இந்திய அரசே! உள்நாட்டு மக்கள் மீதான ராணுவ தாக்குதலை உடனே வாபஸ் வாங்கு! :சர்வதேச அறிவுஜீவிகள், மனித உரிமையாளர்களின் அறைகூவல்!

indianarmy100சர்வதேச அறிவுஜீவிகள், மனித உரிமையாளர்களின் அறைகூவல்
(இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்ட வெளிப்படையான கடிதம்)

ஆதிவாசி மக்கள் (மரபின மக்கள்) தொகை நிறைந்துள்ள ஆந்திர மாநிலம்.
சட்டீஸ்கர். ஜார்க்கண்ட். மகாராட்டிரம். ஒரிசா மற்றும் மேற்கு வங்களாத்தில்
முன்னெப்போதும் காண இயலாத வகையில் ராணுவ படையும் ,துணை ராணுவ
படையினரும் குவிக்கப்பட்டு , பெரும் ராணுவ தாக்குதல் நடத்த இந்திய
அரசாங்கம் திட்டமிட்டிருப்பதை அறிந்து நாங்கள் பெரிதும் கவலை
கொண்டுள்ளோம் .

 மாவோயிஸ கலகக்காரர்களின் தாக்கத்திருந்து இப்பகுதியை
 விடுதலை செய்வது  என்பதுதான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள முன்தாக்குதலுக்
கான முக்கிய காரணமாகும் . இத்தகைய ராணுவ நடவடிக்கை அங்கு வாழும்
இலட்சக்கணக்கான ஏழை மக்களின் வாழ்க்கையையும்  , வாழ்நிலை
தேவைகளையும் பாதிப்புக்குள்ளாக்கி சாதாரண குடிமக்களின் பெருமளவி
லான இடம்பெயர்தல் ,அவலநிலை ,மனிதஉரிமை மீறல்களுக்கு வழிவகை
செய்யும் .

 உள்நாட்டு கலகத்தை ஒடுக்குகிற போர்வையில் மிகவும் ஏழ்மையான
இந்திய குடிமக்களை துரத்தி சிக்கல் ஆழ்த்துவது என்பது ஒரு எதிர்மறை
விளைவுகளையும் , கேடு பயக்கத்தக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதாகவே
அமையும் . கலகக்காரர்களுக்கு எதிராக அரசாங்க முகவர்களால் நிதியுதவி
அளிக்கப்பட்டு அணிதிரட்டப்பட்ட கூட்டுப்படைகளின் ஆதரவோடு துணை
ராணுவ படையின் முன்னடத்திச் செல்லும் நடவடிக்கைகளினால் நூற்றுக்
கணக்கானோர் கொல்லப்பட்டு , ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து
ஏற்கனவே அப்பகுதியில் உள்நாட்டு போர் என்ற நிலைக்கு சமானமான
சூழல் சட்டீஸ்கரில் சில பகுதிகளிலும் மேற்கு வங்கத்தின் சில
பகுதிகளிலும் உருவாக்கியுள்ளது .

உழலும் ,ஏழ்மை  மிகவும் மோசமான வாழ்நிலை போன்றவைதான்
இந்தியாவின் ஆதிவாசி மக்கள் தொகையினர் எதிர்கொள்ளும் நிலைமையாகும்,
1990களுக்குப் பின்னர் இந்திய அரசின் கொள்கை திட்டங்களில் ஏற்பட்ட புதிய
தாராளவாத திருப்பங்களின் பின்னர் ,அதிகரித்து வரும் அரசு வன்முறையையும்
அவர்கள் எதிர்கொள்ள வேண்டி வந்தது, காடுகள் , நிலங்கள் ,நதிகள் , பொது
மேய்ச்சல் நிலங்கள் ,கிராம ஏரிகள் மற்றும் பிற பொது மூலாதாரங்கள் போன்ற
ஏழைகளின் பயன்பாட்டிற்கு எஞ்சியிருந்த பலவும். சிறப்பு பொருளாதார
மண்டலம்  மற்றும் சுரங்க வேலை. தொழிற்சாலை வளர்ச்சி. தகவல்
தொழில்நுட்ப பூங்கா போன்ற ‘வளர்ச்சி திட்டம்  என்ற போர்வையில் இந்திய
அரசின் தீவிர தாக்குதலுக்கு உட்பட்டது .

