இந்தியா பற்றிய நமது உரைகல் என்ன ?: யதீந்திரா

                                         
1

இவ்வாறானதொரு தலைப்பில் ஏலவே திரு.டி.பி.சிவராம் (தராக்கி) ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். ஆனால் அந்த கட்டுரை முன்னிறுத்திய விடயங்களும் இந்த கட்டுரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முயலும் விடயங்களும் முற்றிலும் வேறானது.

விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் இந்தியா குறித்த உரையாடல்கள் நமது ஆய்வுச் சூழலில் மேலோங்கிக் கானப்படுகின்றன. இவ்வாறு இந்தியா குறித்த உரையாடல்கள் கூடுதல் கவனம் பெற்றதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று புலிகளின் வீழ்சிக்கு பின்னர் தமக்கானதொரு சுயாதீன முகத்தை காட்ட முயன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியா குறித்து தெரிவித்து வந்த கருத்துக்கள் மற்றையது, தமிழரின் தாயகப் பகுதியான வடக்கு கிழக்கில் இந்தியா தனது செல்வாக்கை கூட்டும் நோக்கில் முனைப்புக் காட்டி வருவது.

இந்தியா குறித்து நமது அரசியல் சூழலில் இடம்பெறும் உரையாடல்கள் மற்றும் எழுத்துக்களை நாம் இரு வகையில் சுருக்க முடியும். ஒன்று, இந்தியாவை நமது அரசியலுக்கு ஆதரவான சக்தியாக கணிக்க முயலும் அவதானங்கள் மற்றையது இந்தியாவை முழுமையாகவே ஒரு எதிர்நிலை சக்தியாக கருதும் எழுத்துக்கள். இவ்வாறான எழுத்துக்கள் முற்றிலும் இந்திய எதிர்ப்பரசியல் பண்பு கொண்டவை. ஆனால் இதிலுள்ள சுவாரசியமான உட்கூறு என்னவென்றால், நமது தமிழ்ச் சூழலில் இந்தியாவை முழுமையாக எதிர்ப்போரும், இந்தியா என்பது ஈழத் தமிழர் அரசியலில் தவிர்த்துச் செல்லக் கூடிய ஒரு சக்தியல்ல என்பதை விரும்பியோ விருப்பாமலோ ஏற்றுக் கொண்டுவிடுகின்றனர். இதன் வெளிப்பாடுதான் அவ்வாறானவர்கள் அவ்வப்போது இந்தியாவை எதிர்ப்பரசியல் கண்ணோட்டத்தில் விமச்சித்து வருவதன் காரணமாகும்.  இந்த விடயத்தையே இந்த கட்டுரை தனக்குச் சாதகமாக்கிக் கொள்கிறது.

புலிகள் பலமாக இருந்த காலத்தில் இந்தியா குறித்து தமிழ்த் தேசியர்கள் மத்தியில் மிகவும் மேலோட்டமான பார்வையே இருந்தது, அதற்கும் மேலாக இந்தியாவை எதிர்த்தல் என்பதே ஒரு வகையான பெருமித அரசியலாகவும் கருதப்பட்டது. உலகின் நான்காவது வல்லரசையே நம்மட அமைப்பு தோற்கடித்தது என்றவாறானதொரு அசட்டுத்தனத்தின் வெளிப்பாடுதான் இந்த பெருமித அரசியல். 1962இல் இடம்பெற்ற சீன-இந்திய எல்லைப்புற யுத்தத்தின் பின்னர் மிக அதிகளவான இந்திய படையினர் யுத்தத்தில் கொல்லப்பட்ட சம்பவமாக புலிகள்-அமைதிப்படை யுத்தம் குறிப்பிடப்படுவது உண்மைதான். இதனை பல இந்திய ஊடகங்களும் அப்போது சுட்டிக்காட்டிருந்தன. இந்திய-புலிகள் மோதல் காலத்தில் இந்தியப் படைகளால் புலிகளை சரணடையச் செய்யவோ அல்லது முழுமையாக செயலிழக்கச் செய்யவோ முடியவில்லை என்பதும் உண்மையே ஆனால் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் முடக்க முடிந்தது. இந்த பின்புலத்தில்தான் இந்தியப்படைகளை இலங்கையிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்பதில் தீவிர முனைப்புக் காட்டிய பிரமேதாசவுடன் புலிகள் ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டனர். புலிகளைப் பொருத்தவரையில் எப்படியாவது இந்தியாவை அரசியல் அரங்கிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்ற தேவை இருந்தது. ஏனென்றால் இது புலிகளின் இருப்போடு ( (Existing) ) தொடர்புபட்டிருந்தது. இங்கு புலிகள் என்பது அதன் தலைவர் பிரபாகரனையே குறித்து நிற்கிறது. இதன் தொடர்சியாகத்தான் ராஜீவ் காந்தியின் கொலை இடம்பெறுகிறது. இதற்கு முன்னர்  EPRLF அமைப்பின் தலைவர் பத்மநாபா கொலை (1990) செய்யப்படுகிறார். இந்தியாவின் ‘திவீக்’ (1989 ஜூன் 18 இதழ்) பத்திரிகையில் இந்திய படைகள் மேலும் ஒரு வருடத்திற்கு இருப்பது அவசியம் என்று கருத்துத் தெரிவித்த அமிர்தலிங்கத்தின் படுகொலை (1989 ஜூலை 13) இடம்பெறுகிறது. அமிர்தலிங்கம் தமிழ் மக்களை பவுத்திரமாகப் பாதுகாப்பதில் அமைதிப்படைக்கு முக்கிய பங்குண்டு. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பிறகே இந்தியப் படைகள் செல்ல வேண்டும் என்ற கருத்தை இந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

ராஜீவ் கொலைக்கான காரணங்கள் பற்றி பலரும் பல்வேறு அபிப்பிராயங்களை தெரிவித்திருக்கின்றனர். இது பற்றிய புலன்விசாரனையை மேற்கொண்ட டி.ஆர்.கார்த்திகேயன் தனது அறிக்கையில் ரஜீவ்காந்தியை கொலை செய்ததற்கு காரணம் அவர் மீண்டும் பிரதமரானால் தமது தமிழீழ கனவை சிதைப்பார் என்பதை கருத்தில் கொண்டே பிரபாகரன் அவரை கொலை செய்யும் முடிவை எடுத்ததாக குறிப்பிட்டிருக்கிறார். ராஜீவ் படுகொலை ( (Rajeev assassination) ) –பக்கம் -280). இந்த கணிப்பு பெருமளவு சரியானதே. ராஜீவ் காந்தியைப் பொருத்தவரையில் அவரது புதிய அரசியல் பிரவேசத்தின் போது ஏற்பட்ட அவமானகரமான தோல்வியாகவே இதனை பார்த்திருப்பார். எனவே அவர் மீண்டும் பதவிக்கு வருமிடத்து தனது தோல்வியை சரிப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில் இறங்குவார் என்பது ஊகிக்கக் கூடிய ஒன்றே. எனவே அதனைத் தடுப்பதற்கு புலிகள் மேற்கொண்ட தெரிவுதான் அவரை இல்லாமலாக்குவது. புலிகளின் தந்திரோபாயம் என்பது எப்போதுமே தடையாக இருப்பவர்களை தகர்ப்பதுதான்.
இந்தியாவைப் பொருத்தவரையில் ராஜீவ் கொலை என்பது சாதாரணமான ஒரு விடயமல்ல. இதில் பிறிதொரு நாடு சம்மந்தப்பட்டிருக்குமானால் அது இரு நாடுகளுக்கிடையிலான யுத்தத்தில் முடிந்திருக்கும். ஒரு மிகச் சிறியதொரு அமைப்பு தமது நாட்டுக்குள் ஊடுருவி தமது பெருமதிப்புக்குரிய குடும்ப வாரிசான ராஜீவை படு கொலை செய்திருப்பதானது இந்தியாவைப் பொருத்தவரையில் மிகவும் அவமானகரமானதொரு விடயமாகவே கருதப்பட்டது. ஆனால் மறுபுறம் நமது சூழலில் பெருமிதம் நிறைந்த வெற்றியாகக் கருதப்பட்டது. இதுவே பின்னர் இந்திய எதிர்ப்பரசியாலாக பரிணமித்தது. எனவே இந்திய எதிர்ப்பரசியல் பற்றிப் பேசுவோர் இந்த பின்புலங்களை கருத்தில் கொள்வது அவசியம். இன்னொருவரை குற்றம்சாட்டுவதற்கு முன்னர் நமது பக்கம் குறித்து துல்லியமானதொரு பார்வை நமக்கு அவசியமானதாகும்.
2

 ‘In SriLankan cause India has veto power’- இது ராஜதந்திர  வட்டாரங்களுடன் தொடர்புபட்ட நன்பர் ஒருவர் தன்னிடம் அமெரிக்க ராஜதந்திரி ஒருவர் இலங்கை தொடர்பாக பேசும்போது இவ்வாறு கூறியதாகச் சொன்னார். இந்தக் கட்டுரையும் இந்த கருத்தையே அடிக்கோடிட முயல்கிறது. ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியா ஒரு நிர்ணயகரமான சக்தி  (Decision Maker)  என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை. புலிகள் தலைமையிலான கடந்த முப்பது வருடகால போராட்டத்தில் இந்த கருத்து மிகவும் குறைந்தளவான முக்கியத்துவத்தையே பெற்றிருந்தது. இந்தப் போக்குத்தான் அவர்களை முள்ளிவாய்க்காலில் கொண்டு நிறுத்தியதும். இந்தியா நினைத்திருந்தால் இந்த நிலைமையை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் ஆனால் அவ்வாறு இந்தியா நடந்து கொள்ள வேண்டுமென்ற கடப்பாட்டை வலியுறுத்தக் கூடிய புறச் சூழலை நாம் ஏற்படுத்தியிருக்கவில்லை. இந்தியா குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் தெற்கின் முன்னனி அரசியல் சிந்தனையாளரும், போர்க் காலத்தில் சர்வதேசத்தை ஆற்றுப்படுத்தும் நோக்கில் ஜ.நாவிற்கான நிரந்தர பிரதிநிதியாகவும் செயலாற்றிய தயான் ஜெயதிலக இந்தியா, யுத்தத்தின் போது எமக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் எம்மால் யுத்தத்தில் வெற்றிபெற்றிருக்க முடியாது, எப்போதுமே மேற்கை சரிசெய்வதற்கு எமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இந்தியாதான். இந்தியாவை நாம் பகைத்துக் கொண்டால் உலகில் எமக்கு உதவுவதற்கு யாரும் இருக்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார். சமீபகாலமாக சீனாவின் செல்வாக்கு அதிகரித்துவருவது தொடர்பான உiராயடல்களை கருத்தில் கொண்டே தயான் இந்தக் கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

ஆனால் நமது சூழலிலோ இந்தியாவைப் பகைத்துக் கொண்டு நம்மால் வெற்றிபெற முடியுமென்ற கருத்தே மேலோங்கியிருந்தது. இதற்கு பக்கபலமாகவே நமது கருத்துருவாக்க செயற்பாடுகளும் அமைந்திருந்தன.

இந்தியா என்பது ஒரு பிராந்திய சக்தி (Regional Power), இதில் மாறுபட ஏதுமில்லை, எனவே இதனைக் கருத்தில் கொண்டுதான் இந்தியா பற்றிய நமது கருத்துக்கள் அமைய வேண்டும். இந்தியா 1987இல் நேரடியாக தலையிட்ட போதும் சரி தற்போது கொழும்புடனான தனது முலோபாய உறவுகளை வலுப்படுத்துவதில் தீவிரம் காட்டும் போதும் சரி தனது நலன்களையே அது பிரதானமாகக் கொண்டிருக்கிறது. இந்தியா மட்டுமல்ல எந்தவொரு பலம்பொருந்திய நாடும் தனது நலன்களைக் கருத்தில் கொண்டே தனது அரசியல், பொருளாதார இராணுவ உறவுகளை பேணிக் கொள்ளும். எனவே இதில் இந்தியாவை மட்டும் தனித்து நோக்க வேண்டிய தேவையில்லை. ஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள்கை என்பதே அதன் நலன் என்ற அச்சாணியில் சுழல்வதுதான்.

இந்தியாவைப் பொருத்தவரையில் தனது பிராந்திய நலன்களுக்கு அச்சுறுத்தலான அன்னிய சக்திகள் இலங்கையில் காலூன்றுகின்றன என்ற அச்சத்தின் அடிப்படையிலேயே அன்று கொழும்பிற்கு நெருக்கடியாக இருந்த ஈழத் தமிழர் பிரச்சனையை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக் கொள்ள முயன்றது. ஜெயவர்த்தனே அரசை தமது வழிக்கு கொண்டுவரும் நோக்கிலேயே அப்போதைய ஈழ விடுதலை இயக்கங்களுக்கு பயிற்சியளித்ததும் பின்னர் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக மாகாணசபை முறைமைக்கு அழுத்தம் கொடுத்ததும் என அனைத்துமே இந்தியாவின் பிராந்திய நலன்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டது. இது மிகவும் வெளிப்படையான ஒன்றும் கூட.

இந்தியா தனது நலன்களை நீண்ட கால நோக்கில் பேணிக் கொள்வதற்கானதொரு அமைப்பாக ஆரம்பத்தில் புலிகளையே இனம் கண்டு இருந்தது. இந்தியாவின் பிரபல பத்திரிகையாளரும் இந்திராகாந்தியின் நன்பருமான குல்திப் நாயர், அப்போது இந்தியாவிற்கான இலங்கைத் தூதராக இருந்த ஜே.என்.தீட்சித் புலிகள் மீது பாசம் கொண்டிருந்ததாக குறிப்பிடுகின்றார் ஆனால் அந்த பாசம் இலங்கையில் தமிழர்கள் தமக்கான பங்கை பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற அளவிலானதுதான் என்றும் குறிப்பிடுகின்றார் (ஸ்கூப்! ப-ம் 241). பின்னர் புலிகள் அவ்வாறானதொரு நிலைப்பாட்டிற்கு இணங்கக் கூடியவர்கள் அல்ல என்பதை அறிந்து கொண்டே அடுத்த தெரிவாக  EPRLF    அமைப்பை இந்தியா இனம்கண்டது. இந்தியாவைப் பொருத்தவரையில் அதன் அணுகுமுறை சரி ஏனென்றால் இலங்கையில் சிறுபாண்மை இனமான தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கானதொரு பொறிமுறை தேவை என்பதை இந்தியா ஏற்றுக் கொண்டது அனால் அதற்கு அப்பாலானதொரு ஏற்பாடு தமிழர்களுக்கு தேவையா என்ற கேள்விக்கு இந்தியா செல்ல விரும்பவில்லை. இந்தியா அவ்வாறானதொரு கட்டத்திற்கு சென்றிருக்காது என்று நாம் கூறிவிடவும் முடியாது ஆனால் அதற்கான அவகாசம் இந்தியாவிற்கு நமது தரப்பிலிருந்து வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதே உண்மை.

இந்தியாவிற்கு ஈழத் தமிழர் விடத்தில் பாராமுகமாக இருக்க முடியாது எனவே இதில் மனிதாபிமானத் தலையீடு செய்ய வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு உண்டு என்பதையும் புலிகளின் தத்துவ ஆசிரியர் பாலசிங்கமும் ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் தனது ‘போரும் சமாதானமும்’ என்னும் நூலில் இவ்வாறு கூறிச் செல்கிறார்.

“அரசியல் மட்டத்திற் பார்க்கப் போனால் பாதுகாப்பற்ற அப்பாவித் தமிழ்ச் சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்பு வன்முறையைத் தடைசெய்யும் நோக்குடன் மெற்கொள்ளப்பட்ட மனிதாபிமானத் தலையீடாக இது அமைந்தது.
இராணுவ மட்டத்தில் நோக்குமிடத்து சிங்கள அரசுக்கு எதிராக தமிழரின் ஆயுதப் போராட்ட இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு இரகசியமாக உதவி புரிந்தமையும் இந்திய தலையீட்டின் ஓர் அம்சமாக அமைந்தது. தமிழரின் தேசிய இனப்பிரச்சனைக்குச் சமாதானப் பேச்சுக்கள் வாயிலாகத் தீர்வுக்கான வழிவகை செய்யுமாறு ஜெயவர்த்தனா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்குடனேயே, தமிழ் போராளி அமைப்புக்களுக்கு இந்திய அரசு பயிற்சிகளையும் ஆயுதங்களையும் வழங்கியது. 

புவியியல் – கேந்திர மட்டத்திற் பார்த்தால், இந்தியத் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அந்நிய நாசகாரச் சக்திகள் அவ்வேளை இலங்கையில் ஊடுருவி நிற்பதாக இந்திய அரசு அஞ்சியது. இந்தியாவின் புவியியற் – கேந்திர உறுதிநிலைக்குப் பங்கம் விளைவிக்கக் கூடிய இந்த அந்நியச் சக்திகளை இலங்கையிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்பதும் இந்தியத் தலையீட்டின் நோக்கமாக இருந்தது.

இவ்வாறு கூறும் பாலசிங்கம், தொடர்ந்து பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாகப் பெரிய எடுப்பில் மேற்கொள்ளப்பட்ட இத்தலையீடானது இறுதியில் இந்திய வெளிவிவகாரக் கொள்கைக்கும் இராஜதந்திர முயற்சிக்கும் ஏற்பட்ட பெரியதொரு தோல்வியாக முடிந்தது. இந்திய இலங்கை உடன்பாடும் சரி இந்திய அமைதிப்படைகளின் செயற்பாடும் சரி, தமிழரின் இனப்பிரச்சனையை தீர்த்து வைக்கவில்லை. வௌ;வேறு காரணங்களின் நிமித்தம். இந்திய – இலங்கை உடன்பாட்டையும் தமிழர் தாயகத்தில் இந்திய படைகளின் இருத்தலையும் தமிழரும் சிங்களவரும் விரும்பவில்லை என்றும் கூறுகிறார்.” (ப.ம் 81-82).

இங்கு திரு.பாலசிங்கம் இந்திய தலையீடானது, இந்திய வெளிவிவகாரக் கொள்கைக்கும் இராஜதந்திர முயற்சிக்கும் ஏற்பட்ட பெரியதொரு தோல்வியாக முடிந்தது, என்று கூறும் போது அந்த தோல்வியில் நமது தரப்பு பங்கு குறித்து கசிசனை கொள்ளவில்லை. ஒரு வேளை அவர் புலிகளின் தலைமையை திருப்திப்படுத்தும் நோக்கிலும் இதனைக் குறிப்பிட்டிருக்கலாம். ஏனெனில் புலிகளின் தலைமையையின் தவறுகளை விமர்சிக்குமளவிற்கு அவரால் செல்ல முடியாது.

உண்மையில் இங்கு மக்கள் இந்திய படைகளின் இருப்பை விரும்பவில்லை என்பதல்ல விடயம் புலிகள் விரும்பவில்லை என்பதுதான் உண்மை. நான் மேலே குறிப்பிட்டது போன்று இந்திய படைகள் தொடர்ந்து இருந்திருக்குமிடத்து அன்றே புலிகளின் கதை முடிவுக்கு வந்திருக்கும். இதனை கருத்தில் கொண்டே புலிகள் பிரேமதாசவுடன் இணைந்து இந்திய ராஜதந்திரத்தை தோல்வியுறச் செய்தனர். புலிகளால் நேரடியாக இந்திய அரசின் அணுகுமுறையை தோற்கடிக்க முடியாது என்பதை விளங்கிக் கொண்டே பிரேமதாசவின் கரங்களை பற்றினர். இந்தியாவின் நலன்களையும் அதன் எல்லையையும் விளங்கிக் கொண்டு புலிகள் தூர நோக்கில் செயலாற்றியிருந்தால் விடயங்கள் வேறு விதமாகவும் அமைந்திருக்கலாம். உண்மையில் இந்திய படைகளின் வெளியேற்றத்தால் வெற்றிபெற்றது பிரேமதாசவும் சிங்களத் தேசியவாதிகளுமே அன்றி புலிகளோ தமிழ் மக்களோ அல்ல என்பதே உண்மை.
87இன் கசப்பான அனுபவங்களுக்கு பின்னர் பெருமளவு இலங்கை விடயத்தில் ஒதுங்கியிருப்பதான தோற்றப்பாட்டையே இந்தியா காட்டி வந்தது ஆனால் இறுதி யுத்தத்தின் போது அது நடந்து கொண்ட முறையிலிருந்து இந்தியா அவ்வாறு ஒதுங்கியிருந்ததா அல்லது பொருத்தமானதொரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்ததா என்ற கேள்வியே எழுகிறது. தயான் சொல்லுவது போன்று இறுதி யுத்தத்தின் போது இந்தியா கொழும்பிற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றால் நிட்சயமாக கொழும்பால் யுத்த வெற்றிவிழா கொண்டாட முடியாமல் போயிருப்பது திண்ணம். இந்தியா தீர்மானித்திருந்தால் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களை காரணம் காட்டி ஒரு தலையீட்டைச் செய்திருக்க முடியும். 87இல் நேரடித் தலையீடு செய்தபோதும் ஆறுகோடித் தமிழர்களை உட்கொண்டிருக்கும் இந்தியாவால் ஈழத் தமிழர்கள் குறித்து கரிசனை கொள்ளாது இருக்க முடியாது என்ற வாதத்தையே தனது நலன்சார் அரசியல் தலையீட்டுக்கான நியாயமாகக் சுட்டிக்காட்டியது இந்தியா. 83இல் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு வன்முறைகளை கண்டிக்கும் நோக்கில் அப்போதைய இந்திராகாந்தியின் வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையிலும் மேற்படி வாதமே இலங்கையை எச்சரிக்கும் வகையில் முன்வைக்கப்பட்டது. ‘தனது கொல்லைப்புறத்தில் இத்தகைய கொடுமைகள் நீடித்தால் இந்தியாவால் சும்மா பார்த்துக் கொண்டு இருக்க முடியாது’ 83 வன்முறைகள் தொடர்பாக, தனது அதிருப்திகளை தெலைபேசியில் வெளிப்படுத்திய இந்திராகாந்தி பின்னர் வழங்கிய வேண்டு கோளுக்கு இணங்கவே அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. (போரும் சமாதானமும் – ப.ம்-92)
3

இந்தியா பற்றி நமது சூழலில் முன்வைக்கப்பட்ட அனைத்து கணிப்புகளும் பிழைத்திருப்பதே யதார்த்தம். நம்மில் ஒரு சாரார் குறிப்பிட்டனர் புலிகள் முழுமையாக அழிந்து போவதை இந்தியா விரும்பாது, ஏனென்றால் அதற்கான பிடிமானம் இல்லாமல் போய்விடும் எனவே ஏதொவொரு வகையில் புலிகளை ஒரு மட்டுப்பட்ட அளவில் பாதுகாக்கவே அது முயலும் என்றே அவ்வாறானவர்கள் கணித்தனர். சிலவேளை இவ்வாறானதொரு கணிப்பு புலிகளிடமும் இருந்திருக்கலாம். புலிகளின் தலைவர் தனது இறுதி மாவீரர் தின உரையில் இந்தியாவை நோக்கி நேசக்கரம் நீட்டியதுடன் வழமைக்கு மாறாக புன்னகையுடனான தனது தோற்றங்களையும் வெளிப்படுத்தியிருந்தார். பிறிதொரு சாரார், சிங்களத் தேசியவாத பின்புலம் கொண்ட மகிந்தவை முழுமையாக இந்தியா நம்பாது எனவே புலிகள் குறித்து இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு இருந்தாலும் மேற்படி பின்புலத்தை கருத்தில் கொண்டே இந்தியா செயலாற்றும் என்றனர். ஆனால் இறுதியில் எதுவுமே நிகழவில்லை. இந்தியாவை சாட்சியாகக் கொண்டே கொழும்பு புலிகளை அழிக்கும் யுத்தத்தில் முழுமையாக வெற்றி பெற்றது. புலிகளின் முப்பதுவருட கால அரசியல் சகாப்தம் அதிர்ச்சியளிக்கும் வகையில் முடிவுக்கு வந்தது.
இப்போது புலிகளின் அரசியல் அற்றவொரு சூழல். இலங்கையின் அரசியல் சீன-இந்திய போட்டிக் களமாக மாறியிருக்கிறது. நமது சூழலில் பழைய மாவோவாத சிந்தனைகளில் அனுதாபம் உள்ள சிலர் என்னதான் சீனப் பூச்சாண்டி என்றெல்லாம் தமது மன ஆறுதலுக்காக பேசினாலும், முன்னர் எப்போதுமில்லாதவாறு சீனா கொழும்புடன் தனது முலோபாய உறவுகளை வலுப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றது என்பதே உண்மை. இந்த மூலோபாய போட்டியின் மிகத் துல்லியமான பிரதிபலிப்பே இதுவரை இலங்கைக்கான பிரதான வழங்குனராக இருந்த யப்பானின் இடத்தை சீனா எடுத்துக் கொண்டுள்ளது. சீனா தனது உதவிகள் வெறுமனே பொருளாதார ரீதியானது என்று சொல்லிக் கொண்டாலும் இலங்கைக்கு பல்லாயிரம் கோடிகளை நோக்கமற்று செலவளிப்பதற்கு சீனா ஒன்றும் முட்டாள்தனமான நாடல்ல.

இலங்கையில் சீன-இந்திய முலோபாய போட்டிக்களம் ஒன்று திறக்கப்பட்டிருக்கிறது என்பது துலாம்பரமானதாகும். கொழும்மைப் பொருத்தவரையில் சீன-இந்திய நகர்வுகளில் இருவரையும் சம அளவில் நடத்துதல் என்னும் அனுகுமுறை ஒன்றையே அது பின்பற்றி வருகிறது. இதன் துல்லியமான வெளிப்பாடுதான், சமீபத்தில் இலங்கையின் சனாதிபதி புதுடில்லியில் இந்தியப் பிரதமருடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்த வேளையில் இலங்கையின் பிரதமர் கொழும்பில் சீனத் துனை சனாபதியுடன் புதிய உடன்பாடுகளில் கையெழுத்துதிட்டுக் கொண்டிருந்தார். இது மறைபொருளாக வெளிப்படுத்தும் செய்தி இந்த பிராந்தியத்தில் இந்தியாவிற்கு சமதையான முக்கியத்துவத்தை சீனாவும் பெறுகிறது என்பதுதான். இது பிறிதொரு வகையில் இந்தியாவிற்கு மறைமுகமாக விடுக்கப்படும் எச்சரிக்கையாகவும் எடுத்துக் கொள்ளலாம். இந்தியா எங்களுடன் இல்லாவிட்டால் சினா எங்களுடன் இருக்கும். ஆனால் இதனை நீண்டகாலத்திற்கு தொடர முடியாதென்றே ஆய்வாளர்கள் பலரும் சுட்டிக் காட்டுகின்றனர். சிங்கள தேசியவாதிகளைப் பொருத்தவரையில் அடிப்படையிலேயே இந்திய எதிர்ப்பு மனோபாவம் கொண்டவர்கள், இதனை புது டில்லியும் நன்கு அறியும்.

 இந்த இடத்தில்தான் முக்கியமான கேள்வி எழுகிறது, இன்றைய சூழலில் இந்தியா குறித்து நமது உரைகல் என்ன? இங்கு இரண்டு தெரிவுகள்தான் இருக்கின்றன. ஒன்று இந்தியா நமது நட்பு நாடு என்ற அடிப்படையில் நமது நலன்களை கருத்தில் கொண்டு இந்திய நலன்களுக்கு உதவியாக செயலாற்றுதல். இதனை வெளிவிவகார அர்த்தத்தில் நலன்கள் சந்தித்துக் கொள்ளும் புள்ளி என்பர்  (Convergence of interest).   இல்லாவிட்டால் இரண்டாவது தெரிவு பழைய புலிப்பாணியிலான இந்திய எதிர்பரசியல் மாயையில் தொடர்ந்தும் நீடித்தல். இந்த கட்டுரை முதலாவது தெரிவையே புத்திசாலித்தனமானதும் காலப் பொருத்தமானதென்றும் முன்மொழிகிறது. இரண்டாவது தெரிவு அடிப்படையிலேயே உணர்ச்சிவசமானதும் யதார்த்தங்களைக் கருத்தில் கொள்ளாததுமான முடிவாகும். உணர்ச்சிவசமான எந்தவொரு முடிவும் ஈழத் தமிழ் மக்களுக்கு விமோசனமளிக்கக் கூடியது அல்ல என்பதையே இந்த கட்டுரை சுட்டிக்காட்ட முயல்கிறது.

தெற்காசியாவில் இந்தியாவிற்கு சண்டித்தனம் காட்டிக் கொண்டு ஈழத் தமிழர் நலன்களைப் பேணிக் கொள்ள முடியும் என்று ஒருவர் எண்ணுவாராயின் அவர் அரசியல்ரீதியாக மிகவும் அப்பாவித்தனமான ஒருவராகவே இருக்க முடியும். இப்படியொரு அப்பாவித்தனம்தான் முன்னர் புலிகளின் தலைமையிடமும் அதன் வழி இயங்கிய புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் இருந்தது. இந்தப் புரிதல் இந்தியாவை மேலும் நம்மிலிருந்து அன்னியப்படுத்த பயன்பட்டதே ஒழிய இந்தியாவை எம்மை நோக்கி வர வழிவகுக்கவில்லை. இந்தியா குறித்து ஈழ புரட்சிகர விடுதலை முன்னனியின்   (EPRLF)  தலைவராக இருந்த பத்மநாபா இவ்வாறு கூறியதாக ஒரு தவலுண்டு. அவர் கூறினாரா இல்லையா என்பது சரியாகத் தெரியாவிட்டாலும் கருத்து சரியானது என்ற வகையிலேயே இங்கு எடுத்தாளப்படுகின்றது. ‘இந்தியா என்பது ஒரு கருங்கற்பாறை அதில் நமது தலையை முட்டினால் நமது தலைதான் உடையும்’ நமது தலையும் அப்படித்தான் உடைந்தது. ஆனால் சில விடங்களைச் சொல்லும் போது அதன் உட்கிடக்கை காலம் கடந்தே நமக்கு உறைக்கிறது. ஏனென்றால் நமது தமிழ் மனோபாவம் அப்படிப்பட்டது. சொல்லுபவர் யார் என்பதை பார்க்கிறோமே தவிர சொல்லப்படும் விடயம் என்ன என்பதை நாம் பார்ப்பதில்லை. ஆனால் ஒரு முன்னேறிய சமூகம் எப்போதுமே சொல்லப்படும் விடயத்திலேயே கவனம் கொள்ளும்.

87இல் இந்தியா நேரடியாக தலையிட்ட காலத்திலும், இந்தியாவின் இராஜதந்திரத் தோல்விக்கு சிங்கள ஆட்சியாளர்களும் காரணமாக இருந்த போதும், இந்தியா புலிகளையே தமது தோல்விக்கான பிரதான காரணமாகக் கருதியது. இங்கு சிங்களம் என்பது ஒரு அங்கிகரிக்கப்பட்ட அரசு என்பதையும் புலிகள் என்பது ஒரு அமைப்பு என்பதையும் கருத்தில் கொண்டே இந்தியாவின் அணுகுமுறையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அங்கிகரிக்கப்பட்ட ஒரு அரசுடன்  (recognized state) ) பிறிதொரு அரசு ஒரு எல்லைக்கு மேல் தேவையற்று பகைத்துக் கொள்ள விரும்பாது. ஏனெனில் இங்கும் பிரதானமாக இருப்பது அந்த அரசின் நலன்கள்தான். ஆனால் ஒரு பிராந்திய சக்தி அல்லது வல்லரசு எப்போது ஒரு குறிப்பிட்ட அரசின் மீது தனது அழுத்தங்களை பிரயோகிக்கும் என்றால் தனது நலன்களை அங்கீகரிக்கப்பட்ட அரசுக்கு வெளியிலும் பேணிக் கொள்ளக் கூடிய சூழல் இருக்கும் போதுதான். இந்தியா அன்று தமிழ் விடுதலை இயக்கங்களுக்கு பயிற்சியளித்த போது இவ்வாறானதொரு சூழல்தான் இருந்தது. ஆனால் அந்த சந்தர்ப்பம் தமிழர் தரப்பால் சரியாக கையாளப்படாததால் அல்லது நமக்கு சரியாகக் கைக்கொள்ளத் தெரியாததால், இந்தியா ஈழத் தமிழர் அரசியலில் இருந்து புறம்தள்ளப்பட்டது. இதன் காரணமாக கடந்த முப்பதுவருட கால ஈழத் தமிழர் அரசியலிலிருந்து இந்தியா அன்னியப்பட்டே இருந்தது. ஆனால் மீண்டும் இந்தியா தனது முலோபாய நகர்வுகளில் தீவிரம் காட்டி வரும் சூழலில் இந்த சந்தர்ப்பம் குறித்து நமது சூழலில் ஆரோக்கியமான நிலைப்பாடு இருப்பது அவசியம்.

 இதில் முரண்நகையான விடயம் 80களுக்கு பிற்பட்ட காலத்தில் இந்தியா தனது பிராந்திய நலன்களுக்கு அச்சுறுத்தலான சக்திகள் இலங்கையில் தலையீடு செய்கின்றன என்று குறிப்பிட்டதற்கும் இன்றைய நிலைமைக்கும் அடிப்படையிலேயே வேறுபாடுண்டு. அன்று இந்தியா குறிப்பிட்டது அமெரிக்காவையே ஆனால் இன்று அந்த இடத்தில் சினா இருக்கிறது. அன்று அன்னிய சக்தியாகக் கருதப்பட்ட அமெரிக்கா இந்தியாவின் இன்றைய மூலோபாயப் பங்காளியாக   (Strategic partner)இருக்கின்றது. எனவே இதனைக் கருத்தில் கொண்டுதான் ஈழத் தமிழர் அரசியலில் இந்தியாவின் வகிபங்கு குறித்து சிந்திக்க வேண்டும். எனவே இங்கு அடிப்படையிலேயே இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு என்பது ஈழத் தமிழர் நலன்களுடன் பின்னிப்பிணைந்திருக்கிறது. இந்தப் பின்புலத்தில் நோக்கினால் இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பங்காற்றும் பொறுப்பு ஈழத் தமிழர் அரசியல் சக்திகளையும் சாருகிறது. தெற்காசியாவிலும் சரி உலகளவிலும் சரி உரிமையுடன் ஈழத் தமிழர் விவகாரம் பற்றி பேசுவதற்கான ஒரேயொரு நாடு இந்தியா மட்டுமே. இந்தியா ஈழத் தமிழரைக் கைவிட்டால் நமக்கு உதவுவதற்கு வேறு யாரும் இருக்கப் போவதில்லை. இதனைக் கருத்தில் கொள்ளாத எந்தவொரு வாதமும், செயற்பாடும் ஈழத் தமிழ் மக்களை மேலும் அதளபாதாளத்திற்கு கொண்டு செல்லவே வழிவகுக்கும். இது குறித்து ஆரோக்கியமான விவாதங்களை இந்த கட்டுரை எதிர்பார்க்கிறது.

‘’’

120 thoughts on “இந்தியா பற்றிய நமது உரைகல் என்ன ?: யதீந்திரா”

 1. இந்தியா ஈழத்தமிழர்களை தனது நலன்களுக்குப் பாவிப்பதில் இருந்து ஈழத்தமிழர்கள் தம்மை விடுவித்துக்கொள்ளவதே புத்திசாலித்தனமானது. கடந்த முப்பது வருடத்திற்கும் மேலான போராட்டமும் இந்தியத் தலையீடும் பாதியளவு ஈழத்தமிழர்களை தமது தாயகத்தில் இருந்து அப்புறப்படுத்திவிட்டது. சுதந்திரம் குறித்த துடிப்பை மிகமோசமாக பலவீனப்படுத்திவிட்டது. இதற்குப் பிறகும் இந்தியா ஈழத்தமிழர்களை பயன்படுத்துவதை ஈழத்தமிழர்கள் அனுமதிப்பார்களானால் எஞ்சப்போவது ஒன்றும் இல்லை. ஈழத் தமிழர்கள் இந்தியாவை எதிர்ப்பது ஆதரிப்பது என்ற இரண்டையும் கடந்து இந்தியா என்பதில் இருந்து விலகிக்கொள்வதே சிறந்தது. ஈழத்தமிழர்கள் இந்தியாவுடன் முரண்படுவதோ இல்லை இந்தியா என்ற பாறாங்கல்லில் தமது எஞ்சிய தலைகளை முட்டி மோதி உடைப்பதையோ விடுத்து விலகிக்கொள்ளுதல் சிறந்தது. ஈழத்தமிழர் வாழ்வை சிதைப்பதில் இந்தியாவோ அல்லது சிங்கள அரசோ இரண்டும் ஒன்றுதான். இந்தியாவை கைவிட்டால் எமக்கு உதவ யாரும் இல்லை என்பது உண்மையாகவே இருக்கட்டும் ஆனால் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு உதவும் என்ற நம்பிகை்கையை விதைப்பதும் தற்கொலைக்குத் தூண்டுவதும் ஒன்றே. எம்மை முடிந்தளவு காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால் தமிழ்பேசும் இலங்கையர்களாக இருப்பது ஒன்றே இந்திய மற்றும் சிங்களப்பேரினவாதத்திடம் இருந்து எம்மை காப்பாற்ற ஒரே வழி. இந்தியா மீதான நம்பிக்கையை தயவு செய்து ஈழத்தமிழரிடம் விதைப்பதை அறிவுசார்ந்த விடயமாக கருதாதீர்கள்.

  1. Mr paramas comments on zaseenthiras article is politically a very insane view

  2. மிகவும் சரியான கருத்து பரமா அவர்களே. இந்தியாவை எதிர்த்து ஈழத்தமிழர்கள் கெளரவமான அரசியல் தீர்வை காணமுடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதேபோல் இந்தியாவை ஆதரித்து அல்லது ஏன் இந்தியாவின் காலில் விழுந்து கெஞ்சினாலும் எமக்கு கெளரவமான அரசியல் தீர்வை கிடைக்க இந்தியா உதவப்போவதில்லை. மேற்கு நாடுகளின் அழுத்தத்தினால் ஒரு சிறிய கெளரவமான வாழ்கை தமிழ் மக்களுக்கு கிடைகுமானால் அதை எவ்விதப்பட்டும் தடுக்கும் கீழ்தரமான வேலையைத் தான் இந்தியா செய்யும். யதீந்திரா போன்ற அதிகம் தெரிந்தவர்களுக்கு இவ்விடயம் தெரியுமென்றாலும் புலிகளின் வீழ்ச்சியின் பின்னர் இந்தியாவை ஆதரவு நிலை எடுப்பது ஒரு பாஷன் என்று அவர்போன்றவர் நினைப்பதால் எம்மை முட்டாளாக்க பார்கிறார்கள்.

   இந்தியா பெண்களை தெய்வமாக வணங்கும் நாடாம் கலாச்சாரத்தில் சிகரமாம். ஆனால் ஒரு பெண் தெருவில் ஐரோப்பிய நாடுகளை போல் பாதுகாப்பாக செல்ல முடியாது.இங்கு ஐரோப்பாவில் இரவு பன்னிரெண்டு மணிக்கும் பெண்கள் வேலை முடிந்து சர்வசாதாரணமாக பாதுகாப்பு உணர்வுடன் வீடு திரும்புவதை காணலாம்.

