“ஆப்கானிஸ்தானில் ஊழல்கள் தனிப்பெரும் பிரச்சனை”- ஐ.நா அறிக்கை!

ஆப்கானிஸ்தானில் ஊழல் தனிப்பெரும் பிரச்சனையாக இருப்பதாக போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐ நாவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியுள்ளது.

ஆப்கான் முழுவதிலும் உள்ள நகர்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்தவர்களிடம் பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, பாதுகாப்பின்மை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளை விட ஊழலை ஆப்கானியர்கள் பெரும் பிரச்சனையாக பார்ப்பதாக கூறியுள்ளது.

நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோக், காவல்துறையினர், நீதிபதிகள், அரசியல்வாதிகள் என அரச பதவிகளில் இருப்பவர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதம், மற்றும் போதை மருந்து கடத்தல் போன்றவைக்கு ஊழல் காரணமாக இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ள ஐ நா அறிக்கை, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவும் இது தடையாக இருப்பதாகவும் கூறியுள்ளது.

BBC.