இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு பிரஜா உரிமை தேவையில்லை : கருணா

karuna0x01இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளின் தொகை ஏறக்குறைய 20000 என்றும் இவர்களுக்கு இந்தியப் பிரஜா உரிமை வழங்கத் தேவையில்லை என்றும் அமைச்சர் வினாயகமூர்த்தி முரளீதரன் என்ற கருணா தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலமை சுமூகமடைந்து வருவதால் இதற்கான தேவை அற்றுப் போயிருப்பதாக டெயிலி மிரர் என்ற இலங்கைப் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ள முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினரான கருணா, இந்தியாவில் இருக்கும் அகதிகளை இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.