 2. [ இங்கு அடிப்படையிலேயே இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு என்பது ஈழத் தமிழர் நலன்களுடன் பின்னிப்பிணைந்திருக்கிறது. இந்தப் பின்புலத்தில் நோக்கினால் இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பங்காற்றும் பொறுப்பு ஈழத் தமிழர் அரசியல் சக்திகளையும் சாருகிறது. தெற்காசியாவிலும் சரி உலகளவிலும் சரி உரிமையுடன் ஈழத் தமிழர் விவகாரம் பற்றி பேசுவதற்கான ஒரேயொரு நாடு இந்தியா மட்டுமே. இந்தியா ஈழத் தமிழரைக் கைவிட்டால் நமக்கு உதவுவதற்கு வேறு யாரும் இருக்கப் போவதில்லை. இதனைக் கருத்தில் கொள்ளாத எந்தவொரு வாதமும், செயற்பாடும் ஈழத் தமிழ் மக்களை மேலும் அதளபாதாளத்திற்கு கொண்டு செல்லவே வழிவகுக்கும். இது குறித்து ஆரோக்கியமான விவாதங்களை இந்த கட்டுரை;
  ]

  இந்தியன் என்றால் இந்தி பேசவேண்டும் அல்லது அதன் எழுத்துவடிவத்தையாவது பெற்று அத்னைச் சார்ந்து வேறு மொழி பேசலாம் எழுதலாம் அவனும் இந்தியனென, அங்கீகாரம் கிட்டும். தமிழ் மொழியானது அதன் தனித்தியங்கும் வல்லமையானது ஏனைய இந்திய மொழி பேசும் அனைவருக்கும் தமிழின் மீது காழ்புணர்ச்சியை ஏற்படுத்திற்று அதன் தொடர்ச்சியாக த்மிழன்,திராவிடன் என்றால் ஆர்யனின் அல்லது ஆர்யத்தை ஏற்றுக்கொண்டவர்களின் முதல் எதிரி என்ற கண்ணோட்டம் ஏனைய இந்தியர்களிடம் நேரிடையாகவே யாம் கண்டோம், இதன் வெளிப்பாடு தான் தமிழகம் கண்ட நதிநீர் பங்கீடு எல்லாமே, அபபாவி மீனவர்களை எத்துனைபேரை சிங்களன் சுட்டுகொன்றான் இந்தியா ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிற்து ? அவர்களைப் பொருத்தவரை தமிழ் மொழி கூறும் அணைவரும் ராவணின் பரம்பரையே. ஏனையோர் ராமின் பர்ம்பரா இது அவர்களின் நிலைபாடு . குழு அடிப்படையிலான ஒற்றுமையும் வேற்றுமையும் த்மிழனின் தன்னிலை என்னவென்பது ஊருலகம் அறிந்தவிடயம் அத்னால் தான் விடுதலை புலிகளை மக்கள்சார்ந்த அமைப்பல்லவென்று ஒவ்வொருநாடும் பறைசாற்றின ,தீவிரவாதிகள் என்றும் அவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற கூற்று இந்தியாவால் முன்மொழியப்பட்டு உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப்ப்ட்டது. புலிகள் முற்றிலும் ஒழிக்கப்ப்ட்டனர் . ஈழமக்களின் விடுதலைப்பயணம் கொச்சைபடுத்த்ப்பட்டன, ஈழமக்களின் துன்பத்திற்கும் துயரத்திற்கும் அத்துனை அழிவுக்கும் இந்தியாதான் முழுக்காரணம் என்பதை தமிழ்கூறும் நல்லுலகம் அறியும். வருங்காலத்தில் இந்தியா என்றொரு நாடு இருக்குமா என்பதே ச்ந்தேகம் இதில் நீர் வேறு ; இந்தியா , த்ன்னை காத்துகொள்ள உங்களின் ப்ங்களிப்பு தான் இநத ஆக்கம். இந்தியாவை நக்கி பிழைப்பதை விட்டுவிட்டு அவர்கள் இறந்துபடட்டும். இந்தியா என்றொரு நாடு இருப்பதை த்மிழ் மக்கள் ம்ற்க்க வேண்டும் , அத்னினூடாக பயனிப்பதை நிறுத்தவேண்டும். மாற்றுவ்ழியுனூடன பயணம் த்மிழர்க்கு பயன்தரும் .

 3. //…எனவே இங்கு அடிப்படையிலேயே இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு என்பது ஈழத் தமிழர் நலன்களுடன் பின்னிப்பிணைந்திருக்கிறது. இந்தப் பின்புலத்தில் நோக்கினால் இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பங்காற்றும் பொறுப்பு ஈழத் தமிழர் அரசியல் சக்திகளையும் சாருகிறது. தெற்காசியாவிலும் சரி உலகளவிலும் சரி உரிமையுடன் ஈழத் தமிழர் விவகாரம் பற்றி பேசுவதற்கான ஒரேயொரு நாடு இந்தியா மட்டுமே. இந்தியா ஈழத் தமிழரைக் கைவிட்டால் நமக்கு உதவுவதற்கு வேறு யாரும் இருக்கப் போவதில்லை. இதனைக் கருத்தில் கொள்ளாத எந்தவொரு வாதமும், செயற்பாடும் ஈழத் தமிழ் மக்களை மேலும் அதளபாதாளத்திற்கு கொண்டு செல்லவே வழிவகுக்கும்.//

  யதீந்திரா, நீங்கள் பெரும்பாலும் இனஞ்சார்ந்து-குழுச்சார்ந்து பொருளாதாரவுறகளைகபோட்டுக் குழப்புகிறீர்கள்.பொருளாதாரவுறவானது இந்தியாவின் பாதுகாப்பெனப் பகரும் தொடர்வினையுளும் சம நிலையில் இருப்பது.அதன் பொருட்டுத்தாம்”தேசப் பாதுகாப்பு”என்பதும்.எனினும்,இலங்கையின் ஒரு சிறு இனக் குழுவிடம் இந்தியாவின் பாதுகாப்பையே பொருத்தும் பார்வையானது கடந்தகாலப் புலி-மற்றைய இயக்கங்களது பார்வைதாம்.இதுக்கு-80-2010 எனக் குறுக்குக் கோடு பிரிப்பதால் எதுவும் சரியாகிவிட முடியாது.

  இன்றைய பொருளயாதாரப் போக்குகளில் இந்தியா எவரிடமும் தனது வியூக வகுப்பைக் குறித்துப் பங்குபோடவில்லை!அது ,மாறிவரும் ஆசிய மூலதன நகர்விலும் அடுத்த இருபதாண்டுகளில் ஆசியப் பொருளாதாரத்தின் வகிபங்கிலும் தனதும்-சீனாவினதும் பாத்திரம் குறித்துச் சரியாகவே கணித்துள்ளது.இதுள் இலங்கையின் இனப் பிரச்சனையென்பதைக் காணாதாக்கும் கரு இலங்கையின் பொருளாதார நகர்விலிருந்து மேலெழுந்தபோது புலிக்கு டாட்டா!இனி நிகழும் அடுத்த நகர்வில் இலங்கைத் தேசிய இனமெனும் உணர்வு மேலெழும்போது அங்கே “தமிழ்த் தேசியத்தை”பூதக் கண்ணாடி வைத்துப் பார்க்கத்தாம் முடியும்.வேண்டுமானால் புலம்பெயர்ந்த தேசங்களில் அது குறித்துக் காணலாம்.அதுவும் தமிழ்மொழிக்கூடாகவிருக்கமுடியாது.பிரஞ்சு,ஜேர்மன்,ஆங்கிலம்,நோஸ்….

  ஆக,நாம்,தொழில்நுட்பப் புரட்சியின் திசையில் மாறிவரும் பொருளாதாரவுறவுகள் மற்றும் மானுட இருப்புக் குறித்து நீண்ட தூரம் செல்லவேண்டுமென நினைக்கிறேன்.

 4. இந்தியாவுக்கு வக்காலத்து வாங்கும் கட்டுரை இது.இதை எப்படி “இனியொரு ” பிரசுரம் செய்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.மக்கள் சக்தி மீது நம்பிக்கை அற்றவர்கள் தமது ஏகாதிபத்திய விசுவாசத்திற்காக இப்படி பல கட்டுரைகளை எழுதுவார்கள்.ஆனால் இந்தியாவை நட்பு சக்தியாக காட்ட முயலும் இவர்களின் கனவு ஒருபோதும் நனவாகப்போவதில்லை. முள்ளிவாயக்காலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் படுகொலைகளுக்கு காரணமான இலங்கை அரசிற்கு துணைபோன இந்தியாவை தமிழ்மக்கள் இனி ஒருபோதும் நம்பப்போவதில்லை.இந்தியா நட்பு சக்தி அல்ல -மாறாக அதுவும் ஒரு எதிரிதான் என்பது நன்கு வெளிச்சமான பின்பும் இந்த கட்டுரையாளர் என்ன துணிவில் அல்லது எந்த இறைச்சி துண்டிற்காக இப்படி இந்தியாவிற்கு வக்காலத்து வாங்க துணிகிறார்.அதைவிட தனது துரோகத்தனமான கட்டுரைக்கு பத்மநாபாவை வேறு துணைக்கழைத்திருக்கிறார்.இலங்கை இந்திய ஒப்பந்தம் நடந்தபோது நாபா அவர்களை நான் சந்தித்த போது அவர் என்னிடம் கூறிய வார்த்தைகள்” நாம் இந்தியாவை பயன் படுத்த நினைத்தோம்.ஆனால் இந்தியா எம்மை பயன்படுத்திவிட்டது” என்று மிகவும் விரக்தியுடன் கூறினார்.

 5. யதீந்திரா சொல்வதுதான் மெய்யான யதார்த்தம்; இதை மீறி இந்தியாவுக்கு வக்காலத்து இந்தியா இன அழிப்பில் ஈடுபட்டது எனச்சொல்வதெல்லாம் குறுக்கும் நெடுக்கும் வெட்டுமுகமாக புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து எழுததான் முடியும்; உங்கு உள்ள மக்களுக்கு ஒரு அறுப்பனும் தெரியாது. இங்கிருந்து வாழ்நாள் முழுதும் கட்டுரையும் பின்னூட்டமும் தான் எழுதிக்கொண்டிருக்கமுடியும்;

  1. சரி புரபஸர் அவர்களே தன் மனைவியை கற்பழித்தவன் இப்பிராந்தியத்தில் மிகவும் பலமானவன் என்ற ஜதார்த்தத்தை (நீங்கள் கூறுவது போல்) ஏற்றுக்கொண்டு அவன் என் மனைவியை கற்ழிக்கவில்லை என்று பொய்கூறி யாரோ ஒர் அப்பாவியை மாட்டிவிட வேண்டு என்று மக்களுக்கு புத்தி கூறும் புத்திஜீவியான தங்களை விட நாங்கள் அறிவிலிகள் தான்

 6. dear comrade it is all depends how we are going to handle the contradiction between the china and india/.Instead we rely on indias support for liberation it is nothihng but suicidal path again and again.the foolish path apolitical in nature always advocated by some tamil nationalists.sethu

 7. யதீந்திரா,
  உங்கள் ஆக்கத்திற்குப் பின்னூட்டம் எழுதப் போய் அது ஊதிப் பெருத்துவிட்டதால் கட்டுரையாகப் பதிவுசெய்துள்ளேன்.
  http://inioru.com/?p=14357


  1. னது கட்டுரை ஆக்கபூர்வமான சில விவாதங்களை தூண்டிருப்பதில் மகிழ்சி. ஒரு கட்டுரையின் வெற்றியும் அதுதான். உடன்பாடு முரண்பாடு என்பதெல்லாம் மற்றைய விடயம். முதலில் நமது உரையாடல் பரப்பில் யமுணா சொல்லுவது போன்றதான பிம்பங்கள் சார் வரையறைகளை உடைத்து வெளியில் வர வேண்டியிருக்கிறது. பின்னர் பரஸ்பரம் நாம் ஆக்கபூர்வமாக விவாதித்துக் கொள்ளலாம்.
   உங்களது கட்டுரை அப்படியே எனது கட்டுரையை தலைகீழாக புரட்டிப் போட்டது போன்றிருக்கிறது. அது உங்களது நிலைப்பாடு. நீங்கள் ஒரு கருத்தியல் தளத்தில் நின்று நிலைமைகளை பார்க்க முயல்கின்றீர்கள் நானோ களயதார்த்திற்கு ஏற்ப நிலைமைகளை அளவிட முயன்றிருக்கிறேன். நாவலன் உங்கள் விருப்பம் வேறு யாதார்த்தம் வேறு. சூழ்நிலைமைகள் வாழ் நிலைமைகளை தீர்மானிக்கின்றனவே தவிர வாழ்நிலைமைகள் சூழலை தீர்மானிப்பதில்லை என்பதே மார்க்ஸ் வாதம் என்று நினைக்கிறேன். அப்படிப் பார்த்தால் உங்களிடம் இருக்கும் இடதுசாரிப் பார்வையில் என்னிடமும் சிறிது இருப்பதாகக் கொள்ளலாம். கடந்த முப்பதுவருட கால ஈழத் தமிழ்த் தேசிய அரசியல் இரு வகை எதிர்ப்பரசியல் கூறுகளை உட்கொண்டிருந்தது. ஒன்று சிங்கள எதிர்ப்பு அடுத்தது இந்திய எதிர்ப்பு. இந்த இருவகை எதிர்ப்புக்களும் அடிப்படையிலேயே வேறுபட்டது ஆனால் தமிழ்த் தேசியர்கள் இரண்டையும் சமமாகவே பேணிக் கொண்டனர். இதற்கு புலிகளின் பின்தளம் 90களுக்கு பின்னர் மேற்கைசார்ந்து இருந்ததும் அதன் பின்னர் ஒருவகை மேற்குசார் மயைக்குள் விழுந்ததும் இந்தியாவின் இடத்தை தொடர்ந்தும் குறைத்து மதிப்பீடுவதற்கு காரணமாகியது. இதில் கருத்தில் சார்ந்து ஒடுக்கும் அரசுகள் என்ற கண்ணோட்டத்தில் சிந்திப்பவர்கள் கதை வேறு. அவர்கள் ஒருவகையில் மன ஆறுதலுக்காக சிந்திப்பவர்கள். எனக்கும் அது விருப்பம்தான் ஆனால் அது எனக்கு முடிவதில்லை. என்னளவில் அது ஒரு வகையில் யதார்த்தத்தை விட்டு நாம் தப்பி ஓட முயல்கின்றோமா என்ற கேள்வியை எழுப்புகின்றது. இங்கு இந்தியாவை ஈழத் தமிழர்களின் நலன்களுக்காக மாற்ற முடியுமா என்பதல்ல பிரச்சனை. எந்தவொரு அன்னிய சக்தியும் நலனற்று மற்றவருக்கு உதவுவதில்லை. அதனைத்தான் எனது கட்டுரையில் குறிப்பிட முயல்கின்றோன். அப்படி உதவுவதற்கு அவை ஒன்றும் தர்மஸ்தாபனமும் அல்ல. ஆனால் இங்கு ஒப்பீட்டளவில் நாம் சாதமாக எதிர்கொள்ளுவதற்கான சக்தி எது என்பதுதான் கேள்வி. அப்படியான சக்திகளுடன் நாம் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவது முக்கியமானது என்பதுதான் இங்கு முக்கியமானது. எமக்கு எவரும் முக்கியமல்ல நாம் எல்லோராயும் எதிர்ப்பரசியல் கண்ணோட்டத்தில்தான் அணுகுவோம் என்றால் நாம் எவ்வாறு முன்னோக்கிச் சொல்வது. இன்று நடு வீதியில் கிடக்கும் ஈழத் தமிழர் அரசிலை ஏதோவொரு சாத்தியமான இடத்திலிருந்து நாம் நகர்த்திச் செல்ல வேண்டியிருக்கிறது. அவ்வாறு நகர்த்திச் செல்ல வேண்டுமாயின் வடகிழக்கில் தனது இருப்ப்பை உறுதிப்படுத்திக் கொள்வதில் தீவிரம் காட்டும் இந்தியா குறித்து சாதமாக சிந்திப்பது அவசியம் என்பதே எனது கருத்து. எனது கடடுரையில் பூடகமாக இருந்த ஒன்றை யமுணா சுட்டிக் காட்டியிருக்கின்றார் அதாவது இந்தியா தவிர்ந்த ஏனைய எந்தவொரு சக்தியையும் நாம் சாதகமாக கையாள முடியாது. இந்தியாவின் மீது மட்டுமே ஓரளவாவது நாம் அழுத்தங்களை பிரயோகிக் முடியும். தமிழ் நாட்டு தமிழ்த் தேசிய சக்திகளின் எல்லையை டில்லி நன்கு அறிந்திருந்தாலும் முழமையாகவே தமிழ்நாட்டின் உணர்வுகளை புறந்தள்ளிக் கொண்டு இந்தியாவால் பயணிக்க முடியாது. சில நேரங்களில் அதனையே இந்தியா தனக்கான ஆயுதமாகவும் கைக்கொள்ளக் கூடிய வாய்ப்புண்டு. சீனாவை இது விடயத்தில் ஒரு விடயமாகவே கொள்ள முடியாது. இன்றைய உலக ஒங்கில் எந்தவொரு மனிதாபிமானக் கடப்பாடும் இல்லாத நாடு என்றால் அது சீனாவாகத்தான் இருக்க முடியும். இதில் அமொpக்காவின் பிரச்சனை வேறு. நீங்கள் சொல்லுவது போன்று அமொpக்க இலங்கை தொடர்பான தனது பிடிமானங்களை இழந்துவிடவில்லை. இப்போதும் இலங்கையைக் கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் அமொpக்காவிற்கு உண்டு. ஆனால் இங்கு அமொpக்கா அதனை முமூமையாக இந்தியாவின் மூலமே நகர்த்திச் சொல்கிறது. இலங்கை தொடர்பாக இந்தியாவிற்கு இருக்கும் நீண்டகால பொறுப்பையே அது அரசியலாக்க முயல்கிறது. இலங்கையில் சீனஆதிக்கமானது உடனடி அர்த்த்தில் இந்தியாவிற்கே ஆபத்தானது. . இப்படியொரு அரசியல் நகர்த்திலில் இந்தியா சற்று பின்னுக்கு நின்ற சந்தர்ப்பம்தான் மியன்மார் இந்தியாவிடமிருந்த போவதற்கு காரணமாகியது. இந்தியாவின் காய்நகர்த்தல் இதில் பிழைக்குமாயின் இந்தியாவிற்கு பிறிதொரு களம் தேவைப்படும். அமொpக்வைப் பொருத்தவரையில் அது முன்னர் ரஸ்யாவிற்கு எதிராக சீனாவைக் கையாண்டது. தற்போது சீனாவிற்கு எதிராக இந்தியாவைக் கையாளுகிறது. இப்படியான பினபுலங்களைக் கொண்டுதான் நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இதில் நமக்கு முரண்பாடுகள் இருக்கலாம். நாமே முன்னுக்கு பின் முரணாக கதைப்பதாக தோன்றலாம். ஆனால் இங்கு விடயம் நமது விருப்பம் வேறு யாதார்த்தம் வேறு என்பதுதான். யாதார்த்திற்கு ஏற்ப சிந்திக்கும் போது இப்படியான முரண்பாடுகள் தோன்றவே செய்யும். அகாஷி முன்னர் புலிகளின் கிளிநொச்சியில் குறிப்பிட்டது போன்று நாம் அமொpக்காவுடன் கைகோர்த்தது விருப்பங்களுக்காக அல்ல தேவைகளுக்காகவே. நாம் கடந்தகால யப்பானை கருத்தில் கொள்ளவில்லை எதிர்கால யப்பானையே கருத்தில் கொண்டோம். நமது பிரச்சனையும் அதுதான் நாம் கடந்தகாலத்தில் இருக்கப் போகின்றோமா அல்லது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிகழ்காலத்தை கையாளப் போகின்றோமா. நிகழ்காலத்தை கையாளுவதாயின் யதார்த்திற்கு ஏற்பவே சிந்திக்க முடியும்

   1. எந்தவொரு அன்னிய சக்தியும் நலனற்று மற்றவருக்கு உதவுவதில்லை.
    I am very much in agreement with the above point of view and the main point of your article…but i do not agree with your following point of view
    தமிழ்த் தேசிய அரசியல் இரு வகை எதிர்ப்பரசியல் கூறுகளை உட்கொண்டிருந்தது. ஒன்று சிங்கள எதிர்ப்பு அடுத்தது இந்திய எதிர்ப்பு. இந்த இருவகை எதிர்ப்புக்களும் அடிப்படையிலேயே வேறுபட்டது ஆனால் தமிழ்த் தேசியர்கள் இரண்டையும் சமமாகவே பேணிக் கொண்டனர்.
    Traditionally Tamil polity was pro Indian…that is way Sinhalese leaders hated India and still hate.. …. the alienated politics of tiger, early PLOTE and NLFT..are responsible for its reverse…in fact many Tamils in puthumathalan hoped and prayed that the India(or other power) would come and rescue them or stop the war.but the bitter lesion they learned was that the India has acted as a helping hand of Sinhalese government to commit that genocide …At the End of the war only Tamils and Indian ruling elites realized (?)that they have made mistakes,,,Sinhalese diplomatic is very power full in this region.. that is why they always survive…Now in my view Tamil should redefine the relationship with India and India should change their view on srilankan Tamils…I know it is not revolutionary politics,It might not solve the problems we are now facing .but it is pragmatic….First we have to save the people to make the revolution ..the revolution can wait but the life of the people not

 8. தர்மத்தின் பலத்தைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். அப்படி என்று ஒன்று இருப்பதை அறிவாளிகளே நம்புகிறீர்களா?

 9. அன்புள்ள யதீந்திரா.  உடன்பாடு அல்லது முரண்பாடுகளுக்கு அப்பால் சொந்தப் பெயரில் உங்களது கருத்தைத் தெளிவாக முன்வைத்ததற்காக முதலில் நான் தலைவணங்குகிறேன். இன்றைய சூழலில் இது மிகவும் அருகி வருகிற ஒரு போக்காக இருக்கிறது. யதாரத்தங்களை விடவும் சொந்த பிம்ப்ஙகளைக் கட்டமைப்பதே இன்றைய விவாதச் சூழலின் தேக்கத்திற்க்குக் காரணம் என உறுதியாக நம்புபவர்களினல் நானும் ஒருவன். இந்திய போன்ற பிராந்திய வல்லரசுகள் மட்டுமல்ல சின்னஞ்சிறு நாடுகளும் தமது தேசிய நலன்களின் அடிப்படையில்தான் இன்று இயங்குகின்றன. கியூபா வெனிசுலா ஈரான் ரஸ்யா இந்தியா என வேறுபட்ட போக்குள்ள நாடுகள் இலங்கையை ஆதரிப்பதை வேறு எப்படி விளக்க முடியும்? அரசுகளை கருத்தியல் வழிநடத்திய யுகம் முடிவுக்கு வந்துவிட்டது. குறிப்பிட்ட பிரச்சினையில் நிலைபாடு எடுப்பது என்பதில்தான் இன்று இடதுசாரி அரசியல் தங்கியிருக்கிறதேயல்லாமல் பொத்தாம் பொதுவாக எதிரப்பு அரசியல் பேசுவதெல்லாம் அரத்தமற்றதாகி வருகிறது. இலங்கையில் குவிக்கப்படும் சீன மூலதனம் தொழிலாளி வரக்கத்தின் பிரக்ஞையில் என்ன விளைவை ஏற்படுத்திவிடப் போகிறது? அல்லது இலங்கை அரசின் தன்மையில்?இலங்கை இன்று இந்தியா அமெரிக்கா சீனா போன்ற நாடுகளின் அதிகாரக் களம்.ஈழத்தமிழர் இந்தியாவை மட்டுமே அழுத்த அரசியலுக்குள் நிர்ப்பந்திக்க முடியும். சீனாவையோ அல்லது அமெரிக்காவை ஈழத்தமிழுர் அழுத்த அரசியலால் ஒன்றும் செய்யமுடியாது. இன்னும் அமெரிக்க இந்திய சீன முரண்பாட்டில் இந்தியாவை நோக்கிய அழுத்த அரசியல் ஒரு புறமும் ஈழுத்தினுள் வெகுமக்கள் அரசியல் ஒருபுறத்தில் என்பதான அரசியலே இன்று ஈழத்தமிழர் மேற்கொள்ளக் கூடிய யதாரத்த அரசியலாக இருக்கும்.  அன்புடன் யமுனா ராஜேந்திரன்.

  1. உங்கள் கருத்து எனக்கு ஏற்புடையதே அத்துடன் தற்போதைய சூழலுக்கு இதுவே சாpயானதொரு பார்வையாக இருக்கும். இங்கு பிரச்சனை ஈழத்தினுள் வெகுமக்கள் அரசியல் என்னும் போது அதனை முன்னெடுக்கக் கூடிய சக்தி அல்லது சக்திகள் யார் என்பதே பிரச்சனை. தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் வெகுஜன அரசியலை கடமைக்கக் கூடிய தகுதி வாந்த அரசியல் சக்திகள் எதுவும் தற்போது ஈழத்தில் இல்லை. அது குறித்து புலம்பெயர் சூழலில் பேசுவோரும் எழுத்துக்கு அப்பால் செல்லக் கூடியவர்களாக இல்லை. உண்மையில் சாpயானதொரு வெகுசன அரசியல் வடகிழக்குச் சூழலில் தோன்றுமாயின் அதுவே அடுத்த கட்ட ஈழத் தமிழர் அரசியலில் அடித்தளளமாக மாறக் கூடிய வாய்ப்பும் உண்டு.

 10. யதீந்திராவின் கருத்துக்கள் ஒன்றும் புதியவை அல்ல.இவை ஏற்கனவே சிலரால் சொல்லப்பட்டு வருபவவைதான.குறிப்பாக இந்திய உளவுப்பிரிவினருடன் தொடர்புகளைப் பேணிவரும் முன்னால் ஈரோஸ் உறுப்பினர்கள் இதற்காக பல கூட்டம் கூடினார்கள்.பல கட்டுரைகளை எழுதினார்கள்.ஆனால் அவர்களின் நோக்கம் வெற்றியளிக்கவில்லை.இப்போது அதை யதீந்திரா முன்னெடுக்கிறார்.அதற்கு யமுனா ராஜேந்திரன் அவர்கள் ஒத்து ஊதுவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.புலிகள் இருக்கும் வரை இவர்கள் இந்த கருத்துக்களை தெரிவிக்கவில்லை.இப்போது ஏன்? எதற்காக ? இப்படி கூறுகின்றனர்?
  புலிகள் இருக்கும்வரை மக்கள் தமக்குத்தான் ஆதரவாக இருக்கிறார்கள்.மக்கள் தமிழீழத்தையே விரும்புகின்றனர் என சொன்னார்கள்.இப்போது யதீந்திரா பேர்வழிகள் மக்கள் இந்தியாவிற்கு ஆதரவாக இந்தியாவை பயன்படுத்த விரும்புகின்றனர் என்கிறார்.கேட்டால் இதுதான் கள யதார்த்தம் என்கிறார்.இந்த கள யாதார்த்தை இவர்கள் எப்படி என்ன அளவு கோல் அளக்கின்றனர் என்று புரியவில்லை.குறிப்பாக இந்தியாவை பயன்படுத்த நினைப்பது கேவலமானது சாத்தியமற்றது என்று நாவலன் அவர்கள் தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியதற்து தகுந்த பதிலை அளிக்காமல் தான் கள யதார்த்தத்தில் இருந்து கூறுவதாகவும் நாவலன் ஏதோ கற்பனையில்(?) கூறுவது போல் யதீந்திரா எழுதுவது சிறந்த நகைச்சுவையாகவே இருக்குமேயொழிய சிறந்த பதிலாக இருக்க முடியாது.
  மேலும் இங்கு பிரச்சனை என்னவெனில் இந்தியாவை நாம் பயன்படுத்துவதா அல்லதா என்பதல்ல மாறாக இந்தியா தமிழ்மக்கள் பற்றி என்ன நினைக்கிறது என்பதே.தமிழ்மக்களுக்கு எந்தவிதமான உரிமையும் கிடைக்க விடாமல் செய்வதை தனது கொள்கையாக கொண்டிருக்கும் இந்திய அரசை எப்படி பயன்படுத்த முடியும்?தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் இல்லாதவர்கள் மற்றும் மக்களுக்காக போராட தயாராய் இல்லாதவர்களே இப்படியான கருத்துக்களை வெட்கம் இன்றி கூறுவார்கள்.அவர்கள் இந்தியாவின் அற்ப சலுகைகளுக்காக தமது விசுவாசத்தை இப்படி குரைத்து நிறைவேற்றுவார்கள். தமிழ் மக்களின் விடுதலைக்கு ஒரு எதிரியான இந்தியாவை நட்பு சக்தி என காட்ட முனைவது பச்சை துரோகத்தனமாகவே இருக்கமுடியும்.

  1. சீனாவிலேயே முதலாளீகளீன் நெருக்குதலால் தொழிலாளர் தற்கொலை செய்யும் நிலைதான் நீடிக்கிறது இந்தியாவிலோ தொழிலாளர் அடிமையாகவே வாழ்ந்து வருகிறார்கள் இப்போது அமெரிக்க,அய்ரோப்பிய தேசங்களீலும் இன் நிலமை தோன்றூகிறது

   அடுத்து புலிகளீன் நண்பர்கள் இந்த திருமா,னெடுமாறண்,வைக்கொ போன்ரோர் புண்ணாக்கு வியாபாரிகள் அது மட்டுமல்ல இந்திய இறயாண்மைக்கு எதிரானவர்கள் அது மட்டுமல்ல புலிகலிடம் அரசியல் தெலிவு இருந்திருக்க்வில்லை. தமிழரிடம் எங்கள் எனும் உணர்வு இல்லாமற் போய் நாங்கள் எனும் உணர்வு தோண்ரினால் உல்கு நம்மை உற்றூக்கேட் கலாம்.

   1. அன்பான நண்பரே தமிழ்மாறன் தாங்கள் என்ன எழுதீனார்கள் எதை சொல்ல வருகின்றீர்கள் என்பது தங்களுக்காவது புரிந்ததா?

 11. “இன்னும் அமெரிக்க இந்திய சீன முரண்பாட்டில் இந்தியாவை நோக்கிய அழுத்த அரசியல் ஒரு புறமும் ஈழுத்தினுள் வெகுமக்கள் அரசியல் ஒருபுறத்தில் என்பதான அரசியலே இன்று ஈழத்தமிழர் மேற்கொள்ளக் கூடிய யதாரத்த அரசியலாக இருக்கும். அன்புடன் யமுனா ராஜேந்திரன்.” என்று யமுனா ராஜேந்திரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.அதை யதீந்திரா அவர்களும் அங்கீகரிக்கிறார்.இந்த வரிகளை கொஞ்சம் விரிவாக விளக்கும் படி யமுனாவிடம் கேட்டுக்கொள்கிறேன்.ஏனெனில் அழுத்த அரசியல் என்பது பல வடிவங்கள் கொண்டவை.இதில் யமுனா எந்த வடிவத்தை கோருகிறார்.மேலும் ஏற்கனவே வைகோ திருமா நெடுமாறன் போன்றோர் மூலம் புலிகள் இதனை செய்தனர்.ஆனால் அவை வெற்றியளிக்கவில்லை.எனவே இனி என்ன விதத்தில் எப்படி செய்ய வேண்டும் என்பதை யமுனா விளக்குவாரா?

 12. //யதீந்திராவின் கருத்துக்கள் ஒன்றும் புதியவை அல்ல.இவை ஏற்கனவே சிலரால் சொல்லப்பட்டு வருபவவைதான.குறிப்பாக இந்திய உளவுப்பிரிவினருடன் தொடர்புகளைப் பேணிவரும் முன்னால் ஈரோஸ் உறுப்பினர்கள் இதற்காக பல கூட்டம் கூடினார்கள்.பல கட்டுரைகளை எழுதினார்கள்//தமிழரசன்
  இவ்வாறான முத்திரை குத்தல் விவாதத்தை திசை திருப்பும் குற்றச்சாட்டுக்கள் திறந்நத கருத்துப்ப ரிமாற்றத்தை ஏற்படுத்த எப்போதும் உதவாது. தங்கள் கருத்துக்களை சரியென்று நிறுவ முயலும் பாசிச பாணி இது. இவ்வாறான பின்னூட்டங்கள் இனியொருவில் தொடாச்சியான வியாதியாகவே உள்ளது. இது கருத்துக்களை திறந்த மனதோடு விவாதிக்கவரும் பலரை துரத்தி அடிக்கும் செயலாகும். இதைத்தான் பாசிச புலிகளும் கடந்தகாலங்களில் செய்தார்கள். அறிஞர் வோல்டயர் கூறுவது மனம்கொள்ளதக்கது.எமக்கு “உடன்பாடற்ற கருத்தக்களை கூற ஒருவருக்கு உரிமை உண்டு.இதுவே ஜனநாயக மரபின் பண்பாகும். அதைவிடுத்து கபடத்தனமான முத்திரை குத்தல் அவசியமற்றது. யசிந்திரா அவர்களின் கருத்துக்கள் எனக்கு உடன்பாடு அற்றவை ஆனால் அவரின் விவாத முறைமை, ஜனநாயகப் பண்பு, எதிர்கருத்துக்களை எதிர்பார்க்கும்- எதிர்கொள்ளும் பண்பு நம் எல்லோருக்கும் ஓர் எடுத்துக்காட்டு. ஜனநாயக மயப்பட்ட உரையாடல்களுக்கு இந்த முத்திரை குத்தும்பாணி ஆபத்தானது.இனியொரு ஆசிரியர்குழு இதனை கவனத்தில் கொள்வது நல்லது..

  1. உங்கள் கருத்திற்கு நன்றி. இது நமது ஈழத்து தமிழ்ச் சூழலின் ஒருவகை நோய்க் கூறு. இந்த நோய்க் கூறின் சொல் வெளிப்பாடுதான் துரோகி துரோக அரசியல் என்பவை எல்லாம். இதில் துரோகம் எது துரோக அரசியல் என்றால் என்ன? என்பவை பற்றி பெரும்பாலான சந்தர்பங்களில் அது குறித்து பேசுபவர்களுக்கே விளங்குவதில்லை. ஆனால் இது ஒருவரை அச்சுறுத்தி அகற்றுவதற்கான வழிமுறையாகவே நமது சூழலில் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது பிரயோகிக்கப்படுகின்றது. இதன் வெளிப்பாடுதான் இந்தியா பற்றிப் பேசுவோரை றோ என்பதும். அமொpக்கா குறித்து சாதகமாக பேசுவோரை சிஜஏ என்பதும். இதிலுள்ள நகைச்சுவை என்னவென்றால் இவ்வாறானவர்களின் கணிப்பு சாpயென்றால் இன்று ஈழத் தமிழர் அரசியல் பற்றிப் பேசும் எல்லோருமே ஏதோவொரு புலனாய்வு அமைப்பின் பிரதிநிதிகள்தான். சம்மந்தாpலிருந்து உருத்திரகுமாரன் வரை. இவ்வாறு முத்திரை குத்துவது மிகவும் இலகுவானதும் கூட.

 13. ஜெர்மனி தமிழரசனை மட்டுமே எனக்குத் தெரியும். தேவன் என்பவர் யார் எனக்குத் தெரியாது. தமிழரசன் அவர்தான் என்பதை உறுதிப்படுத்தினால் என்னால் அவருடன் தொடரந்து உரையாட முடியும். தேவன் என்பவர் யார் என எனக்குத் தெரியாது. முகமிலிகளோடு: என்னால் உரையாட முடியாது. அவர் எவ்வளவு பெரிய மேதையானாலும் எவ்வளவு பெரிய காத்திரமான கருத்துக்களைச் சொன்னாலும் தனது அடையாளமின்மைக்கு என்னதான் காரணத்தைக் காட்டினாலும் இதுவே எனது திட்டவட்டமான நிலைபாடு. ஸைபர் வெளி கருத்துவிவாதங்களில் சந்தரப்பவாதத்தின் இருள்வெளி என்பது எனது புரிதல். யதீந்திராவுக்கு நான் பின்னூட்டமிட்டதற்கான காரணத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். முகமிலிகளோடு உரையாடுவது காலவிரயம் என்’பதில் நான் தெளிவாக இருக்கிறேன். யமுனா ராஜேந்திரன்

  1. very good jamuna anna … I think your comments is very timely..and poignant

   ஸைபர் வெளி is சந்தரப்பவாதத்தின் இருள்வெளி. i like it..

 14. ஆக்கபூர்வமான உரையாடலுக்காக மேலும் சில கருத்துக்கள். ஈழத்தமிழர் அரசியல் இன்று மூன்று முனைகளில் முன்னெடுக்கப்படுகிறது. முதலாவதாக ஈழத்தில் அ).அரசு சார்புள்ளவர்களால் ஆ). தமிழ் தேசியக் கூட்டமைப்பால் இ). இதற்கு இடையில் ஊசலாடுகிற சக்திகளால் ஈ). இடதுசாரிகளிடம் தேசியப் பிரச்சினையை அங்கீகரிக்கிறதிலேயே திட்டவட்டமான நிலைபாடு இல்லை. 

  இரண்டாவதாக தமிழகத்தில் ஈழத்தை ஆதரிக்கிற அ).தமிழ் தேசிய சக்திகள் மற்றும் இடதுசாரிகள் – இவர்களிடம் பல்வேறு போக்குகள் உண்டு – விடுதலைப் புலிகளின் தோல்விக்கான காரணங்களைக் குறைந்தபட்சம் விமர்சனத்துக்கு உட்படுத்துகிறவர்களாக இவர்கள் பெரும்பாலோனோர் இல்லை என்பது பெரும்சோகம். ஈழத்திலும் சரி இலங்கையிலும் சரி தேசிய விடுதலை அரசியல் என்பது தனக்குள் தீர்த்துக் கொள்ள வேண்டிய அடையாள மற்றும் வித்தியாச அரசியல் அங்கீகரிப்பை ஒரு அரசியலாகக் கூட தமிழ்தேசிய சக்திகள் தீவிரமாகக் கவனத்தில் எடுக்கவில்லை. 

  மூன்றாவதாக அ).புகலிட நாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசியலை முன்னெடுப்பவர்கள் – முரண்களுக்கு அப்பால் ஒரு வெகுஜன அரசியலாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பது இந்த அரசியல்தான். ஆ). இதற்கு மாற்றான அல்லது இணையான விமர்சன சக்திகள் என்பது வெகுமக்கள் கருத்துத் திரளாக இல்லை.

  நாடுகடந்த அரசு தொடர்பாக அதனது எதிர்ப்பாளர்கள் இரு கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். ஓன்று நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு கனவு. இரண்டாவது நாடு கடந்த தமிழீழ அரசின் செயல்பாடுகள் இலங்கை அரசின் வடகிழக்கு ராணுவப் பிரசன்னத்தையும் வடகிழக்குத் தமிழர்களின் பாலான அடக்குமுறையையுயும் நியாயப்படுத்தவே செய்யும் என்கிறார்கள் இவர்கள். ஈழத் தமிழர்கள் நாடு கடந்த தமிழீழத்திற்கான விலையைத் தரவேண்டியிருக்கும் என்பது இவர்களது நிலைபாடு.

  அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தமது பொருளியல் அரசியல் அதிகாரத்திற்கான சாத்தியம் இல்லாத எந்த நிலப்பரப்பிலும் தனிநாடு அமைக்க ஒத்துழைக்கப்போவதில்லை – இதுவே எண்பதுகளின் பின்னான தேசங்கள் அமைந்ததின் வரலாறு –  இலங்கையில் இந்தியாவை மீறி அது சாத்தியமில்லை.இவ்வகையில் நாடு கடந்த தமிழீழம் என்பதனைக் கனவு என வரையறை செய்தல் அரசியல் யதார்த்தத்தில் சரியான நிலைபாடு. 

  இரண்டாவது வாதம் அபத்தமானது. இலங்கை இன்று உலகின் முன் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டிய அல்லது விளக்க வேண்டிய நிலையில்தான் உள்ளது. மேலும் மேலுமான மனித உரிமை மீறல்கள் அதற்கு நெருக்கடியையே கொண்டு தரும். பட்டவர்த்தனமான மனித உரிமை மீறல்களை அதனது நட்புநாடுகளே கூட பற்றி நிற்கமுடியாத நெருக்கடியே உருவாகும். இவ்வகையில் நாடு கடந்த அரசியல் ஒரு அழுத்த அரசியலாகச் செயல்படும் சாத்தியம் உண்டு. இது ஆக்கபூர்வமானது. 

