ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் துருப்புகள் 40 ஆண்டுகளுக்கு மேல் தங்க நேரிடலாம்!

 

பிரிட்டிஷ் இராணுவத்தின் புதிய தலைவராக பதவியேற்கவுள்ள ஜெனரல் சர் டேவிட் ரிச்சர்ட்ஸ் அவர்கள், ஆப்கானிஸ்தானில் பிரிட்டன் இன்னமும் 40 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியலாம் என தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் ஆயுத்தாரிகளுக்கு எதிரான போர் வெற்றி பெறக்கூடிய ஒன்று தான் என்று தி டைம்ஸ் செய்தித்தாளுக்கு அவர் பேட்டி கொடுத்துள்ளார். ஆனால் ஆப்கானிஸ்தானை வளர்ச்சியடைய வைப்பதற்கும், அந்நாட்டின் பாதுகாப்புத்துறையை ஸ்திரமாக்குவதற்கும் இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆப்கானிஸ்தானில் சுமார் 9000 பிரிட்டிஷ் படையினர் இருக்கின்றனர். ஆனால் தலிபான்களுக்கு எதிரான போரில் படையினர் தொடர்ந்து பலியாகி வருவது பிரிட்டனில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.