இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்

Yuvan-shankar-rajaதமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்திலிருந்து இசைத் துறைக்கு வந்து மில்லியன்கள் புரளும் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரானவர் இளையராஜா. இளையாராஜா தன்னைத் தலித் என்று அழைத்துக்கொள்வதை எப்போதும் விரும்பியதில்லை. இந்துத்துவ தத்துவத்தின் சினிமா இசைக்காவலனைப் போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட இளையராஜா ஆதிக்க சாதியோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.

இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா சினிமா இசையமைப்பாளராகிப் பிரபலமானார். பல திரைப்படங்களுக்குப் பின்னணி இசையமைத்தவர். பிரித்தானியாவில் வசித்த ஈழத் தமிழ்ப் பெண்ணைத் திருமணம்செய்து விவாகரத்தானவர். இப்போது தான் இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

நான் இஸ்லாத்தை பின்பற்றுகிறேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்று இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். யுவனே தனது டிவிட்டர் தகவலில் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

சாதி ஒடுக்குமுறையால் இந்தியாவில் மதம் மாறியவர்கள் புதிய மதத்திலும் சாதி ஒடுக்குமுறையைச் சந்திக்கின்றனர். இந்துத்துவாவின் வேர்கள் அனைத்து மதங்களிலும் படர்ந்துள்ளன.

35 thoughts on “இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்”

 1. Great. He is an American Hero. Cassius Clay became Mohammed Ali. Louis Pleasant became Careem Abdul Jabbar. Boxing and Basket ball. A. R. Rahuman spoke in Tamil in the Oscar Ceremony in Los Angeles, California, USA. Ella pukalum Eraivanukkae.

 2. romba thappu……he is thinking that like A R Rehman he will be treated well at all over imdia and oscar and golden  globes……and doctor from london……
  Guru Ramanar….
  Arunachaleshwarar…..
  Eesan….
  Siva peruman made Yuwan Shankar Raja and his Dad Ilayaraja…..
  world class….maestro….
  64 kalai vallavar Siva peruman….
  avarai marakkalama?

  1. உலகம் முழுவதும் இஸ்லாமிய மதத்தினரைப் பயங்கரவாதிகளாக காட்டி அழிக்கும் காலத்தில் ரஹ்மானுக்குக் கிடைத்த அங்கீகாரத்துக்கும் மத மாற்றத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. பல அரேபிய இசையமைப்பளர்களை கிள்ளுக் கீரையாகக் கூட மேற்கு மதிப்பதில்லை. கலெட், ப்பூடெல்,னஸ்ரின் போல பலர் இருக்கிறார்கள். ரஹ்மான் கதை வேறானது. தனி மனிதனாக ரஹமான் செய்வதை எவரும் செய்யமுடியாது. மேற்கு ரசனைக்கேற்ப கர்னாடக இசையை அறிமுகப்படுத்தியதே ரஹமானின் பிரபலத்துக் காரணம்.

   1. இந்துவாக இருந்து கிழித்து விட்டார் முசல்மானாக போய் கிழிக்கப்போகிறார்.இசை ஞானியின் மகன் என்ற தகுதி இல்லாவிட்டால் இவருக்கு விலாசம் இல்லாமல் போய் இருக்கும்.தற்போது ஏ.ஆர்.ரகுமானுக்கு கிடைக்கும் புகழை நினைத்து மதம் மாறுகிறார்.புலியை பார்த்து நரி வேஷம் போட்ட கதை ஆகப்போகிறது.

    1. You are nuts to assume that he converted for winning in the music world. There is no basis for your assumptions.

 3. இவன் மாறுனா என்ன மாறாட்டி என்ன.

   1. Hello Mr. Dr, போலீஸ் மகன் திருடன் வாத்தியார் பிள்ள மக்கு, அதே போல அப்பா நல்ல இருந்து, என்ன பயன் பசங்க செயற்க சரி இல்லையே பா…

 4. மனிதனாக வாழ இவாகள் முயற்சி செய்ய வேண்டும்.

  1. உங்கள் பெயரை தயவுசெய்து மாற்றிக்கொள்ளவும் ஏனெனில் குமார் என்ற பெயரில் நான் நீண்ட காலமாக பிற்குறிப்பு எழுதிவருகிறேன் அத்தோடு எனது சொந்தப்பெயரும் அதுவே.

