தடுப்பு முகாமில் விடுவிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் செல்ல வழியின்றி அல்லல்!

matharஇலங்கையின் வடக்கே வவுனியா மனிக்பாம்  தடுப்பு முகாம் தொகுதியில் இருந்து கர்ப்பிணி தாய்மார்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படும் ஒரு தொகுதியினர் சனிக்கிழமை மாலை வவுனியா பேரூந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இவர்களை வவுனியா நகரசபை மண்டபத்தில் தங்க வைத்து உணவு மற்றும் அத்தியாவசிய வகதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன், நகரசபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் ஆகியோர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

சொந்த இடங்களுக்கோ அல்லது உறவினர்களின் வீடுகளுக்கோ உடனடியாகச் செல்ல முடியாதுள்ள இவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளை தாங்கள் செய்யப்போவதாக நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதனும், முகாம்களை விட்டு வந்துள்ளவர்கள் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்லும் வரையில் அவர்களை பராமரிக்கப்போவதாக நகரசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனும் தெரிவித்துள்ளார்கள்.