ஆர்ப்பாட்டங்களுக்கும் பேரணிகளுக்கும் தடை : இலங்கைக் காவல்துறை

பொதுத்தோ்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் இன்றைய தினம் முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி வரையில் அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்களோ அல்லது பேரணிகளையோ நடத்தக் கூடாது எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வது தொடர்பிலும் சில விதிமுறைகளை வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டுமென பிரதிக் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்துள்ளார்.

வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் போது குறித்த வேட்பாளரும், அவரது உதவியாளரும் மட்டுமே பிரசன்னமாக முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.