 5. இசை ஞானி எத்தகைய சோதனைகளையும் தாங்கிக்கொண்டு  வாழ்ந்து பெருமைகளை அள்ளினார். சாதி அடிப்படையில் அவருக்கு கிடைக்க வேண்டிய பல பெருமைகள் கிடைக்காமல் இருந்திருக்கலாம், அவரை விட திறமை குறைவானவர்கள் பல உயர்ந்த அரசு விருதுகளை, சலுகைகளை பெற்று வாழ்ந்த போதும் மிக பொறுமையாக சகித்துக்கொண்டு, ஒதுக்கி வைத்துவிட்டு வாழ்ந்தார். ஆனால் யுவனுக்கு ஏனோ திருமண வாழ்க்கை திருப்தியாக அமையவில்லை. அதன் அடிப்படையில் யுவன் மதம் மாறினாரா? என்ற வினா எழுகிறது. A.R.ரஹ்மான் பில்லி, சூன்யம் வைத்து இளையராஜாவை வளர விடாமல் செய்தார் என்று தெரிந்து அதனால் மதம் மாறினாரா? பல் வேறு காரணங்கள் அடிப்படையில் இருந்தாலும் மதம் மாறி தான் விரும்பிய இலக்கை அடைய ஆதிக்க சாதியினர் விடுவார்களா? என்ற கேள்விக்கு பதில் தெரிய வில்லை. 

 6. மதம் என்பது அவரவர் விருப்பம். அதைத் தடுக்கவோ அல்லது கேலியாகப் பேசவோ யாருக்கும் உரிமையில்லை. ஏ.ஆர்.ரகுமான் கூட துன்பத்தில் இருக்கும் போதுதான் இஸ்லாம் மதத்தை ஏற்றார். அதேபோல யுவனும் ஏற்றுள்ளார். இப்போது தான் சந்தோசமாக இருப்பதை அவரே தொpவித்துள்ளார். இதற்காக சந்ணதொசப்பட வேண்டுமே தவிர பொறாமைப்படுவதோ நக்கல் செய்வதோ கூடாது. அவரது மனநிலையில் இருந்தால்தான் அவரது வேதனை புரியும்.

  1. துன்பப்படுகின்றவா்களெல்லாம் மதம் மாறினால் அவா்களது துன்பங்கள் தீா்ந்துவிடும் என்று நம்புவது 21 ம் நூற்றாண்டில் வாழும் மனிதனுக்கு உகந்ததல்ல. மதங்கள் அத்தனையும் ஏறக்குறய ஒரேவிடயத்தையே போதிக்கும்போது இதில் என்ன தேவையுள்ளது அங்கும் இங்கும் அலைவதற்கு இருந்தாலும் அவருடய சுதந்திரத்தில் தலையிட எனக்கு உரிமையில்லை.

 7. குடும்ப பிரச்சினையை தவிர்த்து வேறு கல்யாணம் செய்வதற்காக பலர் பேருக்கு ஒப்புக்கு மாறியுள்ளார்கள்.இவருக்கும் அதுவே காரணமாய் இருக்கலாம்.

  கடவுளை நம்புகிறவர்கட்கு சமயம் தேவையில்லை.

 8. யுவன் மதம் மாறி மற்ற இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்பதை வாழ்ந்து துன்பங்களை அனுபவித்து தெரிவித்து உள்ளார். இந்து மதம் ஜாதி வெறியர்களின் கூடாரம். மனைவியுடன் சேர்ந்து வாழ வழியில்லாமல் செய்யும் சட்ட,திட்டங்கள். இந்து மத சட்ட படி பல லட்சம் கணவன்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வக்கீல்களுக்கு கொண்டாட்டமான இந்து மதம் யுவன் போன்ற சக்தி உள்ளவரையே அடித்து,துவைத்து,துன்புறுத்தி விரட்டுகிறது என்றால் சாமானிய இந்து இளைஞர்கள் கதி என்ன? யுவனுக்கு நன்றி.

 9. இளையராஜாவின் ஆன்மீகத் தேடலுக்கு இது ஒரு பின்னடைவாக இருக்குமோ? பாவம் இசைஞானி.இசுலாமை ஏற்றுக்கொண்டதற்க்காகவாவது  யுவன் இனி இசை அமைப்பதை நிறுத்தினால் நலம்.

