இந்தியா,இலங்கை,ஜப்பான்,அவுஸ்திரேலியா :அமெரிக்காவின் புதிய இராணுவக் கூட்டணி

militarisationஇந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானிய அரசுடன் புதிய இராணுவ ஒத்துழைப்பைப் பிரகடனப்படுத்தியுள்ளார். ஐந்து நாட்கள் ஜப்பான் நாட்டிற்குப் பயணம் செய்த மோடி அங்கு ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ ஆபே உடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இரண்டு நாடுகளிடையேயும் நெருக்கமான ஒத்துழைப்புத் தேவை எனவும் இரு நாடுகளிடையேயும் உலகளாவிய கூட்டணி ஒன்று தேவை எனவும் குறிப்பிட்டுள்ளனர். அதே வேளை ஜப்பான் மற்றும் இலங்கை இடையிலான கூட்டுறவு வலுவடைகிறது.

இந்த நிலையில் இந்தியா சென்ற அவுஸ்திரேலிய பிரதமர் ரொனி அப்போட் இந்தியாவிற்கு அணுவாயுதம் தயாரிக்கும் யூரேனியம் ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்ததில் கைச்சாத்திட்டார்.

இந்தியா அணுவாயுதத் தடை ஒப்பந்தத்தில் இணைந்து கொள்ளாத நாடு என்பதால் அவுஸ்திரேலியா இந்தியாவிற்கான யூரேனிய ஏற்றுமதிக்கு இதுவரை காலமும் தடை விதித்திருந்தது.

அணுவாயுதத் தடை ஒப்பந்ததில் கைச்சாதிடாத நாடு இந்தியா என்றாலும் அதற்கு யூரேனியம் விற்பனை செய்யலாம் என்று தனது காரணங்களை அவுஸ்திரேலியப் பிரதமர் முன்வைத்தார். இதுவரை இந்தியா போர் அச்சுறுத்தல்களில் ஈடுபடவில்லை என்ற பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டார்.

இந்தியா என்ற நாடு பாகிஸ்தானுடன் மூன்று கோரமான போர்களிலும் சீனாவுடன் ஒரு போரிலும் ஈடுபட்டிருக்கிறது, தெற்காசியாவில் தனது அண்டை நாடுகளை அச்சுறுத்தும் பிராந்தியத்தின் பேட்டை ரவுடி போன்று செயற்படும் இந்தியா பல்வேறு இனக்கொலைகளைத் தலைமை தாங்கியிருக்கிறது.
இப்போது ஜப்பான், அவுஸ்திரேலியா இந்தியா ஆகிய நாடுகள் முத்தரப்பு கூட்டு கடற்படைப் பயிற்சியை நடத்துவதாக அறிவித்துள்ளன.

இலங்கை இந்தியா ஜப்பான் அவுஸ்திரேலியா இணைந்த கடற்பாதுகாப்பு வலையம் ஒன்றை உருவாக்குவதன் ஊடாக ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து சீனாவிற்கான கடல்வழிப் பயணங்களை தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவர அமெரிக்கா முயற்சிப்பதன் ஒரு பகுதியாகவே இப் புதிய கூட்டுக் கருதப்படுகின்றது.

அமெரிக்காவின் ஆசியா பசிபிக் கட்டளையகத்தின் ஒரு பகுதி இலங்கையில் நிலை கொண்டிருப்பதும், இப் புதிய கூட்டணியும் சீனாவின் பொருளாதார ஆதிக்கத்திற்கு எதிராகவும் ரஷ்யாவின் இராணுவ ஆதிக்கத்திற்கு எதிராகவும் அமெரிக்காவின் தந்திரோபாயம்.

உலகம் முழுவதையும் போர்க்களமாக்கியிருக்கும் அமெரிக்கப் பயங்கரவாதம் மோடியை ஆட்சியில் அமர்த்துவதற்கு பின்புலத்தில் செயற்பட்டதன் பலனை இப்போது அறுவடை செய்கிறது.

அமெரிக்க அணியின் அடிமைகளான அவுஸ்திரேலியாவும், ஜப்பானும் இந்திய நோயாளி அரசை அரசை இணைத்துக்கொண்டு இந்து சமுத்திரத்தை இராணுவ மயமாக்க்கி வருகின்றன. இக்கூட்டின் அமெரிக்க இராணுவத் தளமாக இலங்ககை செயற்படும்.

9 thoughts on “இந்தியா,இலங்கை,ஜப்பான்,அவுஸ்திரேலியா :அமெரிக்காவின் புதிய இராணுவக் கூட்டணி”

 1. If I say anything, here some people waiting to ask proofs…

  But, if inioru write here…

  1. Atleast Ini oru shows some proofs by providing  web sites link .

   bUt you are writing make up stories and novels , aren’t you ?

  2. Before happened write with the facts… (connect the dots)
   But can’t proof all here in public…

   For an example…
   How Tamilselvan killed…?
   What happened to Pottu Amman…?
   Where is he…?

   Why LTTE killed Rajiv Ghandhi…?
   What was the connection between LTTE &!Swamy…?

  3. Alex Ravi what happened here is like the South American Dug Cartel. That is why they gave trainning in Jungle Warfare to Colonel Gothapaya Rajapakse (1950) at Fort Rucker, Alabama, USA. 

 2. This very interesting. I hope Ranil Wickremsinghe get some credit finally. No wonder Canada did not come to the Commonwealth Conferance. Canadian Prime Minister took a dig at the Sri Lankan President in Australia. .

 3. ரவி அன்ட் மற்றவர்கள்,
  இக்கங்களில் புலிகளைக் கையாண்டது அமெரிக்காவும் இந்தியாவிலிருந்த் அமெரிக்க சார்பு அணியும் தான். ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ போன்ற இயக்கங்களைக் கையாண்வர்கள் முழுக்கமுழுக்க இந்தியா. இந்தியாவில் அமெரிக்க சார்பான அணியின் பலம் ஓங்கிய போது அவர்கள்  புலிகளைப் பயன்படுத்த் ரஜீவைக் கொலை செய்தார்கள். கொலையாளிகளில் சோனியாவும் அடக்கம். ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற அமைப்பை உருவாக்கி அதனை அழிப்பது என்ற பேரில் அமெரிக்கா களம் இறங்கியிருப்பது போல தான் புலிகளும். புலிகள் வெறும் பொம்மைகள் தான் 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முரண்பாடுகள் தீர்ந்து போன பிறகு இனிமேல் பிரச்சனை வரத மாதிரி புலிகளை அழிக்கத் திட்டம் போட்டார்கள். அது தான் வன்னிப் போர். பொட்டு

  1. சாருக்கு அனைத்துமே தெரிஞசிருக்கே, ராவுல வேலை பாத்திருப்பாரோ.

  2. Pottu, can I put a “Like” here…?
   I don’t snow who u r… If u like contact me…
   Thanx.

Comments are closed.