இந்தியா கடும் வறட்சியை நோக்கி…

வடக்கு,வடகிழக்கு மாநிலங்களிலும் வட இந்திய மாநிலங்களிலும் கடுமையான வறட்சி ஏற்பட்டிருக்கிறது. விவசாயம் கெட்டுப் போய் உணவுக்கே மக்கள் கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். விதர்பாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் நிலை இன்று நாடு முழுக்க பரப்பப்பட்டிருக்கிறது. ஆனால் நாடு முழுக்க நிலவும் இந்த உணவுப் பற்றாக்கிறைக்கு இந்திய ஆளும் வர்க்கங்கங்கள் பருவமழை பொய்த்துப் போய் விட்டது அதனால் இந்த வறட்சி என்று தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். உள்நாட்டு விவசாயத்தை பாழாக்கி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த நிலையில் மக்களுக்கும் சிறுவணிகர்களுக்கும் இடையில் இருந்த ஆன்லைன் வர்த்தகமும் விவசாயத்தை செய்ய முடியாத தொழிலாக மாற்ரியதுமே இன்றைய இந்த நிலைக்குக் காரணம். இந்தியாவில்

இந்தியாவில் 161 மாவட்டங்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பீகார், உத்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மக்கள் எலிக்கறியை உண்டு வாழும் நிலைக்கு தள்ளப்படும் சுழுல் உருவாகியிருக்கிறது. பொதுவாகவே வறட்சியான மாநிலங்கள் என்று அறியப்பட்ட இம்மாநிலங்களில் மழைப்பொழிவு என்பதே உத்திரவாதமில்லாததுதான். ஆனால் இவர்கள் உணவுப் பொருட்களை தனியார் சூதாட்டக் காரர்களிடம் எப்போது கொடுத்தார்களோ அப்போதே அத்தாயவசியப் பணடங்கள் கடும் விலை உயர்வை சந்தித்தது. கிராமத்தில் ஒரு லிட்டர் பாலில் விலை பத்து ரூபாய் ஆனால் ஒரு லிட்டர் தண்ணீரின் விலை 14 ரூபாய் இது எவளவு கேடான இந்திய வாழ்க்கை முரண்.
இப்போது விதை நெல்லும் கிடைக்காமல் அப்படி கிடைத்தால் அதற்காக அதிக பணம் கொடுத்தும் வாங்க முடியாமல் அப்படியே வாங்கி பயிசெய்தாலும் அரசின் கொள்முதல் விலைக்கு கட்டுப்படியாகாமல் விவசாயமே நஷ்டனான தொழிலாக நசிந்து கிராமத்து விவசாயிகள் நகரங்களை நோக்கி படையெடுக்கிறார்கள். கழினிகளில் அதிகாலையில் உழவு மாடுகளோடு மேய்ந்த கால்கள் இப்போது பெரு நகரங்களில் உயர்ந்த கட்டிடங்களில் காவலாளிகளாக காவல்காத்துக் கொண்டிருக்கிறார்கள். விவாசாயிகளை அவர்களின் நிலங்களில் இருந்து பிரித்தவர்களே, அவர்களின் உழைப்பைச் சுரண்டி அவர்களை கையேந்த வைத்தவர்களே இப்போது பருவமழை பொய்த்துப் போனதால் வறட்சி என்கிறார்கள்.

வால்மார்ட், ரிலையன்ஸ் போன்ற பெருமுதலாளிகள் சில்லறை வணிகத்துக்குள் நுழைந்த போது அதற்கு கடும் எதிர்ப்பு இந்தது. ஆனால் ப.சிதபரமோ ‘’நாங்கள் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையில் இருக்கும் இடைத்தரகர்களை ஒழிக்கப் போகிறோம்” என்றார்.இங்கு இடைத்தரகர்கள் என்போர் சிறு வணிகர்கள். அவர்களை ஒழித்து விட்டு சிதம்பரமும், மன்மோகனும் கொண்டு வந்து விட்டவர்கள்தான் ரிலையன்ஸ்சும், வால்மார்ட்டும். அது பேல முன்பேர வணிகம். இன்றைய அத்தியாவசீயப் பொருட்கள் வகை தொகையில்லாமல் விலையேற்றம் காண ஆன்லைன் டிரேடிங் என்று சொல்லப்படும் முன்பேர வணிகமே காரணம். ஆனால் அந்தந்த மாநிலங்களை ஆளும் மாநில முதலவர்களின் குடும்பத்தினரே இந்த ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் போது எளிய இந்தியன் பயன்படுத்தும் பருப்பின் விலை ஏன் 150 ரூயாய் வரை விற்காது.