இத்தாலியில் வகுப்பறையில் சிலுவையை வைத்திருப்பது குறித்த விவகாரம்!

20031இத்தாலியில் பள்ளிக்கூட வகுப்பறைகளில் கிறிஸ்தவ மதச் சின்னமான சிலுவையை வைத்திருப்பதற்கு எதிராக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு வத்திகானிலுள்ள ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் திருச்சபை அதிர்ச்சி அடைந்துள்ளது என அதன் சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிக்கூடங்களில் சிலுவைகளை வைத்திருப்பது என்பது மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் உரிமைகளை மீறும் செய்ல் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
BBC.