 10. அலிசேனா என்பவர் ஈரானிய முஸ்லீம்.அரேபிய காடையர்கள் நனது நாட்டின் மீது படையெடுத்து எவ்வளவு பேரழிவை ஏற்படுத்தினார்கள் என்பதை அறிந்து அரேபிய மத்தைத் துறந்துவிட்டாா்.அவரின் இணைய தளம் http://www.alisena http://www.anwar sheikh http://www.answering islam போன்ற வலைதளங்கள் யுவன் சங்கர் படிக்க வேண்டும். இந்து மதத்தில் கிடைக்காதது அரேபிய மதத்தில் கிடைத்தது என்பது பச்சை மூடநம்பிக்கை. யுவன் ஏதோ குழப்பத்தில் தவறு செய்து விட்டார்.

  1. இந்து மதத்தில் கிடைக்காதது,அரேபிய மதத்தில் கிடைக்கும் என்று நம்பித்தான் திறமையான யுவன்,ரெஹ்மான் போன்றோர் மாறியுள்ளனர்.இந்து மதத்தை அழிக்க தற்போது உள்ள சட்டமும், கோர்ட்டும், வக்கீல்களும் போதும்.ஒவ்வொரு குடும்பத்தையும் பெண்கள் முன்னேற்றம் என்ற பெயரில் சிதைத்து,சின்னாபின்னமாகி குடும்ப தலைவர்களை தற்கொலை பண்ண வைத்து பல லட்சம் கல்யாணம் ஆன ஆண்கள் தற்கொலை பண்ணி கொண்டு உள்ளனர். விவேகானந்தரை போல, ராமகிருஷ்ண பரமஹம்சர் போல துறவிகள் இந்து மதத்தில் வாழலாம்.அவர்கள் எந்த மதத்தில் வேண்டுமானாலும் வாழ முடியும்.ஆனால் ஆண்கள் கல்யாணம் பண்ணி குழந்தைகளுடன் மன அமைதியுடன் மானமோடு வாழ இந்துமத சட்டமும்,அதை வைத்துக்கொண்டு மிரட்டும் காவல் துறை ,வக்கீல்கள், கோர்ட்டும் அனுமதிக்கவில்லை. தற்கொலை செய்துகொண்ட லட்சக்கணக்கான ஆண்களை விட யுவன் துன்பத்தில் இருந்து விடுபட மதம் மாறியுள்ள வழி மேம்பட்டதே.இது குடும்ப தலைவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சூழ்நிலையை மாற்ற உதவும்.அந்த வகையில் யுவன் இளைஞர்கள் வாழ வழிவகை செய்துள்ளார் என்பதே உண்மை.

   1. இவைகளை எதிர்த்து போராடாமல் மதம் மாறுவது கோளைத்தனமாக தோன்றவில்லையா??

    1. Kumar Islam is more than a religion. Arabic numerals. Arabic is also a Stem Language like Tamil. I like what I see here at Kattankudy. Tamil is our Mother tongue. Arabic is our Father Tongue.

     1. Seriously ? Your dad is a Muslim, how come your middle name is not Mohamed ?

   2. தவறான முடிவு. தங்களுக்கு மதம் மாற வேண்டும் எனில் தாங்கள் ஒரு கோழையெனில் தாராளமாக மதம் மாறுங்கள். ஆனால் அங்கு போய் விட்டால் சொர்க்கம்தான் என்று ஏமாந்து எமாளியாகப் போகாதிர்கள்.ஏமாந்து போக வேண்டாம். தவறுகளைக் களைவதுதான் பேராண்மை.யுவனின் மதமாற்றத்திற்குப் பின்னனி ஏதோ உள்ளது. மதம் மாறியவர்களில் ஒருவர் கூட தத்துவ தெளிவில் படித்து ஆய்ந்து மதம் மாறவில்லை. முதலில் நான் குறிப்பிட்டள்ள வலைதளங்களைப் செங்கொடி இறையில்லா இஸ்லாம் வலைதளங்களைப் படியுங்கள்.பிறகு கருத்துச் சொல்லுங்கள். தாங்களும் ஏதோ மனக்குழப்பத்தில் உள்ளதாகத் தெரிகின்றது.பெண்களால் தங்களுக்கு துன்பம் ஏற்பட்டுள்ளது.அதற்காக முட்டாள்தனமாக உளற வேண்டாமே

    1. How do you say that no one changed becuase they learned the philosophy of a religion and understood it before their decision ? You have been following every Tom, Dick & Harry who changed religion ? 

