இந்திய அளவிலான பந்த் தமிழகத்தில் இயல்பு நிலை ஓரளவு பாதிப்பு.

ஏழை நடுத்தர மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கடுமையான விலைவாசி உயர்வுக்கு எதிராக அகில இந்திய அளவிலான பந்துக்கு இடது சாரிகள் உள்ளிட்ட 13 கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. இந்தியாவின் வட மாநிலங்கள் பந்திற்கு தீவீரமான ஆதரவு இருந்தும் தமிழக மக்களிடம் போதுமான ஆதரவு இல்லை. பெரும்பாலான இடது சாரி தொழிற்சங்கங்கள் இன்று வாகனங்களை இயக்கவில்லை. இதனால் பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட வில்லை என்றாலும் கடைகளும் வணிக நிறுவனங்களும் வழக்கம் போல திறந்திருந்தன., ஆட்டோக்கள் பல இடங்களில் ஓடாத நிலையில் ஓடுகிற ஆட்டோக்கள் பந்தைக் காரணம் காட்டி அதிகமாக கட்டணம் பெறுகின்றனர். இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களான கேரளம், மேற்கு வங்கத்தில் பந்த் முழுமையாக கடை பிடிக்கப்படுகிறது.