  அறுபதுகளுக்குப் பின்பான இடதுசாரி அரசியலை எடுத்தோமானால் மனித உரிமை அரசியல் என்பது இடதுசாரிகளுக்கு ஒரு மிகப் பெரும் சவாலாக உள்ளது. ஸ்டாலின் மாவோ போல்பாட்- மூலதனத் திரட்டலுக்கான செயல்பாடுகள்- தியானன்மென் சதுக்கம் என இடதுசாரி மரபில் இதனை நிரூபிக்கச் சான்றுகள் குவிந்து கிடக்கிறது.

  மனித உரிமை குறித்த தீவிரமான அக்கறை என்பது இலங்கை இந்தியா மற்றும் புகலிட நாடுகளில் உள்ள இடதுசாரிகளிடம் இல்லை. கடந்த அறுபது ஆண்டுகளில் மேற்கத்திய இடதுசாரிகளிடம் அல்லது மார்க்சியர்களிடம் உருவாகி வந்தது போல மூன்றாம் உலக இடதுசாரிகளிடம் அது குறித்த பார்வை என்பது இல்லை.

  கருத்துத் தளத்தில் மனித உரிமை அரசியலைப் பொறுத்து எஸ்.வி.ராஜதுரை பேசிய விமர்சன மார்க்சியம் மற்றும் அ.மார்க்ஸ் பேசிய பின்நவீனத்துவ வித்தியாச அரசியல் எல்லாம் ஒரு தோல்வியுற்ற அரசியல் என – ஈழத்தமிழர் இனக்கொலைப் பிரச்சினையில் – என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது. தமிழ்ச்சூழலில் மரபான மார்க்சியர்களும் சரி- மரபான மார்க்சியர்களை விமர்சித்து வந்திருக்கிற விமர்சன மற்றும் பின்நவீனத்துவ மார்க்சியர்களும் சரி தந்திரோபாயவாதிகளாக ஆகியிருக்கிறார்களே அல்லாது மெய்ம்மையைப் பேசுவர்களாக அல்ல என்;பது நமக்கு முன் பட்டவர்த்தனமாக இருக்கிறது.

  இன்டர்நேசனல் கிரைசிஸ் குரூப்- அம்னஸ்டி இன்டர்நேசனல்- டப்ளின் பீப்பிள்ஸ் டிரைப்யூனல்-ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்- ஐக்கிய நாடுகள் சபை- பான் கீ மூன் அமைத்த குழு போன்றனவற்றை வெளிப்படையாக ஆதரித்து எங்கேனும் இடதுசாரிகள் அல்லது விமர்சன மார்க்சியர்கள் அல்லது பின்நவீனத்துவ வித்தியாச அரசியல் பேசுபவர்கள் சுயாதீனமாகப் பேசியிருக்கிறார்களா? இல்லை எனில் இதற்கான அவர்களது காரணம் என்ன? இடதுசாரி மரபு அதற்குப் பதிலளிக்கும். மனித உரிமை என்பது சொத்துரிமையுடன் சம்பந்தப்பட்டது. அது முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் தந்திரோபாயம் எனும் கருத்தியல் நிலைபாடுதான் காரணம். 

  இந்த மரபு எண்பதுகளின் இறுதியில் திட்டவட்டமாக பொய்த்துப் போனது என்பதனை எவரும் முதலில் உணர வேண்டும். சோசலிசம் எனும் கற்பனாராஜ்யமும் நடைமுறை மார்க்சியமும் ஒரு நெருக்கடியில் இருக்கிறது. மாற்றுக்கள் குறித்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வியட்நாமோ அல்லது சீனாவோ அல்லது கியூபாவோ இலட்சிய மாற்றுச் சமூகமாக இனி ஆக முடியாது. 

  அமைப்பியல்- பின் அமைப்பியல்- பின் நவீனத்துவம்- அதனது அரசியலான அடையாள அரசியலிலும் மேலான வித்தியாச அரசியல் என்பது இந்த நெருக்கடியின் தொடர்ச்சியாகவே தோன்றியது. இனம்பெண்ணுரிமை பாலரசியல் பொதுவாக நாம் சுவீகரித்துக் கொள்ள வேண்டியது எனில் இந்திய ஈழச் சூழலில் தலித் அரசியல் இடதுசாரிகளின் மரபாக தவிர்க்கவியலாமல் ஆகியது இவ்வாறுதான். 

  மனித உரிமை அரசியலை இடதுசாரி மரபுக்குகள் கொணர முடிந்த தமிழக முன்னோடிகளாக எஸ்.வி.ராஜதுரை அ.மார்க்ஸ் போன்றோரை நாம் மதிப்பிட்டாலும். ஈழப் பிரச்சினையில் மனித உரிமை என்பதை முன்னிறுத்தாமல்- எந்தவிதமான மனித உரிமை மீறலையும் ஒப்பாத இலங்கை அரசுச் சூழலில் பகைமறப்பு பற்றி அ.மார்க்ஸ் பேசுவது தந்திரோபாய அரசியல் அன்றி வேறென்ன? விடுதலைப் புலிகள் இஸ்லாமியர் விஷயத்திலும் அறிவுஜீவிகள் விஷயத்திலும் பாசிசக் கூறுகளுடன் நடந்துகொண்டார்கள் என்பதற்காக இலங்கை அரசு புனிதப்பசுவாக ஆகவிடத்தான் முடியுமா? புலிகளை மட்டுமே குற்றம் சுமத்தியபடி ஈழ மனித உரிமை விஷயத்தில் மௌனியாகியிருக்கும் எஸ்.வி.ராஜதுரை பாணி மார்க்சியத்தின் நடைமுறை அறம் என்ன? 

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பற்றிப் பேச வேண்டிய அவசியமேயில்லை. பழங்குடி மக்களின் மீது விமானத் தாக்குதல் நடத்தவேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிற கட்சி அது. அதனது அணிகளுக்கிடையில் அதனது மனித உரிமைப் பிரக்ஞைக்கு சமீபத்திய சான்று தோழர். டபிள்யூ வரதராஜனின் தற்கொலை.

  மனித உரிமை பற்றி இன்று வலியுறுத்திப் பேசிக் கொண்டிருப்பவர்கள் அமெரிக்க ஐரோப்பிய அரசு மட்டத்தில் இருப்பவர்கள் மட்டும் இல்லை. சுயாதீனமாகச் செயல்படுகிற உலக மனித உரிமை அமைப்புக்கள்தான் இதில் அதிமுனைப்புக் காட்டி வருகின்றன.

  டப்ளின் பீப்பிள்ஸ் டிரைப்யூனல்-அம்னஸ்டி இன்டர்நேசனல்- ஹியூமன்ரைட்ஸ் வாட்ச் போன்ற அமைப்புக்களை ஏகாதிபத்திய முதலாளித்துவ அமைப்புகள் என முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டிருக்க முடியாது. இந்த மூன்று அமைப்புக்களும் சிலியில் பினோசேவின் மனித உரிமை மீறலை முன்னிறுத்திய அமைப்புக்கள். பிரித்தானியாவில் பினோசெவுக்கு எதிரான நடவடிக்கையில் இவர்தம் பங்கு முக்கியமானது. இறுதிக் காலத்தில் கொடுங்கோலன் பினோசே ஒரு குற்றவாளியாகவே மரணமுற்றான். கியூபா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க சிலி அரசு இலங்கைக்கு எதிராக வாக்களித்ததை எவரும் மறக்க வேண்டியதில்லை.

   மனித உரிமையை வலியுறுத்துகிறவர்கள் அனைவரும் ஏகாதிபத்திய முதலாளித்துவ ஆதரவாளர்கள் இல்லை. அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அமெரிக்க அரசும் ஐரோப்பிய அரசுகளும் இந்தக் கோரிக்கைகளை ஆதரித்தால்- ஈழத் தமிழர் நலன் கருதி அதனை எவரும் ஆதரிக்கவே வேண்டும். இப்படி ஆதரிப்பதானது அவர்களது பிற ஒடுக்குமறை நடவடிக்கைகளை ஆதரிப்பதாக ஆகிவிடவும் முடியாது. 

  இந்திய அரசு நோக்கிய தமிழகத்தின் அழுத்த அரசியலை ஏற்கனவே விடுதலை ராசேந்திரன் கொளத்தூர் மணிஇ தியாகு மணியரசன்  போன்றவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள். பெண்ணுரிமை தலித்திய அரசியல் மார்க்சியம் பெரியாரியம் போன்றவை குறித்த அக்கறை கொண்டவர்கள் இவர்கள். நெடுமாறன் வை.கோ. சீமான் திருமாவளவன் போன்றவர்கள் இவ்வாறு கருதத் தக்கவர்கள் இல்லை.

  1).சர்வதேசிய மட்டத்தில் மனித உரிமை அழுத்த அரசியல் 2).தமிழக மட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட தமிழ் தேசியர்களின் இந்திய அரசு நோக்கிய அழுத்த அரசியல் 3).ஈழத்தில் வடகிழக்கு இணைப்பு என்பதனை முன்வைத்த வெகுமக்கள் அரசியல் என மும்முனை அரசியலே இன்றைய தேவை. வடகிழக்கில் இத்தகைய வெகுமக்கள் அரசியலுக்கான இன்றைய சக்திகள் குறித்து யதீந்திராவின் கருத்தை நான் ஏற்கிறேன்.

  குறிப்பிட்ட பிரச்சினையில் குறிப்பிட்ட வகையில்தான் முடிவெடுக்க முடியும். இடதுசாரி அரசியலின் திசைவழியாக இதுவே இருக்கும்.

  யமுனா ராஜேந்திரன்

 15. சொந்தப் பெரைப் பவித்துத், தனது “சொந்தப் பேரல்லாத” ஒன்றில் எழுதி அப் பேராலேயே அறியப்ப்படும் ஒருவரது மெச்சுதலை வேண்டாமலே இதை எழுதுகிறேன். அது தவறல்ல. இந்திரா பார்த்தசாரதி, தமிழ் வாணன், சுஜாதா, அடிக்கடி பேர் மாற்றும் பிரமிள் போல பல வகையான உதாரணங்கள் உள்ளன. (முக்கியாமான முரண் ஒன்றை மட்டுமே இங்கு சுட்டிக் காட்டுகிறேன்).
  ய. ரா., தன் உயரிய நிலைப்பாடுக்கிணங்க என்னுடன் விவாததில் இறங்க மாட்டார் என்பதால் மேற்கொண்டு அவருடனான கருத்தாடலைத் தொடர விரும்பாவிடினும், சில விடயங்களைத் தெளிவு படுத்துவது முக்கியமானது..
  இவ்விடத்து நடப்பது தனி மனிதரது மேதா விலாசம் பற்றிய ‘அழகுப்’ போட்டியல்ல. எந்த விதமான தனிப்பட்ட தாக்குதலும் (பொய்ப் புகழ்ச்சியும்) சொந்தப் பேரிலோ புனைபேரிலோ வருவது தான் தவறு. ஒரு பேருக்குரியவர் யாராயினும் இறுதிவரை தன் நிலைப் பாட்டை நியாயப் படுத்த அல்லது தவறு சுட்டிக் காட்டப்பட்டால் எற்க ஆயத்தமாயிருப்பது தான் முக்கியமானது.
  என்னை அடையாளங் காட்டச் சொல்லிச் சவால் விட்ட இருவர் மிக மோசமான முறையில் மாற்றுக் கருத்துரைப்போரை நிந்தித்து எழுதுவோர். ஒருவர் சொந்தப் பேரிலே மற்றவர் புனைபேரிலே.
  இவ்வாறான நிந்தனைகட்குத் தங்கள் சொந்தப் பேரை உட்படுத்தாமல் சில மூர்க்க்கத்தனமான வாதங்கது முகங்கொடுக்க வேண்டியே பலரும் புனை பேர்களில் எழுதுகின்றனர்.
  கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர் கொள்ளலமே ஒழிய நிந்தனைகளலல்ல.
  வினவு விவாதங்களில் புனைபேர்களே அதிகம். மூர்க்கத்தனங்கள் தம்மை எளிதாகவே அடையாளம் காட்டிக்கொள்கின்றன.

 16. இது வெறுமனே குட்டி முதலாளித்துவ நோக்கு. இந்தியா (அரசு) எம்மைப் பயன்படுத்துமேயன்றி வேறல்ல. சகல இலங்கை இந்திய முற்போக்கு சக்திகளுடன் இணையாமல் நாம் வெற்றி பெற முடியாது.

 17. //சொந்தப் பெரைப் பவித்துத்இ தனது “சொந்தப் பேரல்லாத” ஒன்றில் எழுதி அப் பேராலேயே அறியப்ப்படும் ஒருவரது மெச்சுதலை வேண்டாமலே இதை எழுதுகிறேன்//கரம்மசாலா.
  இதைத்தான் ……………கொண்ட எழுத்து முறை என்பது. இது உங்களுக்கு மிக மிக கைவந்த கலை என்பது உங்களுடைய பின்னூட்டங்களை தொடர்ந்து படித்துவரும் எவரும் புரிந்து கொள்வது கடினமல்ல. இப்படி ……………எழுதுவதை விடுத்து கருத்துவிவாதத்ததை சரியான முறையில் கொண்டுபோகும் பண்பை நீங்கள் எப்போது பெறுவீர்களோ தெரியாது. நீங்கள் குறிப்பிடும் புனை பெயருக்குரிய இந்திரா பார்த்தசாரதி ,தமிழ் வாணன் , சுஜாதா , பிரமில் எல்லோரும் அறியப்பட்ட, இப் புனைபெயர்களுககுரியவர்கள் யார் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்த மனிதர்கள்.அவர்களுடைய எழுத்தக்கள் …………. தன்மை பெற்றதாக இருந்ததாக நான் அறியவில்லை.அவர்களுடைய கருத்துக்கள் எமக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும்கூட அவர்களிடம் ஜனநாயக பண்பு இருந்தது.அது உங்களிடம் இருப்பதற்கான அறிகுறியை இல்லை. புனைபெயரில் எழுதுவதை தவறல்ல.ஆனால் தங்களுடைய அழுக்குகளை மூடி மறைப்பதற்கு புனைபெயரை பயன்படுத்துவதுதான் பிழையானது. கரம்மசாலா யசிந்திரா மிக முக்கியமான விடயமொன்றை விவாதிக்கின்றார். அதைப்பற்றி உங்கள் அபிப்பிராயத்தை நேர்மையான முறையில் வைக்கப்பாருங்கள். அந்த நேர்மை முறை உங்களிடம் இருந்திரந்தால் நீங்கள் சொந்தப்பெயரிலேயே யமுனா ராஜேந்திரனையும் யசீந்திராவையும் எதிர்கொண்டிருப்பீர்கள். அதுதான் உங்களிடம் இல்லையே.

  1. நான் யாரையும் தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ளவில்லை. விவாதம் கருத்துக்கள் தொடர்பானது மட்டுமே.
   ஏன் புனைபேர்களைக் குறிப்பிட்டேன் என்பதைக் கூட விளங்கிக் கொள்ள உங்களால் இயல்வில்லை என்றால் உங்களுக்கு விளக்கும் ஆற்றல் எனக்கு இல்லை. மன்னிக்கவும்.

   எந்த அழுக்கை மூட முயல்கிறேன் என்றும் எந்த ஜனநாயகப் பண்பின்றி இருக்கிறேன் என்று சொல்லுங்கள் சொந்தப் பேர்க்காரச் “சுதந்திரப்பிரியன்” அவர்களே!

 18. இன்றைய இந்த தகவல் தொழில் நுட்ப யுகத்தில் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை இணைக்கின்ற சாதனையை இணையம் செய்துள்ளது. அதுமட்டுமல்ல அதனுடைய வசதிகள் முகம் காட்டாமல் கருத்து தெரிவிக்கவும் அதன் மூலம் ஓரளவு பாதுகாப்பு பெறவும் வழி செய்கிறது. முக்கியமாக புலிகளுக்கு எதிராக ஜனநாயக கருத்துக்களை தெரிவிப்பதற்கு இணையத்தின் இந்த வசதிகள் பெரும் துணை புரிந்தது என்பதை “இனியொரு” ஆசிரியர்களே சாட்சியாக உள்ளனர்.

  இங்கு முகம் தெரியாத முகமிலிகளுக்கு தான் பதில் சொல்ல மாட்டேன் என யமுனா கூறுகிறார். கருத்து எழுதுபவர்கள் எல்லாம் தனக்கு தெரிந்திருக்க வேண்டும் என்றோ அல்லது தனக்கு தெரிந்தவர்களுக்குத்தான் பதில் அளிப்பேன் என்பதோ சின்னப்பிள்ளைதனமான வாதமாகும். என்னைப் பொறுத்தவரையில் கருத்து எழுதுபவர் யாராக இருந்தாலும் அவர் நாகரீகமான முறையில் எழுதினால் அவருக்கு பதில் தரலாம் என்பதே.அவர் அநாகரிகமாக எழுதினால் பதில் அளிக்காமல் தவிர்க்கலாம்.எனவே இங்கு யமுனாவிடம் யாரும் அநாகரிகமாக நடந்து கொள்ளாத வரை அவர் பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளார் என்றே நான் நம்புகிறேன்.

  சொந்தப் பெயரில் எழுதியதற்காக கட்டுரையாளர் யதீந்திராவுக்கு இங்கு யமுனா தலைவணங்கிறார். இந்த யதீந்திரா யார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும் அவருடைய கருத்துக்களின் ஆபத்தை உணர்ந்து அதனை அம்பலப்படுத்து முகமாக எனது கருத்துக்களை தெரிவித்தேன். தற்போது இந்தியாவுக்கு ஆதரவாக எழுதுவதில் எந்த ஆபத்தும் இல்லை. எனவே இங்கு யதீந்திரா தன் பெயரை வெளிப்படுத்துவதில் என்ன சாதனையை யமுனா கண்டு தலை வணங்கிறார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இலங்கைப் பிரச்சனையில் முகம் காட்டுவது எந்தளவு ஆபத்தானது என்பதை யமுனாவால் புரிந்து கொள்ள முடியாதுதான். அதனால்தான் அவர் இவ்வாறு எழுதுகிறார். ஆனால் அவருக்கு நான் ஒரு சம்பவத்தை நினைவூட்ட விரும்புகிறேன். தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை என்னும் இயக்கத்தை சேர்ந்த தோழர்.நெப்போலியன் இந்தியாவை எதிர்த்தமைக்காக இந்திய உளவுப்படை கேட்டுக்கொண்டபடி ஈரோஸ் இயக்கத்தால் 1987 ம் ஆண்டு மலையகத்தில் வைத்து நயவஞ்சக முறையில் படுகொலை செய்யப்பட்டார். இவ்வாறு இந்திய உளவுப்படைகளுக்கு காட்டிக் கொடுக்கவும் அவர்களுக்காக படு கொலை செய்யவும் எம் மத்தியில் சில துரோக சக்திகள் இருக்கும் போது இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை எப்படி முகம் காட்டி கருத்து சொல்ல வேண்டும் என யமுனா ராஜேந்திரன் விரும்புகிறார்?

  “இந்தியாவுக்கு ஆதரவாக பலர் கட்டுரை எழுதிவருகிறார்கள். அதில் முன்னாள் ஈரோஸ் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் கூட்டம் கூடினார்கள். பல கட்டுரைகள் எழுதினார்கள்.ஆனால் அவர்கள் நோக்கம் நிறைவேறவில்லை” என நான் ஏழுதியதை குறிப்பிட்டு இவை முத்திரை குத்தல் என்று சுதந்திரப்பிரியன் ஏழுதுகிறார். அத்துடன் இது புலிப்பாணி பாசிசம் என்று வேறு கூறுகிறார். இந்திய உளவுப்படையை சேர்ந்த சந்திரன் என்பவரை சில முன்னாள் ஈரோஸ் உறுப்பினர்கள் அழைத்து வந்து லண்டனில் கூட்டம் நடத்தியதை சுதந்திரப்பிரியன் அறியவில்லையா அல்லது மறந்து விட்டாரா? அல்லது இந்தியாவுக்கும் புலிகளுக்கும் பாலம் அமைக்க என வன்னிக்கும் சென்னைக்கும் பயணம் செய்த ஈரோஸ் உறுப்பினர்களை அறியவில்லையா? சென்னையில் இந்திய உளவுப்படையின் தேவைக்காக நடந்த மாநாட்டிற்கு சென்று கட்டுரை சமர்ப்பித்த ஈரோஸ் உறுப்பினரை அறியவில்லையா? எனவே இந்த உண்மைகளை எழுதியது எப்படி முத்திரை குத்தலாகும்? அல்லது இது எப்படி புலி பாணி பாசிசமாகும்.? என்பதை சுதந்திரப் பிரியன் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன

 19. இந்தியத் தலையீடு மட்டுமல்ல எந்த அந்நியத் தலையீடும இலங்கைக்கும் இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனங்கட்கும் கேடானவை என்ற நிலைப்பாட்டிலிருந்து, உலகப் பொது அனுபவத்தை முன்வைத்தும் இலங்கையினதும் தமிழ்த் தேசிய இனத்தினதும் குறிப்பான அனுபவங்களை முன்வைத்துமே எழுதுகிறேன்.

  ஒரு காலத்தில் இலங்கையில் அமெரிக்கக் குறுக்கீட்டுக்கான வாய்ப்பும் இந்தியாவூடாக சோவியத் குறுக்கீட்டுக்கான வாய்ப்பும் பற்றிப் பேசப்பட்டது. அது பிரிவினை பற்றிய பேச்சு எழுந்த காலம். தமிழ்த் தேசியவாதிகள் முதலில் அமெரிக்காவை எதிர்பார்த்துப் பின்பு இந்தியாவை எதிர்பார்க்குமாறு இலங்கையில் அரசியற் சூழல் மாறிய காலம்.
  அன்று அந்நியத் தலையீடு கேடானது என்று சிலர் சொன்னது இன்று அன்றினும் மேலாகப் பொருந்துகிறது.

  ஓரு தலையீட்டை எதிர்ப்பது இன்னொன்றை வரவேற்பதாகிவிடக் கூடாது என்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழ்த் தேசியத்தைப் பொறுத்தவரை, இன்று வலுத்துவரும் ஒரு சுதந்திரமான சிறுபான்மைப் போக்கை நீக்கின், ஓரு தலையீட்டை விட்டால் இன்னொன்றை நாடும் போக்குத் தொடர்கிறது.

  எனவே சில கேள்விகளிலிருந்து தொடங்குவது பயனுள்ளது.
  இலங்கையின் அயல்நாட்டுக் கொள்கை வகுப்பில் மட்டுமன்றி உள்நாட்டுக் கொள்கை வகுப்பிலும் குறுக்கிட்டுள்ள நாடுகள் எவை? இன்னமும் குறுக்கிடுகிற நாடுகள் எவை?
  இலங்கையில் ராணுவ அடிப்படையில் குறுக்கிட்ட நாடுகள் எவை? குறுக்கிட ஆயத்தம் எனச் சாடை காட்டிய நாடுகள் எவை?

  நடந்து முடிந்த போரை எந்தெந்த நாடுகள் தூண்டிவிட்டன? எந்தெந்த நாடுகள் வலுவாக ஆதரித்தன? எந்தெந்த நாடுகள் ஆயுதங்களை விற்றன? எந்தெந்த நாடுகள் ஆயுதங்களை வழங்கின? எந்தெந்த நாடுகள் போரில் நேரடியாகத் துணை தந்து பங்கேற்றன?
  ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு?

  இவற்றை விளங்கிக் கொண்டு தகவல்களை ஆரய்வது நன்று.

  அதை விட, தமிழ் அரசியல் மரபுக்குரிய இடதுசாரி விரோதம், அதன் தொடர்ச்சியகச் சீனா சோஷலிச நாடாக இருந்த போது மட்டுமன்றி முதலாளியப் பாதைக்குப் போனதைக் கூட விளங்கிக் கொள்ளாமல் எதிர்த்து வரும் ஒரு பிற்போக்குத்தனமும் அரசியல் மூடத்தனமும் சிலரால் பல் வேறு நோக்கங்கதாகப் பாவிக்கப்படுகின்றன.

  தராகி தந்த தகவல்கள் எல்லாம் உண்மை சார்ந்தனவா என்று ஆராய நாம் ஆயத்தமா? அவர் தந்த “தகவல்களின்” ஊற்று மூலங்கள் எவை? இந்தியவில் “றோ” முதல்வராக இருந்து ஓய்வு பெற்று இப்போது இந்தியாவை அமெரிக்காவின் பிடிக்குள் தள்ளவும் அதன் வழியாக இந்தியாவின் பிரந்திய மேலாதிக்க நோக்கங்களை முன்னெடுக்கவும் முயலும் ஒருவரின் கட்டுபாட்டில் இயங்கும் ஒன்றுக்கு மேற்பட்ட “ஆராய்ச்சி நிறுவன” இணையத்தளங்கள் தான் அவற்றுக்கான ஆதாரங்களில்லையா? அதை விசாரிக்கக் கூட நாம் ஆயத்தமாக இல்லையா?

  தமிழகத்தின் தமிழ் (திராவிட?) தேசியவாதக் கட்சிகள் மட்டுமன்றிப் பாராளுமன்ற இடதுசாரிகளும் மகா இந்திய தேசபக்தர்கள். இந்திய விஸ்தரிப்புவாதத்தைப் பற்றிச் சொன்னால் தவித்துப் போய் விடுவார்கள். சுயநிர்ணயம் பற்றி யாராவது பேசினால் “அது உலகுத் தானடா தம்பி பாரத ‘தேசத்துக்’கல்ல” என்பது தான் அவர்கள் நிலைப்பாடு. இன்று கூட சீன இந்திய எல்லத் தகராற்றைப் பற்றி, ஒரு தகவல் அடிப்படையிலான, — “பாரத மாதாவுக்கு ஜே” போடாத — ஆராய்ச்சியைத் தமிழிற் காண்பதரிது. ஏ,ஜே. நூரானியின் கட்டுரைகள் எத்தனை தமிழ் அறிஞர்களால் படிக்கப் படுகின்றன?

  இந்திய அரசு — இந்தியாவின் தேசிய இனங்களும் இந்தியாவால் விழுங்கப் பட்ட காஷ்மீர், நாகாலாந்து, மணிப்பூர், சிக்கிம் ஆகிய தேசங்களும் உட்பட — இன்று முழுத் தென்னாசியாவுக்குமே ஒரு மிரட்டல். இதை நாம் முதலில் முழுதாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
  ஆந்த ஆபத்தை அகற்றச் சீனச் சார்போ ரஷ்யச் சார்போ அமெரிக்கச் சார்போ உதவாது. அனைத்தும் ஒவ்வொரு நாட்டினதும் தேசிய இனங்களதும் மக்களினதும் கையில் தான் உள்ளது என்பது என் மதிப்பீடு.

 20. யதீந்ரா,
  எனது கட்டுரையில்
  1. நாடுகளிடையேயான முரண்பாடுகளின் இன்றைய நிலை.
  2. ஆசியப் பொருளாதரத்தின் பங்கு
  3. இவற்றிலிருந்து இலங்கை மீதான இந்தியாவின் ஆதிக்கமும் மக்கள்விரோத செயற்பாடுகளும் எவ்வாறு அமையும் என்பதை மட்டும் தான் கூறியிருக்கிறேன். இதற்கும் தளத்தில் நிற்பதற்கும் என்ன தொடர்பு என்பது எனக்குப் புரியவில்லை. இதையும் மீறி இந்தியாவைப் பயன்படுத்திக்கொள்வது குறித்துப் பேசுவது என்பதுதான் தூய “டெக்னோகிராட்” வழிமுறைக்கு இட்டுச்செல்லும்.

  தவிர, யமுனாவின் “அழுத்த அரசியல்” என்ற “சொல்லாடலுடன் கூட” முரண்படுகிறேன். அவர் வேறு தளத்திலிருந்து பேசுவதாகத் தோன்றுகிறது. அழுத்த அரசியலும் அதன் பரிமாணங்களும் குறித்த திறந்த விவாதத்திற்குக் நான் தயார்.

  இனிமேல் எதுவும் சாத்தியமில்லை, சமூக மாற்றம் குறித்துச் சிந்திக்க முடியாது என்ற அடிப்படையில் இருப்பிலுள்ள அரசுகளின் மீதான அழுத்தத்தைப் பிரயோகிப்பதனூடாகவே “சில்லறை” உரிமைகளைப் பெற்ருக்கொள்ள முடியும் என்ற அடிப்படியிலிருந்தே அழுத்த அரசியல் என்பது உருவாகிறது. இன்னொரு வகையில் அழுத்த அரசியல் என்பது தன்னார்வ நிறுவனங்களின் தாரக மந்திரம். இது பெருங்கதையாடலுக்கு எதிரான அரசியலாகக் கூட லத்தீன் அமரிக்க நாடுகளில் முன்வைக்கப்பட்டது.

  ஆசியப் பொருளாதாரமும் உருவாக்கும் புதிய ஒழுங்கு விதிக்குள் ஒவ்வொரு வர்க்கமும் தன்னை நிலைநாட்டிக்கொள்ளப் போராடும் மிக முக்கியமான காலகட்டத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறோம். இந்தப் புறநிலை யதார்த்ததிலிருந்து ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் இந்திய சக்திகளுடன் இணைவை ஏற்படுத்திக்கொள்வதும் அதற்கான பொதுத்தளம் ஒன்றை உருவாக்கிக் கொள்வதும் தான் இந்த ஒழுங்கிற்குள் எமது பலத்தை உறுதி செய்துகொள்வதற்கான முன்நிபந்தனையாக அமைய முடியும்.
  தமிழரசன்,
  இன்று எம்மச்சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முன்னெப்போதையும் விட வெளிப்படையான ஆயிரம் ஆதரங்கள் கொட்டிக்கிடக்கின்றன. எமது விவாதத்தை “உளவுப் பிரிவோடு அடயாளப்படுத்தலோடு” ஆரம்பிப்பதை விட கருத்தியல் தளத்தில் ஆரம்பித்தால் இன்னும் ஆரோக்கியமானதாக அமையும்.
  ஒருவர் மீதான அவரதூறும் தாக்குதல்களுமின்றி கருத்துத் தளம் என்பது உருவாகுமானால் இணையத் தளத்தில் கருத்தாளனின் அடையாளத்தைப் பற்றித் துயர்கொள்ளத் தேவையில்லை. இனியொருவில் பின்னூட்டமிடும் நூற்றுக்கணக்கான வாசகர்களை அடையாள அட்டையுடன் வருமாறு கோருவதற்கு இனியொரு அரசியல் பொலீஸ்காரர்களும் இல்லை.

  1. சில விடயங்களுக்கு பதில் சொல்லுவது ஒரு கட்டத்திற்கு மேல் பயனுடையதல்ல எனினும் நான் பதிலளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிற்காக மேலும் ஒரு சில வார்த்தைகள். திரு.நாவலனின் கட்டுரைக்கு எனது பதில் அது அவரது நிலைப்பாடு என்பதாகவும் நான் களயதார்த்தத்தை கருத்தில் கொண்டே பேசுவதாகவும் குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுதும் அதில் எந்த மாற்றமும் இல்லை. இங்கு களயதார்த்தம் என்று நான் குறிப்பிடுவது தற்போதைய ஈழத்து நிமைைகளையே. போரின் அவலம். முன்று பிள்ளைகளை போருக்கு கொடுத்துவிட்டு நான்காவது பிள்ளையுடன் எங்கு போவது என்று தெரியாமல் அனாதரவாக நிற்கும் மக்கள். சரணடைந்து கிடக்கும் பல்லாயிரம் போராளிகள் (சிலர் அவர்களை போராளிகள் இல்லை என்றும் சொல்லலாம். அது அவர்;கள் உரிமை. ஆகக் குறைந்தது மனிதர்களாகவாவது ஏற்கட்டும்.?) ஈழத் தமிழரின் பலவீனமான அரசியல் சூழல். பலம்பொருந்திய கொழும்பு. இதற்கு மத்தியில் சீன-இந்திய அதிகாரப் போட்டிக் களமாக மாறியிருக்கும் இலங்கையின் அரசியல் சூழல். இவற்றுக்கு மத்தியில் நாம் விருப்புகிறோமோ இல்லையோ நம்மை நோக்கி முன்வைக்கப்படப் போகின்றன தீர்வாலோசனை. கொழும்புடன் ஒரு இணக்கப்பாட்டை நோக்கிச் சொல்ல வேண்டிய இக்கட்டில் இருக்கும் கூட்டமைப்பினர். எந்தவொரு அரசியல் சக்திகள் மீதும் நம்பிக்கை வைக்க முடியாத நிலையில் இருக்கும் மக்கள் (அவர்கள் அவ்வாறு இருப்பதற்கு நியாயமுண்டு). சுயநலன்களாலும் அதிகாரப் போட்டியாலும் பிளவுண்டு கிடக்கும் புலம்பெயர் தமிழ்ச் சமூகம். இவைகள் அனைத்தைதும் திரட்டியே நான் களநிலைமை என்று குறித்திருக்கின்றேன். இதனை நீங்கள் சட்டென விளங்கிக் கொள்வீர்கள் என்று நினைத்தே ஒற்றைச் சொல்லில் களநிலைமை என்றேன். மேற்கின் சனநாயகச் சூழலில் வாழுவோருக்கு இப்படியான நிலைமைகளை விளங்கிக் கொள்வதில் உள்ள சிக்கல்களை என்னால் விளங்கிக் கொள்ள முடிகின்றது.

   எவர் விரும்பினாலும் விருப்பாவிட்டாலும் இனிவரப் போகும் காலங்களில் சீன-இந்திய அதிகாரப் போட்டிக்களமாக மாறியிருக்கும் சூழலில் சில விடயங்கள் நடைபெறத்தான் போகின்றது. இந்தியா தனது மூலோபாய காய்நகர்த்திலில் ஈடுபடத்தான் போகிறது. வடகிழக்கை தனது ஆதிபத்தியத்துக்குள் வைத்துக் கொள்ள முயலத்தான் போகிறது. இதனை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. இதுதான் உண்மை. வாதம் செய்ய வேண்டுமென்ற சிலரின் ஆர்வங்கள் இதனை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தை கையாளக் கூடிய ஆற்றல் நமக்கு இருக்க வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு. இங்கு இந்தியாவை பயன்படுத்துவது என்பதல்ல என் வாதம். எனது கட்டுரையில் எங்குமே இந்தியாவை நாம் நமது நலனில் நின்று மட்டும் பயன்படுத்தலாம் என்று கூறவில்லை. இந்தியாவின் ஈடுபாட்டால் ஏற்படப் போகும் சூழலை கையாளுவது பற்றித்தான் பேசியிருக்கிறேன். பலவீனமான ஈழத் தமிழ் அரசியல் சக்திகள் பலம்பெருந்திய இந்தியாவை பயன்படுத்தலாம் என்று எண்ணினால் அது மடைமையானது. இது வரலாற்றில் என்றுமே நடந்ததுமில்லை. ஆனால் எந்தவொரு அன்னிய சக்தியும் தனது நலன்கள் என்னும் அச்சாணியில் சூழன்றாலும் அது எந்த களத்தை தனது நலனுக்காக கையாள முற்படுகின்றதோ அங்கு அதற்கு நட்பு சக்திகள் தேவைப்படும். அதனைக் கைக்கொள்வதற்கு நம்மை தயார் நிலையில் வைத்திருப்பது அவசியம். அதற்கு ஏற்றவாறான புரிதல் நமக்கு அவசியம். இங்கு நமது நம்பிக்கைளையும் விருப்பங்களையும் மட்டுமே முதன்மைப்படுத்திக் கொண்டு இருந்தால் மீண்டும் நாம் பின்நோக்கியே தள்ளப்படுவோம். கடந்தகால அனுபவங்களில் நின்றுகொண்டு இந்திய எதிர்ப்பு அரசியல் பேசுவதால் இங்கு எதுவும் நடக்கப் போவதில்லை. அரசியலில் நிரந்தர நன்பர்களும் கிடையாது நிரந்தர எதிரிகளும் கிடையாது என்பதே அரசியல் நடைமுறை. இதில் நாங்கள் மட்டும் ஏன் அழுங்குப் பிடி பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு ஒருவர் இருக்கப் போகின்றார் என்றால் அது அவர் உரிமை.

   ‘இவ்வாறான ஒரு புதிய அரசியல் பகைப்புலத்தில் இந்திய அரசை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாற்றமுடியும் எனக் கருதினால் அது அப்பாவித்தனமானது. இந்திய-சீன முரண்பாட்டை நாம் கையாள முடியும் என்று கருதினால் அது கேலிக் கூத்தானது. அவ்வறானதொரு முரண்பாடென்பதே இந்த இரு நாடுகளுக்கிடையே இலங்கை விவகாரத்தில் மட்டுமல்ல தென்னாசிய அரசியல் சூழலில் கூடக் கானப்படவில்லை’ – நாவலன்.

   முரண்பாடுகளை யைாளுவதில்தானே நாவலன் அரசியல் நகர்வுகளே தங்கியிருக்கிறது. இயங்கியல் தெரிந்த நீங்கள் இவ்வாறு சொல்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. அதுடன் மேலும் ஆச்சரியம் சீனா- இந்திய முரண்பாடு என்பதே கிடையாது இலங்கை விவகாரத்தில் மட்டுமல்ல தென்னாசியச் சூழலில் கூடக் கானப்படவில்லை என்கிறீர்கள். சீன-இந்திய எல்லைத் தகறாறின் காரணமாகத்தான் 1962இல் எல்லைப்புற யுத்தம் நடந்தது. இது பற்றி நீங்கள் அறீவீர்கள். அன்றிலிருந்து சீனாவிற்கும் இந்தியாவிற்கும் எல்லைகள் குறித்த முரண்பாடு நீடித்தே வந்திருக்கிறது. இன்று அது மேலும் தீவிரமடைந்திருக்கிறது.

