இந்தியா நம்பவைத்து மோசம் செய்து விட்டது! :பர்மிய பிரிவினைவாதிகள்.

 rawbarஇந்தியாவில் ஆயுதம் கடத்திய வழக்கை எதிர்கொண்டு வரும் 34 பர்மிய பிரிவினைவாதிகள், இந்திய இராணுவப் புலனாய்வுத் துறை தங்களை நம்பவைத்து மோசம் செய்து விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

”நேஷனல் யூனிடி பார்ட்டி ஆப் அரகான்” ஐ சேர்ந்த இவர்கள் அனைவரும் பர்மிய இராணுவ அரசுடனான இந்திய உறவுகள் மேம்படும் வரை இந்திய உளவுத் துறை தம்முடன் நல்ல உறவுகளை பேணி வந்ததாக நீதிமன்றத்தில் சமப்பிக்கப்பட்ட கையொப்பமிட்ட பிராமாண வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் தொலை தூரத்தில் உள்ள அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு தமது போராளிகளையும் ஆயுதங்களையும் எடுத்து செல்லுமாறு 1998 இல் இந்திய நிறுவனங்கள் சொன்னதாகவும், அதன் பிறகு தமது ஆறு தலைவர்கள் தனியாக அழைத்துச் செல்லப்பட்டு சுடப்பட்டதாகவும் இவர்கள் கூறியுள்ளனர்.