இந்தியாவிடமிருந்து ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு!

fonseka_ranilfaceஇந்திய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ள விசேட அழைப்பொன்றை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளைய(05.12.2009) தினம் இந்தியா புறப்பட்டுச் செல்லவுள்ளார். நாளை முற்பகல் நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய சம்மேளனம் முடிவடைந்தவுடன் அவர் புதுடில்லி நோக்கிப் புறப்படவுள்ளார்.

இந்தியாவின் விசேட அழைப்பை ஏற்று கடந்த 2ம் திகதி இந்தியா சென்ற ஜெனரல் சரத் பொன்சேக்கா இன்று முற்பகல் இலங்கை திரும்பியுள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கடும் குழப்ப நிலையில் இருக்கும் இந்திய அரசாங்கம் ஜெனரல் சரத் பொன்சேக்காவின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவரிடம் உறுதிமொழியையொன்றைப் பெற்றுக்கொள்ள எண்ணியிருப்பதாக தூதரகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

One thought on “இந்தியாவிடமிருந்து ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு!”

  1. இந்திய கொலைகார நாய்களின் வாலை யார் வெட்டுவார். இவங்க ஏன் இன்னும் இலங்கை அரசியலில் தலை போடுறாங்க. சிங்களவனுக்கு தன்மானம் சொந்தப் புத்தி இல்லையா? ஏன் இவங்கள் கூப்பிட்ட உடன் இந்தியாவிற்கு ஓடுகிறார்கள்? புலிகள் இல்லையென்ற எண்ணமோ! புலிகள் வருவார்கள்! வெகு விரைவில்.

Comments are closed.