   2006இல் சீனா திபெத்திய பீடபூமியில் ஒரு பெரிய இரயில் திட்டத்தை கட்டமைத்தது. இது குறித்து கருத்துத் தெரிவித்த இந்திய அதிகாரிகள் தேவையானால் இந்தியாவை விரைவாகத் தாக்குவதற்கு துருப்புக்களை கொண்டுவரும் நோக்கிலேயே இதனை சீனா திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர். இந்தியாவின் கொல்லைப்புறம் என கருதப்படும் அனைத்து நாடுகளுடனும் சீனா தனது உறவுகளை வலுப்படுத்தி வருகின்றது. இதன் காரணமாகவே இலங்கை விடயத்தில் இந்தியா கூடுதல் கவனம் எடுத்து வருகின்றது.
   தேசியவாதத்தை ஒரு மூலோபாயமாக் கொள்ளும் சீன கம்யூனிஸ் கட்சியின் திட்டத்தை ஒரு பகுதியாகக் கொண்டு இயங்கிவரும் China International stragegy Net இணையத்தளம் இந்தியா 20 அல்லது 30 சிறு நாடுகளாக பிரிக்கப்பட வேண்டுமென தலைப்பிட்டது. வானில் இரு சூரியன்கள் இருக்க முடியாது ஆசியாவில் ஒரு மேலாதிக்க சக்திதான் இருக்க முடியும் என்றும் குறிப்பிட்டது. 1999இல் பெல்கிரேட்டில் சீன துதரகம் அமெரிக்க குண்டு வீச்சுக்கு இலக்கானதை அடுத்து அமெரிக்க வலைத்தளங்களை சேதப்படுத்திய முயபெ டுபைெலi என்பவரால் இது நடத்தப்படுகின்றது.
   தவிர கடற் கொள்ளையரை கட்டுப்படுத்துதல் என்ற போர்வையில் சீனா தனது கடற்படையின் செல்வாக்கையும் விஸ்தரித்து வருகின்றது. இதுவும் இந்தியாவை கலக்கமடையச் செய்துள்ளது. இது தொடர்பாக கருத்துக் கூறும் இந்தியக் கடற்படையின் திட்டமிடுநர் பட்நாகர்இ சீனா அதன் கடற்படையை பெரும் வேகத்தில் வளர்த்து வருகிறது. அதன் விழைவு இந்தியப் பெருங்கடலில் தெளிவாகத் தெரிகிறது என்கிறார்.
   இவைகள் எல்லாம் முரண்பாடுகளை அடிக் கோடிடவில்லையா? இந்த முரண்பாடுகள் என்பது சில நேரங்களில் தூக்கலாகவும் சில நேரங்களில் மறைந்தும் இருக்கின்றன. அவ்வாறு இருப்பதால் முரண்பாடுகளே இல்லை என்பதாகிவிடாது. இதன் தூக்கலான நிலைமைதான் தற்போது இலங்கையை மையப்படுத்தி நிகழும் சீன-இந்திய போட்டி.
   நீங்கள் சொல்லுவது போன்று இதனை அமெரிக்கா தனது நோக்கில் பயன்படுத்திக் கொள்ள விழைவது உண்மைதான். அது எப்போதோ போடப்பட்;ட திட்டம். அமெரிக்கா நாளை நிகழப் போவதற்கு இன்று திட்;டம் போடும் நாடல்ல. இது ஏலவே ஜமிகாட்டரின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த சிபிக்நியூ பிரசனஸ்கியினால் வகுப்பட்ட திட்டம். அவர் தனது வூந பசநயவ உhநளள பயஅந என்னும் நூலில் அமெரிக்காவின் எதிர்கால மேலாதிக்க இருப்பிற்கு யூரேசியாக் கண்டத்தை கட்டுப்படுத்தி வைத்திருப்பது அவசியம் என்று குறிப்பிட்டிருக்கின்றார். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இவைகள் நிகழத்தான் போகின்றன. இவைகள் எதனையும் நீங்கள் சொல்லுவது போன்று மக்களை அணிதிரட்டியெல்லாம் தடுத்து நிறுத்திவிட முடியாது. அது சாத்தியமென்றால் எப்போதோ அது நிகழ்ந்திருக்கவல்லவா வேண்டும.; இவைகள் எதுவுமே நமது எல்லைக்குள் இல்லை நன்பரே! இவைகளால் விழையப் போகும் சூழலுக்கு மட்டுமே நாம் சாட்சியாக இருக்கப் போகிறோம். இப்படியான பின்புலத்தில் நாம் நமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் எவ்வாறு தந்திரோபாயமாக செயலாற்றுவது என்பதே நம்முன்ளுள் கேள்வி. நாம் என்று நான் குறிப்பிடுவது இன்றைய ஈழத்து தமிழ் மக்களை. புலம்பெயர் மக்களை அல்ல. எஞ்சியிருக்கும் மக்களையும் பலிக்கடாவாக்கலாம் என்னும் வகையான எந்தவொரு அரசியல் நிலைப்பாட்டுடனும் என்னால் ஒத்துப் போக முடியாது. இன்று புரட்சிகர அரசியல் என்றெலாம் வெளியில் இருந்து பேசுவோர் எத்தனை பேரால் அதற்காக ஈழத்து நிலத்தில் இருந்து உழைக்க முடியுமென்று நம்புகின்றீர்கள்? கடந்த காலத்தில் தனது பேரப்பிள்ளைகளைக் கூட அன்னிய தேசங்களில் பாதுகாத்துக் கொண்டு புலிகளின் வீரம் பற்றிப் பேசியவர்களை நம்பியா எங்களை இயங்கச் சொல்கின்றீர்கள். களத்தில் இருந்த புலிகளிடம் அதற்கான அர்ப்பணிப்பு இருந்ததை நான் மறுக்கவில்லை. பொதுவாக என்னை தாக்கி வந்த பல பின்னூட்டங்களையும் கருத்தில் கொண்டு சொல்வதானால்இ நன்பர்களே! வாயில் கதவின் உயரம் நமது உயரத்தை விடக் குறைானதாக இருந்தாலஇ; நாம் நமது தலையை பாதுகாத்துக் கொண்டு உள்நுழைய வேண்டுமானால் குணிந்துதான் போக வேண்டியிருக்கும். நான் இருக்கும் சூழலில் என்னால் குனிந்து மெதுவாகத்தான் போக முடியும். உங்கள் நிலைமை வேறு.

 21. இந்திய அரசை பயன் படுத்த வேண்டும் என யதீந்திரா கட்டுரை எழுனார்.அதற்கு அது எவ்வளவு கேவலமானது என்பதை நாவலன் தன் கட்டுரையில் சுட்டிக்காட்டினார்.இங்கு யதீந்திரா உண்மையிலே விவாதத்தை விரும்புகிறவராயின் நாவலனுக்கு பதில் கொடுத்திருக்க வேண்டும்.ஆனால் அவரோ நாவலன் கள யதார்த்தம் புரியாமல் கற்பனையில் எழுதுவதாக சாடினார். அப்படியாயின் இங்கு கள யதார்த்தம் என்ன என்பதை யார் எப்படி என்ன அளவு கோல் கொண்டு அளக்கின்றனர் என கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு யதீர்திரா அவர்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை.

  யதீந்திராவின் கருத்துப்படி நாட்டில் இருப்பவர்களுக்குத்தான் கள நிலைமை புரியும் என்றால் பேராசிரியர் சிவசேகரம் அவர்கள் நாட்டில் இருந்து கொண்டு இந்தியா பற்றி நிறைய எழுதியுள்ளார்.ஆனால் அவருடைய கருத்துக்கள் யதீந்திராவின் கருத்துக்களுக்கு எதிர் மாறாக இருக்கின்றனவே. அதையும்விட தோழர் செந்தில்வேல் தலைமையிலான புதிய ஜனநாயக கட்சி இந்தியாவை நட்பு சக்தி என்றோ அல்லது இந்தியாவை பயன் படுத்த வேண்டும் என்றோ சொல்லவில்லையே. மாறாக இலங்கைப் புரட்சிக்கு இந்தியா ஒரு எதிரி என்றே தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் இதை களத்தில் இருந்துதானே தெரிவித்துள்ளனர். இவர்களுடைய கருத்துக்கள் ஏன் யதீந்திராவின் கருத்துக்களுக்கு எதிராக இருக்கின்றன என்பதை யதீந்திரா விளக்குவாரா?

  இந்தியாவில் அழுத்த அரசியல் மேற்கொள்ள வேண்டும் என யமுனா குறிப்பிட்டார். அழுத்த அரசியல் என்றால் அது எப்படி புலிகள் மேற்கொண்டதில் இருந்து வேறுபடும் என்பதை விளக்கும் படி கேட்டேன். அதற்கு தனக்கு அறிமுகம் இல்லாத முகமிலியான எனக்கு பதில் அளிக்கமாட்டேன் என கூறிய யமுனா அவர்கள் பின் தனது அடுத்த கருத்துப்பகுதியில் தியாகு மணியரசன் குளத்தூர் மணி விடுதலை ராஜேந்திரன் போன்றவரகள் இந்த பணியை செய்வதாக பதில் அளித்துள்ளார். ஆனால் வைகோ நெடுமாறன் திருமா போன்றோர் இவ்வாறு கருதத்தக்கவர்கள் அல்ல என்கிறார். இங்கு இவர் இதை என்ன அடிப்படையில் பிரிக்கிறார் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் இவர்களுக்கு இணையாக இன்னும் சொல்லப் போனால் உறுதியாக நக்சலைட் கட்சிகள் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுகின்றன. இதில் பிரதான பங்கை வகிக்கும் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பங்களிப்பை யமுனா அவர்கள் ஏன் மறுக்கிறார் என புரியவில்லை.

  முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து விட்டு பாட்டாளி வர்க்கம் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமாயின் புரட்சி ஒன்றே வழி என்று கால் மாக்ஸ் குறிப்பிடுகிறார்.ஆனால் தன்னைத்தானே மாக்சியவாதி என்று குறிப்பிடும் யமுனா ராஜேந்திரன் அவர்களின் கருத்துக்களில் ஓரிடத்தில் கூட புரட்சி என்ற வாசகத்தை காணமுடியவில்லை. மாறாக மனித உரிமை மீறல் என்றும் அழுத்த அரசியல் என்றும் இதுவே ஈழத்தமிழர்களுக்கான வழி என்றும் கூறுவது இதுதான் இருபதாம் நூற்றாண்டுக்கான மார்க்சிசமா அல்லது மாக்சியத்தின் பேரால் முன்வைக்கும் யமுனாயிசமா என்பதை வாசகர்களின் தெரிவிக்கே விட்டுவிடுகிறேன்.

  1. Comparing with Mao and Stalin the mass murders in the name of communism and socialism,prabaharan is a very small erumpu… I cannot imagine that there are still people out there who speak of socialism and human-rights but still subscribe to the above mass murders politics…New left politics must have a courage to break the old chain and be able to redefine our politics and its means…back to Rosa luxamburg and anton Pannekoek ..we can learn bit from them

  2. யமுணா குறிப்பிட்டது போன்று எல்லோருக்கும் பதில் சொல்லும் பொறுப்பு வேண்டியதில்லை எனினும் பதிலாக சில கருத்துக்கள். நீங்கள் யார் இது உங்கள் சொந்தப் பெயரா அல்லது புனைப் பெயரா என்பது பற்றியும் எனக்கும் தெரியாது. புனைப்பெயரில் எழுதுவது பல்வேறு சந்தர்பங்களில் எடுத்துக் கொள்ளும் வியடம் தொடர்பான சூழலுடன் தொடர்பு பட்டிருக்கின்றது. ஆனாலும் மேற்கின் சனநாயகச் சூழலுக்குள் வாழந்து கொண்டு ஏன் புனைப்பெயரில் எழுதுகிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை.

   நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் நாட்டில் இருந்து எழுதும் சிவசேகரம் செந்தில்வேல் போன்றோர் இந்தியாவிற்கு எதிராக எழுதுவுதாகவும் அவர்கள் இலங்கைப் புரட்சிக்கு இந்தியா எதிரானது என்றும் எழுதி வருவதாகக் குறிப்பிட்டிருக்கின்றீர்கள்.

   இலங்கைப் புரட்சியா? அது என்ன நன்பரே! நீங்கள் எந்த உலகத்தில் இருக்கின்றீர்கள்?

   உண்மையிலேயே நான் சிவசேகரம் பற்றியோ அவர் சார்ந்த புதிய ஜனநாயக் கட்சி பற்றியோ பேசுவது முறையல்ல எனினும் நீங்கள் தொடங்கி விட்டீர்கள் என்பதற்காக ஒரு சில வார்த்தைகள் மட்டும்.

   சிவசேகரம் நல்ல மணிதர். நேர்மையானவர். அவரால் அவ்வாறு மடடும்தான் எழுத முடியும். நீங்கள் சொன்ன அந்த பு.ஜ.கட்சியால் ஏன் வெகுஜன அரசியலை இன்றுவரை கட்டமைக்க முடியவில்லை? ஏன் அவர்களை நோக்கி மக்கள் அணிதிரளவில்லை. நீங்கள் பிற்போக்குவாதிகள் அறிவிலிகள் என்றெலெ;லாம் பரிகசிக்கும் அமைப்புக்களை நோக்கியே மக்கள் அணதிரள்கின்றனர் ஏனட? அவ்வாறான அனைத்து மக்களும் மடையர்கள் அரசியல் ஞானம் இல்லாதவர்கள் என்றா சொல்லப் போகின்றீகள்?

   நிலைமைகளை ஆழ்ந்து நோக்குவது அவசியம் அவ்வாறில்லாது வாதம் செய்ய முற்படுவீர்களானால் மீண்டும் மீணடும் கனவுலகிலேயே நீங்கள் சஞசிரிக்கலாம் அது உங்கள் விருப்பமாயின் எனக்கு ஆட்சேபனையில்லை.

   நீங்கள் சொல்லுவது போன்று சிவசேகரம் அவ்வாறு எழுதிவருவது உண்மைதான். அது அவரது ஒரு சில நன்பர்கள் ஊடகத்துறையில் இருக்கும் வரைக்குத்தான். நீங்கள் சொல்லும் அவரது எழுத்துக்கள் வரும் தினக்குரலிலேயே அவர் தவிர்ந்த அனைத்து எழுத்துக்களும் அவரது பார்வைக்கு மாறாக இருப்பதை நீங்கள் கவனிக்கவில்லை. அது எனது வாதத்திற்கு ஆதரவாக இருப்பதை நீங்கள் கவனிக்கவில்லையா?

   நான் இந்தியாவை சாதமான சக்தியாக பார்ப்பது குறித்து எழுதியதால் எனக்கு ஒரு சில நன்பர்கள் றோ பட்டம் சூட்டினார்கள். அது குறித்து நீங்கள் என்ன கருதினிர்களோ நானறியேன். இப்போது அதனையே எனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளவா? ஏன் நீங்கள் குறிப்பிடும் சிவசேகரம் மற்றும் செந்தில் வேல் போன்றோர்; தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராக எழுதிவருவதற்கு சீன உளவுப்பிரிவு காரணமாக இருக்கக் கூடாது. அவர்களுக்கு பிரத்தியேகமாகவும் அவர்களது கட்சி மற்றும் பத்திரிகைக்கும் ஏன் சீன உளவுப்பிரிவு நிதி உதவி அழித்திருக்கக் கூடாது.
   இப்படி சந்தேகப்பட முடியாதா? இந்தியா குறித்து பேசினால் அது உளவு வேலையென்றால் அதற்கு எதிராகவே சதா எழுதிக் கொண்டிருப்பதற்கு சீன உளவுப்பிரிவு ஏன் காரணமாக இருக்கக் கூடாது. இப்படியெல்லாம் நான் சொன்னால் அது நாகரிமான ஒன்றாக இருக்காது. அவர்களை நான் அறிவேன் தாம் இருக்கிறோம் என்பதற்காக கஸ்டப்பட்டு இயங்கிவருக்கின்றனர்.

   நன்பரே! வாதம் செய்யலாம் நீங்கள் உங்களுக்கு தெரிந்ததையும் நான் எனக்குத் தெரிந்தiயும் கொண்டு. ஆனால் நீங்கள் கேள்வி எழுப்பும் போதும் உதாணங்களை பயன்படுத்தும் போதும் உங்களிடம் துல்லியமான களப்பார்வை இருக்க வேண்டும். நீங்கள் எங்கோ புலம்பெயர் சூழலில் இருந்து கொண்டு (புரட்சிகர) பட்டு வேட்டிக் கனவில் இருக்கின்றீர்கள். நானோ ஈழத்தில் இருந்து கொண்டு எஞ்சியிருக்கும் கோவணத்தை பாதுகாப்பது எப்படி என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். எங்கள் கோவணம் பறிபோவது பற்றி உங்களுக்கு கவலை இருக்கப் போவதில்லை ஏனென்றால் நிர்வாணமாக நிற்கப் போவது நாங்களும் எங்களது உறவுகளும்தானே நன்பரே!

   நீங்கள் குறிப்பிட்ட சிவசேகரம் மற்றும் ஏனையோர் ஆகக் குறைந்தது வடக்கிழக்கில் வாழ்வதற்கே தயாரில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா. பின்னர் எப்படி நன்பரே புரட்சி செய்வது. செய்யலாம் வெறும் காகிதத்தில். சிங்கள இனவாதிகள் ஒடுக்கு முறையாளர்கள் ஆனால் அவர்களது கோட்டைக்குள் இருந்து கொண்டுதான் நாங்கள் பரட்சி செய்வோம் என்றால் எப்படி. மக்களுக்குள் அல்லவா இறங்க வேண்டும். ஆனால் அவர்களால் அது முடியாது. இதனை எழுதிக் கொண்டிருக்கும் நான் ஈழத்தில் திருகோணமலையில் இருந்து கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறேன். இதிலிருந்து என்னைப்பற்றி ஓரளவாவது உங்களுக்கு விளங்கியிருக்கும்.

   எனக்கு எவர் மீதும் எந்தக் கோபமுமில்லை ஏனென்றால் இது நமது குடும்ப பிரச்சனையும் அல்ல. உங்கள் கருத்திற்கு எனது பதில் கருத்து அவ்வளவுதான். இதில் எவரது மனமும் புண்படுமாக இருந்தால் மண்ணிக்கவும்.

   1. தற்போது பலத்துடன் இருக்கும் சக்கிகளை ஆதரிக்கும் நீங்கள் உண்மை பெயரில் எழுதுவது சாத்தியமே. அதேவேளை பலமற்ற நிலையில் உள்ள தமிழ் தரப்பு உண்மைபெயரில் எழுதுவது தற்போதைய நிலையில் சாத்தியமற்றதே என்பதை திரு யதீந்திரா அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்

  3. யதீந்திராவுக்கு:
   இந்திய ஆதரவாகப் பேசுகிற எல்லாரையும் யாரும் இந்திய உளவாளிகள் என்று அழைக்க முடியாது. ஆனால் இந்திய ஆதரவாகப் பேசுகிற இந்திய உளவாளிகள் உள்ளதையும் மறுக்க முடியாது.
   இந்திய உளவு நிறுவனங்கள் தமிழரிடையே முனைப்புடன் செயற்படுவதை யதீந்திரா மறுக்க மாட்டார் என நம்புகிறேன்.
   முகவர் அமைப்புக்களாகக் கட்சிகள் உள்ளன. கட்சிகளுள் பிரமுகர்கள் உள்ளனர். அதையும் அவர் மறுக்க மாட்டார் என நம்புகிறேன்.
   குடாநாட்டில் பொதுத் தேர்தலில் இந்தியப் பணம் ஆறாகப் பாய்ந்தது ஊரறிந்த விடயம். அதையும் அவர் மறுக்க மாட்டார் என நம்புகிறேன்.
   இவை எதைக் குறிக்கின்றன?

   1978 அளவில் இலங்கையின் மார்க்சிய லெனினியர்கட்கும் இந்திய மார்க்சிய லெனினியர்கட்கும் சீனாவுடன் அரசியல் உறவு விட்டுப் போய் விட்டது. அதற்கு முன்பு தலைமைத் தோழர்களின் சில சீனப் பயணங்களையும் சஞ்சிகைகளை மலிவாக வழங்குவதையும் விட்டால் சீன நிதி ஆதரவு என்பது கம்யூனிஸ்ட் கட்சிகள் அறியாத விடயம்.
   சீனா சோஷலிச நாடாக இருந்த போது என்றுமே சீனக் கம்யூனிஸ்டுகள் பிற கட்சிகள் என்ன செய்ய வேண்டும் எனப் போதித்ததில்லை. ஆலோசனை வழங்கியது கூட இல்லை.
   இப்போது முதலாளிய சீனா ஒற்றர்களையும் உளவாளிகளையும் வைத்திருக்கலாம். எனினும் இந்தியா போன்று எந்த நாட்டிலும் நேரடியக உள் அலுவல்களில் இது வரை குறுக்கிட்டதில்லை. படைகளையும் கொண்டிருக்கவில்லை. இது முக்கியமானது.

   நான் அறிய புதிய ஜனநாயகக் கட்சி சீனாவைப் பரிந்துரைக்கவில்லை. அவர்களுடைய அண்மைய அறிக்கை கூட எந்த அயல்நாட்டுக் குறுக்கீட்டையும் விலக்கின்றி எதிர்ப்பதையே வலியுறுத்தியுள்ளது.
   அவர்களது நிலைப்பாடு இந்தியாவும் வேண்டாம், சீனாவும் வேன்டாம் — மறந்து போய் நாம் நுழைய விடப் பார்க்கும் — அமெரிக்காவும் வேன்டாம் என்பதே.
   இந்தியாவைப் பற்றி புதிய ஜனநாயகக் கட்சி இப்போது சற்று அதிகம் பேசக் காரணம், அதுவே உடனடியாக இலங்கையில் பெரிய ஆபத்தாக உள்ளமை தான் — குறிப்பாக வடக்கு கிழக்குக்கு — என்றே தெரிகிறது
   சிவசேகரம் தான் தினக்குரலில் எழுதுகிற கோகர்ணன் என்கிறர்கள். அங்கு கூறப்படும் கருத்துக்கள் உங்களுடையவற்றுடன் உடன்படுவதாகத் தெரியவில்லையே.
   இந்தியக் குறுக்கீடு பற்றி நாம் மறந்திருக்கலாம். நேபாளிகள் நினைவூட்டிக் கொண்டிருக்கிறார்களே.
   தனது மக்களையே கொன்று குவிக்கிற போர்களைத் தொடர்ந்து நடத்தும் ஒருநாட்டைத் தமிழர் நம்புவது பேதைமை.

 22. கரம்மசாலாவக்கு என் தாழ்பணிந்த நன்றிகள். இப்படியான ஆக்க பூர்வமான கருத்துக்கள்தான் இனறைய தேவை. வாழ்த்துகிறேன். தொடர்ந்து இவ்வாறு அக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். மீண்டும் நன்றிகள்.
  ஆக்கபூர்வமான விவாதத்தை தொடரக்கூடிய கருத்துக்களை எந்தமறைவில் இருந்தும் எந்தப் புனைபெயரில் இருந்தும் எழுதலாம். பிரச்சனை எழுவதில்லை.ஆனால் புனைபெயரில் வேண்டாத விவாதத்ததை திசை திருப்பும் காழப்புணர்ச்சியான முத்திரை குத்தும் பாணியில் எழுதும்போதுதான் அந்த நபர்களின் “அடையாள அட்டை” பற்றி வாசகர்கள் அறிய தேடவேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இதைப் புரிந்துகொண்டால் எல்லோருக்கும் நல்லது.

 23. “ராஜீவை புலிகள் கொன்றார்கள் ” என்று திரும்ப திரும்ப ஒரே பொய் எல்லா ஊடகங்களிலும் பதிவாகி கொண்டு இருக்கிறது.ராஜீவை காரணம் காட்டி ஈழ (புலி )பிரச்னையை தீர்த்து கட்ட ,அல்லது இந்திய உளவு படையின் சதியாகவோ அல்லது அந்நிய நாட்டின் சதியாகவோ இது இருந்திருக்கலாம்.ஏன் என்றால் புலிகள் கொள்ளவில்லை என்று திருச்சி வேலசாமி எத்தனயோ தடவை கூறியும் யார்ரும் இதை காதில் போட்டு கொள்ள வில்லை என்பது உணமைகளை மறைக்கும் செயலாகும் .ராஜீவின் மரணத்தின் பொது லண்டனிலிருந்து கிட்டு புதிய ஜனநாயக பத்திரிரிகையாலர்களே செய்தார்கள் என்று அறிக்கை விட்டார்.இந்தியாவை நட்பு சக்தியாகவே புலிகள் கருதுவதாகவும் சொல்லி இருந்தார்.திருச்சி வேல்சாமி ஒருவரே ராஜீவ் கொலையை விசாரணை செய்த ஜெயின் கமிசனில் சாட்சி சொன்னவர் .அவர் குற்றம் சாட்டியது சுப்புரமணியசாமியை .அவருடன் சேர்த்து சந்திரா சாமியையும் விசாரிக்க வேண்டும் என ஜெயின் கமிசன் பரிந்துரை செய்தது.அன்றைய தமிழ் நாட்டு அரசியல் சூழ் நிலை பற்றி அறிய மு.கருணாநிதியையும் விசாரிக்க வேண்டும் என ஜெயின் கமிசன் பரிந்துரைசெய்தது.இன்றுவரை யாரும் விசாரிக்க படவில்லை.ராஜீவின் மனைவியும் மகளும் வந்ததாகவும் அவர் பதிவு செய்திருக்கிறார்.திருச்சி வேல்சாமி மிக மிக முக்கியமான செய்தியையும் சொல்லிருக்கிறார். அது தான் கொலை நடந்த நாட்களில் டெலோ இயக்க தலைவரின் அண்ணன் மற்றும் சில பெண்களும் சுப்ரமணிய சாமியுடன் திரிந்த்ததாகவும் அவர்களுட தனக்கு நல்ல பழக்கம் இருந்தாகவும் ,ராஜீவன் கொலையோடு அவர்கள் எங்கே போனார்கள் என்பது தனக்கு இன்று வரை தெரியாது எனவும் கூறியிருந்தார். டெலோ இயக்க தலைவர் கருணாநிதியின் செல்ல பிள்ளையாக இருந்தவர்.டெலோ தலைவரை புலிகள் கொன்றார்கள் .இதை தான் கருணாநிதி இன்று வரையும் புலிகள் சகோதர யுத்தம் நடாத்தினார்கள் என்று புலம்புவது.இதை தொகுத்து பார்க்கும் போது இந்திய உளவு படையும் கருணாநிதியும் சேர்ந்து நடாத்திய நாடகமே புலிகள் மேல் விழுந்த பழி என்று எண்ண தோன்றுகிறது .

  “இப்படியான அருமை மிக்க தலைவரை கொன்றவர்களை நாம் மன்னிக்க முடியாது ” என்று இந்தியா அரசியல் வாதிகள் திரும்ப திரும்ப சொல்லி கொண்டார்கள்.ஆக புலிகளை ஒழிக்க அவர்களுக்கு ஒரு முகாந்திரம் கிடைத்தது.அமெரிக்காவுக்கு இரட்டை கோபுரம் போல .
  இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் இந்திய அரசை நாம் நம்பலாமா என்று விவாதம் நடக்கிறது. இந்தியாவை நம்பி தான் வரதராஜ பெருமாள் போன்றோர் இருந்தார்கள்.பிரபாகரன் மறைந்து விட்டார் இன்னும் பெருமாள் போன்றோருக்கு இடம் கிடைக்கவில்லை.
  இந்தியாவின் நோக்கம் தமிழரின் பிரச்சனை தீர்ப்பதல்ல.இலங்கையை அபகரிப்பது.அடுத்தது சிங்களவரின் இந்திய எதிர்ப்பு என்பதன் அடிப்படை இந்தியா என்றால் அவர்களுக்கு தமிழர் என்ற எண்ணமே.அவர்கள் சினிமா படங்களிலிருந்து ,பாட்டு வரை கேட்க விரும்புவது ஹிந்தி .ஆக அவர்களின் இந்திய எதிர்ப்பு என்பது தமிழர் எதிர்ப்பாகும்.இந்தியா தமிழர்களை கொன்றால் எதிர்க்க மாட்டார்கள். முள்ளிவைக்காலில் அது நிரூபணமாகியது.இந்தியாவில் காட்டு வேட்டை யுத்தம் நடக்கிறது.மூலதன ஆக்கிரமிப்புக்கு எதிரான போரை மாவோஜிச்டுக்கள் ஆரம்பித்து விட்டார்கள்.உண்மையான தேச அபிமானம் உள்ளவர்கள் இலங்கையில் இருந்தால் இலங்கையை எந்த வகையிலும் ஆக்கிரமிப்பவர்களை எதிர்த்தே ஆகவேண்டும்.சிங்களவர்களும் விரைவில் நல்ல பாடம் படிப்பார்கள்.

  “முக்கினாலும் ,நொந்தாலும் அவள் தான் பிள்ளை பெற வேண்டும் “என்பது போல .

 24. suagathy on June 28, 2010 2:08 am you said: “Comparing with Mao and Stalin the mass murders (sic) ….”

  Parroting western media propaganda cannot salvage the LTTE from its grave offences.
  Stalin erred seriously, but stories about mass killings have not been substantiated even after the archives were opened to the public. The errors have to be seen in the context of systematic isolation and undermining of the Soviet Union by the capitalist powers from the day of its birth.
  Can you substantiate one instance of Mao ordering the killing of a single individual? Liu Shao Chi was in detention, and died of illness (I think cancer). Deng Xiaoping was dismissed. But never physically harmed. Read what Mao had said about treating captives, including commanding officers, during the anti-Japanese war as well as the civil war.

  The difference between genuine mass liberation struggles and the kind of struggle that we saw in Sri Lanka are the notions of people’s war, mass politics, and keeping politics in command.

  The place for you to respond will br Aiyar’s biographical account of the LTTE leadership. What he has said so far is barely the tip of the iceberg. Although the LTTE was the biggest offender, the Tamil youth movements have a poor track record of dealing with not just opposition or dissent but also with potential rivals.

  You are dead right about your point that there is no basis to compare V.P. with M. Z-D. and J.S., although your reasoning is a little twisted.

  1. western propaganda? Is it not another kind of parroting? it reminds me tigers and Sinhalese Government’s attitude, every one who criticize them they are either government agent or tiger sympathizer respectively … Yes I wanted to provoke…because many of the so called Tamil Marxist never question their icons,but they are very quick to blame others as fascist and traitors etc…I know the western propaganda machine compare Stalin with Hitler..and this is not acceptable.. I consider myself a left radical…..we must start new…you refer Aiyar I can give you many names…Please read the following authors to know about chairman Mao Mr Wang meng , Mrs Jung Chang,Mr Zhang Jie( I stop here) At least read Maos personal Dr LI Zhi-Sui …Many people were killed during the Long march,the great Cultural revolution.. During the Hunger (1958-)
   About Stalin …. during the show trails many were killed including Kamenove,Bucharin ,Zinoviev
   He sent his murderers to Mexico to kill Trotsky….He also executed many red Amy personals including Chief Marshal Tukhacheuky..
   sorry
   I do not want to treat VP differently… i understand this is not a place to debate this issue

  2. Sugathy
   If you say that what has been dished out by the mainstream Western media about China since 1949 is not anti-China/anti-communist propaganda, there is little for me to to add.
   From Marx to Lenin, Mao and Castro communist leaders have — without exception — been viciously slandered by the Western gutter press as well as the more respectable media.
   First hand views were systematically suppressed by a paranoid US state well into the 60s; and that tradition persisted.
   There have been a number of books and articles written pointing fingers at China’s Communist Party and blaming Mao. I have read Wang Ming, he switched to the USSR opposing the revolutionary line. I have also read the stuff by Mao’s “personal physician” (who would have sold his mother if there was a buyer). He made a fast buck in the US with his tripe. A lot of the information was obvious distortion. Nobody even cites him now.

   But I have yet to come across a single instance where Mao was accused of ordering anyone’s killing either during the Long March or after. Edgar Snow (hardly a communist) was with Mao during the long march.

   There were mistakes during the GPCR too. But there was no instance of killing off political rivals and leaders with different views as in the case of the Tamil nationalists.
   Would you like me to list the heads that rolled on instruction from the leaders? (Iyer’s list is long enough already).
   Read more balanced — even non-left — works by serious Western historians — not scurrillous sensationalists.

   1. I know very powerful western propaganda machines out there…the different is,i also know the propaganda machines of Mao’s and Stalin’s….
    Even if our comrade Iyar is able to bring all the murders committed by VP to the book ,.. it will not reach even 0,0001 percent of Stalin’s or Mao’s..What i am trying to say is, you cannot criticize VP,if you are defending Mao and Stalin.

    For your memory Mao let to execute many deserters publicly during the long march…..
    there are so many eyewitness reports about the crimes committed by Stalin and chairman
    Mao..
    ..I vehemently oppose the crime committed against the humanity in the name of socialism and communism….it has discredited socialist idea all over the world. We all know capitalism is disaster for mankind. Hegel
    i better stop here. I do not want to continue this debate….all the best…

   2. CORRECTION:
    You are simply repeating yourself without a shred of verifiable and credible evidence.
    All your abuse of Stralin and Mao cannot help to serve your pathetic attempt to cover up for the offences of the LTTE. That has failed.
    It is a debate only when you respond to the issues raised. So the debate was over even before you declaed yourself out.

  3. As for Stalin,
   The errors have to be judged in the context of the subversion of the soviet state. Death sentences were in my opinion avoidable and undesirable. But the millions sent to death is nonsense.

   Had you compared VP with Adolph Hitler , Suharto or Pinochet, you would have hade a most favourable assessment of VP.
   The point that I am making is that one cannot not justify serious wrongs by other wrongs, imagined or real.

 25. “ஆக்கபூர்வமான உரையாடலுக்காக மேலும் சில கருத்துக்கள். ஈழத்தமிழர் அரசியல் இன்று மூன்று முனைகளில் முன்னெடுக்கப்படுகிறது. முதலாவதாக ஈழத்தில் அ).அரசு சார்புள்ளவர்களால் ஆ). தமிழ் தேசியக் கூட்டமைப்பால் இ). இதற்கு இடையில் ஊசலாடுகிற சக்திகளால் ஈ). இடதுசாரிகளிடம் தேசியப் பிரச்சினையை அங்கீகரிக்கிறதிலேயே திட்டவட்டமான நிலைபாடு இல்லை. ” — yamuna rajendran on June 27, 2010 12:55 pm

  இதனால் என்ன ஆக்கபூர்வமான உரையாடல் சாத்தியப்படுமோ தெரியாது. இலங்கையில் உள்ள நிலைமைகள் பற்றி மேற்படி குறிப்பை எழுதியவரின் ஞானம் ஐயப்பாடானது என்பதற்கு மேல் எதையும் எழுதி எல்லார் காலத்தையும் வீணடிக்க விரும்பவில்லை.

  என் கூற்றில் ஐயமுடையோர் இவ் இணையத்தளத்தில் வந்த சில விடயஞானமுடையவர்களின் கட்டுரைகளைப் பார்க்கலாம்.

  1. “எடுத்துக் காட்டாக கலைஞரும் பிற கட்சியினரும் முன்பு அறிவித்த வகையில் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் முழுமையாக ராஜினாமா செய்திருப்பார்களானால்…” — ய.ரா.
   கருணாநிதி விலகல் பற்றி அறிவித்த போதே, அது நாடகம் என்பதை இலங்கையில் கூடப் பலர் சுட்டிக் காட்டி விட்டனர். ஏனென்றால் முழு இந்தியாவுக்கும் துரோகமான ஒரு ஒப்பந்தத்ததைச் செய்வதற்கு நம்பிக்கைப் பிரேரணை வாக்கெடுக்கப் பட்ட போது தி.மு.க. என்ன செய்ததென்று அனைவரும் அறிவர்.
   மக்களைக் கொள்ளையடித்துப் பல பல கோடி சம்பாதித்துக் குடும்ப ஆதிக்கத்தையும் நிலைநாட்டிப் பொருள் சேர்க்கத் தில்லி அம்பலப் பெருமாட்டி அருள் இல்லாமல் முடியுமா?
   எந்தத் தமிழக முதலமைச்சரும் 1977க்குப் பிறகு டில்லியை மீறி நடக்கவில்லை. ஏனெனில் அவர்களுடைய ஊழல் விசாரணைக் கோப்புக்கள் டில்லியில் இருந்தன. மத்திய அரசுடன் ஒட்டிக் கொண்ட எந்தச் சட்ட மன்றக் கட்சித் தலைவரும் டில்லியை மீறி நடக்கவில்லை. (2000 மேயில் நாம் கண்டது). ஏனென்று தெரியாதா?
   தமிழகச் சட்ட மன்ற அரசியலுடன் ஒப்பிட்ட்டால் — “கலைஞர்” மணக்க வைப்பதாகச் சொல்லிக் கோடிக் கணக்கில் சுருட்டிய இன்னொரு புரொஜெக்ட்டான கூவம் இருக்கிறதே அது பூஞ்சோலை போல மணக்கும்.
   தமிழகத்துச் சட்ட மன்றக் கோமாளிகளை (கோதபாய ராஜபக்சவுக்கே அது தெரியும்) நம்ப வேண்டாம் என்பது தான் விஷயமறிந்த பலரதும் ஆலோசனையாக இருந்தது. கவனிக்க வேண்டியது என்னவென்றால், கோமாளிகள் முட்டாள்களல்ல, அவர்களுக்குப் பணப் பைகள் எங்கே இருக்கின்றன என்று தெரியும். இந்தக் கதைகளெல்லாம் இங்கே பல முறை சொல்லப் பட்டவை.

   நடக்க முடியாத விடயங்களை எல்லாம் ஆய்வுகளென்று கனவு காணுவது பரிதாபமான நிலை.
   பாராளுமன்ற, சட்ட மன்ற அரசியலுக்குப் புறம்பாகத் தமிழக எதிர்ப்பியக்கம் முன்னெடுக்கப் பட்டிருத்தால் ஒரு வேளை நிலைமை வேறு. ஆனால் வோட்டுப் பொறுக்கிக் கட்சிகள் விட்டிருக்குமா?
   உண்மையிலேயே தமிழீழ ஆதரவு பேசிவந்தப் பிழைப்புவதக் கூட்டம் ஏன் மாவிலாறு மோதலின் போது விமானக் குண்டு வீச்சுப் பற்றிப் பேசவில்லை. மட்டகளப்பு ஒரு அகதி முகாமான போது வாய் திறக்கவில்லை. புலிகள் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பா, அன்றி தமிழக மக்களிடையே ஆதரவு திரட்ட முடியாதென்ற பயமா, அன்றிச் சுத்தமான அசட்டையா? சி,பி.எம். ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டங்கள் சூடு பிடித்த பிறகல்லவா நெடுமாறனுக்குக் கூடத் துயில் கலைந்தது.
   2008 நடுப் பகுதி முதல் தமிழக நாடகங்களைப் பார்த்து அலுத்து விட்டோம் கோடம்பாக்கம் சினிமாவை விட அருவருப்பான, ஆபாசமான, அபத்தமான நாடகங்கள். இன்னமும் எங்களுக்குப் படங் காட்டப் பார்க்கிறர்களா?

 26. அன்புள்ள நாவலன்-

  இரண்டு முனைகளிலான அழுத்த அரசியல் என்றும், ஈழத்தில் வெகுமக்கள் அரசியல் என்றும் நான் சொல்லும்போது, ஈழத்தமிழர் கண்ணோட்டத்திலிருந்தே நான் இந்தச் சொல்லைப் பாவிக்கிறேன்.

  மனித உரிமை தொடர்பான விடயங்கள் நிச்சயமாகவே நிலவும் உலக அமைப்புக்கள் – சுயாதீன மனித உரிமை அமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அரசகள் – வழியிலேயே மேற்கொள்ளத்தக்கது. இது அழுத்த அரசியல்தான். நானறிந்த ஒரு எடுத்துக் காட்டுச் சொல்வதானால் சோசலிச அரசியலில்; நம்பிக்கை கொண்ட சேனன் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அளித்த சாட்சியமும், இந்தோனேசிய அகதிகள் தொடர்பாக அவர் முன்னெடுத்த நடவடிக்கைகளும் என்று சொல்ல வேண்டும்.

  இந்தியாவில் ஈழத்தமிழர் பாலான அந்த நிலப்பரப்பின் இடதுசாரி சக்திகள் வெகுமக்கள் பாதையைத் தான் மேற்கொண்டிருக்கிறார்கள். நான் சாதகமாகக் குறிப்பிடுகிற தமிழ் தேசியர்கள் உள்ளிட்டு, மாவோயிஸ்ட்டுகள் வரை. மாவோயிஸ்ட்டுகள் ஆயுத அரசியலையும் வெகுஜன அரசியலையும் இணைத்திருக்கிறார்கள். தமிழ் தேசியர்கள் பாராளுமன்ற ஜனநாயகம் மற்றும் யாப்புக்கு உட்பட்டும் மீறியும் வெகுஜன அரசியலை மேற்கொண்டிருக்கிறார்கள்.

  ஈழத்தின் சார்பான ஈழ வெகுஜன அரசியலும் தமிழக அரசியலும் வேறு வேறு தன்மைகள் கொண்டன. தமிழக தமிழ் தேசியர்களின் அரசியல் தமிழக மக்களின் அபிப்பிராயங்களை ஈழமக்களுக்கு ஆதரவாகத் திரட்டி தமிழக தேசியர்கள் செயல்படும் எல்லைக்குள் நடவடிக்கையில் ஈடுபடுத்துவது என்பதனைத்தான் நான் அழுத்த அரசியல் என்கிறேன். எடுத்துக் காட்டாக கலைஞரும் பிற கட்சியினரும் முன்பு அறிவித்த வகையில் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் முழுமையாக ராஜினாமா செய்திருப்பார்களானால் அதனது விளைவு எத்தகையதாயிருக்கும் என நினைத்துப் பார்க்கிறேன். தமிழகத்தில் சாத்தியமான இந்த அரசியலையே – ஈழத்தமிழர் பிரச்சினையைப் பொறுத்து – அழுத்த அரசியல் என நான் அர்த்தப்படுத்துகிறேன்.