  2. நீங்கள் குறிபிட்டுள்ள வலை தளங்களை படிக்காமல் கருத்து எழுதும் பொழுதே ஒரு குற்ற உணர்வு இருந்தது.இருந்த போதிலும் நான் எழுதிய  இந்து மதத்தில் கிடைக்காதது அரேபிய மதத்தில் கிடைக்கிறது என்று நம்பி மதம் மாறியுள்ளனர் என்ற கருத்து உங்களின் ஆன்மிக தேடலுக்கு அவமரியாதை செய்தது போல் உள்ளதா? அதற்கு வருந்துகிறேன்.நான் இறை தேடல்,முக்தி,ஆன்மிகம் என்ற அடிப்படையில் எழுதவில்லை.சாதாரண குடும்ப வாழ்கை வாழும் இந்து மத,அதிலும் மனைவியால் துன்பப்பட்டு தற்கொலை செய்து கொண்ட லட்சக்கணக்கான குடும்பத்தலைவர்களின் துயரத்தின் வேதனையில் வந்த எழுத்துக்கள். இன்று வழக்காடு மன்றத்தில் (court) சென்று பாருங்கள்.பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நீதி கிடைப்பது அரிது. தவறு செய்யாத ஆண்கள் பாதிக்கபடுவது எளிது என்ற அடிபடையில் தான் உள்ளது.யுவன் வழக்காடு மன்றம் சென்று மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுத்து உள்ளார். ஒவ்வொரு கோணத்தில் ஒவ்வொரு கருத்துகளும் சரியாகவும்,தவறாகவும் இருப்பது அவரவர் அனுபவிக்கும் வாழ்க்கை அனுபவங்களை பொருத்து வெளிபடுகிறது.மன குழப்பத்தில் நான் இருக்கலாம்,குழப்பமே என் வாழ்க்கையில் வந்தது கிடையாது என்று நான் கூறவில்லை.நீங்கள் குறிபிட்டுள்ள வலை தளங்களை சந்தர்பம் வாய்க்கும்போது படிகின்றேன்.நன்றி.

 11. ஆனந்த்.க , சகோதரரே! 

  அவன் அவன்,  அவள் அவள் விருப்பத்தை பொறுத்து மதம் மாறுதல் நடக்கலாம்.  இப்ப என்ன தான் நடந்து போச்சு. 

  இந்துமதத்தை முன்னிறுத்தி நடந்த நடக்கிற சாதீய கொடுமைகள் மதம் மாற்றத்திற்கு உந்தலாம். 

  ஆனால் இங்கு யுவனின் கதை வேறு போலவே தெரிகிறது. 

   யுவன் முஸ்லிமாக மாறினால் என்ன? யூனூஸ் இந்துவாக மாறினால் என்ன?. கச்சையில் மச்சம் இருந்தா வாழ்க்கையும் பச்சையாக இருக்கும். யுவனுக்கு சிட்டுக்குருவி லேகியமும் கட்டிபிடி வைத்தியமும் தெரியல…..

  ஆகிற காரியம் பாக்கணும் ஐயா கொஞ்சூடு கருவாடு,  சுண்ட சுண்ட சின்ன வெங்காயம், கொஞ்சம் இளசா முருங்கைக்காய், பத்தியத் தூள் சும்மா தூக்கி ஏறியுமப்பா. இதுக்குப் போய் சும்மா மதம் எல்லாம் மாறி…………  

  ஆதிக்க பரம்பரை, ஆணாதிக்கம் பெண்களையும் சமுகத்தின் விளிம்பு நிலை மக்களையும் பாதிக்கின்றது. 

  இளையராயாவால் அறிமுகப் படுத்தப் பட்ட வடிவேலு என்கின்ற காமடி பீசு பார்பானிய பெண்கள் முதல் மார்வாடி பெண்கள் வரை தன் பணபலத்தால் மடக்கி வைத்தவர் தான். ஆக சாதீயம் என்பதும் தாழ்த்தப் பட்டவர் என்பதுவும் வாழ்வின் அடி நிலை மக்களையே பாதிக்கிறது.மாறாக  இளைய ராயாவையோ வடிவேளுவையோ அல்ல.

