இந்திய அவமானம் : பீட்டர் வாட்டபீல்ட் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை

இந்தியாவில் நடைபெறும் கொமன்வெல்த் விளையாட்டுக்களில் இங்கிலாந்து வீரரான பீட்டர் வாட்டபீல்ட் கலந்துகொள்வதில்லை எனத் தீர்மானித்துள்ளார். பல பில்லியன்கள் டொலர் மக்கள் பணத்தைச் செலவுசெய்து போட்டிக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக இந்திய அரச ஏற்பாட்டுக்குழு தெரிவித்திருந்தது.மக்கள் பணத்தின் பெரும்பகுதி இந்திய அரச ஊழலில் நாசப்படுத்தியுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான அடிப்படை இருப்பிட சுகாதார வசதிகள் எதுவு வழங்கப்படாத நிலையில், பீட்டர் கலந்து கொள்வதில்லை எனத் தீர்மானித்துள்ளார். இதற்கு முன்னர் கொமன்வெல்த் போட்டிகளிலும் ஒலிம்பிக்கிலும் தான் கலந்துகொண்டுள்ளதாகவும் தங்கம் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர் புது டெல்லியில் நடைபெறும் போட்டிகளில் கலந்த்துகொள்வதில்லை என உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
வீரர்களுக்கான அழுக்குப்படிந்த சுகாதாரமற்ற வசிப்பிடங்களில் தங்கியிருந்து தனது இருகுழந்தைகளுக்கும் நோய்களைக் கொண்டுவந்து சேர்க்கும் துயரத்தை தான் அனுபவிக்க விரும்பவில்லை என பி.பி.சி, ஸ்கை ஆகிய செய்திச் சேவைகளுக்குத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவிலிருந்து போட்டிகளில் கலந்துகொள்ள மறுக்கும் இரண்டாவது வீரர் இவராகும்.
பில்லியன் டொலர் பணத்தைத் திருடிய பின்னர் இறுதிக்கட்ட வேலைகளை அவ்சர அவசரமாக முடிக்க நினைக்கும் ஏற்பாட்டுக்குழு குழந்தைகளை வேலைகளில் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டுக்க்ளை பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய காங்கிரஸ் கட்சியின் நிறுவன மயமான அரச ஊழல் உலகம் முழுவது வாழும் அனைத்து இந்தியர்களினது முகத்தில் காறு உமிழ்ந்திருப்பதாக தெற்காசிய தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய பதிவுகள்:
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: ஊழலுக்குக் கவசமாகும் ‘தேசிய கவுரவம்’!

3 thoughts on “இந்திய அவமானம் : பீட்டர் வாட்டபீல்ட் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை”

 1. இந்திய அவமானமா?இந்தியாவை அவமானப்படுத்துவதா? இந்தியாவின் வளர்ச்சி கண்டு பொறூக்காதா பீட்டர்கள் நிற வெறீயின் குறீயீடுகள்.

 2. யாரும் அவமதிக்கவில்லை.
  டில்லியில் என்ன நடக்கிறது என்று செய்திகளைக் கேட்டுவிட்டுப் பாரத மாதாவின் முந்தானைய இழுக்கிறனே என்று கூச்சலிடுங்கள்.

  இந்தியா விளயாட்டுக்கட்கு ஆயதமாக இல்லை.
  விடுதிகள் மோசமானநிலையில். அயலில்நீர் தேங்கி நுளம்புப் பெருக்கம்.
  பாலம் இடிந்தது. கட்டிடப் பகுதி இடிந்தது.

  இப்போது சிறுவர்களைக் கூலி வேலைக்கமர்த்தி வேலையைத் துரிதப் படுத்துகிறார்கள்.
  ஜெய் ஹிந்த்!

  1. 400 மில்லியன் இந்திய மக்களுக்கு மலசலகூட வசதி இல்லாமல் இருப்பதை விடவா இது பெரிய அவமானம்?
   அவமானப்பட்டு நிற்பது இந்திய மக்களை ஆளும் கசாப்புக்கடைத் தலைமை தானே தவிர இந்திய மக்கள் அல்ல.

Comments are closed.