 இந்திய அரசாங்கம் ராணுவ தாக்குதல்நடத்த திட்டமிட்டுள்ள பகுதியின் பூகோள வடிவியல் கனிம வளங்களும் ,காட்டுச்செல்வங்களும் ,நீரும் நிறைந்த பகுதியாக இருப்பது மட்டுமின்றி , பல பெரும்நிறுவனங்களின் பெரிய அளவு சுரண்டலுக்கு இலக்காகவும் மாறிவிட்டுள்ளது .

வேறு வழியின்றி எதிர்ப்பு நடவடிக்கைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த மரபின மக்கள்
இடம்பெயர்தலுக்கும் தனது பகுதிகள் அபகரிக்கப்படுவதற்கும் எதிராக நடத்தும்
செயல்பாடுகளால் அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற பெரு நிறுவனங்கள்
இப்பகுதியில் மேலும் நுழைய இயலாமல் தடுக்கப்பட்டுள்ளன .

 அரசாங்கத்தின் ராணுவ தாக்குதல் என்பதே இம்மக்களின் வெகுஜன எதிர்ப்பை ஒடுக்கிபெரும் நிறுவனங்கள் நுழைவதற்கு வசதி செய்து கொடுக்கவும் ,அதன்மூலம்அப்பகுதியின் கனிம வளங்களையும் மக்களையும் தங்குதடை யின்றிசுரண்டவும் வழிவகை செய்யவே என நாங்கள் அஞ்சுகிறோம் .

 விரிந்துவரும் ஏற்றத்தாழ்வும். சமூக அளவிலான உரிமை மறுப்பும். ஏழை
மக்களும் விளிம்பு நிலையில் உள்ளவர்களும் தமது சொத்துக்கள் அப
கரிக்கப்படுவதற்கு எதிராக நடத்தும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு எதிரான
அரசு வன்முறையும் போன்றவைகளே சமூக எரிச்சலும் கொந்தளிப்பும்
உருவாக காரணமாகி ஏழை மக்களின் அரசியல் வன்முறை என்ற
வடிவத்தை பெறுகிறது .

பிரச்சினையின் மூல காரணத்தை சரியாக அணுகாமல்
இந்திய அரசு ராணுவ தாக்குதல் மூலம் அதனை எதிர்கொள்ள முயல்கின்றது,
அதாவது ”ஏழையைக் கொல்வோம். ஏழ்மையை அல்ல என்பதுதான் இந்திய
அரசாங்கம் மறைமுகமாக முன்வைக்கும் கோஷமாகத் தெரிகிறது .

இந்திய அரசாங்கம் தனது ஏழை குடிமக்களின் துயரங்களுக்கான காரணத்தை
அணுக முயற்சிக்காமல் ராணுவ ரீதியாக அவர்களை ஒடுக்க முயன்றால். அது
இந்திய ஜனநாயகத்திற்கு பலத்த அடியை ஏற்படுத்தும், இத்தகைய முயற்சியில்
குறுகிய கால வெற்றியும்கூட சந்தேகத்திற்குரியதாயினும் ,சாதாரண மக்களின்
துயரங்கள் மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமேதுமில்லை . ஏனெனில் உலகம்
முழுவதும் உள்நாட்டு எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்படும் பல
அனுபவங்களிருந்து இதனை காணமுடியும் .

இந்திய அரசாங்கம் ராணுவபடைகளை உடனே வாபஸ் வாங்கி. ஏழை மக்களின் துயரங்களைஅதிகரிக்கச் செய்யும் உள்நாட்டு யுத்தத்தை தூண்டி விடக்கூடிய. அதன்மூலம்பெரும் நிறுவனங்கள் மூலவளங்களை சுரண்டுவதற்கு வகைசெய்யக்கூடியதிறன்படைத்த ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதைஉடனே கைவிட வேண்டும் என்று நாங்கள் வலி யுறுத்துகிறோம், அனைத்துஜனநாயக உணர்வு கொண்ட மக்களையும் இந்த கோரிக்கையில்அணிதிரளுமாறுகோருகிறோம்,

இவண்.
அருந்ததிராய், அமித்பாதுரி, சந்திப்பாண்டே, கான் கொன்சால்வஸ்,
திபாங்கர் பட்டாச்சாரியா, சுமந்தா பானர்ஜி, மஹ்மூது மண்டானி,
மீரா நாயர், ஆபாசுர், கியானேந்திரா பாண்டே, நோம் சோம்ஸ்கி,
டேவிட் ஹார்வி, மைக்கேல் லெபோவிட்ஸ், பெல்லாமி ஃபாஸ்டர்,
ஜேம்ஸ் சி ஸ்காட்
மற்றும் பிறர்.