 12. என்னைப் பொறுத்த வரையில்… இந்த தலையங்கத்திற்கு கீழே எழுதவே விரும்பவில்லை… இன்று இங்கு லீவு நாள்… என்ன 28 comments வந்திருக்கிறது என்று பார்த்தால்… பலரும் பலதை எழுதியுள்ளார்கள்…

  இங்கு நான் குறிப்பிடுவது… தலைக் கனம்… திமிர் பிடித்த இளையராஜாவைப் போலவே யுவன் சங்கர் ராஜாவும்…

  இவர்கள் மதம் மாறினால் என்ன… மதம் மாறாவிட்டால் என்ன… மதம் பிடித்து திரிந்தால் என்ன… இதனால் ஒருவரும்
  பாதிக்கப்படவில்லை…. பாதிக்கப்படவும் மாட்டார்கள்…

  ஆனால் இவர்கள் போன்றோர் திரும்பத் திரும்ப திருமணம் செய்து விவாகரத்து செய்யும் போது… அப் பெண்கள் பாதிப்பு அடைகிறார்கள்… ஓர் குடும்பம்… சமூகம்… பாதிக்கப்படுகிறது…

  சாதி என்பது தொழில் அடிப்படையில்… மனிதனால் உருவாக்கபட்டது…

  மதம் என்பது… நம்பிக்கையின் அடிப்படையில்… மனித நாகரீகத்தின் பரிணாம வளர்ச்சியில்… சில ஒழுக்க… கட்டுப்பாட்டு… கோட்பாடுகளுடன் உருவானது…

  இன்று சாதிகள் கலந்து கலப்புத் திருமணம்… இனங்கள் கலந்து திருமணம்… அப்போ இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எந்த சாதி அடையாளத்துடன்… எந்த இன அடையாளத்துடன் பிறக்கிறார்கள்…?

  ஓர் மதத்தையும் பின் பற்றாதவர்களும் உள்ள உலகில்… அவரவர் விரும்பிய மதத்தை தேர்ந்தெடுப்பது… நாம் ஓர் கல்லூரியை தேர்ந்தெடுத்து கல்வியை தொடருவது போன்றது…

  மனித நாகரீக வளர்ச்சியினூடாக காலத்திற்கு காலம் உருவான சகல மதங்களும்… மனிதனிற்கு உரிய ஒழுக்க கட்டுப்பாடுகளுடன்… நல்லவற்றையே கூறுகின்றன…

  ஆனால்… இம் மதங்களை தம் ஆளுமைக்கு உட்படுத்தும் மதத் தலைவர்கள்… தம் ஆளுமை பறிபோய்விடும் என்ற அச்சத்தில் இம் மதங்களை பின் பற்றுபவர்களை பிழையாக வழி நடாத்துகிறார்கள்…

  இதனால் தான் உலகம் முழுக்க மதத்தின் பெயரால் போர்கள்… ஆக்கிரமிப்புக்கள்… அழிவுகள்…

  இது இன்று நேற்றல்ல… உலக சரித்திரத்தை எடுத்தால்… மதத்தின் பெயராலேயே கூடுதலான போர்களும்… ஆக்கிரமிப்புகளும் நடந்துள்ளன… நடந்து கொண்டேயிருக்கின்றன…

  என்னைப் பொறுத்த வரையில் “என்னுடைய மதம் சரி… உன்னுடைய மதம் பிழை” என்று சண்டை பிடிப்பவனை மதிப்பது இல்லை…

  நான் எல்லோருக்கும் கூறுவதை இங்கு கூறுகிறேன்… “நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடசாலையில் சென்று படிக்கிறோம்… ஒவ்வொரு பாடசாலையும் வெவ்வேறு இடத்தில் இருக்கும்… வெவ்வேறு ஆசிரியர்கள் பயிற்ருவிப்பார்கள்… ஆனால் எல்லா ஆசிரியர்களும் நல் ஒழுக்கத்தையே பயிற்ருவிப்பார்கள்… கடைசியில் எல்லோரும் ஓர் தேர்வையே எழுதுவோம்… (common exam) இதே போல் மதங்களும்… வெவ்வேறு மார்க்கத்துடனான வழிகளாக இருந்தாலும்… எல்லாம் நல்லதையே கூறுகின்றன…அதில் உள்ள நல்லதை கெட்டதை எடுப்பது எம்மைப் பொறுத்தது… (like crusades… jihads… hinduththuva…)”

  இதே போல்… “நாம் எந்த மதத்தை பின் பற்றினாலும்… இஸ்லாமியன் இடது கையால் சாப்பிடுகிறான்… இந்து வலது கையால் சாப்பிடுகிறான்… வைஷ்ணவன் இடது காலால் சாப்பிடுகிறான்… கிறீஸ்தவன் வலது காலால் சாப்பிடுகிறான்… யூதன் மூக்கால் சாப்பிடுகிறான்… என்றா உள்ளது…?”