  மற்றபடி முகமிலிகள் தொடர்பான எனது நிலைபாட்டை நான் மறுபடி வலியுறுத்துகிறேன். பிறரது நிலைபாடுகள் அவரவரது தேர்வு. அதனை நான் மதிக்கவே செய்கிறேன். அன்புடன் யமுனா ராஜேந்திரன்

  1. முகமுடைய மாமனிதர்களின் மெச்சுதலோ அங்கீகாரமோ வேண்டாத்ததாலேயே 90%க்கும் மேற்பட்ட இடுகைகள் “முகமில்லாமல் வருகின்றன”.

   ஒருவர் தனது பேரைச் “சிலோன்மணி” என்று அறிவித்தால் அது “முகமுள்ள” பேரா என்று முடிவு செய்வது எப்படி?
   நான் அறிய “மட்றாஸ் மயில்” என்று ஒரு பேராசிரியர் இருக்கிறார். “சோழன்” என்ற பேரில் தமிழ்நாட்டில் நானறிந்த யாரும் இல்லை; இரண்டு ஈழ்த்தவர்களை அறிவேன். ஒரு “சிபி”யையும் அறிவேன். இந்தப் பேர்களில் இடுகைகள் வந்தால் அவற்றுக்கு முகம் உண்டா என்று எப்படித் தீர்மானிப்போம்?
   சுந்தரமூர்த்தி என்ற பேரையோ ரவிராஜ் என்ற பேரையோ விக்கிரமசிங்கம் என்ற பேரையோ நான் பாவித்தால் எனக்கு முகம் முளைத்து விடுமா?

   கைலாசபதி ஒரு சஞ்சிகையில் ஜனமகன் என்ற பேரில் எழுதியவை ஒரு நூலாக வந்து அதை வாசித்திருக்கிறேன்.
   கைலாசபதி புனை பேரில் எழுதினாலும் சொந்தப் பேரில் எழுதினாலும் தன்னுடன் முரண்படுவதில்லை. சிவத்தம்பி சொந்தப் பேரிற் கூச்சநாச்சமின்றி வேளைக்கு ஒன்று எழுதுவதை அறிவோம். (அது பகிரங்கமாகவே சுட்டிக்காட்டப்பட்டுமுள்ளது).
   எது மதிப்புகுரியது?

   முகமுள்ள எவரையும் விட நேர்மையான முறையில் பதிவுகளை இட்டு வரும் 15-20 பேரையாவது என்னால் இங்கே அடையாளம் காட்ட முடியும். இவ்விடத்தைச் சுய விளம்பரத்துக்காகப் பயன்படுத்திவரும் சிலரையும் அறிவேன்.
   “முகமுள்ளவர்களோ” “முகமில்லாதவர்களோ” எங்கே எப் பேரைப் பாவிப்பது என்பது அவரவரது தெரிவு என்றலும், ஒருவர் தனது கருத்துக்கதுப் பொறுப்பானவரகவும் கூற்றுக்கள் ஆதார பூர்வமகவோ தர்க்கரீதியாகவோ மறுதலிக்கப் படும் போது அதை ஏற்கும் பணிவும் நேர்மையும் உள்ளவராக இருப்பதும் விடயச் சார்பின்றி எழுதாமலும் எதிராளியின் வாதங்களைச் சந்திக்க இயலாது தனிப்பட்ட தாக்குதல்களில் இறங்காமலும் இருப்பதும் முக்கியமானது.

  2. “இந்தியாவில் ஈழத்தமிழர் பாலான அந்த நிலப்பரப்பின் இடதுசாரி சக்திகள் வெகுமக்கள் பாதையைத் தான் மேற்கொண்டிருக்கிறார்கள். நான் சாதகமாகக் குறிப்பிடுகிற தமிழ் தேசியர்கள் உள்ளிட்டு, மாவோயிஸ்ட்டுகள் வரை. மாவோயிஸ்ட்டுகள் ஆயுத அரசியலையும் வெகுஜன அரசியலையும் இணைத்திருக்கிறார்கள்.” — ய.ரா.

   “இடதுசாரிகள்” என்ற பேரில் எல்லாரையும் ஒரு கூட்டுக்குள் அடைப்பது அறியாமையாக இருந்துள்ளது; விஷமமாக இருந்துள்ளது; வெறும் அக்கறையீனமாகவும் இருந்துள்ளது.
   நான் கட்சித் தலைமையையும் கீழ்மட்ட ஊழியர்களையும் வேறுபடுத்திப் பார்க்கிறேன். மேல் மட்டச் சீரழிவு கீழ் மட்டங்களையும் பாதிக்கிறது. எனினும் என் விமர்சனம் தலைமைகள் பற்றியது.

   பாராளுமன்றப் பாதை எப்படிக் கம்யூனிச்ட் கட்சிகளை சீரழித்துள்ளது என்பதை நான் விவரிக்க வேன்டியதில்லை. அது பற்றி ஒவ்வொரு நேர்மையான மார்க்சியவாதியும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
   சி.பி.ஐ. — சி-பி.எம். வேறுபாடு நாறல் மீனுக்கும் நாறல் மீனுக்கும் உள்ள வேறுபாடு தான். சந்தர்ப்பவாதத்தை எப்படிப் பாவிப்பது என்பதில் தான் சொற்ப வேறுபாடு உள்ளது.
   இரண்டு கட்சிகளுமே இந்திய மேலதிக்கத்தை எதிர்க்கத் திராணியற்றவை மட்டுமன்றி அதற்கு ஒத்துப் போகிறவை.
   இரண்டுமே காஷ்மீர, நாகா, மணிபூர் தேசங்களினதும் பின்பு சிக்கிமினதும் சுதந்திரத்தை இந்திய மேலாதிக்கம் பறித்ததை இன்று ஏற்று விட்டன.
   இந்தியாவின் தேசிய இனங்களின் டசுயநிர்ணய உரிமையை ஏற்காதன. இலங்கையிலும் அதே கொள்கையைத் தான் கடைப் பிடித்து வந்துள்ளன.
   இரண்டு கட்சித் தலைவர்களும் இலங்கை வந்த போது ப்சியவை ஈழத் தமிழர் மனதில் பசுமரத்தானி போல உள்ளது. ஆதனால் தான் அவர்கள் பாண்டியனை நம்புவதில்லை; யெச்சூரியையோ வரதராசனையோ காரத்தையோ நம்புவதில்லை.
   தேசிய இனங்களின் சுய நிர்ணயத்தை ஏற்காத இடதுசாரிகள் நம்பகமானவர்களல்ல. இது வரலாறு.
   மார்க்சிய லெனினியர் பற்றி வேறாக எழுதுகிறேன். எமர்ஜன்சியை ஆதரித்த சி.பி.ஐ., மக்களைப் பொலிஸ், கட்சிக் குண்டர்களை பாவித்து அடித்துக் கொன்ற சி.பி.எம்.முடன் சேர்த்து இங்கே எழுதினால் தூய்மை கெட்டுவிடும் என்றல்ல. இடுகை நீண்டு விடும் என்று.

 27. So “proffessor” (post of 06/26/2010 at 10:31 am), is your idea that you can comment in defence of Indian expansionism and meddling while those against Indian expansionism and meddling stand watching?

 28. யதீந்திரா!
  உங்கதள் கட்டுரையை விட பின்னூட்டங்களில் நீங்கள் அளித்த பதில்கள் நிச்சயமான யதார்ததங்களை பிரதிபலிக்கிறது. எனது கருத்துகளும் இவைதான். (மிகச் சிறிதளவு முரண் உண்டு) மார்க்கியவாதிகள் என்று சொல்லிக்கொண்டு அதற்கு மாறான கருத்தியல் வாதங்களில் அநாவசியமாக ஈடுபடுபவர்கள் புலம்பெயர் நாடுகளிலேயே இருக்கிறார்கள். திருகோணமலையிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தும் கருத்தும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிப்படுத்தும் எனது கருத்தும் ஒன்றுதான்.

  சிவசேகரம் ஒரு சிறந்த நியாயவாதி. நியாயங்களைப் பேசுகிறார். சந்தர்ப்பத்தை அவர் ஒருபோதும் நழுவ விடுவதில்லை. பேசக்கூடிய இடங்களில் பேசுகிறார். பேராசிரியர் பேசியது யாருக்கும் புரியவில்லை. அவர் ஒதுங்கிக்கொண்டார்/ அவர் பெரியவர் என்பதாலோ என்னவோ> டக்ளஸ் தேவானந்தா அவரை மத்தியஸ்ததுக்கு அழைத்திருக்கிறார.
  புதிய ஜனநாயகக் கட்சி செந்திவேல் இவ்வளவு காலமும் இங்கு என்ன செய்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. தேர்தல் காலங்களில் எப்படியு; வந்துவிடுவார். அஇன

  1. “புதிய ஜனநாயகக் கட்சி செந்திவேல் இவ்வளவு காலமும் இங்கு என்ன செய்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை” என்றீர்கள்.
   புதிய ஜனநாயகக் கட்சி தேர்தல் கட்சி அல்ல. அது தேர்தலை அரசியல் தளத்தை விரிவு படுத்துவதற்கே பயன்படுத்தி வந்துள்ளது.
   சென்ற மே தினத்தை வடக்கில் புதிய ஜனநாயகக் கட்சி ம்ட்டுமே கொண்டாடியது. நாம் விரும்பியோ விரும்பாமலோ புதிய ஜனநாயகக் கட்சி மட்டும தமிழரிடையே இயங்கும் நம்பகமான ஒரே இடதுசாரிக் கட்சியாக உள்ளது. இலங்கையில் அது மட்டுமே மார்க்சிச லெனினிசக் கட்சியாக உள்ளது. சிங்கள மார்க்சிச லெனினிசவாதிகள் தாபன முறையில் இன்னமும் இயங்கத் தொடங்கவில்லை. சாதகமான ஒரு சூழல் உருவான போது அவர்களிற் பலர் “சிங்களப் புலிகள்’ என்று பிடிக்கப் பட்டு பலர் இன்னமும் மறியலில் உள்ளனர்.
   இன்று இலங்கையில் வெளிவரும் கனதியான ஒரே அரசியல் ஆய்வேடு “நியூ டெமோக்கிறசி”. தமிழில் ஒழுங்காக வெளிவரும் ஒரே இடதுசாரி அரசியல் ஏடு “புதிய பூமி”.
   அவற்றைக் குடாநாட்டில் வெளியிட இயலாத சூழல் அண்மை வரை இருந்து வந்தது.
   தயவு செய்து மனிதர்கள் எத்தகைய இக்கட்டான சூழல்களில் இவற்றை எல்லாம் செய்கிறார்கள் என்று யோசித்து எழுதுங்கள்.
   தனிப்பட்ட நிந்தனைச் சொற்களைக் கொட்டுவது எவர்க்கும் எளிது.

 29. நட்புடன் யதீந்திராவிற்கு.

  “நீங்கள் சொன்ன அந்த பு.ஜ.கட்சியால் ஏன் வெகுஜன அரசியலை இன்றுவரை கட்டமைக்க முடியவில்லை? ஏன் அவர்களை நோக்கி மக்கள் அணிதிரளவில்லை. நீங்கள் பிற்போக்குவாதிகள் அறிவிலிகள் என்றெலெ;லாம் பரிகசிக்கும் அமைப்புக்களை நோக்கியே மக்கள் அணதிரள்கின்றனர் ஏனட? அவ்வாறான அனைத்து மக்களும் மடையர்கள் அரசியல் ஞானம் இல்லாதவர்கள் என்றா சொல்லப் போகின்றீகள்? ”

  மேற்குறிப்பிட்ட தங்களின் கருத்து முக்கியமானது….இது தொடர்பாகவே எனது கருத்தைப் பதிவுசெய்கின்றேன்….
  முதலில் நீங்கள் களத்தில் இருந்து எழுதுவதால் தங்களுக்காக பெருமைப்படுவதா?
  அல்லது
  புலம் பெயர் தேசத்தில் இருந்து: எழுதுவதால் குற்ற உணர்வில் வாழ்வதா?
  என்பது எனக்குத் தெரியாது….ஆனால் களத்தில் இருந்து எழுதுவதை தங்களுக்கான நற்சான்றிதழ்hக பயன்படுத்தாதீரிகள்….
  இதை எழுதும ;பொழுது; தங்களது வாழ்வு தொர்பான கஸ்டங்களைப் புர்pந்துகொண்டே எழுதுகின்றேன் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்…

  லெனின் ரஸ்சியப் புரட்சியை முன்னெடுதப்பதற்கான அத்திவாரங்களை புலம் பெயர் தேசம் ஒன்றிலிருந்துதான் மேற்கொண்டார்….
  ஆகவே அரசியல் செயற்பாடு கோட்பாடு என்பன தொடர்பாக உரையாடும் பொழுது ஒருவர் எங்கிருக்கின்றார் என்பது முக்கியமல்ல….எந்தவிதமான கருத்தை முன்வைக்கின்றார் என்பதே ;முக்கியமானது….

  எனது புரிதலின் படி தமிழ் தேசிய அரசியல் என்பது பல சந்தா;ப்பங்களில் எதிர்வினை செயற்பாட்டு அரசியலாகவே இருந்து வந்திருக்கின்றது….அதாவது ;நமது அரசியல் செயற்பாடுகளுக்காக பிறரிடம் தங்கியிருந்திருக்கின்றோம்…
  இந்த் விதமான அரசியல் செயற்பாட்டு தன்மை மாறவேண்டும்…

  நமது அரசியல் செயற்பாடு என்பது அடக்கப்பட்ட உரிமைகள் மறுக்கப்ட்ட சுரண்டப்பட்ட மனிதா;களின் அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவம் செய்வதாக
  அதைப் பெறுவதற்கான செயற்பாடாக இருக்கவேண்டும்…
  இந்த நோக்கங்களை உறுதியாக பற்றிக் கொண்டே கள நிலைமைகள் தொடா;பாக நாம் கவனிக்கவேண்டும்…
  அதாவது கள நிலைமைகள் நமது தந்திரோபாங்கள் வகுப்பதற்hககக் பணன்படுத்தப்படவேண்டுமே ஒழிய …
  நமது அபடி;படை மூலேபாயத்தை தீர்மானிப்பதாக இருக்கக் கூடாது…

  புலிகளின் அரசியல் தவறு இதன் அடிப்படையானதே…
  மறுபுறம் இன்றைய புரட்சிகர கட்சிகளோ புரட்சியாளர்களோ கள நிமைகளயைும் மனிதர்கள் எதிர்நோக்கும் நிகழ் கால பிரச்சனைகளையும் புறம் தள்ளிவிட்டு அல்லது மறந்துவிட்டு தமது மூலோபாயத்தை மட்டுமே பற்றிப்பிடித்துக் கொண்டு கற்பனைாவாதத்தில் செயற்பாடுகின்றார்கள்…

  இதுவே இவர்கள் இருவருக்குமான அடிப்படை வேறுபாடு….
  மேலும் மனிதர்கள் மடையர்கள் என்று சொல்வதை விட பிரக்ஞையற்று வாழ்;கின்றார்கள் ….
  மனிதர்களின் இந்த பிரக்ஞையற்ற தன்மைமை புலிகளைப் போன்றவர்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தியுள்ளார்கள்….
  புரட்சியாளர்களுக்கும் மனிதர்களின் பிரக்ஞையின்மை தொடா;பாக அக்கறையில்லை…
  ஆனால் இருவரும் பொது ;மனிதா;களை தமது நோக்கங்களுக்காகப் பயன்டுத்திக் கொண்டனர்….
  இந்த பயன்படுத்தும் நிலையே இறுதியாக மனிதர்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகள் மறுக்கப்படுவதற்கு வழிகொலிட்டடு என்றால் மிகையல்ல….
  ஆகவே இனிவரும் காலங்களில் சுதந்திரத்திற்கான உரிமைக்கான விடுத்லைப் போராட்டத்துடன் மனிதர்களின் பிரக்ஞையை வளார்ப்தில் புரட்சிகர கட்சிகளும் இயக்கங்களும் அக்கறை ;செலுத்தவேண்டியது இன்றியமையாதது; என நினைக்கின்றேன்… அல்லது நீங்கள் கூறியபடி மக்கள் முட்டாள்களா மதிக்கப்பட்டு ;அதிகாரசகத்திகளால் தொடர்ந்தும் பயன்டுத்தப்படுவதை தவிர்கக்முடியாதாதாகிவிடும்….
  இந்தடிப்படையில் நாவலன் கூறும் இந்தியாவை நமது நோக்கங்களுக்குப் பயன்படுத்துவது என்பது கேலிக் கூத்ததாhகவே இருக்கும ;என்பது எனது எண்ணமும்….ஆகும்…..
  நாதட நம்ப வேண்டியது இநதிய ஆளும் சக்திகளையல்ல….
  மாறாக அங்குள்ள அடக்கப்ட்ட சுரண்ட்ப்பட்ட மனிதக் குழுமங்களையே……
  இதுவே இன்னுமொரு முள்ளிவாய்க்காளை தடுத்து நிறுது;த உதவுமு;…..
  நன்றி மீராபாரதி

  1. அன்பின் நன்பருக்கு

   கருத்துக்களை எவரும் கூறலாலம் அவரவர் நிலைப்பாட்லிருந்து. அதை மறுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. நான் எந்தவொரு இடத்திலும் புலம்பெயர் சூழலில் இருப்பவர்கள் கருத்துக் கூறக் கூடாது என்றோ அவர்களுக்கு அதற்கு தகுதி இல்லையென்றோ கூறவரவில்லை. அப்படி நான் கூறவும் முடியாது. ஆனால் களநிலைமைகளைக் கருத்தில் கொள்வது அவசியம் என்றே சுட்டிக் காட்டியிருக்கின்றேன். உங்களை நிதானமான வெளிப்பாடுகளை விளங்கிக் கொள்ள முடிகின்றது. நான் கூறிதெல்லாம் இது ஒன்றுதான். உங்கள் விருப்பங்களில் இருந்து கொண்டு நிலைமைகளைப் பார்க்காமல் நிலைமைகளில் இருந்து உங்கள் விருப்பங்களுக்கான வாயப்புக்களை உற்று நோக்குங்கள் என்பதே. இப்பொழுதும் இதனைத்தான் என்னால் கூற முடியும். லெளின் புலம்பெயர் சூழலிலிருந்து இயங்கினார் எல்லாம் சாpயே ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது அதன் பின்ன நிகழ்தவைகளை. புரட்சிகர அரசியலை முன்னெடுப்பதற்கு உள்ளக ரீதியாக இருந்த வாய்புக்களை. உள்ளக ரீதியான வாயப்புக்கள் இன்றி எதனையும் செய்ய முடியாது. இதனைத்தான் களநிலைமை என்று நான் குறிப்பிட்டிருக்கின்றேன். இங்கு ஒரு விடயத்தில் என்னிடம் திடமான நிலைப்பாடுண்டு. களத்திற்காகதத்தான் புலமே தவிர புலத்தின் விருப்பங்களுக்காக களம் அல்ல. புலத்தின் விருப்பங்களை சோதித்துப் பார்க்கும் பலியிடமாக ஈழத்தை இனியும் பயனபடுத்திக் கொள்வதற்கு எந்தவொரு சிந்திக்கும் ஈழத்துக் குடிமகனும் அனுமதிக்க மாட்டான் என்றே நம்புகிறேன்.

   கள நிலைமைகள் நமது தந்திரோபாங்கள் வகுப்பதற்hககக் பணன்படுத்தப்படவேண்டுமே ஒழிய …
   நமது அபடி;படை மூலேபாயத்தை தீர்மானிப்பதாக இருக்கக் கூடாது

   இந்தக் கருத்தில் என்க்கு உடன்பாடே! இப்போது இருக்கின்றன களநிலைமைகளை தந்திரோபாய ரீதியாக கைக் கொள்வதாயின் இவ்வாறு உணர்ச்சிவசப்பட்டு இந்திய எதிர்பரசியல் பேசுவதாலோ அல்லது ஏகாதிபத்தியம் என்று உணர்ச்சிவசப்படுவதாலோ சாத்தியப்படுத்த முடியுமா. இதனைத்தான் நான் குறிப்பிடுகின்றேன் எமக்கு நிதானம் தேவை. எமது விருப்பங்களுக்கு அப்பாற்பட்டு பல விடயங்கள் இனிவரப் போகும் காலத்தில் நிகழத்தான் போகின்றன. இதனை நாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். அடுத்தது தேவையற்று அடுத்தவாpன் நிகழ்சி நிரலுக்குள் செல்லும் அரசியல் விவாதங்களில் எனக்கு உடன்பாடில்லை. ஏனென்றால் நீங்கள் நம்பும் எந்தவொரு கருத்தியலும் இங்கு அரசுகளை வழிநடத்தவில்லை. யமுணா சொல்லுவது போன்று கருத்தில் வழி அரசுகளின் காலம் முடிந்துவிட்டது. மரபு வழி மார்க்சியத்தலிருந்து விலகி நின்று பல்வேறு பிற்கால மார்க்சியர்களின் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டதால்தான் அவரால் இதனை இலகுவாகச் சொல்ல முடிகிறது என்று நினைக்கின்றேன். இன்றும் ஈழத்தில் இடதுசாரி அரசியல் பேசும் அல்லது ஒரேயொரு இடதுசாரிக் கட்சி என்று சொல்லிக் கொள்வோரிடம் ஜந்து தலை மார்க்சியத்திற்கு அப்பாற்பட்டு சிந்திக்க முடியவில்லை பின்னர் எப்படி ஆரோக்கியமாக விவாதிக்க முடியும். கருத்தியல் வழி அரசுகள் இன்றும் இருக்கின்றது உண்மையானால் கியூபா சிறிலங்கா அரசிற்கு ஆதரவாக ஜ.நாவில் செயற்பட்டிருக்காது. அதற்கு சாத்தியமே இல்லை. இது குறித்து இப்போதுதான் சிந்திக்கின்றேன். யமுணாவிற்கு நன்றி. இதுதான் நிலைமை மீரா. தவிர களத்தில் இருப்பதை நான் ஒன்றும் நற்சான்றிதழாக பயன்படுத்தவில்லை. அதற்கு எனக்கு அவசியமும் இல்லை. எவரையும் திருபதிப்படுத்துவதற்காக எழுத வேண்டிய தேவையும் எனக்கு இல்லை. நான் எனது விருப்பங்களுக்கு முக்கியம் கொடுப்பதை விட களநிலைமைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றேன். களம் பல சக்திகளின் சோதனைக் களமாக இருப்பதால் சிலர் எண்ணக் கூடும் நான் யாரோ ஒருவருக்காக எழுதுவதாக. நாம் தொடர்தும் ஆரோக்கியமாக உரையாடுவோம்.

   1. நட்புடன் நண்பர்களுக்கு
    யதீந்திரா ….
    பின்வருவன தங்களின் பின்னுட்டங்கள்….

    “நீங்கள் ஒரு கருத்தியல் தளத்தில் நின்று நிலைமைகளை பார்க்க முயல்கின்றீர்கள் நானோ களயதார்த்திற்கு ஏற்ப நிலைமைகளை அளவிட முயன்றிருக்கிறேன். நாவலன் உங்கள் விருப்பம் வேறு யாதார்த்தம் வேறு”

    “இவைகள் அனைத்தைதும் திரட்டியே நான் களநிலைமை என்று குறித்திருக்கின்றேன். இதனை நீங்கள் சட்டென விளங்கிக் கொள்வீர்கள் என்று நினைத்தே ஒற்றைச் சொல்லில் களநிலைமை என்றேன். மேற்கின் சனநாயகச் சூழலில் வாழுவோருக்கு இப்படியான நிலைமைகளை விளங்கிக் கொள்வதில் உள்ள சிக்கல்களை என்னால் விளங்கிக் கொள்ள முடிகின்றது.”

    “புரட்சிகர அரசியலை முன்னெடுப்பதற்கு உள்ளக ரீதியாக இருந்த வாய்புக்களை. உள்ளக ரீதியான வாயப்புக்கள் இன்றி எதனையும் செய்ய முடியாது. இதனைத்தான் களநிலைமை என்று நான் குறிப்பிட்டிருக்கின்றேன். இங்கு ஒரு விடயத்தில் என்னிடம் திடமான நிலைப்பாடுண்டு. களத்திற்காகதத்தான் புலமே தவிர புலத்தின் விருப்பங்களுக்காக களம் அல்ல. புலத்தின் விருப்பங்களை சோதித்துப் பார்க்கும் பலியிடமாக ஈழத்தை இனியும் பயனபடுத்திக் கொள்வதற்கு எந்தவொரு சிந்திக்கும் ஈழத்துக் குடிமகனும் அனுமதிக்க மாட்டான் என்றே நம்புகிறேன்.”

    “எமக்கு எவரும் முக்கியமல்ல நாம் எல்லோராயும் எதிர்ப்பரசியல் கண்ணோட்டத்தில்தான் அணுகுவோம் என்றால் நாம் எவ்வாறு முன்னோக்கிச் சொல்வது. இன்று நடு வீதியில் கிடக்கும் ஈழத் தமிழர் அரசிலை ஏதோவொரு சாத்தியமான இடத்திலிருந்து நாம் நகர்த்திச் செல்ல வேண்டியிருக்கிறது. அவ்வாறு நகர்த்திச் செல்ல வேண்டுமாயின் வடகிழக்கில் தனது இருப்ப்பை உறுதிப்படுத்திக் கொள்வதில் தீவிரம் காட்டும் இந்தியா குறித்து சாதமாக சிந்திப்பது அவசியம் என்பதே எனது கருத்து.”

    “இப்படியான பின்புலத்தில் நாம் நமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் எவ்வாறு தந்திரோபாயமாக செயலாற்றுவது என்பதே நம்முன்ளுள் கேள்வி. நாம் என்று நான் குறிப்பிடுவது இன்றைய ஈழத்து தமிழ் மக்களை. புலம்பெயர் மக்களை அல்ல.”

    தங்களது மேற்குறிப்பிட்ட கருத்துக்களின்படி…..
    நான் நினைக்கின்றேன் இக் கருத்துக்களுக்கிடையில் முரண்பாடு இருக்கின்றது என…
    ஒரு புறம் கள நிலைமைகள் என அக மற்றும் புற சுழல்களைக் குறிப்பிடுகின்றீர்கள்…
    பின் எனக்களித்த பதிலில் அக சுழலுக்குள் மட்டும் கள நலைமைகளைக் குறுக்கிக் கொண்டிர்கள் என்றே நினைக்கின்றேன்….
    இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மனிதர்களின் கிடைத்த எதிர் மறையான அனுபவம் நம்பிக்கையினத்தையும் சந்தேகத்தையுமே; அளித்துள்ளது…..
    இதன் வெளிப்பாடாகத்தான் தங்களின் கருத்துக்களை நான் பார்க்கின்:றேன்….

    மறுபுறம் என்போன்ற பலர் தள நிலைமைகளையும் அதன் அக மற்றும் புற கள சுழல்களையும் கவனத்தில் கொண்டே எதிர்கால அரசியல் முன்னேடுக்கப்படவேண்டும் என்பதில் அக்கறையாக இருக்கின்றனர் என உணர்கின்றேன்…
    ஆனால் முள்ளிவாய்க்கால் முடிவுவரை புலம் பெயர் தேசத்தின் புலி ஆதரவு சக்திகள் மேற்கொண்ட கள நிலைமைகளுக்கு அப்பாற்றபட்ட செயற்பாடுகள் தங்களுக்கு புலம் பெயர் மனிதர்கள் மீதான ;நம்பிக்கையீனத்தை அளித்துள்ளதாகவே உணர்கின்றேன்….
    என்னைப்பொறுத்தவரை ஆரோக்கியமான ஒரு அரசியல் செயற்பாட்டிற்கும் கோட்பாட்டுறுவாக்கத்திற்கும் இவ்வாறான சுய பாதிப்புகளிலிருந்து விடுபட்டு புறவயமாக ;நின்று பார்ப்பதும் சிந்திப்பதுமமே பயனுள்ளது என நினைக்கின்றேன்…

    அடுத்துது இந்தியாவை நமது அரசியலுக்கு சாதகமாகப் பயன்படுத்துவதற்கு ஏற்றவகையில் நாம் தயாராக இருப்பது என்பது தமிழ் தேசிய அரசியலைப் பொருத்தவரை சரியான பார்வையாக இருக்கலாம்…
    ஆனால் இங்குதான் தங்களுடனான எனது முரண்பாடு ஏற்படுகின்றது….
    அதாவது நமக்கான பொது மனிதர்களின் உரிமை; நலன் சுதந்திரம் சார்ந்த ஒரு அரசியலை முன்னெடுக்காது…
    இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் அடக்கப்படும் மனிதர்களுடன் உறவை பேனுவது தொடர்பாக சிந்திக்காது…
    இந்திய அரசாங்கத்தை நமது: தேசிய பிரச்சனைையைத் தீர்ப்பதற்காகப் பயன்படுத்துவது என்பது ஆரோக்கியமானத்ல்ல….
    இந்த தவறைத்தான தமிழ் விடுத்லை இயக்கங்கள் கடந்த காலத்தில் முன்னெடுத்தன…

    இந்த இடத்தில் யமுனா அவர்கள் கூறும் பின்வரும்

    “ஈழத்தமிழர் இந்தியாவை மட்டுமே அழுத்த அரசியலுக்குள் நிர்ப்பந்திக்க முடியும். சீனாவையோ அல்லது அமெரிக்காவை ஈழத்தமிழுர் அழுத்த அரசியலால் ஒன்றும் செய்யமுடியாது.”

    அழுத்த அரசியலுடன் உடன்படுகின்றேன்…
    ஆனால் அழுத்த அரசியல் என்பது இந்திய அரசாங்கத்திற்கு மட்டும் பிரயோகிப்பதாக இருக்கக்த் தேவையில்லை என்றே நினைக்கின்றேன்…
    ஏனனில் புலம் பெயர் மனிதர்கள் சர்வதேசளவில் பரந்து வாழும்; நிலையில் அதை சரியாக ஆரோக்கியமான பயன்படுத்துவது தொடர்பாக சிந்திப்பது நல்லது என்றே நினைக்கின்றேன்…
    ஏனனில் சர்வதேச அளவில ;கொடுப்படும் அழுத்தமானது இந்தியாவிற்கும் மேலைத்தேய நாடுகளினுடாக கொடுக்கப்படும் அழுத்ததமாக இருக்கும் என்றே நினைக்கின்றேன்…

    துரதிர்ஸ்டவசமாக கடந்தகாலங்களில் தமிழ் இயக்கங்கள் குறிப்பாக புலிகளின் தள மற்றும் புலம் பெயர்ந்த தலைமைகள் தவறாகவே சர்வதேச அரசியலைப் பயன்படுத்தியுள்ளன..
    அதுவும் கடந்த மூன்றான்டுகளில் மிக மோசமாகவே பயன்டுத்தின எனக் கூறலாம்…அதாவது தள மற்றும் சர்வதேச நிலைமைகளையும் அரசியல் போக்கையும் கவத்தில் எடுக்காது தான்தோன்றித்தனமாக செயற்பட்டனர் எனக் கூறினால் மிகையல்ல…

    இந்த இடத்தில் யமுனாவின் பின்வரும் கூற்றுடன் முழுமையாக உடன்பட முடியாதுள்ளது…
    “நாடு கடந்த அரசியல் ஒரு அழுத்த அரசியலாகச் செயல்படும் சாத்தியம் உண்டு. இது ஆக்கபூர்வமானது. ”

    ஏனனில் நாடுகடந்த தமிழிழ் அரசானது மீண்டும் தாம் நினைத்தவாறு செயற்படுவது மட்டுமல்ல இதுவரை நடந்த ஒன்றுக்கும் பொறுப்பு எடுக்கவுமில்லை…அதை மீள்பார்வைக்கு உட்படுத்தவுமில்லை…ஏன் இவ்வாறு நடந்தது என்பதற்கான விளகத்தை தமிழ் பேசும் மனிதர்களுக்கு; குறிப்பாக ;தளத்தில் வாழுகின்ற மனிதர்களுக்கு ;அளிக்காமிலிருப்பது இவர்களது அரசியலை கேள்விக்குள்ளாக்கின்றது….மேலும் தொடர்ந்தும் தலைவரின் விழி பயணம் செய்கின்றோம் என்பது அனைவரையும் மீண்டும் முட்டாளாக்குகின்ற வேலை என்றே கருதுகின்றேன்…

    இதற்காக நாடுகடந்த தமிழிழ அரசாங்கத்தின் பாத்திரத்தை குறைத்து மதிப்பிடவில்லை…ஆனால் ;இவர்கள் ஆரேihக்கியமாக ;செயற்படுவர்களாக என்பது சந்தேகத்திற்குரியதே…

    அதேவேளை யமுனாவின் பின்வரும் கூற்றுடன் உடன்படுகின்றேன்….
    எனது முன்மொழிவும் இதுவே….இது தொடர்பாக ஏற்கனவே ஒரு கட்டுரை ஒன்று எழுதியுள்ளேன்…எனது வலைப்பதிவில் பார்க்கவும்….

    “1).சர்வதேசிய மட்டத்தில் மனித உரிமை அழுத்த அரசியல் 2).தமிழக மட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட தமிழ் தேசியர்களின் இந்திய அரசு நோக்கிய அழுத்த அரசியல் 3).ஈழத்தில் வடகிழக்கு இணைப்பு என்பதனை முன்வைத்த வெகுமக்கள் அரசியல் என மும்முனை அரசியலே இன்றைய தேவை.”

    இவ்வாறன ஒரு செயற்பாட்டிற்கான எனது முன்மொழிவு தமிழ் பேசும் மனிதர்களுக்கான ஒரு சர்வதேச அரசிய்ல் கட்சி ஒன்றை நிறுவுவது….
    இக் கட்சியானது தளம் மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் சார்ந்து அக கள அரசியலில் ஈடுபடும் அதேவேளை தமிழ்; பேசும் மனிதர்களுக்கான தள அரசியல் சார்ந்து சர்வதே அளவிலும் தள அளவிலும செயற்படலாம் என்பதே எனது கருத்து….

    இந்தடிப்படையில் நாவலனின் பின்வரும் கூற்றுடன் உடன்படமுடியாதுள்ளேன்…

    நாவலன்
    “இனிமேல் எதுவும் சாத்தியமில்லைஇ சமூக மாற்றம் குறித்துச் சிந்திக்க முடியாது என்ற அடிப்படையில் இருப்பிலுள்ள அரசுகளின் மீதான அழுத்தத்தைப் பிரயோகிப்பதனூடாகவே “சில்லறை” உரிமைகளைப் பெற்ருக்கொள்ள முடியும் என்ற அடிப்படியிலிருந்தே அழுத்த அரசியல் என்பது உருவாகிறது.”

    ஏனனில் நாம் பெண்களின் விடுதலைப் போராட்டத்தில் இருந்து பாடம் கற்போமானால் அவர்கள் ஒரேடியாக இன்றைய நிலைைமைக்கு வரவில்லை….
    தொடர்ச்சியான ;போராட்டங்களுக்குடாக சிறிய ;சிறய வெற்றிகளை பெற்றுக்கொண்டு படிப்ப படியாக ஆரோக்கியமாக முன்னேறிக்கொண்டிருக்கின்றனர் என்றே ;நினைக்கின்:றேன்….
    ஆகவே சில்;லரை உரிமைகள் என எள்ளிநகையாடாது….அனைத்தும் உரிமைகளே….ஒவ்வொன்றுக்காகவும் நாம் போராடவேண்டியுள்ளது….ஒரு நாளில் சமூகப் புரம்சி ஒன்று சாத்தியமா என நானறியென்..ஆனால் முழுமையான சமூக மாற்றத்திற்கான வேைல்கள் படிப்படியாக முன்னெடுக்கப்படவேண்டியதே இன்றைய யதார்த்மாக உள்ளது..
    நட்டபுடன்
    மீராபாரதி

 30. யதீந்திரா,
  நான் விவாதிக்க வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. 2008 இல் “கிளிநொச்சி ஒரு பரிசோதனைக் கூடம்” என்ற கட்டுரையிலில்ருந்து தொடர்ச்சியாகப் பல கட்டுரைகளில் இதே கருத்தைக் கூறிவருகிறேன். மேற்கின் வீழ்சியும் ஆசியப் பொருளாதாரத்தின் எழுச்சியும் உலகின் பூகோள அரசியல் படத்தை வெட்டியொட்டியுள்ளது. இந்திய சீன முரண்பாடு 1962 இல் இருந்த்தது போலவன்றி இப்போது புதிய நல -ன்களை உள்ளடக்கியது. இலங்கையிலிருந்து அமரிக்க ஆதிக்கம் இந்திய – சீன ஆக்கிரமிப்பை நோக்கி நகர்ந்த போது அமரிக்கா சரத் பொன்சேகாவை தனது பிரதிநிதியாக நம்பியிருந்தது. இப்படி நீண்ட உதாரனங்கள் நம் முன்னால் உள்ளன இவற்றள் ஒரு சிலவற்றை மட்டும் எனது கட்டிரையில் தந்துள்ளேன்.

  தவிர, இந்தியாவிற்கு சீனாவிற்கும் பொழுது விடிவதற்குள் போர் மூண்டுவிடும் என்று பதைபதைப்பில் எழுதியவர் பி.ராமன். நீங்கள் குறிப்பிட்ட இணையங்களிலும் அதிகமாக இந்திய சீன மூரண்பாடு பற்றிய புனைவுகளை இவரது எழுத்துக்களில் காணலாம். கருத்துத் தளத்தில் முரண்பாடாகக் காட்டிக் கொள்ளும் அவர்கள் செயற்தளத்தில் இணைந்துள்ளார்கள். பின் உலகமயமாதல் காலப்பகுதியின் புதிய நிலை இதுதான். இந்திய- சீன கூட்டுச் செயற்பாடுகள் குறித்து நான் சில உதாரணங்களை தந்துள்ளேன். ஆசியப் பொருளாதார எழுச்சியைப் பாதிக்கும் வகையில் அவர்களது நடவடிக்கைகள் எதையாவது உங்களால் கூறமுடிமா? அவர்கள் அனைத்திலும் நண்பர்களே. டபுள்யூ.ரி.ஓ இற்கு வெளியில் அவர்கள் இணைந்த தர நிர்ணய யத்தைக் கூட அமைத்துள்ளார்கள்.
  இது இன்னும் நீண்ட விவாதத்திற்குரிய விடயம். மேற்கின் வாழ்வோடு நாளாந்தம் பிணைந்திருக்கும் பலருக்கு இன்றைய நெருக்கடியின் தீவிரமும், ஆசிய முதலாளிகளின் பிடிக்குள் மூலதனம் நகர்ந்து கொண்டிருப்பதையும் இலகுவாகக் காணமுடியும். மேற்கிலிருந்து இலங்கைக்கு அரசியல் பொட்டலத்தை ஏற்றுமதி செய்ய முடியாது என்பதில் எனக்கு எந்த முரணும் இல்லை. ஆனால், மேற்கிலிருபவர்கள் இலங்கையைபற்றிக் கருத்துக் கூறவே கூடாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய அரசு பழங்குடிகளை மட்டுமல்ல இல்ஙகைத் தமிழர்களையும் அழித்துத் தான் தனது பொருளாதார சாம்ராஜ்யத்தை நிறுவிக்கொள்ளும் என்று எதிர்வு கூற ஒவ்வொரு தனைமனிதனுக்கும் உரிமையுண்டு

  1. நான் கருத்துக் கூறக் கூடாது என்று எங்கும் சொல்லவில்லை அப்படி சொல்லவதற்கு நான் யார்? ஆனால் கருத்துக் கூறும் போது களநிலைமைகளைக் கருத்தில் கொள்ளவது அவசியம் என்னறுதான் கூறுகிறேன். அவ்வாறில்லாது நாம் இவ்வாறு பரஸ்பரம் ஆரோக்கியமாக உரையாடிக் கொள்ளும் போதுதான் நாம் வலுவாக இயங்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. நீங்கள் ஆசியப் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் அவர்களது நடவடிக்கையில் எங்காவது முரண்பாடுகளை காட்ட முடியுமா என்கிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் இதனை மட்டும் வைத்துக் கொண்டு அவர்களுக்கு இடையில் முரண்பாடு இல்லை என்று கூறிவிட முடியுமா? பொருளாதார நிலையில் அவர்கள் அவ்வாறு இருப்பதற்கு காரணமும் அவர்களது நலன்கள்தான். எல்லாவற்றிலும் நலன்கள்தான் இருக்கின்றது. எனென்றால் ஆசியப் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்ப்பட்டால் பாதிக்கப்படப் போவது அவர்கள்தானே எனவே அதனை பாதுகாப்பதற்கு அவர்கள் முனைப்பு காட்டுவதில் என்ன ஆச்ச ரியம். இது மட்டுமல்ல அமொpக்கா சீனாவை குறிவைக்கின்றதாக குறிப்பிடுகின்றோம். ஆப்கானில் உள்ள சீன நிறுவனங்களுக்கு பாதுகாப்பளிப்பது அமொpக்கப் படைகள் இதனை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்வது. இங்கும் இருப்பது பொருளாதார நலன்கள்தான் அதற்காக முரண்பாடுகள் இல்லை என்று ஆகிவிடாது. அதனை கையாளும் வகையில் அவர்கள் பல்வேறு நிலையில் செயற்படுகின்றார்கள் என்பது இல்லை என்றாகிவிடாது. சமீபத்தில் புது தில்லியில் திரு.மகிந்த ஒப்பங்தங்களில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்த போது கொழும்பில் சீன துனை சனாதிபதி ஒப்பங்தங்களில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தார். இதன் குறீயிட்டு அரசியல் எதனைச் சொல்லுகின்றது. முரண்பாட்டை இல்லையா. எனவே பொருளாதார ரீதியான இணக்கப்பாடுகளை வைத்துக் கொண்டு முரண்பாடுகள் இல்லை என்பது அடிக்கட்டுமானமாகிய பொருளாதாரமே மேற்கட்டுமானமாகிய அரசியல் சட்டம் மற்றும் கருத்தியலை தீர்மானிக்கின்றது என்னும் மரபுவழி மார்க்சிய நிலைப்பாட்டை மீளுருவாக்கம் செய்யும். உங்களுக்கு அதில் நம்பிக்கை இருப்பின் எனக்கு ஆட்சேபனையில்லை.

