இந்தியா வருகிறார் ராஜபட்சே தமிழகத்தில் எதிர்ப்பு.

போர் முடிவடைந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் இந்தியாவுக்கு நேரடியாக இதுவரை இலங்கை அதிபர் ராஜபட்சே வரவில்லை. ஆனால் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இந்திய அரசு தமிழ் மக்களைக் கொலை செய்ய துணை போனது. விரிவாகி வலுவடைந்து செல்லும் இந்திய, இலங்கை வர்த்தக உறவில் இலங்கை இந்தியாவின் மறுகாலனியாக மாறிக் கொண்டிருக்கிறது. இலங்கை மக்களுக்கான சுய பொருளாதார வளர்ச்சி பின்னுக்குத் தள்ளப்பட்டு ஏகாதிபத்திய பொருளாதார சார்பை நோக்கி நாட்டை அடகு வைத்திருக்கிறது ராஜபட்சே கும்பல். இந்நிலையில் வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் இந்தியாவுக்கான சந்தை வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் நோக்குடனும் வருகிற ஜூன் 8-ஆம் நாள் இந்தியா வருகிறார் அதிபர் ராஜபட்சே, இந்தியப் பிரதமருடன் அவர் பேச்சு வார்தை நடத்தி இலங்கை வளர்ச்சிக்கான கடன் உதவிகள் பெறக்க்கூடும் எனத் தெரிகிறது,. இநிலையில் ராஜபட்சேவை வரவேற்க தயராகும் புது டில்லி ஆட்சியாளர்களுக்கு எதிராக தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகளை காட்ட அரசியல் கட்சிகள் தீவீரம் காட்டி வருகின்றன.