்றார்.

  நன்றி: தினமலர்

 7. It is a good opportunity. Hope as many Eelam Tamils as possible in London will join. Wish a great success

 8. அன்னை என்ற சொல்லை பெருமைப்படுத்தியவர் அன்னை இந்திரா காந்தி அவர்கள்.பாதுகாவலர்கலை மாற்றூங்கள் என்றபோது அவர்களால் சாவு வருமென்றால் வரட்டுமே என்றவர்.வந்தபோது ஏற்றூக் கொண்டவர்.இந்தியாவின் யேர்மனி என்ப்படும் பன்சாபை இந்தியாவோடு வைத்திருக்க தன் அரிய உயிரையே தந்தவர்.தன் தியாகத்தால் உயர்ந்திருப்பவர்.

 9. தீவிரவாதங்களின் ஒலி புனேயில் இந்தியாவின் உளவுத்துறைக்கும் பாதுகாப்பிற்கும் தொடரும் சவால்:
  குண்டுவெடிப்பு : 10 பேர் பலி : 50 க்கும் மேற்பட்டோர் காயம்

  புனேயின் கோரேகான் பூங்கா பகுதியில் உள்ள பிரபல ஜெர்மன் பேக்கரியில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது குண்டுவெடித்தது, பேக்கரியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையை பேக்கரி ஊழியர் ஒருவர் திறநது பார்க்க முயன்றபோது அதில் இருந்த குண்டு வெடித்தது. இது பயங்கரவாத தாக்குதல் என மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் தெரிவித்தார்.

  இவ் ஜெர்மன் பேக்கரி புனேயின் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஓஷோ ஆசிரமம் அருகில் உள்ளது. மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் அமெரிக்கரான டேவிட் ஹெட்லி, இந்தியா வந்திருந்த போது இந்த ஆசிரமத்தில் தங்கியிருந்ததாக போலீசார் கூறியுள்ளனர். இந்நிலையில், குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தை மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் நேரில் பார்வையிட்டுள்ளார்.. பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், இது சிலிண்டர் வெடிவிபத்து அல்ல என்றும், பயங்கரவாத தாக்குதல் தான் என்றும் தெரிவிதுள்ளார். புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரி, வெளிநாட்டினர் அதிகம் வந்து செல்லும் இடம் என்பதால், தாக்குதலுக்கு இந்த இடத்தை பயங்கரவாதிகள் தேர்ந்தெடுத்திருக்கலாம் என கூறியுள்ளார். இதே கருத்தை மத்திய பாதுகாப்புத்துறை செயலர் ஜி.கே. பிள்ளையும் கூறியுள்ளார். மிகவும் கவனமாக இருக்கும் படி மக்களை மகாராஷ்டிர அரசு கேட்டுக்கொண்டுள்ளது. வழமைபோல சி.பி.ஐ., பாரன்சிக் அமைப்பு, மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்பு படையினர் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சம்பவம் நடந்த பின் புனே விரைந்துள்ளதாக அறியப்படுகிறது.

  மேலும், வழமைபோல் முன் எச்சரிக்கையாக பயங்கரவாதிகளின் தாக்குதலிலிருந்து மக்களை காப்பாற்ற முடியாத மகா., முதல்வர் அசோக் சவான் வெடிவிபத்து குறித்து கூறுகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன எனவும், மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளோம் எனவும், எனவே இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

  இதில் வழமையாக கூறுவதுபோல் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பின் போலீசார், குண்டுவெடிப்பு நிகழ்ந்த பேக்கரி லக்ஷர் இ தொய்பாவால் நோட்டமிடப்பட்ட விபரம் தெரியவந்துள்ளதாவும், முக்கியமாக பேக்கரியை லக்ஷர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவரும், பாகிஸ் தானை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கோல் மென் ஹெட்லி என்பவர் நோட்டமிட்ட விபரம் தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

  பேக்கரியில் குண்டு வெடிப்பில் பலியான 12 பேரில் ஐந்து பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது. இதில் ஒருவர் வெளிநாட்டவர்.
  காயமடைந்தவர்கள் சசூன், ஜஹாங்கிர் மற்றும் உத்ராணி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் வெளிநாட்டவர்களும் இருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும் உடல்கள் அடையாளம் காணப்பட்ட பின்னே, இதுகுறித்த உறுதியான தகவல் தெரியும் என அறியப்படுகிறது.