   1. முதலில்
    மார்க்சிஸ்டுக்கள் எப்போதுமே பொருளாதாரம் தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையானந்து என்று கூறியதில்லை. மார்க்சியத்திற்கு எதிரானவர்களின் இவ்வாறான பல புனைவுகள் உள்ளன. மார்க்சியம் பொருள் அடிப்படையானது எனக் கருதுகிறது. பொருளாதாரத்தை அல்ல. பொருள் என்றால் என்ன என்பது குறித்து இதே இணையத்தில் கோசலன் என்பவர் எழுத்திய கட்டுரையைப் படித்துப் பாருங்கள் யசீந்திரா. http://inioru.com/?p=13323

    சீன இந்திய முரண்பாடு என்பது இலங்கையில் தீர்மானகரமான சக்தியாக இல்லை என்பது எனது வாதம். பின் உலகமாதல் சூழல் என்பது சீன-இந்திய இணைவிற்கே அதிக வாய்புள்ளதை பல தளங்களில் காணலாம். இலங்கைப் பிரச்சனை தொடர்பன்றி பலர் இது குறித்து எழுதியுள்ளார்கள்.

 31. முடிந்தால் இந்தியாவுக்கு வால் பிடித்து தமிழர் ஒரு தமிழ் ஈழம் எடுக்கட்டுமே. !
  இருக்கிற கோவணத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றால் டக்ளசோடு தான் இணைய வேண்டும்.இதைதான் அவரும் சொல்கிறார்.

  இடது சாரிகளை பெருபாலான மக்கள் ஆதரிக்கவில்லை என்பதால் அவர்களது கருத்து பிழை என்ற தொனியில் கட்டுரையாளர் (யதீந்திரா) எழுதுகிறார். பெரும்பான்மை தான் சரி என்றால் சிங்களவர்கள் செய்வது தான் சரி என்றாகிவிடும் .இதை தான் மாவோ சொல்வார் ” உண்மை பல சமயங்களில் சிறுபான்மையிடம் தான் இருக்கிறது” என்று.

  இலங்கையில் உள்ள தமிழ் பத்திரிக்கை காரர்களின் யோக்கியதை,பத்திரிகாதர்மம் உலகம் அறியும் .இலங்கையில் உள்ள சிங்கள பத்திரிக்கை காரர்கள் சிலரின் யோக்கியதை,பத்திரிகாதர்மம் உலகம் அறிந்தது.சிங்கள அரசு செய்யும் அநீதிகளை சமரசமில்லாமல் எதிர்த்து உயிரையும் கொடுத்திருக்கிறார்கள்.பிரபாகரன் செய்த தவறுகளை எந்த ஒரு தமிழ் பத்திரிக்கையாலனாவது உயிருடன் இருந்த போது எவன் ஒருவன் கண்டித்து இருக்கிறானா ?சொல்லுங்கள்.இலங்கையில் நடுநிலை பத்திரிக்கை என்று தமிழில் ஒன்றும் கிடையாது.பத்திரிகைகளில் இருப்பவர்களும் துப்பாக்கி இல்லாத பிரபாகரன்கள் தான்.எத்தனை வித விதமான ஆய்வுகளை எழுதி தேசிய தலைவரை கொம்பு சீவி விட்டார்கள்.இப்போதும் என்ன “புதிய புதிய ஆய்வாளர்கள் “புறப்பட்டு முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்று “அற்புதமான ” ஆய்வுகளை எல்லாம் வீரகேசரியிலும் ,தினக்குரலிலும் உலக நாடுகளின் வியூகங்கள் பற்றி புலம்புகிறார்கள்.தலைவன் இருக்கிறான் மயங்காதே என்ற எம்.ஜி,ஆர் பாடல் போல ஆய்வுகளை!!! ?எழுதினார்கள்.இறுதி யுத்தத்தின் போதும் இந்திய அரசிடம் என்னென்ன விதமாக எல்லாம் கெஞ்சினார்கள் . நாங்கள் தமிழர்கள் ,இந்துக்கள் ,இந்து கோவிலை உடைக்கிறார்கள் எத்தனை வண்ணங்களில் கத்தினார்கள் இந்தியா இதையெல்லாம் காதில் போட்டதா ?
  30 வருடமாக நடந்த போராட்டம் தமிழரசு கட்சியின் வலது சாரி கொள்கை தோற்று விட்டது என்பதை தான் சொல்கிறது.இனிமேல் வேறு வழியை தான் தேட வேண்டும். திரும்ப ,திரும்ப செய்த தவறுகளையே செய்ய கூடாது.

 32. யமுனா,
  கருத்து என்பதற்கும் கருத்தாடல் என்பதற்கு இடையேயான பாரிய வேறுபட்டை நான் சொல்லி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியதில்லை. பின்னவீனத்துவத்திற்கு எதிரான உங்கள் நூலைப் படித்துப் பிரமித்திருக்கிறேன். அழுத்தங்கள் என்பதற்கும் அழுத்த அரசியல் என்பதற்கும் நிறைய வேறுபாடுண்டு. அழுத்த அரசியல் என்பது தன்னார்வ நிறுவங்களின் அரசியலின் ஒரு பகுதி. ஆக, சிலவேளைகளில் வார்த்தைப் பிரயோகங்கள் மையக் கருத்தையே சிதைத்துவிடும்.

  1. நீங்கள் சொல்லுவதில் ஒரு விடயம் எவருமே நிராக ரிக்க முடியாதது. இனி புதிய வழியைத்தான் தேட வேண்டும். உண்மை ஆனால் அது என்ன வழி என்பதுதான் கேள்வி. நீங்கள் சொல்லுவது போன்று 30வருட போராட்டத்தில் தேல்வியடைந்த வலதுசாரிக் கொள்கையைத் தொடர்வதா? அல்லது அதற்கு முதலே படு தோல்வி அடைந்துவிட்ட சீனசார்பு தமிழ் இடதுசாரி அரசியலையா அல்லது அதுவும் வேண்டாம் என்றால் இலங்கைப் புரட்சி கதைத்து பின் இனவாத அரசியலில் கரைந்து போன மொஸ்கோ சார்ப்பு மற்றும் ரொட்ஸ்கிச சார்பு அரசியலையா. நீங்கள்தான் கண்டு பிடிக்க வேண்டும். அங்கு பழங்குடி மக்கள் இறங்கிவிட்டார்கள் என்பதை விடுங்கள் நான் பேசுவது ஈழத் தமிழர் பற்றி. இது ஏன் உங்களுக்கு விளங்கவில்லை. நான் இடதுசாரிகளை பெரும்பாலான அப்படியும் சொல்லக் கூடாது முழுமையாகவே ஆத ரிக்க மாட்டார்கள் என்று சொல்லவில்லை நன்பரே! அவர்கள் ஆதிரிக்க வேண்டும் என்றால் மக்களுக்குள் இறங்க வேண்டும். அதனை உங்களைப் போன்றவர்கள் செய்தால் நீங்கள் விரும்புகின்ற மாவோவாத அரசியலை முன்னெடுக்க நீங்கள் களத்தில் இறங்கினால் பிறகு ஏன் இந்த விவாதம் எல்லாம். பின்னர் எங்களைப் போண்ற சாதரண மனிதர்கள் எல்லாம் இப்படிப் பேசப் போகின்றோம். ஈழத்து மக்கள் அனைவரும் இன்று நம்பியிருப்பது இதனைத்தானே. இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் மாதிரி தனது சொத்துக்களை எல்லாம் தான் விசுவாசித்த கட்சிக்கு எழுதிக் கொடுத்துவிட்டு நீங்கள் சொல்லுகின்ற அந்த மாபெரும் பேராசியர்களும் இடதுசாரிகளும் கூடவே நீங்களும் வந்துவிட்டால் நாங்கள் எல்லாம் உங்கள் பின்னால்தானே நிற்போம் நன்பரே! நன்பரே உங்களுக்கு கனவு கான்பதற்கு இருக்கும் உரிமையை மறுப்பதற்கு நான் யார்?

  2. யதீந்திரா சீனச் சார்பு அரசியல் என்று சொல்வது மார்க்சிய லெனினிய அரசியலை. அது இப்போது நேபாளத்தில் வெல்லுகிறது. பிலிப்பின்சில் மீள எழுகிறது. அதை விட இந்தியாவில் ஒரு பேரலையாக எழுகிறது. எனவே, சிறியது பெரிதாக வளரும். அளவைப் பார்ப்பதை விட்டுவிட்டு விஷயத்தைப் பாருங்கள்.
   இலங்கையில் மார்க்சிய லெனினிய அரசியலின் பலவீனப் படலுக்கு அகக் காரணங்கள் இருந்தன. அதை விடப் புறக் காரணங்களாகப் பேரினவாதமும் குறுகிய தேசியவாதமும் தீவிரப் பட்ட சூழலும் உணர்ச்சி அரசியலின் எழுச்சியும் ஜனநாயகமற்ற தமிழ்ச் சூழலும் இருந்தன. அவை பற்றிப் பேசாமல் தேர்தல் அரசியல் வெற்றி தோல்விகளை பற்றி பேசுகிற பாங்கில் மார்க்சிய லெனினிய அரசியலின் தோல்வி பற்றிப் பேசிப் பயனில்லை.
   தமிழ்த் தேசியவாத அரசியலின் ஒவ்வொரு வடிவமும் தமிழரை மேலும் மேலும் மோசமான நிலைக்கே கொண்டு சென்றுள்ளன.
   இன்று வரை தேசிய இனப் பிரச்சனை பற்றிய முழுமையானதும் சரியனதுமான மதிப்பீடுகள் எங்கிருந்து வந்துள்ளன?
   இந்த இருளிலிருந்து மீட்சிக்கான வழி யாரிடம் இருக்கிறது என்று தேடுங்கள். அரசியல் நேர்மை தன்னலமற்ற பணி என்றால் அது இன்னமும் இடதுசாரிகள் நடுவே — மார்க்சிய லெனினியர் நடுவே — தான் உள்ளது.

 33. ashok-george!

  “பேராசிரியர் பேசியது யாருக்கும் புரியவில்லை. ”
  அது புரியவில்லை என்பதல்ல.அதை ஏற்க மனமில்லை என்பது தான் உண்மை.
  உங்களை போன்றவரை தான்
  “அன்னியரின் முந்தானைக்குள்
  முகம் புதைக்கும் கோழைகள் ”
  என்று புதுவை ரத்தினதுரை எழுதினார்.

 34. 25 வருடங்களாக தங்களுக்கு ஜால்ரா போடுகிறவர்களை வைத்து கொண்டு புலிகள் போட்ட ஆட்டம் ,தலைவர் இறந்ததும் ஜால்ரா போட்டவர்கள் எல்லாம் சிங்கள அரசோடு போடும் ஆட்டம் காண்பதற்கு கேவலமாக இருக்கிறது.இதற்கெல்லாம் காரணம் இந்தியாதான் என்பதை யாராலும் மறுக்கமுடியுமா ?இன்னுமொரு முறை இந்தியர்களை நம்பி நம் மக்களை பலி கொடுக்காதீர்கள்.

  ஈழத்திலும் ,புலம் பெயர் நாடுகளிலும் இந்தியா உளவாளிகள் ( பல வண்ணங்களில், கவிஞர்களாக ,ஆய்வாளர்களாக ,ரேடியோ நடாத்துநர்களாக,புலி எதிர்ப்பாளார்களாக,சமய தொண்டர்களாக,கலாசார தூதர்களாக ) நீக்கமற நிறைந்துள்ளார்கள்.யாரையும் நம்ப முடியாது .

  வல்லாதிக்க முதலாளிகளின் வெறி பிடித்த ஆதிக்க மூலதன நகர்வுக்கு எதிரான போராட்டத்தை இந்தியாவில் பழங்குடி மக்கள் ஆரபித்து விட்டார்கள் ,வடக்கே குட்டி நாடான நேபாளத்திலும் இந்தியா எதிர்ப்பு நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது .
  ஈழ தமிழர் மட்டும் குறுக்கு வழியில் சுதந்திரம் பெற துடிக்கிறார்கள் .ஏனென்றால் அவர்கள் தான் சிறந்த படிப்பாளிகள் ஆயிற்றே .

 35. இனி ஈழத்தமிழன் படிக்க வேண்டியது வங்கம் தந்த பாடம் அல்ல முள்ளிவாய்க்கால் தந்த பாடம்.

 36. “எடுத்துக் காட்டாக கலைஞரும் பிற கட்சியினரும் முன்பு அறிவித்த வகையில் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் முழுமையாக ராஜினாமா செய்திருப்பார்களானால்…” — ய.ரா.
  கருணாநிதி விலகல் பற்றி அறிவித்த போதே, அது நாடகம் என்பதை இலங்கையில் கூடப் பலர் சுட்டிக் காட்டி விட்டனர். ஏனென்றால் முழு இந்தியாவுக்கும் துரோகமான ஒரு ஒப்பந்தத்ததைச் செய்வதற்கு நம்பிக்கைப் பிரேரணை வாக்கெடுக்கப் பட்ட போது தி.மு.க. என்ன செய்ததென்று அனைவரும் அறிவர்.
  மக்களைக் கொள்ளையடித்துப் பல பல கோடி சம்பாதித்துக் குடும்ப ஆதிக்கத்தையும் நிலைநாட்டிப் பொருள் சேர்க்கத் தில்லி அம்பலப் பெருமாட்டி அருள் இல்லாமல் முடியுமா?
  எந்தத் தமிழக முதலமைச்சரும் 1977க்குப் பிறகு டில்லியை மீறி நடக்கவில்லை. ஏனெனில் அவர்களுடைய ஊழல் விசாரணைக் கோப்புக்கள் டில்லியில் இருந்தன. மத்திய அரசுடன் ஒட்டிக் கொண்ட எந்தச் சட்ட மன்றக் கட்சித் தலைவரும் டில்லியை மீறி நடக்கவில்லை. (2000 மேயில் நாம் கண்டது). ஏனென்று தெரியாதா?
  தமிழகச் சட்ட மன்ற அரசியலுடன் ஒப்பிட்ட்டால் — “கலைஞர்” மணக்க வைப்பதாகச் சொல்லிக் கோடிக் கணக்கில் சுருட்டிய இன்னொரு புரொஜெக்ட்டான கூவம் இருக்கிறதே அது பூஞ்சோலை போல மணக்கும்.
  தமிழகத்துச் சட்ட மன்றக் கோமாளிகளை (கோதபாய ராஜபக்சவுக்கே அது தெரியும்) நம்ப வேண்டாம் என்பது தான் விஷயமறிந்த பலரதும் ஆலோசனையாக இருந்தது. கவனிக்க வேண்டியது என்னவென்றால், கோமாளிகள் முட்டாள்களல்ல, அவர்களுக்குப் பணப் பைகள் எங்கே இருக்கின்றன என்று தெரியும். இந்தக் கதைகளெல்லாம் இங்கே பல முறை சொல்லப் பட்டவை.

  நடக்க முடியாத விடயங்களை எல்லாம் ஆய்வுகளென்று கனவு காணுவது பரிதாபமான நிலை.
  பாராளுமன்ற, சட்ட மன்ற அரசியலுக்குப் புறம்பாகத் தமிழக எதிர்ப்பியக்கம் முன்னெடுக்கப் பட்டிருத்தால் ஒரு வேளை நிலைமை வேறு. ஆனால் வோட்டுப் பொறுக்கிக் கட்சிகள் விட்டிருக்குமா?
  உண்மையிலேயே தமிழீழ ஆதரவு பேசிவந்தப் பிழைப்புவதக் கூட்டம் ஏன் மாவிலாறு மோதலின் போது விமானக் குண்டு வீச்சுப் பற்றிப் பேசவில்லை. மட்டகளப்பு ஒரு அகதி முகாமான போது வாய் திறக்கவில்லை. புலிகள் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பா, அன்றி தமிழக மக்களிடையே ஆதரவு திரட்ட முடியாதென்ற பயமா, அன்றிச் சுத்தமான அசட்டையா? சி.பி.ஐ. ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டங்கள் சூடு பிடித்த பிறகல்லவா நெடுமாறனுக்குக் கூடத் துயில் கலைந்தது.
  2008 நடுப் பகுதி முதல் தமிழக நாடகங்களைப் பார்த்து அலுத்து விட்டோம் கோடம்பாக்கம் சினிமாவை விட அருவருப்பான, ஆபாசமான, அபத்தமான நாடகங்கள். இன்னமும் எங்களுக்குப் படங் காட்டப் பார்க்கிறர்களா?

  1. HE..HE..HE.. Garammasala,you are a wandering corpse!,once we danced in Colombo seashore with Mendis liquor.why we care about politics,lets dance for Baila songs…suraa..ngkani…..

   —-KOPPU.

 37. சிவானந்தன்>  யோகன்
  நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. இந்த புதிய ஜனநாயகக் கட்சியில் இருந்த சில மார்க்சிய வாதிகளும் வெளியேறிவிட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்போது இருப்பது வியாபாரிகள். அவர்கள் மககளிடம் சென்று பிரச்சினைகள் பற்றி பேசுவதில்லை. கொழும்பில் அவர்களின் வாழ்க்கை மேல் மத்தியதர வர்க்கத்திற்கும் அப்பால் சென்றுகொண்டிருக்கிறது.  கார்த்திகேசு மாஸ்டர் போல் வாழ்கிறார்களா இவர்கள். இவர்களைப் போய் ஒரேயொரு மார்க்சிய லெனினியக் கட்சி என்று சொல்கிறீர்களே??  என்ன செய்வது?  மார்க்ஸ் – லெனின் மக்களுக்காக கருத்துக்களை சொன்னார்கள். ஆனால் மக்களை முழு மடையர்களாக எண்ணி> அவர்கள் பேசுவதையே காதில் வாங்காது அந்தக் கருத்துக்களைக் காப்பாற்றுவதற்காக மக்களின் வாழ்வையும் உயிர்களையும் பலிகொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் சிலர் போன்றவர்களே இவர்களும்.  தனது கருத்தை நிலைநாட்ட பிரபாகரன் செய்த கொலைகள் போன்று> கருத்துகளின் மேல் கிரீடம் வைக்காதீர்கள்.        எங்களை நசுக்கிய ஒரேயொரு பிரபாகரன் தான் இல்லை.  ஏனையவர்கள்  எம்மீது சவாரி செய்வதைத் தடுத்து நிறுத்துவதற்கு நடைமுறையில் நாம் வழிகளைக் கண்டாக வேண்டீயுள்ளது.  அதைச் செயய்வேண்டியவர்கள் மார்க்சியக் கருத்துக்களை உள்வாங்கியவர்கள்தான்.  ஆனால் மார்க்சியக் கருத்தியல்வாதிகள் அல்ல.  மார்க்சிய இலக்கை . வெல்ல தமிழீழம் வேண்டும் என்று அன்று என்னைப்போல் பலர் எண்ணியே போராடக் கிளம்பினோம்.  எமது எண்ணம் தவறல்ல என்றே நான் இன்றும் நினைக்கிறேன்.  ஆனால் யதார்த்த நிலைமையை கவனத்தில் எடுத்து செயற்படாமையே எமது தவறு.  

  1. அஷோக்-ஜோஜ்
   பொய்யை சொன்னாலும் கவனமாகவும் சொல்ல வேன்டும்.
   எந்த மார்க்சிய வாதிகள் விலகினார்கள்?
   யார் பணம் சேர்க்கிறார் கள்? யாரிரடமிருந்து சேர்க்கிறார் கள்?
   அவ்வளவு பணம் இருந்த்திருந்தால் யாழ்ப்பாணத் தேர்தலில் செலவழித்திருக்க முடியுமே.
   உங்கள் பொய்களை ஒவ்வொன்றகப் பட்டியலிட வேளை போதாது.
   முதலில் ஆதாரங்களை முன்வையுங்கள்.
   உங்களைப் போல, “நூறு பூக்கள்” என்ற பேரில் ஆயிரம் புளுகுகளை அவிழ்த்து விட்ட ஒரு கூட்டம் இருந்தது.
   ஒரு அறிக்கை மீதான விமர்சனம் வந்து இரண்டு ஆண்டுகளகி விட்டன. பதிலே இல்லை.
   கடைசியாக மகிந்தருக்கு வால் பிடிக்கப் போய் அம்பலப் பட்டுத் தலை குனிந்து நிற்கிறார்கள்.
   உங்கள் பொய்கள் உங்களையே விழுங்கி விடும்.

 38. யமுனா அவர்களே எனக்கு பதில் தருவது தராதது உங்கள் விருப்பம். அது குறித்து நான் எதுவும் அலட்டிக் கொள்ளப்போவதில்லை. ஆனால் நான் 1983ம் ஆண்டு முதல் கிழக்கு மாகாண மக்களால் அறியப்பட்ட எனது பெயரிலேயே எழுதுகிறேன். எனவே உங்களுக்கு என்னை தெரியவில்லை என்பதற்காக என்னை “முகமிலி” என்று குறிப்பிடும் உங்கள் வாதம் தவறானது என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்.

  *****. இந்தியாவை எதிர்க்கக்கூடாது.அழுத்த அரசியலே செய்ய வேண்டும் என்று ஏன் முன்பு கூறவில்லை?

  அடுத்து யதீந்திரா அவர்களிடம் ஒரு கேள்வி. என்னை தெரியாது என்று குறிப்பிடுள்ளீர்கள். ஆனால் நான் புலத்தில் அதுவும் மேற்குலக ஜனநாயக சூழலில் இருந்து கொண்டு எழுதுவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். நான் யார் என்று தெரியாத உங்களுக்கு நான் எங்கிருந்து எழுதுகிறேன் என்பது மட்டும் எப்படி தெரிந்தது என்று கொஞ்சம் கூறுவீர்களா?

  மேலும் யதீந்திரா அவர்களே இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை சுமார் நாற்பது லட்சம் என்றால் அதில் சுமார் எட்டு லட்சம் மக்கள் இலங்கைக்கு வெளியேதான் வாழ்கிறார்கள். எனவே புலத்தில் இருந்து போராட முடியாது என்ற உங்களின் வாதமானது அந்த எட்டுலட்சம் மக்களின் அதாவது ஜந்தில் ஒரு பகுதி மக்களின் ஜனநாயக உரிமையை மறுக்கிறது அல்லவா?. இது களத்தில் உள்ள மக்களின் ஜனநாயகத்திற்காக கவலைப்படுவதாக கூறும் உங்கள் கருத்துக்கு முரணாக அமைவதை உங்களால் உணரமுடியவில்லையா? அத்தோடு புலத்தில் உள்ள மக்கள் போராடினால் அதனால் மகிந்த ராஜபக்ச அடையும் கோபத்தை எம்மால் காணமுடிகிறது. எனவே புலத்தில் உள்ளவர்கள் போராடக் கூடாது என்று அவர் கூறுவதையும் எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.ஆனால் புலத்தில் உள்ள மக்கள் பற்றிய உங்கள் கருத்தும் மகிந்தவின் கருத்துக்கு துணைபோவதுதான் எமக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுக்கிறது. ஏன் இந்த துரோகத்தனம் நண்பரே?

  புலிகளின் போராட்டத்தில் விளைந்த சில நன்மைகளில் ஒன்று புலத்தில் உள்ள மக்களும் போராடலாம்.போராட வேண்டும் என்பது. தமிழ்மக்கள் மத்தியில் உள்ள துரோகங்கள் பலவீனம் என்றால் புலத்தில் மக்கள் லட்சக்கணக்கில் இருப்பது நிச்சயம் ஒரு பலமே.அத்துடன் இன்றைய நிலையில் நிச்சயம் புலத்து மக்களின் போராட்டம் களத்து மக்களுக்கு ஒரு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும். எனவே நாளைய போராட்டத்திற்கு மாபெரும் உந்து சக்தியாக புலத்து மக்களின் போராட்டம் நிச்சயம் அமையும்.

  எனவே புலத்தில் உள்ள மக்கள் போராடவேண்டும் என யதீந்திரா அவர்கள் அறை கூவல் விட்டிருந்தால் தமிழ்மக்கள் மீதான அவரின் நலனை ஆர்வத்தை இனம் கண்டிருக்கமுடியும். மாறாக அவர் இநதி;யாவை பகைக்கக்கூடாது என்கிறார். இந்தியா செய்த அழிவுகளை நினைவில் கொள்ள வேண்டாம் என்கிறார். அது மட்டுமன்றி புலத்தில் உள்ளவர்கள் அங்கிருந்து எதுவும் செய்யக்கூடாது. விரும்புகிறவர்கள் நாட்டிற்கு வந்து புரட்சி செய்யட்டும் என்கிறார். இவருடைய இந்தக்; கருத்துக்கள் தமிழ் மக்களின் நலனுக்கு எதிரானவை. எதிரிக்கு சாதகமானவை.அத்துடன் இவர் இவற்றை தமிழ் மக்களின் பேரால் கூறுவதால் இது துரோகத்தனம் என்கிறோம். நாம் இவ்வாறு கூறுவதை ஒரு குழந்தைப்பிள்ளை கூட ஏற்றுக்கொள்ளும். ஆனால் வளர்ந்து விட்டதாக கூறும் யதீந்திரா யமுனா பேர்வழிகளுக்கு ஏன் புரியமாட்டேன்கிறது?

 39. ashok-george

  “ஆனால் மார்க்சியக் கருத்தியல்வாதிகள் அல்ல. மார்க்சிய இலக்கை . வெல்ல தமிழீழம் வேண்டும் என்று அன்று என்னைப்போல் பலர் எண்ணியே போராடக் கிளம்பினோம்.”…

  என்று எழுதி செல்கிறீர்கள் .இதிலிருந்து தெரிகிறது என்னவென்றால் உங்களுக்கு இலங்கையில் நடந்த வரலாறு தெரியவில்லை என்பதே.தமிழீழம் என்பது படித்த மேல்தட்டு ,மத்திய தர வர்க்கத்து மக்களின் கோசம்.அந்த தமிழ் ஈழம் என்பது சாத்தியமில்லை /சாத்தியம் என்று 1970 களின் மத்தியிலேயே கடுமையான விவாதங்கள் நடைபெற்றன.வல்வெட்டித்துறையில் ,சுன்னாகத்தில் தமிழீழம் சாத்தியம் இல்லை என்று பேசிய சண்முகதாசன் அதற்க்கான அரசியல் ,பொருளாதார காரணிகளை முன் வைத்து பேசினார்.நடந்த விவாதத்திற்கு நடுவர் அளித்த தீர்ப்பு சாத்தியமில்லை என்பதே.சாதி,மத ,பிரதேச சேற்றில் வளர்ந்த தமிழரசு கட்சியினறினால் இந்த இந்த வாதங்களுக்கு பதில் அளிக்க முடியவில்லை.

  மாணவர் பேரவை ,இளைஞர் பேரவை போன்ற தமிழரசு கட்சிகளின் இளைஞர் அமைப்புக்கள் தோன்றி கூச்சலிடும் கலாசாரத்தை உருவாக்கின.இந்த அவசரக்குடுக்கைகளை தான் அண்ணன் அமிர்தலிங்கம் தனது அரசியல் எதிரிகளை ஒழித்துகட்ட பயன் படுத்தினார்.துரையப்பா முதல் பலி ஆனார்.யோகேஸ்வரனின் கொலை பற்றி அவரது மனைவி ஒரு பெட்டியில் ” அவர்கள் துரையப்பாவை கொலை செய்து விட்டு எங்கள் வீட்டிற்கே வந்தார்கள் ,எனது கணவர் தான் பாது காப்பு கொடுத்தார்.ஆனால் அப்படிபட்ட என் கணவரை ஏன் கொன்றார்கள் என்பது தான் எனக்கு புரியவில்லை.” என்று.இப்படி தனி நபர் பயங்கரவாதத்தை வளர்த்தவர்கள் தமிழரசு கட்சியினர்.பின் நடந்த கூத்து எல்லாம் நீங்கள் அறிந்ததே .

  “அதற்கு முதலே படு தோல்வி அடைந்துவிட்ட சீனசார்பு தமிழ் இடதுசாரி அரசியலையா அல்லது அதுவும் வேண்டாம் ” என எழுதுகிறார் யதீந்திரா.அப்படி என்ன தோல்வி அவர்கள் அடைந்தார்கள் என்று ஆசிரியர் விளக்குவாரேயானால் நாம் எல்லாம் பயன் அடைவோம்.தமிழீழம் என்ற கொள்கை ஏற்கனவே இரண்டு தரம் மண்ணை கவ்வி விட்டது ,இனி மூன்றாம் தடவையும் (நாடு கடந்த தமிழீழம் ) மண் கவ்வ போகிறது .அந்த கொள்கையாலே இன்று தமிழ் மக்கள் கேவல பட்டுநிட்கிரார்கள்.அரசியல் அனாதைகளாக்க பட்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் தார்மீக பொறுப்பு ஏற்க மறுக்கின்ற படித்த மேல்தட்டு, மத்தியதர கல்விமான்களின் அயோக்கிய தனத்தை ,திமிரை என்னவென்று சொல்வது.அரசியல் அநாகரீகம் புரிந்து தமிழ் மக்களை படுகுழியில் தள்ளியது தமிழீழ கொள்கையே தவிர இடதுசாரி அரசியல் அல்ல.தமிழீழம் கேட்டு புறப்பட்ட சக இயக்கங்கள் எல்லாம் ஒன்றை ஒன்று அழித்தன.சாதிய,பிரதேச ,மத வெறி பிடித்தி அலைந்தது.புலிகள் eprlf போன்ற இயக்கங்களை EP என்று ( ஈழத்து பறையர் ) என்று சொல்லுவதை மறை முகமாக அனுமதித்தது.

  அதிகமாக ஏன் எழுத வேண்டும் ?
  இந்தியாவை நம்பி சரண் அடைந்த தீபெற்றிய தலைலாமாவிற்கு இந்தியா என்ன தனி நாடா வாங்கி கொடுத்தது ? தண்டவாடவிலும் பழங்குடி மக்களை முள்ளு கம்பிக்குள் தான் இந்திய வைத்ததுள்ளது .அவர்களின் அறிவுறுத்தலின் படியே தான் இலங்கையும் நடக்கிறது.
  “அங்கு பழங்குடி மக்கள் இறங்கிவிட்டார்கள் என்பதை விடுங்கள் நான் பேசுவது ஈழத் தமிழர் பற்றி. இது ஏன் உங்களுக்கு விளங்கவில்லை.”என்று எழுதுகிறார் யதீந்திரா.நீங்கள் இன்னுமா பாடம் படிக்கவில்லை !?.இப்படி நமெக்கென்ன என்று இருந்ததால் தான் தமிழர்கள் வெளிநாட்டில் போட்ட கூச்சல் ஒன்றும் மற்றவர்களுக்கும் கேட்கவில்லை.
  ஒடுக்கப்படுகின்ற இனங்களுக்காக நசிந்தவனுக்கு குரல் கொடுப்பதென்பது இடது சாரிய சிந்தனை. இனிமேல் ஆவது குறுந் தேசியவாதத்தை விட்டு வெளியே வாருங்கள்.

  இப்படி குண்டு சட்டிக்குள் தான் குதிரை ஓட்டுவோம் என்றால் உங்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

 40. அன்புள்ள மீராபாரதி-

  நாடு கடந்த தமிழீழ அரசும் மனித உரிமை அழுத்தமும் குறித்த பிரச்சினையில் அதனது அமைப்புசார் தன்மை குறித்த நம்பிக்கையீனத்தை நீங்கள் முன்வைத்திருக்கிறீர்கள். எனக்கு இதில் முரண்பட ஏதுமில்லை. 

  விடுதலைப் புலிகளின் கடந்த கால அரசியலின் தொடரச்சி இது என அவர்கள் அறவித்திருப்பதில் வரலாற்று விமர்சன உணர்வை விடவும் தமது அணிகளையும் தமது ‘கனவுமயப்படுத்தப்பட்ட’ மேற்கத்திய தமிழ் வெகுமக்கள் ஆதரவையும் தக்கவைப்பதற்கான அவர்களது தந்திரோபாயம் என்கிற கூறும் இதில் இருக்கிறது எனப் புரிந்துகொள்கிறேன். 

  புலிகளின் பின்னான அரசியல் என்பது ஒரு நடைமுறை யதார்த்தம். அதை அவர்களும் மீறிச் சென்றுவிட முடியாது. அந்த நடைமுறை யதார்த்தத்தை அவர்கள் உணரவில்லையானால் ஈழஅரசியலில் இருந்து அவர்கள் கரைந்து காணாமல் போவார்கள். அந்த செயல்பாக்கின் தொடர்ச்சிதான் அவர்களுக்கிடையிலான பிளவுகளும் முரண்களும் அரசியல் தலைமையற்ற வெற்றிடமும் எனப் புரிந்துகொள்வதிலும் பிரச்சினையில்லை. 

  என்றாலும் மனித உரிமை சார்ந்த அழுத்தம் எனும் விடயத்தில் அவர்களை ஆக்கபூர்வமாகப் பார்ப்பதற்கான காரணம் மேற்கத்திய அமெரிக்க அரசு மட்டங்களில் அந்தக் கோரிக்கையை நடைமுறையில் அவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள். இதனை வலதுசாரிப் போக்காக எமது நாடுகளில் அமெரிக்க மேற்கத்திய தலையீட்டுக்கான போக்காக ஒருவர் காணலாம். மரபான இடதுசாரிப் பார்வை என்பது இதுதான். 

  இலங்கையைப் பொறுத்து மட்டுமல்ல எந்த மூன்றாம் உலகின் எதேச்சாதிகாரம் குறித்துமான ராணுவத் தலையீட்டைத்தான் நாம் கடுமையைாக மறுக்க வேண்டுமேயொழிய இத்தகைய அரசியல் அழுத்தங்களை நாம் பாவிக்கவே வேண்டும் என நான் நினைக்கிறேன். ஏனெனில் அமெரிக்க மேற்கத்திய நாடுகளின் அரசியல் செல்வாக்கோ பொருளாதார செல்வாக்கோ இல்லாத நாடுகள் – கியூபா தவிர – இன்று உலகில் இல்லை என்றே சொல்லலாம். இந்தச் செல்வாக்கு ஒரு இறைமையுள்ள தேசத்தின் விவகாரங்களில் சேதம் விளைவுக்கும் என்றால் அப்போது அதற்கு எதிரான போராட்டம் தானாகவே எழும். மேலாக அமெரிக்க ஆதிக்க ஒற்றை மைய உலக தகர்ந்துவிட்டது. இப்படியான சக்திகள் இந்தியா சீனா அமெரிக்கா பிரித்தானியா கியூபா வியட்நாம் என எதுவாகவும் இருக்கலாம். 

  இன்றுள்ள இலங்கை சரியான அர்த்தத்தில் ஒரு ஜனநாயக நாடு அல்ல. அது பெரும்பான்மை இனத்தின் ஜனநாயக நாடு. பெரும்பான்மை இனத்தின் படையினால் காக்கப்படும் ஒரு நாடு. இந்நிலையில் தான் அரசு மட்டத்தில் சிறிய அளவிலேனும் நாடு கடந்த தமிழீழ அரசினர் மேற்கொள்ளும் மனித உரிமை அழுத்த அரசியல் ஆக்கபூர்வமானது என்கிறேன்.

  இதனை நான் கொஞ்சம் கவனம் குறித்துச் சொல்லக் காரணம் இதுதான் :  இனக்கொலை என்பது அடிப்படையில் ஒரு மனித உரிமைப் பிரச்சினை. ‘நேரடியாக’ பொருளாதாரத்தோடு தொடர்புள்ளது இல்லை. இந்தக் காரணத்தினால்தான் மார்க்சியர்கள் மனித உரிமைப் பிரச்சினையில் அதிகமும் அக்கறை குவிப்பதில்லை. இந்தக் கருத்துக்களத்தில் கூட மனித உரிமை எனும் விடயத்தில் இடதுசாரிகள் எனக் கோரிக் கொள்கிறவர்கள் அக்கறையெடுக்கவில்லை என்பதனை யோசித்துப் பாருங்கள். 

  இன்றைய மாறி வரும் உலகிற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்தது. காரணம் அணுசக்தி ஆயதத் தயாரிப்பில் பாதுகாப்பில் இந்திய உரிமையில் சமநிலை இல்லை என்பதுதான். இந்தியாவுக்கு சமநிலை இருக்குமானால் ஆட்சியதிகாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி இருக்குமானால் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அக்கட்சி மறுக்கும் என நான் கருதவில்லை.

  யதார்த்தத்தில் இன்று சீனாவும் வியட்நாமும் அமெரிக்காவை மறுக்கவில்லை. இந்தச் சமநிலை கியூபாவுக்கும் இருக்குமானால் கியூபாவும் அரசு எனும் அளவில் மறுக்கப்போவதில்லை.
  என்றாலும் அப்போதும் மக்கள் விரோதமாக இந்தப் பிரச்சினை ஆகுமானால் அப்போது அந்தந்த நிலப்பரப்பின் இடதுசாரிகள் என்பவர்கள் போராடாமல் இருக்கப் போவதில்லை. இதுவே எதிர்கால எதிர்ப்பரசியலாக இருக்கும் என நினைக்கிறேன்.

