‘இந்திய அரசபடை- மாவோயிஸ்ட் இடையேயான மோதல்களால் சிறார் கல்வி பாதிப்பு: ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்

indiaarmyஇந்திய பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையிலான மோதல்களால் இந்தியாவின் விளிம்பு நிலையில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிறார்களின் கல்வி பாதிப்புக்கு உள்ளாவதாக நியூயோர்க்கை தளமாகக் கொண்டியங்கும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறுகிறது.

கிராமப்புறங்களில் உள்ள பள்ளிக்கூடங்களை இந்திய அரசாங்கத்தின் அதிகாரத்தின் சின்னமாக பார்க்கும் மாவோயிஸ்ட்டுகள், அவற்றை தாக்குவதை நிறுத்த வேண்டும் என்று அந்த அமைப்பு கோரியுள்ளது.

அரசாங்கப் படைகள் பள்ளிக்கூடங்களில் தளமமைப்பதால், அவை தாக்குதல் இலக்காவதாகக் கூறி, படைகள் பள்ளிக்கூடங்களைத் தாக்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுள்ளது.

2 thoughts on “‘இந்திய அரசபடை- மாவோயிஸ்ட் இடையேயான மோதல்களால் சிறார் கல்வி பாதிப்பு: ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்”

  1. pallikkoodangalai siruvargalukku padippadharkaga upayogapaduththamal arasanga padaigalukku thavalamaga upayogapaduththiyadhinal thane maoistugal pallikoodangalai thakkugirargal. 

    P.Govindan kutty

  2. ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமெரிக்க அரசின் ஒரு கரம் என்பதையும் அது பக்கச் சார்பாகவே தகவல்களை விளக்குகிறதுஎன்பதையும் பற்றி நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

    முதலில் பாடசாலைகளையும் பிற பொது இடங்களையும் ஆயுதப் படைகள் பாவிப்பது தடுக்கப்பட வேண்டும்.

    மாஓவாதிகள் பாடசாலைகளைத் தகர்ப்பது மக்களுடனான கலந்தாலோசனையுடனா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.

    எனினும் இந்திய அரசே அடிப்படையிற் குற்றவாளி. இது வலியுறுத்தப்பட வேண்டும்.

Comments are closed.