ஆதிவாசிப் பெண்கள் மானபங்கப்படுத்தல்:உண்மைகளை வெளிக்கொணர விசாரணை வேண்டும்.

சோலன்நகரில் விடுதி யொன்றில் பெண்கள் மான பங்கத்துக்கு ஆளாக்கப்பட்டது குறித்து பெண் நீதிபதி ஒருவர் விசாரணை நடத்த வேண்டுமென்று இமாச்சலப்பிரதேச ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

சோலன்நகரில் “பாரதிய ஆதிம் ஜதி சேவக்சங்” என்னும் அமைப்பு ஒரு மகளிர் விடுதியை நடத்தி வருகிறது. அங்கு தங்கியுள்ள கின்னாவூர் மற்றும் ஜார்கண்ட் ஆதிவாசிப் பெண்கள் மான பங்கப்படுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து இமாச்சலப்பிர தேச ஜனநாயக மாதர் சங்கம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

சேவக் சங் அமைப்பில் பெண்கள் மானபங்கம் அடைவது குறித்து உண்மைகளை வெளிக்கொணர ஒரு பெண் நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் பால்மா சவுகான் கோரிக்கை வைத்துள்ளார். இந்த புகாரை மாநில அரசு தீவிரமாக விசாரிப்பதுடன் விரைவான விசாரணை நடப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அது மாநில அரசைக் கேட்டுள்ளது.

இதுபோன்ற வழக்குகளில் ஏற்படும் காலதாமதத்தால் வழக்குகள் நீர்த்துப்போவதுடன் குற்றவாளிகள் தப்பித்து விடுவதும் வழக்கமாகிவிட்டது என்றும் பால்மா சவுகான் குறிப்பிட் டார். சிம்லாவின் டோட்டு பகுதியின் டாவியில் வாய் பேசா, காது கேளா பெண்கள் குறித்த வழக்குகளிலிருந்து மாநில அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றும் அது குற்றம் சாட்டியது. சம்பவம் நடந்து ஒரு வருடமான பின்னும் அரசு சாரா அமைப்புகள் நடத்தும் ஆசிரமங்கள், சங்கங்கள் மற்றும் விடுதிகளில் பெண் கள் மானபங்கம் அடைவது தொடர்கிறது என்றும் ஜனநாயக மாதர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதிவாசி பாலிகா கல்வி வளாக விடுதியின் தற்காலிக விடுதிக்காப்பாளர் பவன் கோயலை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த அமைப்பு நாடு முழுவதும் 24 விடுதிகளை நடத்தி வருகிறது. கோயல் மீது 13 வயது ஆதிவாசிப் பெண் கல்பா அளித்த புகாரின் பேரில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

One thought on “ஆதிவாசிப் பெண்கள் மானபங்கப்படுத்தல்:உண்மைகளை வெளிக்கொணர விசாரணை வேண்டும்.”

  1. இஸ்ரேலில் பிரச்னைகளுடன் வந்த 21 பெண் களை மயக்கி, கற்பழித்த மதபோதகர் ராட்சன் கைது செய்யப்பட்டார்.இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் வசித்து வந்தவர் ராட்சன்(60). மதபோதகரான இவர் கடவுள் பற்றி அவ்வப்போது பிரசங்கம் செய்து வந்தார். பிரச்னைகளுடன் வருவோருக்காக சிறப்பு பிரார்த்தனை செய்யப்படும் என அறிவிப்பு செய்தார். இவரை நம்பி வந்தவர்களுக்காக, தனது ஸ்டைலில் ஆடிப்பாடி பிரார்த்தனை செய்வார். சிலருக்கு தானாக தீர்ந்த பிரச்னைகளை கூட, தன்னால் தான் தீர்க்கப்பட்டது, எனக் கூறிகொண்டார்.இது பலரை நம்ப வைத்தது. குறிப்பாக, பெண்கள் அதிகளவில் தேடி வந்தனர். அதில், தனக்கு பிடித்தமான பெண்களிடம் மட்டும் அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதாக அதிக ஆர்வம் காட்டினார். அவர்களுடன் அடிக்கடி தனிமையில் இருந்தார்.

    இந்த வகையில் 21 பெண்கள் கர்ப்பம் அடைந்தனர். இதன் மூலம் 49 குழந்தைகளுக்கு தந்தையானார். ஆனால், அதை வெளிப்படையாக ஏற்கவில்லை. ஒருகட்டத்தில் இவர் மீது வெறுப்படைந்த பெண்கள் சிலர், அவரை விட்டு விலகினர். இவ்விஷயம் வெளியே கசிந்தது. போலீசார், கடந்த இரண்டு ஆண்டாக அவரை ரகசியமாக கண்காணித்து வந்தனர். கடந்த இரண்டு நாளுக்கு முன், ராட்சன் கைது செய்ய பட்டார். அவருடன், அவரது ஆதரவாளர்கள் 17 பேரும் கைது செய்யப் பட்டுள்ளனர். அனைவர் மீதும் கற்பழிப்பு, கடத்தல், மறைத்து வைத்தல் உட்படபலபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.