  அன்புடன் யமுனா ராஜேந்திரன்

  1. நட்புடன் யமுனா,

   யதீந்திராவிற்கும் முன்னதாக இதனை எழுதியுள்ளேன். மார்க்சியம் என்பது பொருள் முதல்வாதப் பார்வையே தவிர, பொருளாதாரப் பார்வையல்ல. பொருள் என்பது சமூக வகைப்படுத்தலின் ஒரு பகுதி. பொருள் என்பது தான் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும். பொருளாதாரம் பொருள் மீது செல்வாக்குச் செலுத்தலாமே தவிர, தீர்மானிக்கும் சக்தியாக இருக்க முடியாது. மனித உரிமைப் பிரச்சனையும் இவ்வாறே தான். அது சமூகத்தின் மேற்கட்டுமானத்தின் முரண்பாடுகளின் மோதலின் விளைவானதே. அதன் தாக்கம் பொருளில் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை ஆனல் அது தீர்மனகரமான பாத்திரம் வகிப்பதில்லை.
   இயல்பான சமூக வளர்ச்சி பல வருடங்களின் முன்னமே தடுக்கப்பட்டதன் எதிர் விளைவான மோதல் தான் இன்று உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இதனை பௌதீக விஞ்ஞானத்தில் இம்பல்ஸ் என்று கூறுவார்கள். இவ்வாறு புற உலகு குறித்த புரிதலை ஏற்படுத்துவது மார்க்சியத்தின் வழிமுறை. இது சிறந்த விவாதம். தொடர்ந்து முன்னெடுப்பீர்களானால் நாம் அனைவரும் பங்காற்றலாம்.
   தவிர, நாடுகடந்த தமிழீழ அரசு தனக்கு ஒரு அதிகாரத்தைக் கட்டமைத்துக் கொள்கிறது. இதன் பின்னனியில் பல மில்லியன்கள் புரள்கின்றன. அது அரசுகளுக்கு அழுத்தங்கள் பிரயோகிப்பதற்குப் பதிலாக அவற்றுடன் சமரசம் செய்துகொள்கிறது. தான் சார்ந்த பிரிவோடு புலிகள் சமரசம் செய்துகொண்டதன் பலனை முள்ளிவாய்க்காலில் ஏற்கனவே அனுபவித்துள்ளோம். சமரச அரசியல் தோல்வியில் மட்டும் தான் முடியும் என்பதை அடித்துக் கூறக்கூடிய ஒரு காலத்தில் வாழ்கிறோம்.

   //ஆட்சியதிகாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி இருக்குமானால் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அக்கட்சி மறுக்கும் என நான் கருதவில்லை.// மார்க்சிஸ்ட் கட்சிக்கும் காங்கிரசிற்கும் இந்தியா வெளியுறவுக் கொள்கையில் எந்த முரண்பாடும் இருப்பதாக நான் கருதவிலை.

  2. நட்புடன் யமுனாவிற்கு….

   தங்கள் விளக்கமான பதிலுக்கு நன்றிகள்….
   தங்களின் பல கருத்துக்களில் உடன்பட்டபோதும்….
   பின்வரும் சில விடயங்களில் உடன்பட முடியாதுள்ளது…

   அதாவது …

   “விடுதலைப் புலிகளின் கடந்த கால அரசியலின் தொடரச்சி இது என அவர்கள் அறவித்திருப்பதில் வரலாற்று விமர்சன உணர்வை விடவும் தமது அணிகளையும் தமது ‘கனவுமயப்படுத்தப்பட்ட’ மேற்கத்திய தமிழ் வெகுமக்கள் ஆதரவையும் தக்கவைப்பதற்கான அவர்களது தந்திரோபாயம் என்கிற கூறும் இதில் இருக்கிறது எனப் புரிந்துகொள்கிறேன். ”

   என நீங்கள கூறும் பொழுது ….ஒரு கேள்வி எழுகின்றது…அதாவது
   தந்திரோபாயத்திற்காக மனிதர்களது முட்டாள்தனமான நம்பிக்கைகளின் அடிப்படையில் அவர்களின் வெறும் ஆதரவிற்காக…
   தவறான ஒரு தந்திரோபாய செயற்பாட்டை முன்னெடுப்பது அடிப்படையில் தவறானதல்லவா?…..

   இதற்குமாறாக நீங்கள் கூறுவது போன்று கனவுமயப்பட்டிருக்கும் பொது மனிதர்களின் கனவை
   கனவு என அவர்களுக்கு புரியவைப்பதுடன்
   தொடர்ந்தும் தவறானதை பின்பற்றாது கடந்தகால தவறுகளை உணர்ந்து பொது மனிதர்களின் முன்னிலையில் வைத்து பின்
   ஆரோக்கியமான ஒரு புதிய ;பாதையில் தொடர்வதுதான் சரியானது என நான் நினைக்கின்றென்….

   இதன் அர்த்தம் அவர்களது அழுத்த அரசியல் செயற்பாடகளை நிறுத்தக் கோருவதல்ல….

   அதேநேரம் இவர்கள் அழுத்தம் கொடுக்கும் அரசியலை முன்னெடுக்கின்றார்கள் என்பதற்காக அவர்களது தவறான அரசியலையும் தந்திரோபாயங்களையும் விமர்சிக்காமல் ஏற்றுக்கொள்வது என்பது நமது கடந்தகால பண்பையே காட்டுகின்றது….அதாவது புலிகள் தமது உயிரைக் கொடுத்துப ;போராடுகின்றார்கள். ….நாம் ஒன்றும் செய்யவில்லை….ஆகவே அவர்களது தவறுகளை பெரிதுபடுத்ததாது அவர்கள் செயற்படும் நோக்கத்திற்காக ஒத்துழை;ப்பபோம் அல்லது இடைஞ்சல் செய்யாது இருப்பொம் என்பது போல் அல்லவா இருக்கின்றது……

   என்னைப்பொறுத்தவரை ….அவர்கள் செயற்பாட்டளவில் முன்னெடுப்பது சரியான விடயமான இருந்தபோதும்….அடிப்படை அரசியல் நேர்மை இல்லாதவர்களாக இருக்கின்றனர்….. இவ்வாறன அரசியல் நமது இலக்குகளை சென்றடையாது என்றே உணர்கின்றேன்….

   மறுபுறம் மார்க்ஸிய வாதிகள் தம்மை புனரமைப்பு செய்யாதவரை அவர்களது செயற்பாடுகளால் கோட்பாடுகளால் அடக்கப்படும் மனிதர்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்பதில் எனக்கும் வேறு கருத்து இல்லை……

   மேலும் நீங்கள ;கூறுவது போன்று இன்றைய அரசியல் போக்கில்…நாம் அந்த முகாம் இந்த முகாம் என பரிந்திருக்கவேண்டியதில்லை….அடிப்படையில் நமது அரசியல் அடக்கப்பட்ட மனிதர்கள் சார்ந்திருக்கும் பொழுது….அதற்கு சாதகமான சார்பான அரசியலை; யார் முன்னெடுக்கின்றார்ளோ அவர்களுடன் ஒன்றினையலாம்…அதாவது நமது அடிப்படைய அரசியலையும் அதன் நோக்கத்தையும் மாற்றாது மற்றும் பாதிக்காதவகையில் நமது செயற்பாடுகளையும் தந்திரோபாயங்களையும் வகுக்கலாம்….

   நட்புடன் மீராபாரதி

 41. நான் எழுதிய கருத்தில் சில வரிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. இது எனக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.என்ன காரணத்திற்காக என் வரிகள் தணிக்கை செய்யப்பட்டது என்பதை இனியொரு ஆசிரியர் குழு தெரிவிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

 42. மனித உரிமைப் பிரச்சனையும் இவ்வாறே தான். அது சமூகத்தின் மேற்கட்டுமானத்தின் முரண்பாடுகளின் மோதலின் விளைவானதே. அதன் தாக்கம் பொருளில் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை ஆனல் அது தீர்மனகரமான பாத்திரம் வகிப்பதில்லை. இயல்பான சமூக வளர்ச்சி பல வருடங்களின் முன்னமே தடுக்கப்பட்டதன் எதிர் விளைவான மோதல் தான் இன்று உலகம் முழுவதும் நடைபெறுகிறது : நாவலன்.

  அன்புள்ள நாவலன்-

  உங்களின் இந்தப் பார்வையுடன் நான் கடுமையாக முரண்படுகிறேன். ஸ்டாலினியப் படுகொலைகள் நியாயப்படுத்தப்புடுவதற்கான – அமெரிக்காவின் ஈராக் படுகொலைகளை நியாயப்படுத்துவதற்கான வரலாற்றுரீதியான தர்க்கம் இதுதான். காரணங்களே வேறு வேறு வகைகளில் சொல்லப்படுகிறது. மனித உரிமைi தொடர்பான மாரக்சிய நடைமுறை தொடர்பாக இந்த உரையாடல் திரும்ப வேண்டும் என விரும்புகிறேன்.

  அன்புடன் யமுனா ராஜேந்திரன்

  1. நட்புடன் யமுனா,
   எனது பார்வைக்கும் நீங்கள் குறிப்புடும் சம்பவங்களுக்கும் என்ன தொடர்பிருக்கின்றது என்பது எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை. மனித உரிமை என்பதை மார்சியப் பகுப்பாய்வு என்பது பொருளியல் நோக்கிலிருந்து அணுகவில்லை என்பதை மட்டும் தான் நான் கூறுகிறேன். அதில் என்ன தவறு காண்கிறீர்கள்?
   இப்போது நீங்கள் மனித உரிமை குறித்து எனது கருத்தைக் கோரினால் அதனைக் கூறலாம். மனித உரிமை என்பது எப்போதுமே நடுநிலையானதாக இருந்ததில்லை அப்படி இருக்கவும் முடியாது. ஈராகில் மனித உரிமை குறித்துப் பேசினால், அல்லது ஆப்கானிலும் இதை ஒத்த நிலைதான், அதன் அரசியலைப் புரிந்து கொள்ளலாம். முதலில் இஸ்லாமிற்கு எதிரான மேற்கு ஒன்று உருவாக்கப்படுகிறது. சாமுவேல் ஹன்டிங்டன் காலத்திலிருந்தே இது ஆரம்பிக்கப்பட்டிவிட்டது. பின்னர் இஸ்லாமிய அடிப்படைவாதம் வளர்த்தெடுக்கப்படுகிறது. ஈராக் ஆக்கிரமிக்கப்படுகிறது.
   இப்போது ஆக்கிரமித்த இராணுவத்தின் மனித உரிமை மீறல் குறித்துப் பேசப்படுகிறது. மக்கள் மத்தியில் இவற்றையெல்லாம் மீறி இஸ்லாமிய எதிர்ப்புணர்வே மேலோங்கியிருந்தது. ஆக, மனித உரிமை மேற்கின் அரசியலில் அமிழ்ந்து வெற்றுக் கோசமாக மாறிவிடுகிறது.
   இலங்கையில் போர் நடந்துகொண்டிருந்த போது இலங்கை அரசு நாட்டையும் மக்களையும் புலிகளின் ப்யங்கரவாதத்திலிருந்து விடுவிப்பதாகத் தான் தென்னிலங்கையில் பிரச்சாரம் மேற்கொண்டனர். பல்லாயிரம் அப்பாவிகளின் அவலலக் குரல்கள் தெற்கிலும் ஒலித்தது. சிங்கள மக்கள் மத்தியில் சிங்கள பௌத்த உணர்வும், “பயங்கரவாதத்திற்கு” எதிரான உனர்வும் தான் மேலோங்கியிருந்தது. ஆக, சிங்கள மக்களைப் பொறுத்தவரை மனித உரிமை பேரினவாத அரசியலில் அமிழ்ந்து வெற்றுக் கோசமாக மாறிவிட்டது.
   அதே வேளை மக்கள் கூட்டத்தின் மீது அவர்கள் தமது வாழ்விற்காகப் போராடும் போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இராணுவத்தின் மீது தம்மைத் தற்காத்துக்கொள்வதற்காக நடத்தும் தாக்குதல் மனித உரிமை மீறலாகாது. இதனையே அரச இராணுவத் தரப்பு மனித உரிமை மீறல் என்று கூறும். ஆக, அரசியலின்றி மனித உரிமைப் பிரச்சனை இல்லை. ஆனால் இன்றைய அரசியல் சூழலில் அது முக்கியத்துவப்படுத்தப்பட வேண்டும் அதுவும் ஒடுக்கு முறைக்கு எதிரான அரசியல் சார்ந்து. இங்கு அரசியல் தெரிவை ஆராய்ந்து முடிவுசெய்யும் அற்புதமான ஆயுததைப் பொருள்முதல்வாதம் எமக்குத் தந்துள்ளது.

   1. பொருள் முதல்வாதம் ஒரு “சார்புநிலையற்ற(சார்பு ஹேகலின் இயங்கியல்) சமூக விங்ஞானம் கிடையாது”!.
    இயற்பியலின்,இயற்கை விதிகள் வேறு,சமூகவிஞ்ஞானம் அப்படி இன்றுவரை வரையறுக்க முடியவில்லை!.
    /இலங்கையில் போர் நடந்துகொண்டிருந்த போது இலங்கை அரசு நாட்டையும் மக்களையும் புலிகளின் ப்யங்கரவாதத்திலிருந்து விடுவிப்பதாகத் தான் தென்னிலங்கையில் பிரச்சாரம் மேற்கொண்டனர்./–இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவளித்த சமூக “ஒழுங்கு முறைகளை” அராய்ந்தீர்களா?.இந்த..
    ”ஒரு “நியாய பூர்வமான அணுகுமுறைகள் போல்” “முள்ளியவாய்க்கால்கள் முகத்தில் அறையப்படுகின்றன”!. காலனித்துவ காலத்தில் இத்தகைய போக்குகளை ஆதரித்தவர்களே, இதற்கு இயல்பாக, ”உடல் மொழி ரீதியில்” ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள்!”…. ஆதரவில்லாமல் நிச்சயமாக “ஒடுக்கப்பட்டவர்களின் குரல்” ஒடுக்கப்பட்டிருக்காது என்பது தெற்காசிய வரலாறு!.சாதிய ஒடுக்கு முறையை இங்கு குழப்பிக் கொள்ளவேண்டாம்.என் அனுபவப்படி,தமிழகத்தில்,இருபது ஆண்டுகளுக்கு முன்பே,”பரிணாம வளர்ச்சிப்படியே?”, அற்றுப்போயிருந்த,சாதிய அச்சுப்படிவங்கள் தற்போது உயிர்வாழ்வது,ஆராய்ச்சி நூல்களிலும் அதனை ஒட்டிய அரசியலிலும்தான்!.

  2. நாவலன்:
   மனித உரிமையின் அரசியல் பற்றி நோம் சொம்ஸ்கி விலாவாரியாக எழுதியுள்ளார்.
   மனித உரிமை என்பது எதிரிகட்கு மாறாகப் பயன்படும் அரசியல் ஆயுதம் என்பதை அவர் பல இடங்களில் விளக்கியுள்ளார்.
   வர்க்கப் போரட்டம் உள்ளளவும், அரசு உள்ளளவும், மோதல்கள் இருக்கும். உரிமை மீறல்களும் நிகழும். அதனால் எல்லாமே சரியாகி விடா. ஒவ்வொன்றையும் அதன் அகப் புறச் சூழல்களிலேயே விளங்கிக் கொள்ள வேண்டும்.
   ஸ்டாலினைப் பற்றிச் சீறுகிற சொந்தப் பேர்ச் சிங்கம் ஏன் இந்திராவின் எமர்ஜன்சி ஆட்சியின் போது அத்தனை அட்டூழியங்களுக்கும் ஆமாப் போட்ட சி.பி.ஐ. பற்றிப் பேச மறுக்கிறார்?
   சி.பி.ஐ. அதைப் பற்றிச் சுய விமர்சனம் செய்யவில்லை. மாறாக சி.பி.எம்முடன் ஒப்பிட்டால் தாங்கள் பரவ்யில்லை என்று நியாயப்படுத்தினார்கள்.
   தேசிய இனப் பிரச்சனைகள் பற்றி இரண்டு மோசடிக் கும்பல்களதும் நிலைப்பாடென்ன? சுய நிர்ணய உரிமையை ஏன் மறுக்கிறார்கள்?
   இலங்கை பற்றி இரண்டு கட்சிகளும் 1998 முற்பகுதி வரை எடுத்த நிலைப்பாடென்ன? சி.பி.ஐ. பாண்டியனின் சொற்களை –எமர்ஜன்சியை அவர்கள் மறந்தது போல– அவர்களது தொண்டரடிப் பொடிகளும் மறந்திருக்களம். நம்மால் மறக்க முடியுமா?
   ஈழத்துத் திரிபுவாதிகளுக்கு இந்தியத் திரிபுவாதிகள் சற்றும் சளைத்தவர்களல்ல.
   மாஒவாதிகளுடனும் பிற மார்க்சிய லெனினியவாதிகளுடனும் சேர்த்து, எல்லாருக்குமாகப் பொது இடதுசாரி அடையாளமிட்டு அவர்களுக்குக் கவுரவம் தேடும் முயற்சி பலிக்காது.

 43. யமுனா மற்றும் யதீந்திராவின் கருத்துக்களை படிக்கும் போது இவர்களுக்கு மாக்சியம் குறித்து ஆழமான வாசிப்பு இல்லை என்பது மட்டுமல்ல மாக்சியவாதிகள் மீது நல்ல மதிப்பும் கிடையாது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இங்கு இவர்கள் வெளிப்படுத்துவது தங்கள் அறியாமையையே ஒழிய ஆக்கபூர்வமான கருத்துக்களை அல்ல.

  புரட்சியாளர்களால் ஏன் இன்னும் புரட்சி செய்யவில்லை என்று யதீந்திரா கேள்வி எழுப்புகிறார். இதற்கு பல புரட்சிகர கட்சிகள் விரிவான விளக்கங்களை முன்வைத்திருப்பதை இவர் அறியவில்லையா? அல்லது படிக்கவில்லையா? குறைந்தது சண்முகதாசன் எழுதிய “ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்” என்னும் நூலையாவது படித்திருந்தால் இப்படி ஒரு கேள்வியை நிச்சயம் கேட்டிருக்கமாட்டார். சரி அதை விடுவம். இவர் சொல்லுறது போல் செந்தில்வேல் கட்சியினர் புரட்சி செய்யாதது தவறுதான் என்று வைத்துக் கொள்வோம் .ஆனால் அவர்கள் தமிழ் மக்களை அழிக்கவில்லையே. .பல்லாயிரக்கணக்கான மக்களின் படுகொலைக்கு அவர்கள் காரணமாக இருக்கவில்லையே..மாறாக இதனை அன்று சுட்டிக்காட்டியதுடன் புலிகளின் மரண அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் எவ்வித துரோகத் தனங்களுக்கும் இடங்கொடாது மக்களுக்காக புரட்சிகரப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். நியாயமாகப் பார்த்தால் இதற்காக புலிகளும் மகிந்த ராஜபக்சாவும்தான் செந்தில்வேல் கட்சியினர் மீது கோபப்படவேண்டும்.. ஆனால் உண்மை இப்படி இருக்க யதீர்திராவுக்கும் யமுனாவுக்கும் ஏன் புரட்சியாளர்கள் மீது இத்தனை கோபம் வருகிறது என்று விளங்க முடியவில்லை?

  ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை தூக்கியெறியும் பலாத்கார நிகழ்வே புரட்சியாகும். அந்த புரட்சிக்காக உழைப்பதே ஒரு கம்யுனிஸ்ட்டின் வரலாற்று கடமையாகும் என்று மாக்ஸ் கூறுகிறார். ஆனால் தன்னை ஒரு மாக்சியவாதியாக கூறிக்கொள்ளும் யமுனா அவர்கள் இது பற்றி ஏன் எதுவும் கூற மறுக்கிறார்? மாறாக மனித உரிமை பற்றி பேசுவதும் அதற்கான அழுத்த அரசியலையுமே(அவர் மிக கவனமாக ஆயுதப் போராட்டம் பற்றி எதுவும் கூறாமல் தவிர்ப்பதை அவதானியுங்கள்.)புரட்சிக்கான வழியாக முன்மொழிகிறார். ஸ்டாலினிசதுக்கு எதிராக அன்று குருசேவ் “சமாதானமும் சகவாழ்வும்” என்பதற்கு என்ன மாய வார்த்தைகளை கையாண்டு திரிபுவாதத்தை புகுத்தினாரோ இன்று அவரின் வாரிசாக யமுனா அவர்களும் அதே வார்த்தைகளை பயன்படுத்தி திரிபுவாதத்திற்கு வளம் சேர்க்கிறார்.
  (குறிப்பு- யாருக்காவது நான் கூறுவதில் சந்தேகம் இருந்தால் “மாபெரும் விவாதம” என்னும் நூலில் ஸ்டாலின் குறித்த அத்தியாயத்தில் சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் விமர்சனத்தைப் படித்துப்பாருங்கள்.)

  மாக்சியம் ரஸ்சிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டபோது அது லெனிசமாக வளர்ந்தது.அதுவே பின்னர் சீனாவில் அதன் நிலைமைக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்ட போது அது மாவோசிசமாக வளர்ந்தது. எனவேதான் இந்திய புரட்சியாளர்கள் மண்ணுக்கேற்ற மாக்சியம் என்னும் சொல்லை பயன் படுத்துகின்றனர். இதேபோல் இலங்கை சூழ்நிலையை ஆராய்ந்த கம்யுனிஸ் கட்சியினர் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்வைக்கின்றனர். எனவே இதை ஆராய்ந்து இதில் தவறுகளை சுட்டிக் காட்டுவதை விடுத்து வெறுமனே மரபு மாக்சியர்கள் என மொட்டையாக விமர்சித்தால் அதன் அர்த்தம் என்ன? ஒன்று இவர்களுக்கு மாக்சிய வரலாறு தெரியவில்லை அல்லது இவர்களுக்கு மாக்சியம் புரியவில்லை என்றுதானே எண்ணத் தோன்றுகிறது.

  இதுவரை இந்திய திரிபுவாதக் கட்சிகளான சி.பி.ஜ மற்றும் சி.பி.எம் கட்சிகளை மார்சிய கட்சிகளாக நம்பி வந்த யமுனா அவர்களுக்கு இன்று அக் கட்சியினர் தவறானவர்கள் என்றவுடன் சகட்டு மேனிக்கு எல்லா மாக்சியவாதிகளையும் தூற்றுகிறார்.ஆனால் இந்திய புரட்சிவாதிகள் இக் கட்சியினரை திரிபுவாதிகள் என்று பல வருடங்களுக்கு முன்னரே சுட்டிக்காட்டி விட்டனர் என்பதை யமுனா கவனத்தில் கொள்ள வேண்டும்.

 44. மனித உரிமை குறித்து இங்கு உரையாடும் யமுனா முதலில் மனித உரிமை என்றால் என்ன? தான் எந்த மனித உரிமை பற்றி கதைக்கிறேன் என்பதை விளக்க வேண்டும். ஏனெனில் “பேச்சு சுதந்திரம் எழுத்துச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம்” இவைதான் முக்கியமான மனித உரிமைகள் என்று சிலர் கூறுகின்றனர்.இன்னும் சிலர் “உணவு உடை உறையுள்” என்பனவே முக்கியமான மனித உரிமை என்றும் கூறுகின்றனர். எனவே இங்கு யமுனா எந்த மனித உரிமை பற்றி கதைக்கிறார் என்பதை முதலில் தெளிவு படுத்த வேண்டும்.

  அடுத்து மாக்சியவாதிகள் மனித உரிமை குறித்து அக்கறை கொள்வதில்லை என்கிறார்.அவர் இதை என்ன அடிப்படையில் கூறுகின்றார் என்று புரியவில்லை? ஆனால் நான் அறிந்த வரையில் முதலாளித்துவம் இன்று பேசும் கொஞ்ச மனித உரிமைகளுக்கும் மாக்சியவாதிகளின் போராட்டம்தான் காரணமாக அமைந்துள்ளது.
  இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஜ.நா மன்றம் அமையவும் அதில் மனித உரிமைகள் பற்றிய விதிகள் இடம்பெறவும் பெரும் பங்காற்றியது ஸ்டாலின் தலைமையிலான சோவியத் அரசே. அத்துடன் தொழிலாளிக்கான எட்டு மணிநேர வேலை மற்றும் சிறுவர் வேலை ஒழிப்பு உலகம் முழுவதும் வருவதற்கு மாக்சியவாதிகளின் போராட்டம்தானே காரணமாக இருந்தது. பாசிதத்தின் பிடியில் இருந்து மக்கள் விடுதலை பெறவும் இனங்கள் சுயநிர்ண உரிமை பெறவும் தேசங்கள் விடுதலை பெறவும் மக்கள் சுதந்திரம் பெறவும் மாக்சியவாதிகளின் போராட்டம்தானே காரணமாக இருந்தது என்பதை யமுனாவால் மறுக்க முடியுமா?

  மேலும் இந்தியாவில் நக்சலைட் புரட்சியாளர்கள் பல வெளிப்படையான அமைப்புகளை நிறுவி அதன் மூலம் மனித உரிமைக்காக குரல் கொடுத்து வருவதை அறிய முடியும். குறிப்பாக வழக்கறிஞர் பக்தவச்சலம் அவர்களின் தலைமையில் இயங்கிய “மக்கள் உரிமைக்கழகம்” செய்த பணிகளை யமுனா அறியவில்லையா அல்லது மறந்துவிட்டாரா? முக்கியமாக பாசிச இயக்கமான புலிகள் இயக்கத்தினரே கருணாகர அடிகளார் தலைமையில் ஒரு அமைப்பை உருவாக்கி மனித உரிமைக்கு(?) குரல் கொடுத்திருக்கும்போது மக்களுக்காக போராடும் மாக்சிய அமைப்புகள் எப்படி அதனை தவிர்க்கின்றன என யமுனாவால் கூறமுடிகிறது.!!!

 45. சி.பி.ஜ மற்றும் சி.பி.எம் கட்சிகளை மார்சிய கட்சிகளாக யமுனா காட்டுவது நகைப்பிற்கு உரியது. 1960 களிலேயே ரஷ்யா கம்யுனிச பாதையை கைவிட்டது.ஸ்டாலின் உயிரோடு இருந்த போது அவர் என்னுடைய ஆசான் என்றும் ,என் தந்தைக்கு சமமானவர் என்றும் விதவிதமாக புகழ்ந்த
  குருஷேவ் கட்சின் தலைமை பொறுப்பேற்றவுடன் கொடுங்கோலன் ,சர்வாதிகாரி என்று தூற்றினார்.உள்ளே இருந்து வந்த இந்த துரோகம் மேற்குலகின் தூற்றுதலுக்கு மேலும் உரம் ஊட்டியது.திரும்ப திரும்ப பொய்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன .புதிதாக வெளிவரும் செய்திகளில் ஸ்டாலின் காலத்து கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்தது. மார்க்க்சியத்தை தூற்ற மேற்குலகம் கண்டுபிடித்தது தான் ஸ்டாலினிசம் என்பது.” ஸ்டாலினிசம் ” அப்படி ஒன்று கிடையாது.இதை மாவோ போன்ற மாக்க்சிய – லெனினிய வாதிகள் நிராகரித்திருக்கிறார்கள்.திரும்ப திரும்ப பொய்யை சொன்னால் ,அவை உண்மை என்றாகி விடாது.ஸ்டாலின் முதலாளித்துவத்தின் பரம எதிரியாகவே வாழ்ந்தார்.அதனால் தான் ஹிட்லரை விட மோசமானவர் என அவர்கள் சித்தரிப்பது.
  1990 களில் குருசேவின் மகனின் பேட்டி ஒன்று படித்த ஞாபகம் அதில் அவர் ” எனக்கு புகாரினை நடைமுறை படுத்த முடியாமல் போய் விட்டதே என்பது தான் எனது ஆழ்ந்த கவலை ” தனது தந்தை சொன்னதாக சொல்கிறார் .
  மார்க்சியம் மனித உரிமைக்கு என்பது எதிரானது என்பது அறியாமையாகும். “புரட்சி என்பது தேநீர் விருந்தல்ல” என்று கற்பனை மாக்சியவாதிகளுக்கு சொன்னவர் மாவோ.
  பாசாங்கு வேண்டாம் யமுனா அவர்களே.

 46. நான் எழுதிய கருத்தில் ஒரு பந்தி முழுமையாக தணிக்கை செய்யப்பட்டுள்ளது. செந்தில்வேல் சிவசேகரம் போன்ற புரட்சியாளர்கள் பற்றி யதீந்திரா மற்றும் யமுனா ஆதாரம் அற்ற அவதூறுகளை வைக்க அனுமதித்த “இனியொரு” அதற்கு பதில் அளிக்குமுகமாக நான் எழுதியதை தணிக்கை செய்கிறது. இவ்வாறு இந்த இருவரையும் பாதுகாக்கும் இனியொருவின் பங்கை என்னவென்று அழைப்பது?

 47. //ஸ்டாலினைப் பற்றிச் சீறுகிற சொந்தப் பேர்ச் சிங்கம் ஏன் இந்திராவின் எமர்ஜன்சி ஆட்சியின் போது அத்தனை அட்டூழியங்களுக்கும் ஆமாப் போட்ட சி.பி.ஐ. பற்றிப் பேச மறுக்கிறார்?//”கரம்மசாலா

  //”கரம்மசாலா புனைபெயரில் எழுதுவதை தவறல்ல.ஆனால் தங்களுடைய அழுக்குகளை மூடி மறைப்பதற்கு புனைபெயரை பயன்படுத்துவதுதான் பிழையானது. கரம்மசாலா யசிந்திரா மிக முக்கியமான விடயமொன்றை விவாதிக்கின்றார். அதைப்பற்றி உங்கள் அபிப்பிராயத்தை நேர்மையான முறையில் வைக்கப்பாருங்கள். அந்த நேர்மை முறை உங்களிடம் இருந்திரந்தால் நீங்கள் சொந்தப்பெயரிலேயே யமுனா ராஜேந்திரனையும் யசீந்திராவையும் எதிர்கொண்டிருப்பீர்கள். அதுதான் உங்களிடம் இல்லையே.//சுதந்திரப்பிரியன்

  சுதந்திரப்பிரியனின் இவ் அபிப்பிராயத்தை நானும் வழிமொழிகிறேன்.

 48. நாவலன். பொதுவாகவே பின்னூட்ட முறைமையில் சமநிலையுடன் தீவிரமாக உரையாட முடியாது எனக் கருதுகிறவன் நான். கட்டுரை வடிவமும் எடுத்துக் கொள்ளும் காலமும் எப்போதும் உரையாடலை வலுப்படுத்தும் என நினைக்கிறேன். புனை பெயர்களில் உரையாடுவது என்பது முத்திரை குத்தவும் நீர்த்துப்போகச் செய்யவும் நக்கல் செய்யவும் ஆத்திரமூட்டவும் முகத்தை மறைக்கவும் பயன்படலாம். உரையாடலுக்குப் பயன்படாது என தீர்மானமான முடிவுக்கு வந்துவிட்டேன். நான் பல்வேறு இதழ்களிலும் புத்தகங்களிலும் எழுதியதன் தொடர்ச்சியாகவே இங்கும் பின்னூட்டமிடுகிறேன்.அவ்வளவுதான். என்னால் இயலும் போது மறுபடியும் எங்கேனும் இதே உரையாடலைத் தொடர்வேன். இடைவெட்டும் வழிகளில் எங்கேனும் மறுபடி சந்திப்போம். அன்புடன் யமுனா ராஜேந்திரன். 

 49. அவசரப்பட்ட்டுவிட்டீர்கள்.
  “சுதந்திரப் பிரியன்” பின்னர் எழுதியதை வாசித்தீர்களா?
  06/27/2010> 5:21 பி.ப. இடுகை:
  “கரம்மசாலாவக்கு என் தாழ்பணிந்த நன்றிகள். இப்படியான ஆக்க பூர்வமான கருத்துக்கள்தான் இனறைய தேவை. வாழ்த்துகிறேன். தொடர்ந்து இவ்வாறு அக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். மீண்டும் நன்றிகள். ”

  நீங்கள் வழிமொழிவதைச் சுதந்திரப் பிரியன் வழிமொழிவாரா?

  சொந்தப் பேரில் எழுதவதையே தனது தகுதியாக்கி புனைபேரெனத் தான் ஊகித்தவற்றில் எழுதியோரை ய.ரா. கேவலமாக நிந்த்தித்ததைப் படித்து விட்டு, ஏன் “சொந்தப் பேர்ச் சிங்கம்” என்று கூறிப்பிட்டேன் என்று விளங்கிக் கொள்ளுங்கள். தனிப்பட்ட தாக்குதலல்ல இது.
  அவரது பொறுப்பற்ற — இன்னமும் மனவருத்தம் தெரிவிக்க மறுக்கிற — நிந்தனையை நினைவூட்டும் ஒரு சொற் பிரயோகம் மட்டுமே.

  கருத்துக்களை ம்ட்டும் வைத்தே என் விமர்சனங்கள் இதுவரை அமைந்துள்ளன.
  ய.ராவினதோ யதீந்திராவினதோ தனிப்பட்ட அல்லது அரசியற் கடந்த காலங்களை இங்கு எங்குமே தொட்டுப் பேசவில்லை. இந்த இணையத்த்தளதில் பெருமளவும் குறித்த ஒரு கட்டுரை சார்பான இடுகைகளை முன்வைத்தே என் எதிர்வினைகள் உள்ளன.

 50. யமுனா ராஜேந்திரனின் மேற்கோள்கள் மூன்று:
  06/27/2010 அட் 12:03 பி.ப.: “முகமிலிகளோடு உரையாடுவது காலவிரயம் என்’பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.”
  06/28/2010 10:35 மு.ப.: “முகமிலிகள் தொடர்பான எனது நிலைபாட்டை நான் மறுபடி வலியுறுத்துகிறேன். பிறரது நிலைபாடுகள் அவரவரது தேர்வு. அதனை நான் மதிக்கவே செய்கிறேன்” (பிறர் என்பது முகமிலிகள் தவிர்ந்தோரா? அவர்கட்கு மட்டும் தான் ய.ரா. அவரவரது தேர்வுகளை மதிப்பாரோ?)
  07/01/2010 11:43 மு.ப. புனை பெயர்களில் உரையாடுவது என்பது முத்திரை குத்தவும் நீர்த்துப்போகச் செய்யவும் நக்கல் செய்யவும் ஆத்திரமூட்டவும் முகத்தை மறைக்கவும் பயன்படலாம்.
  யமுனா ராஜேந்திரன் ஒரு முக்கியமான மன மாற்றத்துகுள்ளாகியுள்ளார்: “முகமிலிகள்” “புனை பெயர்களில் உரையாடு”வோராகி உள்ளனர். முன்னைய சொற் பாவனை சீண்டுகிற நோக்கமற்றதா?
  அதற்குப் பதிலடி விழுந்த பிறகு தான் இந்த மாற்றம்.
  எனினும் வரவேற்கத்தக்கது.

  புனைபேர்கள் மட்டும் தான் சீண்டலுக்குரிய ஆயுதஙகளில்லை. சொந்தப் பேரிலேயெ அதைச் செய்யலாம். அதை இங்கே சிவசேகரம், செந்திவேல் பற்றி யதீந்திரா செய்துள்ளார்.
  தன்னை மகா வீரவானாகக் காட்ட, அவருக்குத் தென்னிலங்கையிலிருந்து அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளைக் கண்டித்து எழுதும் இருவரைக் கோழைகளாகக் காட்ட வேண்டிய பரிதாப நிலை. அதற்கு யாரும் பதில் சொல்லுமளவுக்கு அந்த இருவரும் அதேயளவு பரிதாபமான நிலையிலில்லை என நினைக்கிறேன்.

 51. யமுனா, கரம்மசாலா,
  சொந்தப் பெயரில் எழுதினால் தான் ஏற்றுக்கொள்வேன் என யமுனா ராஜேந்திரன் கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. குறித்த தொகையான வாசகர்கள் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பார்வையிடுகின்ற ஒரு இணையத்தைப் பொறுத்தவரை அக் கோரிக்கை நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்று என்பது ஒரு புறம். இதன் மறுபுறத்தில் கரம்மசாலா என்பவர் “சொந்தப்பெயர் சிங்கம்” போன்ற சிலேடைகளில் எழுதுவது எந்தப் பலனையும் தரப்போவதில்லை.
  ஒருவர் முன்வைக்கும் ஒவ்வொரு கருத்தையும் எதிர்கொள்ள வலுவிருக்குமானால் இவ்வாறான விவாதங்களைத் தவிர்த்திருக்கலாம். எமது நோக்கம் மக்கள் சார்ந்த கருத்தை சமூகப்பற்றோடு பொதுத் தளத்தில் முன்வைப்பது என்பதே. இந்த வகையில் மற்றவர்களைப் புண்படுத்தாமல் எவ்வாறு கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்துவது என்பது குறித்துக் கற்றுக்கொள்ள நாம் இன்னும் நெடுந்தூரம் பயணிக்கவேண்டியே உள்ளது. தவிர, யமுனா மக்கள் சார்ந்த கருத்தை விவாதங்களூடாக வளர்த்தெடுக்க விரும்பினால் இவ்வாறான சில விடயங்களை கருத்தில் கொள்ளத் தேவையில்லை.யமுனா விவாதத்தைத் தொடர்வதும் கரம்மசாலா யமுனாவின் சொந்தப் பெயர் குறித்த விவாதத்தை தவித்துக் கொள்வதும், இவ்விருவரது பெருந்ததன்மையைக் குறித்துக்காட்டும் என்பதே எனது கருத்து.

  1. நாவலன்
   மன்னிக்க வேண்டும்.
   “மற்றவர்களைப் புண்படுத்தாமல் எவ்வாறு கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்துவது என்பது குறித்துக் கற்றுக்கொள்ளல் ” பற்றி:
   இந்த இணையத் தளம் எத்தனையோ தனிப்பட்ட நிந்தனைகாளை அனுமதிக்க்கிறது. சமூகங்களையும் தேசிய இனங்களையும் பற்றிய நிந்தனைகளை அனுமதிக்கிறது. இவற்றை அனுமதிக்கும் ஒரு இணையத்தளத்தில் “மற்றவர்களைப் புண்படுத்தாமல் எவ்வாறு கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்துவது என்பது குறித்துக் கற்றுக்கொள்ள ” எப்படி வழி தேட முடியும்?
   இலகுவான ஒரு விதி: “சீண்டல்களை விரும்பாதோர் கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியக் கூடாது”.

   இங்கு ஒரு சிலர் தவிர மற்றவர்கள் தங்கள் புனை பேர்களிலே மிகவும் பொறுப்பாகவே தமது கருத்துக்களில் தளம்பலின்றிப் –பல சமயங்களில் தம் தவறுகளை ஏற்றுக் கொண்டு– பங்கேற்று வந்துள்ளனர்.
   (ஒருவர் ஏசி விட்டு ஓடிப் போவதற்காகப் புனைபேரைப் பாவித்தால் அது கீழ்த்தரமானது. அவ்வாறு அரிதாகவே நடந்துள்ளது. அதை வாசகர்கள் எளிதாகவே கண்டு கொள்வர். அத்தகைய இடுகைகள் புறக்கணிக்க வேண்டியன. சிலரது சீண்டும் கருத்துக்கட்குக் கடுமையாகப் பதில் எழுதியுள்ளேன். ஒரு கட்டத்துக்கப் பிறகு புறக்கணிப்பதே உசிதமாகத் தெரிகிறது.).

   இங்கே நடக்கும் விவாதங்கள் யாருடைய கருத்து சரி/பிழை கொள்ளத்தக்கது/தள்ளத் தக்கது, தர்க்கரீதியானது/அல்லாதது, நேர்மையானது/ நேர்மையற்றது என்பதற்கும் மேலாக எந்தக் கருத்து என்பது பற்றியவை.
   புனை பெயரில் எழுதுவோரை “முகமிலிகள்” எனக் குறிப்பிட்டது தேவையற்ற சீண்டல். வீணே பிறரைப் புண்படுத்தும் ஒரு செயல். அது போகச், சொந்தப் பேரில் எழுதுவதையே ஒரு பெரிய தகுதியாக்கிக் கொள்வது சிறுபிள்ளைத்தனம்.

