இந்தியாவில் பன்றிக்காய்ச்சல்- 70 பேர் பலி.

இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பலியாகிவருவோரின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக சராசரியாக ஏழு பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகி வருகிறார்கள். நேற்றும் ஏழு    பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானார்கள். நேற்று வரை 67 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு இறந்திருந்தனர்.

 இந்த நிலையில் இன்று புனேவில் 2 வயதுக் குழந்தை உள்பட மேலும் 3 பேர் பலியானார்கள். இவர்களையும் சேர்த்து பலி எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.புனேவில் பன்றிக் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த 2 வயதுக் குழந்தை இன்று இறந்தது.இதுதவிர புனேவின் சசூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உஜ்வாலா வக்ஜோரே (36) என்ற பெண் சிகிச்சை பலனின்றி பலியானார்.

அதே புனேவில் தனியார் மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த கமல் வாகலே (42) என்ற பெண்ணும் பலியானார்.இதைத் தொடர்ந்து புனேவில் மட்டும் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் இதுவரை நான்கு பேர் பலியாகியுள்ள சூழலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

One thought on “இந்தியாவில் பன்றிக்காய்ச்சல்- 70 பேர் பலி.”

 1. friends,
  why swine flu?
  this has come at aright time after recession.this is just to divert the attention from various imp problems faced by the workers ,to tone down resistance against unemployment price rise etc. .secondly they want to bring vaccine for it. so with the help from WHOthey manipulate the nos of deaths .
  to produce vaccine one has to declare apandemic.
  moreover deaths due to waterborne disesaseas are more than this so called swine flu.the diff is that the poor die of cholera and waterborne diseases .
  these are the facts about swine flu which no news paper or tv will say.as they are for the rich and fit in to aparticular lobby.

Comments are closed.