குடியுரிமை பாதுகாப்பு நடுவம்.
99432 16762, 99433 11889, 94434 39869

 நன்றி: எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்.

9 thoughts on “இந்திய அரசே! உள்நாட்டு மக்கள் மீதான ராணுவ தாக்குதலை உடனே வாபஸ் வாங்கு! :சர்வதேச அறிவுஜீவிகள், மனித உரிமையாளர்களின் அறைகூவல்!”

 1. http://sanhati.com/excerpted/1824/
  – original text. one can check whether the translation is good enough to capture the spirit of the letter.

  The original states’The stated objective of the offensive is to “liberate” these areas from the influence of Maoist rebels’ The translation states”மாவோயிஸ கலகக்காரர்களின் தாக்கத்திருந்து இப்பகுதியை
  விடுதலை செய்வது என்பதுதான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள முன்தாக்குதலுக்
  கான முக்கிய காரணமாகும் .
  ‘இந்திய அரசே! உள்நாட்டு மக்கள் மீதான ராணுவ தாக்குதலை உடனே வாபஸ் வாங்கு’ is misleading because the letter is against the proposed offensive. The title gives an impression that as if the military offensive is already launched against the people. See also this http://kafila.org/2009/10/21/open-letter-to-noam-chomsky-nirmalangshu-mukherjee

 2. இராணுவ நடவடிக்கை என்பது ஏற்கெனவே செயல்பட்டுக்கொண்டிருப்பதுதான். மணிப்பூரில் என்ன நடந்தது என்பதை நாம் மறக்க முடியாது. ஒவ்வொரு நாளும் வடகிழக்கு மாநிலங்களிலும் ஜம்மு காஷ்மீரிலும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இந்திய அரசே உனது குடிமக்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை நிறுத்து.

 3. மாவோயிஸ்டுகளின் இன்றையநடவ்டிக்கைகளைஉற்றுநோக்கினால் மாவொயிஸ்டுகளின் புனிதமான கொள்கை, கோட்பாடுகளின் எல்லையிலுருந்து இன்றைய மாவோயிற்ச்டுகள் தொலைதூரம் வந்துவிட்டார்களோவென்று தோன்றுகிறது, சாதாரன மக்களை தொல்லைக்கு உட்படுத்துவதும் அவர்களின் சொத்துக்களை அபகரிப்பதும் அன்றாடத்தொழில் போல ஆகிவிட்டதை ஊடகங்களின் மூலமாக பார்க்கிறோம். அதேநேரம் அரசு எந்திரங்களும் மாவோயிஸ்டுகளை தீவிரவாதிகளின் கண்ணோட்டத்தோடே பார்க்கிறாது. அவர்களின் அடிப்படை எண்ணங்களும் கருத்துக்களும் சிறிது தேய்ந்து போயிருந்தாலும் ஆதிவாசி மக்கள் (மரபின மக்கள்) போன்றோர் பெருவாரியாலக அவர்களைநம்பியிருப்பது கண்கூடு. அரசு இந்த பிரச்சினையை கண்ணாடியை கையாளுவது போன்று மிகவும் ஜாக்கிரதையாக கையாளவேண்டும்.

 4. மாவோயிஸ கலகக்காரர்களின் தாக்கத்திருந்து இப்பகுதியைவிடுதலை செய்வது என்றபெயறில் இலங்கையில் என்னநடந்ததோ அதனை யே இந்தியாவிலும் நிகழ்த்த மன்மொகன் சிங் அரசு ம் முயர்சிக்கிறது.
  .‘இந்திய அரசே! உள்நாட்டு மக்கள் மீதான ராணுவ தாக்குதலை உடனே வாபஸ் வாங்கு. 

 5. பிரதமர்கடித்தைப் படித்தாலும்நடவ்டிக்கைகள போதுமானதாக இருக்காது என்பது என் அபிப்ராயமாகும். தம்ழ்ர்கள் அவருக்குப் பிடிக்காது.சிங் இனம் டர்பன் கட்டுவதை தடை செய்ய முயன்ட்ரவருக்கு வெண்டுகொள் விடுப்பது அவருக்கு மிகவும் பிடிதத் ஓன்றாகும்.

Comments are closed.