   அடுத்தடுத்த சீண்டல்களின் பயனாகவே “சொந்தப் பேர்ச் சிங்கம்” என்று ஏளனமாகக் குறிப்பிட்டேன். அதன் பின்பு தான் “முகமிலிகள்” என்ற பிரயோகம் கைவிடப் பட்டது. விளங்குகிற மொழியில் எழுதியதாலேயே பயன் கிடைத்தது என நினைக்கிறேன்.

   நான் பார்க்கும் 30 வரையிலான இணையத்தளங்களில் பலவற்றில் அனைத்து இடுகைகளுமே புனைபெயரிலானவை. பிறவற்றில் மிகச் சிறுபாலோரே சொந்தப் பேரில் எழுதுகின்றனர். ஏனெனில் இடுகைகளின் நோக்கம் ஒரு கூட்டத்தில் கேள்வி கேட்பது அல்லது கருத்துரைப்பது போல. பேசுபவர் “கேள்வி கேட்டவரின் பேர் தெரியாவிட்டால் பதில் சொல்ல மாட்டேன்” என்று அடம் பிடிக்க முடியாது. (முகத்தை முற்றாகவே மூடிக் கொண்ட அரபுப் பெண்ணுக்குக் கூடப் பதில் சொல்வதைத் தவிர்க்க இயலாது).

   ய.ரா. இணையத்தளங்களை அறியாதவரல்ல. அவரது கட்டுரைகட்கு வந்த பின்னூட்டங்கள் அவரை மெச்சுகிற தோரணையில் இருக்கும் போது “முகமிலிகள்” பிரச்சனையாக இருந்ததில்லை. இம் முறை இந்திய மேலாதிக்கத்துக்கு வக்காலத்து வாங்குகிற ஒரு கட்டுரைக்குப் (பின்னூட்டங்கள் பற்றிய அவனம்பிக்கையை மீறி) பின்னூட்டமிடப் போய் கடும் பிரச்சனைக்குட்பட்டுவிட்டார். அவ்வளவு தான்.
   எழுப்பப் பட்ட வாதங்களின் பெறுமதியோ கேள்விகளின் செல்லுபடியானமையோ அவருக்கு முக்கியமல்ல.
   ஒரு சமூகப் பிரச்சனை “ஈகோப்” பிரச்சனையாகி விட்டது.

   1. Many responsible people write in their own names.. they stand for what they write…i know there are situation you have to use pseudonym..It always better to have discussions with known MUGAMKAL….it is also productive….some mugamilikal contribution are very good too ,but DELIBERATE MUGAMILIKAL cause really problems. they do not need to fear about the consequences and the side effects of their contributions.it is bit unfair,,,
    ….இம் முறை இந்திய மேலாதிக்கத்துக்கு வக்காலத்து வாங்குகிற ஒரு கட்டுரைக்குப் பின்னூட்டமிடப் போய் கடும் பிரச்சனைக்குட்பட்டுவிட்டார்.
    MR Garammasala you could be able to write above the sentence because you know where he comes from…this is like hitting under the belt.. this is unfair..these are the advantage, these mugamilikal enjoy….

    1. I notice that you sent this feedback very early in response to the very first one.:

     From Sugathy
     Posted on 06/28/2010 at 12:10 am
     Mr paramas comments on zaseenthiras article is politically a very insane view

     Do you place this among “some mugamilikal contribution are very good too” ? — Or you have a face that only I (but perhaps not those who endorse your abuse) fail to see.

     Than muthuku orupothum thanakkuth theriyaathu — so the saying goes?

     1. Pl note my stress on
      politically a very insane view..it is a political view about a political view. like you wrote my effort was as pathetic one. we have to live with this.we don’t need to be nice to each other but.we must have some kind of ethics

      Than muthuku orupothum thanakkuth theriyaathu — if its mean that you see the fault. i am fine with that

   2. So sugathy,
    How do we decide if YOUR HONOUR is a “DELIBERATE MUGAMILI” or an “UNINTENTIONAL” one.
    Intentions apart, a decision to use a pseudonym is deliberate.
    What matters is whether the arguments are valid or not.

    I think that you being dishonest when you claim:
    “….இம் முறை இந்திய மேலாதிக்கத்துக்கு வக்காலத்து வாங்குகிற ஒரு கட்டுரைக்குப் பின்னூட்டமிடப் போய் கடும் பிரச்சனைக்குட்பட்டுவிட்டார்.
    MR Garammasala you could be able to write above the sentence because you know where he comes from”

    The point made by me in the cited Tamil text was made about the main article that went out of its way to defend India. (In fact I was rather surprised by it, since I have read articles by the author earlier in other places. But I made no reference to it). The comment is just as valid for an Indian, a Sri Lankan, or even an Amerindian. What was pointed out was an attempt to defend the indefensible. (I am not sure if are suggesting that Yathindra is from India).
    My comments were based entirely on the contents in this website in the names of Yathindra and Yamuna R. If you can, find a single instance where I have referred to the positions taken by either anywhere else.Tell me if I contradict myself or resort to lies or distort facts. I am ever ready to correct myself.

    I do hit back hard when people descend to low levels. That right I will retain.

 52. இதுவரை நாவலனுக்கு பதில் அளித்து வந்த யமுனா அவர்கள் தான் இனி எழுதப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். அதற்கு காரணமாக புனை பெயரில் எழுதுவதை குறிப்பிடுகிறார். அப்படியாயின் நாவலன் என்பது அவரின் சொந்தப்பெயர் அல்ல புனை பெயர் என தான் இப்போது கண்டு பிடித்திருப்பதாக சொல்ல வருகிறாரா?

 53. அன்புள்ள நாவலன். நான் இதுவரை மீரா பாரதி யதீந்திரா மற்றும் உங்களுக்குத்தான் எதிர்விணை செய்துவருகிறேன். இணையவெளி தொடர்பான என் அனுபவமே எனது நிலைபாட்டுக்குக் காரணம். பதட்டமில்லாமல் ஆத்திரப்படாமல் உரையாடலில் ஈடுபட அதற்கான மனநிலை அவசியம். அந்த மனநிலை இந்த வழியிலேயே எனக்கு வாய்க்கிறது. இதற்கு மேல் இது குறித்துச் சொல்ல ஏதுமில்லை. நான் எனது கருத்துக்களை தொடர்ந்து இந்த வழியில் சொல்லிக் கொண்டேயிருப்பேன். கட்டுரை வடிவமே மாறுபட்ட கருத்துக்களை வரையறைக்குள் ஒழுங்குபடுத்திக் கொண்டு சொல்வதற்கான வடிவம். மேலதிகமாக சில விளக்கங்கள் சொல்வது மட்டுமே பின்னூட்டத்தில் சாத்தியம். வேறு வேறு அன்றாட பணிகளுக்கிடையில் பின்னூட்ட உரையாடல் ஒரு கட்டத்திற்கு மேல் எடுத்துச் செல்லப்படுவது சாத்தியமில்லை. மறுபடி சந்திப்போம். அன்புடன் ராஜேந்திரன்.

  1. இந்த கருத்து ஏற்புடையதென்றே நினைக்கின்றேன். நான் அதிகம் இவ்வாறு உரையாடல்களில் பங்கு கொண்டதில்லை. இது வரை நான் அதிகம் எழுதி வந்த தளங்களில் அவ்வறானதொரு நடைமுறை இருந்ததுமில்லை. எனினும் நாவலன் யமுணா மீராபாரதி போன்றவர்களின் உரையாடல்கள் ஆக்க பூர்வமானவையாகவும் மேலும் சில விடயங்கள் குறித்து சிந்திப்பதற்கான அடித்தளத்தையும் வழங்கியிருந்தன. என்னளவில் இணையவெளி உரையாடல்களின் இலக்கு இவ்வாறான தன்மையில்தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான சந்தர்பங்களில் அவ்வாறு அமைந்திருப்பதில்லை என்பதுதான் உண்மை. யமுணா சொல்லுவது போன்று தமது முகத்தை காட்டிக் கொள்ள முடியாதவர்கள் இன்னொருவர் பற்றி என்னவாறான கருத்துக்களையும் வழங்க முடியும். சவால்களை விட முடியும் ஏனென்றால் அவர் தன்ளவில் பொறுப்புக் கூற வேுண்டியவர் அல்ல. இதனையே அவ்வாறானவர்கள் தமக்கான பலமாக காட்டிக் கொள்ள விரும்புகின்றனர். இணையவெளி உரையாடல்களின் பாதகமான பக்கமே இதுதான். யமுணா சொல்லுவது போன்று இது உரையாடல்களை நீர்த்துப் போகச் சொய்யவேு வழிவகுக்கும். எனது பின்னூட்டங்கள் முழுவதும் எனக்கு அளிக்கப்பட்ட பதில்கள் அடிப்படையிலேயே எழுதியிருக்கிறேன். இங்கு சிலரது பெயர்களை நான் பாவித்திருப்பதும் எனக்கு வழங்கப்பட்ட பதில்களில் இருந்தே. அவ்வாறில்லாது அந்த குறிப்பிட்ட பெயர்களை இங்கு பயன்படுத்த வேண்டிய தேவை எனக்கு இல்லை. பின்னூட்டங்களில் அவை என்னைக் குறித்து பயன்படுத்தாது விடப்பட்டிருக்குமானால் அவை என்னாலும் கையாளப்பட்டிருக்காது. நாம் அனைவரும் பிறிதொரு விடயத்தில் மீண்டும் சந்தித்துக் கொள்வோம். ஒவ்;வொருவருக்கும் நம்பிக்கை சார்ந்து வேறுபட்ட நிலைப்பாடுகள் இருக்கலாம். அது அவர் வ ரித்துக் கொண்டிருக்கும் கருத்தியலால் அல்லது அவர் சார்ந்து நிற்கும் அமைப்புக்களால் மேலும் சிலர் தமது கடந்தகால அனுபவங்கள் வழி சிந்திப்பதால் என பல்வேறு நிலைகள் சார்ந்து ஒருவர் சிந்திக்கக் கூடும். அவ்வாறானவர்கள் தமக்கான கதாநாயகர்களாகவும் சிலரைக் கருதிக் கொள்ளக் கூடும். இது அவர்களின் உரிமை சார்ந்தது. ஆனால் அவ்வறானவர்கள் தம்மைப் போன்று மற்றவர்களும் இது போன்ற ஒன்றில் நம்பிக்கை கொள்வதற்கும் அது குறித்து சிந்திப்பதற்கும் உரித்துடையவர்கள் என்பதை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு சிந்தித்தால் கருத்தை கருத்ததாக பார்த்து விவாதிக்க முடியும். தேவைற்ற வசைகளை தவிர்த்துக் கொள்ளலாம். விதண்டாவாதங்களையும் தவிர்த்துக் கொள்ளலாம். ஒருவரது அறிவு சம்மந்தமாக சவால்கள் விடுவதையும் தவிர்த்துக் கொள்ளலாம். மீண்டும் சந்திப்போம்- அனைவருக்கும் நன்றி. யதீந்திரா

  2. யதீந்திரா “தேவையற்ற வசைகளைப் புறக்கணித்துத்” (தானும் தெவையற்றநிந்தனைகளில் இறங்காமல்) “விதண்டாவாதங்களையும் தவிர்த்து” எழுப்பப் பட்ட முக்கியமான கேள்விகட்குப் பதிலளித்திருக்கலாமே!
   (பொதுவாக நம்முடன் உடன் படுவோர் நியாயமான முறையில் வாதிப்போராகவும் உடன்படாதோர் மட்டுமே விதண்டாவாதங்களில் ஈடுபடுவோராகவும் இருப்பர் என்பது நாம் ஒவ்வொருவரதும் அனுபவமாக இருக்க வேண்டும்!)

  3. நண்பர்கள் ஒன்றாக கூடும்போது சிலனேரம் நமது உரையாடல் விவாவதமாகி விடுவது உண்டு அப்போதெல்லாம் முறீத்துக் கொண்டு வெளீயேறீனால் நட்பு காய்ப்பட்டு விடாதா?

 54. நக்சலைட்டுகள்(பழங்குடி மக்கள் ) மீது பயங்கரவாதிகள் பட்டம் சூட்டி விட்டு நக்சலைட்டுகள் மீது தாக்குதல்களையும் ஆரம்பித்து விட்டு ,,நக்சலைட்டுகள் திருப்பி தாக்குதல் நடாத்தியவுடன் , முகத்தில் சிறு புன்னகையுடன்(வம்புக்கு இழுத்துக்கொண்டே ) ,தன்னை படித்த நாகரீக மனிதனாக காட்டிக் கொள்ளும் செட்டி நாட்டு சிதம்பரத்தின் அசிங்கமான செயலுக்கு ஒப்பாகும் யதீந்திரா,ஜமுனாவின் தப்பி ஓடும் செயல்.

 55. ஒரு முறை நான் தினக்குரல் ஆசிரியருடன் பேசிக் கொண்டிருந்த வேளை தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அழைப்பை மேற்கொண்டவர் முதல்நாள் தினக்குரல் பேப்பரில் வெளியான ஒரு கட்டுரையை சுட்டிக்காட்டி அதை எழுதியவர் யார்? அதை ஏன் பிரசுரம் செய்தீர்கள்? என்று அதிகார தொனியில் கேட்டார். அதற்கு பதில் அளித்த ஆசிரியர் “தவறுதலாக நடந்து விட்டது. இனிமேல் இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்” என்று சமாளித்தார். இது இந்தியாவுக்கு எதிரான ஒரு கட்டுரை பற்றி இந்திய தூதுவராலய அதிகாரி ஒருவரே இவ்வாறு பேசுகிறார் என்பதை அறிந்து நான் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தேன். இங்கு இதனை நான் குறிப்பிடுவதற்கு என்ன காரணம் எனில் இலங்கையில் ஊடகத்துறையில் இந்தியா எப்படி ஆதிக்கம் செலுத்த முனைகிறது என்பதையும் இந்தியாவுக்கு எதிராக கருத்து எழுதுவதும் அதை பத்திரிகைகளில் பிரசுரம் செய்வதும் எந்தளவு சிரமமானது என்பதையும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே. அதுமட்டுமல்ல கொழும்பில் தமிழ் ஊடகவியளாளர் சிலர் எப்படி இந்திய துதுவரலாயத்துடன் தொடர்பு வைத்து வசதிகளை பெற்று வருகின்றனர் என்பதற்கு வீரகேசரி ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த ஒருவர் இந்திய விசா எடுத்துக்கொடுத்து சம்பாதித்ததும் அது பின்னர் வீரகேசரி தினக்குரல் பிரிவின்போது பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டதும் ஒரு சிறந்த உதாரணமாகும். இங்கு கட்டுரை எழுதிய யதீந்திராவுக்கும் இவையாவும் நன்கு தெரியும்.என்றாலும் அவர் அவற்றை மறைத்து எதற்காக இந்தியாவுக்கு ஆதரவான கருத்துக்களை எழுதுகிறார்? அதுமட்டுமல்ல இந்தியாவுக்கு எதிராக கருத்து எழுதுவோரை சர்வ சாதாரணமாக இழிவு படுத்துகிறார்.

  இந்தியாவுக்கு ஆதரவான இக் கருத்துக்கள் இப்போது யதீந்திராவினால் முதன் முதலாக வைக்கப்படவில்லை. இவை காலத்திற்கு காலம் பல் வேறுபட்ட நபர்களினால் பல்வேறு வடிவங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது. அன்று வண்ணை ஆனந்தன் என்பவரால் “இலுப்பம் பழம் பழுத்தால் வெளவால் வரும் “எனக் கூறி இந்திய வருகையை ஆவலுடன் அழைக்கப்பட்டது.அப்போது சண்முகதாசன் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியினர் “ இந்தியா வெளவால் அல்ல.அது ஒரு பிணம் தின்னும் வல்லூறு. அது வருவது தமிழ் மக்களுக்கு நல்லதல்ல” என்றார்கள்.அதேபோல் ஒரு சில சிறிய இயக்கங்களும் “இந்தியா தமிழ் மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரம் அல்ல மாறாக அது எமக்கு ஒரு எதிரி” என்றனர்.ஆனால் இதை எதையும் கருத்தில் கொள்ளாமல் அமிர்தலிங்கம் தலைமையிலான த.வி.கூட்டனியும் மற்றும் அனைத்து பெரிய இயக்கங்களின் தலைமைகளும் “இந்தியா பெரிய நாடு.அதனை பகைத்துக் கொள்வது தற்கொலைக்கு ஒப்பாகும். எனவே இந்தியாவை நாம் பயன் படுத்த வேண்டும்” என்றனர். த.வி.கூட்டனி மற்றும் ரெலோ புலிகள் போன்ற முதலாளித்துவ இயக்கங்கள் மட்டுமல்ல மாக்சியம் பேசி தங்களை புரட்சிகர இயக்கமாக கூறிக்கொண்ட ஈரோஸ் ஈ.பி.ஆர்.எல.எவ் புளொட் இயக்க தலைமைகளும் இவ்வாறு கூறிக்கொண்டன..ஆனால் இவர்கள் கூறியது போல் இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ளவில்லை என்பதையும் இவர்களாலும் இந்தியாவை பயன்படுத்த முடியவில்லை மாறாக இந்தியாவே இவர்களை பயன்படுத்தியது எனபதையும் நாம் இப்போது தெளிவாக காண்கிறோம்.அது மட்டுமல்ல இவர்கள் முன்வைத்த இந்த இந்தியா பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களின் படுகொலைகளுக்கு துணைபோயுள்ளது என்பதையும் “முள்ளிவாயக்கால்” எமக்கு நன்கு எடுத்துக்காட்டியுள்ளது.

  முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்ப்பட்டதை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கவலையிலும் அதிர்ச்சியிலும் உறைந்து போயிருந்த நிலையில் லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு இணையத்தளத்தில் அவசர அவசரமாக ஒரு கட்டுரை முன்னாள் ஈரோஸ் உறுப்பினரால் எழுதி வெளியிடப்பட்டது. மக்கள் எல்லாம் படுகொலைக்கு துணைபோன இந்தியா மீது மிகவும் ஆத்திரமான நிலையில் இருக்கும்போது இந்தியாவுக்கு ஆதரவாக இப்படி ஒரு கட்டுரை இந்த நிலையில் எதற்கு என அந்த உறுப்பினரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “ எனக்கும் இதை இப்ப எழுத விருப்பம் இல்லைத்தான். ஆனால் என்ன செய்வது? சென்னையில் இருந்து இதை உடனடியாக எழுதும்படி வற்புறுத்துகின்றனர் “ என்றார். இங்கு இவர் சென்னை என்று குறிப்பிடுவது அனைவருக்கும் தெரிந்த உளவுப்படையுடன் தொடர்பு கொண்ட ஆய்வு நிறுவனம். இந்த ஆய்வு நிறுவனம் முன்வைத்த கருத்துக்களையே இங்கு யதீந்திரா இன்னொரு வடிவில் நுழைக்க விரும்புகிறார். எனவே இங்கு சிலர் குறிப்பிடுவதுபோல் யதீந்திரா என்பவர் புதிதாக ஆழமாக விடயம் எதுவும் முன்வைக்கவில்லை என்பதோடு அவர் முன்வைத்திருப்பது காலம் காலமாக வைக்கப்பட்ட ஒரு துரோக கருத்து என்பதும் அது எமக்கு முள்ளிவாயக்கால் அழிவுக்கு வித்திட்ட கருத்து என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

  இங்கு யதீந்திராவின் கருத்தில் கவனிப்பதற்கு எதுவும் இல்லை. அவ்வாறு யாரும் சொல்ல முற்பட்டால் இது தெரிந்தோ தெரியாமலோ எதிரிக்கு துணை போவதாகவே இருக்கும். மேலும் இன்றைய நிலையில் இந்தியாவை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தோ இவ்வாறு பயன்படுத்த முயலும்போது மீண்டும் ஒரு முள்ளிவாயக்கால் அழிவு வராது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்பது குறித்தோ யதீந்திரா தனது கட்டுரையில் எதுவும் குறிப்பிடவில்லை. இவை யாவும் குறிப்பிடாமல் நாம் இந்தியாவை பகைத்துக் கொள்ளக் கூடாது என்றால் இது துரோகத்தனம் அல்லாமல் வேறு என்ன? இதை அம்பலப்படுதுவதைத் தவிர வேறு என்ன வேலை புரட்சியாளனுக்கு இருக்க முடியும்? இங்கு யதீந்திரா முன்வைப்பது என்ன என்பதை எளிய வடிவில் வரையறுப்பதாயின் தன்னைப்போல் துரோகத்தனம் செய்யப் போகிறீர்களா அல்லது மக்களுக்காக உண்மையாக போராடப்போகிறீர்களா என்பதே. அதாவது அற்ப சலுகைகளுக்காக காட்டிக் கொடுக்கப்போகிறீர்களா அல்லது மக்களுக்காக அர்ப்பணிக்கப்போகிறீர்களா? வாசகர்களே நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

  1. the main problem with garammasala and thevan is they know better than all the others . .they have the all the ingredients for the revolution,…why then waiting comrades?

  2. Sugathy:
   The point is that irrespective of your opinion of others, a few serious questions had been raised. The two persons who need to answer them ducked them on the pretext that they do not deal with “முகமிலிகள்”. (That may not include you because you are not asking embarassing questons from them).
   Some simple questions need answering, and they have been avoided. If they had been addressed much of the agony could have been spared.
   It is best if you do not get too personal, because what matters are as I pointed out earlier : “இங்கே நடக்கும் விவாதங்கள் யாருடைய கருத்து சரி/பிழை கொள்ளத்தக்கது/தள்ளத் தக்கது, தர்க்கரீதியானது/அல்லாதது, நேர்மையானது/ நேர்மையற்றது என்பதற்கும் மேலாக எந்தக் கருத்து என்பது பற்றியவை”.
   If you do not like it that is your problem

 56. one clarification about mugamiligal,the word.. like peyariligal in print medium, mugamiligal is a word to explain cyberspace anonymity. it is not about a specific person. it is about certain concept. it is nothing wrong to use it. i will use it again and again in my future articles and feedbacks to explain my stands but i won’t answer a word to intentional mugamiligal ( in this case, i know this abusive mugamiligal since a long time. i know my logic ) who wandering.in the cyberspace to slander.  thats the end. no more post in this chain. yamuna rajendran

  1. Mr Yamuna Rajendran should not resort to personal attacks.
   It was heartening to hear the claim that he knows his ‘logic’ — but that logic fails to impress, since for no obviously logical reason he dropped its use in the last of three references to those who use pseudonyms. Again since he has declared that he will not respond to “******” I cannot see any need for him to make any reference to them.
   Leave alone the abusive “******”, why did he fail to responded to the more useful points raised by the unabusive “******” about Indiam intentions about lumping the opportunist left together with the genuine left. Surely, they are not hard questions for a logical person to answer.

   If Mr Y.R. is happy to use the term “******” , then I am glad to return the compliment with a far less offensive — even complimentary — “sonthap perch chingam”. I am sure that Mr Y.R. will be flattered by it.

   As I made clear a while ago to another “mukamili” siding the S.P.Cs, the use of a pseudonym is always “intentional” — for that matter the use of ones given name or an assumed name by which one is known or no name at all.

 57. யதீந்திராவின் கருத்துக்களுக்கு நாவலன் அவர்கள் “ இந்திய அரசை நமக்கு ஆதரவாக மாற்ற முடியும் என்பது அப்பாவித்தனமானது. இந்திய சீன முரண்பாட்டை நாம் கையாள முடியும் எனக் கருதினால் அது கேலிக்கூத்தானது “ என்று பதில் கொடுத்தார். அதற்கு யதீந்திரா அவர்கள் “நாவலன் கள நிலைமை புரியாமல் கற்பனையில் எழுதுவதாக” பதில் தந்தார். அதாவது அவரின் பதில் வாசிப்பவர்களுக்கு “நாவலன் புலத்தில் இருப்பதால் கள நிலைமை தெரியாமல் எழுதுவதாகவே” அர்த்தம் கொள்ள வைத்தது. எனவேதான் இந்த நிலையில் நான் “ கள நிலைமை என்றால் என்ன? அதனை எந்த அளவு கோல் கொண்டு அளவிடுகிறீர்கள் “ என்றும் “புலத்தில் இருப்பவர்கள் கருத்துச் சொல்ல தகுதி இல்லையா?” என்றும் கேட்டேன். அதுமட்டுமல்ல “ உங்கள் வாதப்படி பார்த்தால் செந்தில்வேல் சிவசேகரம் போன்றோர் களத்தில் இருந்துதானே எழுதுகிறார்கள்.ஆனால் அவர்கள் கருத்து ஏன் உங்கள் கருத்துகளுக்கு எதிராக இருக்கிறது” என்றும் கேட்டேன். அதாவது நாவலன் களத்தில் இருந்திருந்தால் தன்னுடைய கருத்தையே கொண்டிருப்பார் என் யதீந்திரா வாதாடியதாலே இங்கு களத்தில் இருக்கும் இருவர் பெயர் என்னால் சுட்டிக் காட்டப்பட்டு விளக்கம் கோரப்பட்டது. இதற்கு நேர்மையாக பதில் அளிக்கத்தவறிய யதீந்திரா அவர்கள் இந்த இருவர்கள் மீதும் விமர்சனங்களை முன்வைத்தார். நாவலன் பதில் வைத்த போது நாவலனைப் பார்த்து நாட்டுக்கு வந்து புரட்சி செய்ய தயாரா என சவால் விட்டார். அதற்கு செந்தில்வேல் சிவசேகரம் போன்றோர் நாட்டில்தானே இருந்து இதனைக் கூறுகின்றனர் என சுட்டிக்காட்டினால் “அவர்கள் கொழும்பில் இருந்துதானே கூறுகின்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கூறவில்லை “ என்று கிண்டலாக பதில் தருகிறார். ஒரு புரட்சியாளன் உலகத்தில் எந்த பகுதியிலும் வாழலாம்.ஆனால் அவன் புரட்சிக்காக உழைக்கிறானா என்பதை பார்ப்பதே முக்கியம். மேலும் செந்தில்வேல் அவர்கள் தமிழீழ விடுதலைக்காக போராடவில்லை. மாறாக அவரது கட்சியினர் ஜக்கிய இலங்கையில் புதிய ஜனநாயகப் புரட்சிக்காகவே உழைக்கின்றனர். எனவே ஜக்கிய இலங்கையில் ஒரு பகுதியான கொழும்பில் அவர்கள் இருப்பது யதீந்திராவின் பார்வையில் எப்படி தவறாக தெரிகிறது? அடுத்து யதீந்திரா கேட்பதுபோல் வடக்கு கிழக்கில் இருந்து புரட்சிக்காக உழைக்கும் பலரை என்னால் இங்கு சுட்டிக்காட்ட முடியும். ஆனால் அப்போது கூட யதீந்தீரா தனது தவறை பெருந்தன்மையுடன் ஒத்துக்கொள்ள மாட்டார். ஏனெனில் இங்கு அவர் அறியாமல் வாதாடவில்லை. தனது தவறுகளை நன்கு தெரிந்து கொண்டே அவற்றை நியாயப்படுத்த வாதாடுகிறார். இதுவே உண்மையாக இருக்கும்போது அந்த இருவர் மீதும் தானாக அவர்களைப் பற்றி விமர்சிக்கவில்லை என்றும் நான் அவர்கள் பெயரைக் குறிப்பிட்டு கேள்வி கேட்டதால்தான் தன்னால் அவர்கள் பற்றி கூறவேண்டி ஏற்பட்டது என்றும் குறிப்பிடுகிறார். இந்த உரையாடல்களை அவதானித்து வரும் வாசகர்கள் இவருடைய இந்த கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவர் வேண்டுமென்றே சம்பந்தம் இல்லாமல் கூறிவிட்டு இப்போது பழியை மற்றவர்கள் மீது போட முனைகிறார். சரி இவர் கூறுவதுபோல் நான் கேட்ட படியால்தான் யதீந்தீரா இவர்கள் பற்றி கூறவேண்டி ஏற்பட்டது என்றால் ஏன் என்னுடைய மற்ற கேள்விகளுக்கு பதில் தரவில்லை? அந்த கேள்விகள் தனக்கு சாதகமாக இல்லை என்பதால்தான் தவிர்த்தாரா?

  யதீந்திரா தனது பதிலில் “ஜந்து தலைக்கு மேல் இவர்களுக்கு ஒன்றும் தெரியாது” என்று வேறு கிண்டல் செய்கிறார். இங்கு இவர் ஜந்து தலைகள் என்று எள்ளி நகையாடுவது மாக்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஸ்டாலின் மாவோ ஆகியோரையே. இந்த மாபெரும் ஆசான்கள் இவருக்கு வெறும் தலைகளாக தெரிவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஏனெனில் இந்திய அரசுக்கு வக்காலத்து வாங்கிறவருக்கு இந்த மாக்சிய ஆசான்கள் வெறும் தலைகளாகத்தானே தெரியும். சரி இவருடைய வாதப்படியே இவர்கள் வெறும் தலைகள்தான் என எடுத்துக்கொள்வோம். அப்படியானால் இவர் என்ன செய்திருக்க வேண்டும்? இந்த ஜந்து தலைகளின் கருத்துக்கள் இந்தக் காலத்திற்கு ஏன் பொருந்தாது என்பதை கூறியிருக்க வேண்டும்? அல்லது இந்த ஜந்து தலைகளுக்கு மேலாக இந்த காலத்தில் என்ன கருத்துக்களை சேர்க்க வேண்டும் என்பதையாவது தெரிவிக்க வேண்டு;ம்? அதுவும் இல்லை என்றால் இந்த ஜந்து தலைகளின் வழியில் மேற்கொள்ள விருக்கும் புதிய ஜனநாயகப் புரட்சியில் என்ன தவறு இருக்கிறது என்பதையாவது சுட்டிக் காட்டியிருக்க வேண்டும். அதை எல்லாம் செய்யாமல் இருந்து கொண்டு வெறுமனே இவர்களுக்கு ஜந்து தலைக்கு மேல் எதுவும் தெரியாது என்று கிண்டல் பண்ணினால் இவர் பற்றி நாம் என்ன மதிப்பீடு கொள்ள முடியும்?

  1. இந்த ஜந்து தலைகளின் வழியில் மேற்கொள்ள விருக்கும் புதிய ஜனநாயகப் புரட்சியில் என்ன தவறு இருக்கிறது என்பதையாவது சுட்டிக் காட்டியிருக்க வேண்டும்.
   When? When is it going to happen? Can you send me a schedule?

  2. எந்தப் புரட்சிக்கும் கால அட்டவணை போட இயலாது. சில சூழல்கள் புரட்சிகளை இயலுமாக்கின்றன. சில இயலாமலாக்குகின்றன.
   ஒரு புரட்சிகரக் கட்சி செய்யக் கூடியதெல்லாம் சாதகமான சூழல்களைச் சரியாகப் பயன்படுத்தமக்களுக்கு வழி காட்டுவதும் சாதகமற்ற சூழல்களைச் சாதகமாக்க வழிகளைக் கண்டறிவதும் தான்.
   கம்யூனிசம் முடிந்து விட்டது என்று அறிவிக்கப்பட்ட்டு ஒரு தசாப்தம் கடக்குமுன்பே நேபாளம் தன் வரலாற்றை மாற்றத் தொடங்கி விட்டது.
   நக்சலைட்டுகள் ஒழிந்து விட்டனர் என்று சொல்லிக் கால் நூற்றாண்டுக்குப் பின்னர் இந்தியாவில் பெரும் பகுதியில் அவர்கள் மக்களை அணி திரட்டிப் போராடுகின்றனர்.

   தமிழ் மக்களைக் குறிப்பிட்ட சூழல்கள் குறுகிய நோக்கில் தவறன ஒரு போராட்டப் பாதையில் தள்ளி விட்டன. அத் தவறுகளினின்று எவ்வளவு வேகமக் கற்று நம்மை நமக்கு நம்பகமான சக்திகட்குநெருக்கமாக்குகிறோமோ அப்போது தான்விடுதலை கிடைக்கும்.
   புதிய ஜனநாயகப் புரட்சி என்பதில் ஒரு பகுதியாகவே தேசிய இனங்களின் விடுதலையும் அமைகிறது.
   புரட்சி என்பது நாலு வீரர்கள் கூடி நடத்தும் வீர சாகசச் செயலல்ல. அதன் நாயகர்கள் மக்கள் மட்டுமே.
   ஒரு மார்க்சிய லெனினியக் கட்சி செய்யக்கூடியது அம் மக்களை அரசியல் அறிவூட்டி, அணிதிரட்டித் தலைமை தங்குவது தான்.
   அப் புரட்சி தேவை என்றால் அதற்கான பணியைச் செய்ய வழிகளைத் தேடுவோம்
   தேவை இல்லை என்றல் அது எப்போது நடக்கும் என்ற கேள்வி நன்நோக்குடையதாக இருக்க இயலாது.

 58. தவறுகளினின்று எவ்வளவு வேகமக் கற்று நம்மை நமக்கு நம்பகமான சக்திகட்குநெருக்கமாக்குகிறோமோ அப்போது தான்விடுதலை கிடைக்கும்.
  நமக்கு நம்பகமான சக்தி
  Do you mean India?

  ஒரு மார்க்சிய லெனினியக் கட்சி செய்யக்கூடியது அம் மக்களை அரசியல் அறிவூட்டி, அணிதிரட்டித் தலைமை தங்குவது தான்.
  Why தலைமை தங்குவது? Can’t that lead to dictatorship of a party?
  A dictatorship over the people ?

  I have some problem with அறிவூட்டி also
  Can’t the people them self arrive to revolutionary consciousness.. Should someone from the outside bring that to them? I thought Marx says “It is not the consciousness of men(no women?) that determines their being, but, on the contrary, their social being that determines their consciousness.”

 59. suagathy, இதற்கு முந்தித் தங்களுடன் பன்முறை உரையாடிப் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில், பயனற்ற இவ் விவாதத்தை மேலும் தொடர எனக்கு ஆர்வமில்லை.
  எதையுமே நீவிர் விரும்பியவாறு வலிந்து பொருள் கொள்ளும் பேராற்றாலுடையீர், இதையும் முன்பு போல் நீவிர் விரும்பியவாறே விளங்கிக் கொள்மின்.
  வாழ்த்துக்கள்.

 60. garammasala wrote

  **The point is that irrespective of your opinion of others, a few serious questions had been raised. The two persons who need to answer them ducked them on the pretext that they do not deal with …..Some simple questions need answering, and they have been avoided****

  The history repeats itself. Isn’t it Gram masala?

 61. Mr Jacintha has raised some important questions here. although the debate has taken wrong direction ..Jaseenthiran view is pragmatic and real politic….

  what he says

  1)ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியா ஒரு நிர்ணயகரமான சக்தி

  2)இந்தியா என்பது ஒரு பிராந்திய சக்தி

  3)இந்தியா மட்டுமல்ல எந்தவொரு பலம்பொருந்திய நாடும் தனது நலன்களைக் கருத்தில் கொண்டே தனது அரசியல், பொருளாதார இராணுவ உறவுகளை பேணிக் கொள்ளுm

  4)இலங்கையில் சிறுபாண்மை இனமான தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கானதொரு பொறிமுறை தேவை என்பதை இந்தியா ஏற்றுக் கொண்டது

  5) இந்திய படைகளின் வெளியேற்றத்தால் வெற்றிபெற்றது பிரேமதாசவும் சிங்களத் தேசியவாதிகளுமே அன்றி புலிகளோ தமிழ் மக்களோ அல்ல

  6).Iலங்கையின் அரசியல் சீன-இந்திய போட்டிக் களமாக மாறியிருக்கிறது.

  7)முன்னர் எப்போதுமில்லாதவாறு சீனா கொழும்புடன் தனது முலோபாய உறவுகளை வலுப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றது
  பல்லாயிரம் கோடிகளை நோக்கமற்று செலவளிப்பதற்கு சீனா ஒன்றும் முட்டாள்தனமான நாடல்ல

  8)இலங்கையில் சீன-இந்திIய முலோபாய போட்டிக்களம் ஒன்று திறக்கப்பட்டிருக்கிறது என்பது துலாம்பரமானதாகும்.
  9)இதனைக் கருத்தில் கொண்டுதான் ஈழத் தமிழர் அரசியலில் இந்தியாவின் வகிபங்கு குறித்து சிந்திக்க வேண்டும்.
  10)இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பங்காற்றும் பொறுப்பு ஈழத் தமிழர் அரசியல் சக்திகளையும் சாருகிறது
  (This is very controversial in deed)

  with some reservation I do not understand why the Maoist are against using contradictions…. after all this is Chairman Mao who said Use the contradiction
  Lenin also used the German Government to go back to Russia from Switzerland where he was in exile..
  I think Using the contradictions is also a revolutionary politics …but we must be careful about being used

 62. 1.

  அன்புள்ள யதீந்திரா,

  டக்ளஸ்பற்றிய உங்கள் உரைகல் என்ன?
  புஞ்சிநிலமே பற்றிய உங்கள் உரைகல் என்ன?

  மக்களது கோவணங்களைக் காப்பாற்றுவதற்கான உடனடியான தீர்வாக டக்ளசின் இணக்கப்பாட்டு அரசியல் காணப்படுவதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மட்டுமல்ல, ஏராளம் மக்களும் புதுவை ரத்தினதுரையின் சொந்தக்காரர்களும் கூட அறிவார்கள்.

  டக்ளசை எதிர்த்துக்கொண்டு, மக்களுக்கு அவர் மூலம் கிடைத்து வந்த, கிடைக்கக்கூடிய கோவணத்தைக்கூட உருவி விடும் செயலை செய்பவர்களை என்ன சொல்கிறீர்கள்?

  புஞ்சி நிலமேயை பயன்படுத்தி திருகோணமலை மக்களுக்கு உடனடி வசதிகள் சிலவற்றைப் பெற்றுக்கொள்வது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

  இந்தியாவோடு இணக்கப்பட்டு சம்பூர் முதலான நிலங்களை எல்லாம் தாரை வார்த்து இன்மையில் இருக்கும் கோவணத்தை மக்களுக்கு வாங்கிக்கொடுப்பத்யை விட, புஞ்சி நிலமையோடு இணக்கப்பட்டு சில கிராமங்களைச் சிங்களச்சகோதரர்களுக்கு வாழ வழங்கிவிடு நிறையக்கோவணங்களை மக்களுக்கு வாங்கிக்கொடுக்கலாமோ என்று உங்கள் கட்டுரையை படித்தவுடன் எனக்குத்தோன்றுகிறது.

  உங்களுக்கு உண்மையில் மக்கள் மீது அக்கறை இருந்தால், புஞ்சிநிலமை அசிங்கமானவராக இருப்பதாகப்பட்டால், ஆகக்குறைந்தது டக்ளசோடு அல்லது கேபீ, கருணாவோடு இணக்கப்பட்டு, அவர்களுடன் இராசதந்திர நலன்கள் அடிப்படையில் சுழியோடு மக்களுக்கு கோவணம் வாங்கிக்கொடுக்கும் பணியிற்கு உங்களாலான ஒத்துழைப்பினை நல்குக.

  2.

  யமுனா கூறும் முகமிலி க்கதை சுத்தப் பார்ப்பனியம். எழுத்துலகப் பார்ப்பனியம். வேறில்லை. அவர் ஆகக்குறைந்தது இணையத்தின் இயக்கங்களை, அது அறிவுப்பரிமாற்றத்தை, உரையாடல்களை மேன்மேலும் சனனாயகப்படுத்தியிருக்கும் போக்குக்களை அறிய ஆர்வம் காட்டலாம்.

  1. டக்லஸ் என்ற ஊரறிந்த திருட்டுப்யல் பற்றி அறிய உரைகல் தேவையில்லை. சாதாரணமாக எல்லோருக்குமே தெரியும்.

 63. hello Inioru-friends

  I enjoyed very much being with inioru , I think it is very informative website.but i have to leave you for some times.. i have my final examinations i am so sorry if i have hurt any of you through my writings..I beg you to pardon me. It was nice being with you
  I will be back after my exams are over (It is a warning)
  good bye

Comments are closed.