  ஆஸ்ரமத் திற்கு வரும் வெளிநாட்டவர்கள் விரும்பி இந்த பேக்கரிக்கு வருவது வழக்கம். இதனால் இந்த பேக்கரியை லக்ஷர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவரும், பாகிஸ் தானை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கோல் மென் ஹெட்லி என்பவர் நோட்டமிட்ட விபரம் தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ள நிலையில் குண்டுவெடிப்பு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த உள்த்துறை அமைச்சர் சிதம்பரம் பயங்கரவாதி ஹெட்லி புனேயில் சென்று வந்த இடங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என (குண்டு வெடித்து அப்பாவி மக்கள் பலியாகிய பின் வழமை போல) கூறியுள்ளார். மேலும் இது இந்திய உளவுத்துறையின் தோல்வியாக புனே குண்டுவெடிப்பை கருத முடியாது (அப்போ யாருடைய தோல்விஎன்று தெரியாத நிலையில்) ; குண்டுவெடிப்பு குறித்து பயங்கரவாத ஒழிப்பு குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்; விசாரணை முடிவில் குண்டுவெடிப்பு மற்றும் பாதுகாப்பு குறைபாடு குறித்த காரணங்கள் தெரியவரும்; ராணுவத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள் புனே விரைந்துள்ளனர்; எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டினரையும் குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்படவில்லைஎனவும் கூறியுள்ளார்.

  Initially the police said it was a gas cylinder blast, but the explosion is now suspected to be an improvised explosive device (IED) using an ammonium nitrate fuel oil mix, with RDX as a booster, police sources said. About 7 kg explosives may have been used. The bodies were charred beyond recognition.

  விரைவில் இந்தியா, பாக்., இடையே பேச்சுவார்த்தை நடப்பதை கெடுக்கும் வகையிலும், வெளிநாட்டவர்கள் இந்தியா வருவதற்கு பயம் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

  நன்றி!
  அலெக்ஸ் இரவி.

  பிற்குறிப்பு:
  முள்ளிவாய்க்காளிர்க்கு வழி சொன்னவர்கட்கு அமெரிக்காவைச் சேர்ந்த பயங்கரவாதி டேவிட் கோல் மென் ஹெட்லி சென்ற வழி தெரியவில்லை.

  ஆதாரம்:
  தினமலர், The Hindu

  http://www.hindu.com/2010/02/14/stories/2010021458370100.htm

  http://www.dinamalar.com/topnewsdetail.asp?news_id=1761

 10. தமிழ்மக்களின் சுயநிர்னய உரிமைக்கான விடுதலைபோர் >சர்வதேச புரட்சிகர விடுதலைப் போராட்டங்களுடன் இணைவதன் மூலமும்> பரஸ்பர புரிதல்களின் மூலமே இறுதி இலக்கை அடையமுடியும்! அதற்கான ஓர் படிக்கல்லே இந்நிகழ்வில் இணைவது!

 11. அருள் எழிழன் குறிப்பிடுவது போல் போராட்ட முறையில் மாற்றம் வேண்டும். நாடு கடந்த தமழீழம் வட்டுக்கோட்டை தீர்மானம் போன்ற உருப்படாத கடைவிரிப்புக்கள் நிறுத்தப் படவேண்டும.

  1. உருப்படக் கூடிய கடையினை நீர் போடும் , பிறகு இந்த உருப்படத கடைகளை பற்றி பார்ப்போம்.

 12. திருப்பியும் போராட்டமா? ?????

 13. தீவிரவாதங்களின் ஒலி புனேயில்……

  புனே குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில், நேற்று முன்தினம் இரவு ஜெர்மானியர் நடத்தும் பேக்கரி அருகில், குண்டு வெடித்தது. இதில், ஒன்பது பேர் இறந்தனர்; 30க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு முஸ்லிம் முஜாகிதீன்களே காரணமென கூறப்படுகிறது. இச்சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

  தமிழகத்தில், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் சோதனைக்கு பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

  சென்னையில் கோயம்பேடு பஸ் நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று காதலர் தினம் என்பதால், காதலர் தின எதிர்ப்பாளர்களால் பாதிப்பு ஏற்படாத வண்ணம், முக்கிய பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட போலீசார், சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, கூடுதல் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழகம் முழுவதும் கடலோரப் பகுதிகளிலும் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 14. புனேயை தொடர்ந்து டில்லி, இந்தூர் மற்றும் கான்பூர் நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்’ என, உளவு நிறுவனங்கள் எச்சரித்துள்ளதால், அந்நகரங்களில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில், புனே குண்டு வெடிப்பில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது.

  http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6607

Comments are closed.