ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படை நீடிக்க இந்தியா ஆதரவு?

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கப்படை நீடிக்க இந்தியா ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் பேசி வருகிறது. ஆப்கன் நிலைமை குறித்து லண்டனில் வியாழனன்று சர்வதேச மாநாடு என்ற பெயரில் அமெரிக்கா ஒரு ஏற்பாட்டினை செய்துள்ளது. இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பங்கேற்கிறார். இம்மாநாட்டில் அமெரிக்காவின் ஆப்கன் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க மத்திய அரசு முடிவு செய்தி ருப்பதாகத் தெரிகிறது.