இடம் பெயர்ந்தவர்கள் மீள் குடியேற்றப்படவில்லை : விக்கிரமபாகு கருணாரத்ன

யாழ்.குடாநாட்டில் இன்னும் பல இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியேற்றப்படாமல் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர்களை விரைவாக குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என  ஜனாதிபதி வேட்பாளர விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மணல்காடு கிராமத்தில் இடம்பெயர்ந்தோர் முகாமில், சுமார் 300 குடும்பங்கள் வரையில் குடியமர்த்தப்படாமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும், அவர்களின் சொந்த இடங்களான வன்னிப்பிரதேசத்தில் குடியமர்த்தப்படவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை இந்த முகாம் கடல்சார்ந்த பிரதேசத்தில் இருப்பினும், அவர்கள் யாரும் கடற்தொழிலில் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் அவர்கள் வருமானம் அற்ற நிலையில், வாழ்வாதாரத்தை தொலைத்து வாழ்விழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அவர்களுக்கு வருமானம் பெறும் வகையில், கடற்தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.