இந்தியாவில் கழிப்பறை வசதியில்லாதர்களின் எண்ணிக்கை 60 கோடி!

roadகழிப்பறை வசதியில்லாமல் 60 கோடி இந்தியர்கள் சாலையோரங்களிலும், ரயில் தண்டவாளங்களின் இருபுறங்களிலும் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக அமர்ந்திருப்பது வாடிக்கையான காட்சியாகும். 60 கோடி இந்தியர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்ற ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்களைக் கேட்டால் புருவத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை.

இந்தப் புள்ளிவிபரங்களின்படி, சுமார் 55 சதவிகித இந்தியர்கள் காலைக்கடன்களைக் கழிக்க கழிப்பறைகளை நாடும் வசதியைப் பெறவில்லை. மும்பை குடிசைப்பகுதிகளின் நிலைமையே மிக மோசமாக இருக்கிறது. அந்தப்பகுதிகளில் 81 பேருக்கு ஒரு கழிப்பறை என்ற நிலை உள்ளது. மேலும் சில இடங்களில் 273 பேருக்கு ஒரு கழிப்பறை என்று மோசமாகவும் இருக்கிறது.

பிரச்சனையைக் குறைத்துக் காண்பிப்பதற்காக உள்ளாட்சி அமைப்பு
கள் வைத்திருக்கும் புள்ளிவிபரங்களே 58 பேருக்கு ஒரு கழிப்பறை என்றுகாட்டுகிறது. இத்தகைய பிரச்சனைகள் ஒட்டுமொத்த சமூகத்தையே பாதிக்கின்றன என்று யுனிசெப் அமைப்பு எச்சரிக்கிறது. ஒவ்வொரு நாளும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் ஐந்து வயதுகூட நிரம்பாத ஆயிரம் இந்தியக் குழந்தைகள் சராசரியாக உயிரிழக்கின்றனர் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

இருட்டுக்காக பெண்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தொற்று நோய்கள், பாம்புக்கடி மற்றும் வன்முறையை எதிர்நோக்க வேண்டிய கட்டாயம் என்று அவர்
களுக்கு பல்வேறு பிரச்சனைகள் அன் றாடம் காத்திருக்கின்றன. சுகாதாரக் குறைவால் அரசுக்கு ஒவ்வொரு ஆண் டும் கோடிக்கணக்கான ரூபாய் செல வாகிறது. அந்தப்பணத்தை கழிப்பறை கள் கட்டுவது போன்ற ஆக்கப்பூர்வ மான அம்சங்களில் செலவழித்தால் நிரந்தரத் தீர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பது சுகாதாரத் துறை வல்லுநர்களின் கருத்தாகும்.

இந்தியாவில் கழிப்பறை வசதியில்லாதர்களின் எண்ணிக்கை 60 கோடி என்கிற நிலையில் உலகம் முழுவதும் சுமார் 260 கோடிப்பேர் இந்த நெருக்
கடியை எதிர்கொள்கின்றனர். அரியானாவில் தங்களைப் பெண் பார்க்க வருபவர்களிடம் கேட்கும் கேள்வி இதுதான், “உங்கள் வீட்டில் கழிப்
பறை இருக்கிறதா..?”