இந்தியா: மத சுந்திரத்துக்கு எதிரான நாடுகளின் பட்டியலில்!

மத ரீதியான சிறுபான்மையினரை பாதுகாப்பதற்கு போதுமான நடவடிக்கைகளை எடுக்காத நாடுகளின் பட்டியலில் இந்தியாவை அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற குழு ஒன்று சேர்த்திருக்கிறது.

இந்தியாவில் மத வன்செயல்கள் கணிசமான அளவுக்கு அதிகரித்து வருவதன் காரணமாகவே அதனை அந்த பட்டியலில் சேர்த்ததாக சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணைக்குழு கூறியுள்ளது.

2008 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் ஒரிசா மற்றும் குஜாரத் மாநிலங்களில் நடந்த கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான வன்செயல்களை அந்த அறிக்கை குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.

இந்தக் குழு ஒவ்வொரு வருடமும் மத சுதந்திரம் குறித்த அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் கியூபா ஆகிய நாடுகளும் இடம்பெறுகின்றன.

இந்த பட்டியலில் தமது நாட்டின் பெயரைக் குறிப்பிட்டது குறித்து இந்திய தரப்பில் இருந்து இதுவரை பதில் கருத்து எதுவும் வரவில்லை.