  “இஸ்லாமியன் கையை வெட்டினால் நீல இரத்தமும்… இந்து கையை வெட்டினால் கருப்பு இரத்தமும்… ஜெயின் கையை வெட்டினால் பச்சை இரத்தமும்… வைஷ்ணவன் கையை வெட்டினால் சிவப்பு இரத்தமும்… யூதன் கையை வெட்டினால் மஞ்சள் இரத்தமும்… பவுத்தன் கையை வெட்டினால் ஊதா இரத்தமும்… கிறீஸ்தவன் கையை வெட்டினால் வெள்ளை இரத்தமும்… என்றா உள்ளது…?”

  எல்லோர் கையை வெட்டினாலும் ஒரே சிவப்பு இரத்தம் தான்… எல்லோரும் ஒரே காற்றைத்தான் உள்ளிழுத்து விடுகிறோம்…

  இவற்றை சொல்லிக் கொண்டே போகலாம்… என்னுடைய நேரமும் சரி…

  விடயத்திற்கு வருவோம்…. இந்த யுவனோ அப்பனோ புலம் பெயர் தேசங்கள் வந்து பேசி ஈழத்தமிழர்களிடையே பேரம் பேசி… (demand for higher payment) கரகோஷத்தின் மத்தியில் பணம் பண்ணுபவர்கள்… தமிழ் நாட்டில் இருக்கும் ஓர் அகதி முகாம் சென்று திரும்பிப் பார்த்திருப்பார்களா…???

  இவர்கள் மதம் மாறினாலென்ன… மத யானையால் அடிபட்டாலென்ன… who cares…
  என்னுடைய கருத்திற்கு யாராவது விதண்டாவாதம் எழுதிலாலென்ன… who cares…
  This is my way… my comment…

  1. நீங்கள் குறிபிட்டுள்ள விடயமான அயல் தேசங்களில் ஈழ தமிழர்களிடையே யுவனும்,யுவன் அப்பாவும் பேரம் பேசினர் என்பதை படிக்கும் போது எதோ ஒரு அச்சம் ஆட்கொள்கிறது.இசை ஞானியால் அவ்வாறு பேரம் பேச முடியும் என்று என்னால் எண்ண முடியவில்லை.தமிழ் நாட்டில் உள்ள அகதி முகாம் எதுவும் சென்றது இல்லை.ஈழ தமிழர்கள் துயரம் என்பது தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது போல மிக,மிக அச்சத்திலும்,மீள முடியாத ஆழ்ந்த துயரும் உடைய துன்பம்.மத்திய அரசாங்கத்தையும்,மாநில அரசாங்கத்தையும் எதிர்த்து சாமானிய மக்கள் போராட முடியாத நிலையில் நம் சொந்தங்கள் கொன்று குவிக்கப்பட்ட கொடுமை இதை வார்த்தைகளால் எழுதவும் முடியாது.

  2. சாதியின் அடையாளத்தின்ன முக்கியத்துவம் குறைந்து வருகினறது. இரு சாதியைச் சேர்ந்தவர்கள் திருணம் செய்தால் இருவரும் விரும்பும் சாதியை குழந்தைகளுக்கு தேர்வு செய்ய முடியும்.அதாவது அப்பாவின் சாதி அல்லது அம்மாவின் சாதி. இது போன்ற குடும்பங்கள் ஏராளம் உள்ளன. இதில் ஒன்றும் தவறு இல்லை.வருங்காலம் இப்படித்தான் இருக்கும். இந்து குடும்பங்கள் உருவாக வேண்டும். இந்து என்கிற ஒரே அடையாளத்தோடு அனைவரும் ஒன்று பட வேண்டும். இந்தியாவிற்கு இந்துக்களுக்கு அதுதான் நல்லது. விவேகானந்தர் போன்ற பெருமக்கள் விரும்பியதும் அதுவே.

  3. So mean to say only the ones who cared to visit the refugee camps in India are the ones who are entitled to do business with the SL Tamils. I know where you are coming from on this, you claim you have done that in the past. It is like because you have jumped in the well and everyone else too should. No wonder you are in tandem with Dr SS.

 13. இதுதான் எங்கள் இந்திய நாட்டின் சுதந்திரம்- அடுத்தவர் சுதந்திரத்தில் குறுக்கிட்டு அவரை புண் படுத்தி .நாங்கள் ஆணந்தம்.கொள்வோம்  

Comments are closed.