ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை இணைந்து வழங்குவோர்…. அந்நிய முதலீடுகள்…!

 • சுதந்திர-தினம்நாட்டு வளம், காட்டு வளம், கடல் வளம், கனிம வளம் – அனைத்திலும் அந்நிய முதலீடு! இந்நிலையில் இவர்களுக்கு சுதந்திர தினம் ஒரு கேடு!
 • காலையில் பல் துலக்கும் பேஸ்டிலிருந்து, இரவு ஏற்றி வைக்கும் கொசுவத்தி வரை அனைத்திலும் பன்னாட்டு கம்பெனிகளின் பிடி! ஆனால் கம்பத்தில் பறக்க விடுவதற்கு மட்டும் தேசியகொடி! அது மட்டும் எதற்கு? பேசாமல் அமெரிக்க கொடியை ஏற்றி விடலாமே!
 • பன்னாட்டு கம்பெனிகளுக்கு தடையில்லாமல் தண்ணீர், மின்சாரம்… ஆனால் நமக்கில்லை!
 • காசில்லாதவனுக்கு கல்வியில்லை! படித்தவனுக்கு வேலையில்லை! இருப்பவனுக்கோ அது உத்திரவாதமில்லை! ஆக மொத்தம் வாழ்வதற்கே வழியில்லை! இதற்கு பெயர் சுதந்திரமா?
 • மோடி, லேடி முதல் அனைத்து ஓட்டுப் பொறுக்கிக் கட்சி கேடிகளும் செய்வதெல்லாம் ஃபிராடுதனம், பித்தலாட்டத்தனம்… ஆனால் பேசுவது மட்டும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்!
 • நாட்டையே பன்னாட்டு கம்பெனிகளுக்கு கூறுபோட்டு விற்பதற்கு பெயர் சுதந்திரமாம்!
 • பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு… மக்களுக்கு! 5 இலட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை – பன்னாட்டு கம்பெனிகளுக்கு! – இதற்குப் பெயர் சமத்துவமாம்!
 • மதக்கலவரங்களையும, சாதிக்கலவரங்களையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு பெயர் சகோதரத்துவமாம்! போங்கடா… நீங்களும் உங்க சுதந்திரமும்…

ஆக மொத்தத்தில் இது போலி சுதந்திரம். இதற்கு ஏன் கொண்டாட்டம்? உண்மையான சுதந்திரத்திற்கு தேவை மீண்டுமொரு விடுதலைப் போராட்டம்!

நன்றி வினவு

9 thoughts on “ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை இணைந்து வழங்குவோர்…. அந்நிய முதலீடுகள்…!”

 1. எங்க நாட்டு சுதந்திரத்த பற்றி பேச நீ யாருய்யா.??????????????

  1. அந்த சுதந்திர தின உரையில்தான் பிரதமர்  ”  இந்தியாமல் இன்னமும் பெண்கள் தமது இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு  இருட்டும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது ” என்ற உண்மையை போட்டுடைத்துள்ளார் .

   சுதந்திரமடைந்து 68 ஆண்டுகளின் பின்னும் இதுதான் நிலைமை.

   இந்த டூபாக்கூர் சுந்திரத்தை பத்தி யார்  யார் பேசணும் என்று வேறு இருக்கா ?

 2. அத்தானே அந்த உரிமைய பில் கேட்ஸ்சுட்டல்ல அடகு வெச்சிரிக்கீங்கல்ல ?

 3. இந்தியாவைப்பற்ரி குறைகூறும்  இலங்கையில் தமிழீழவிடுதலை
  வேண்டி ,தமிழர்களைப்பலிகொடுத்துவிட்டு ,சிங்களவ்ரிடம்  சரணாகதி
  அடைந்தவர்களே.  எழுதும் போது பேசும் போதும்  சிறிதாவது
  யோசியுங்கள்.  நீங்கள் அடிக்கடி   சொல்லிக் கொள்ழும்  தொப்புள்
  கொடி உறவுகளாகிய  தமிழகத்தமிழரும்  இந்தியர்தான்.

  உலகம்முழுவதும்  அகதிகளாகி  பிறந்த  நாட்டுபற்றோ  வாழும்நாட்டுப்பற்றோ  இன்றி வாழ்வோரை  விட  தன் சொந்த  நாட்டில்
  தண்ணீரை மட்டும்  குடித்து வாழும்  ஒருவனே  விடுதலை பற்ரி பேச
  தகுதியுடையவன்.

  1. இந்தியாவைப்பற்றி இங்கு யாரும் குறை கூறவில்லை . இந்தியவின் சுதந்திரத்தை பற்றி ஏனையவர்கள் பேசக்கூடாதென்பதற்குத்தான் பதிலளிக்கப்பட்டது .
   தமது அண்டைநாட்டைநடைபெறும் சுதந்திர போராட்டத்திலெல்லாம் தலையிட்டு குழப்புவர்கள் , வக்கணையாக விமர்சிப்பவர்கள் , தமதுநாட்டை பற்றி மற்றவர்கள்  வமர்சிக்ககூடாதென சொல்வதற்கான யோக்யதையை இழந்து  விடுகிறார்கள் .

    ##அடிக்கடி   சொல்லிக் கொள்ழும்  தொப்புள்
   கொடி உறவுகளாகிய  தமிழகத்தமிழரும்  இந்தியர்தான்.##

                      அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலின் போது இந்தியா முழுவதும் மோடி அலை  வீசியபோதும் தமிழ்நாட்டில்  மாநிக்கடசியின் அலை தான்  வீசியது.எனவே தமிழ்நாட்டவர்கள் தம்மை  இந்தியாவின் ஒரு அங்கமாக நினைக்கிறர்களா  என்பதே சந்தேகமாக இருக்கிறது .

   ##  தண்ணீரை மட்டும்  குடித்து வாழும்  ஒருவனே  விடுதலை பற்ரி பேச
   தகுதியுடையவன். ##

   அந்த தண்ணீரும் பல்தேசியக்கம்பனிகளிடம்  தாரை வார்க்கப்பட்டு விட்டது.
   அது சரி  இது வரை பல்தேசிய கம்பனிகளுக்கெதிராக  முழங்கி வந்தீர்களே ?
     இப்போது ஏன் பம்முகிறீர்கள் ?

   புரிகிறது . தமிழர் , புலம்பெயர் தமிழர் என்று  வரும்போது  பன்னாட்டு கம்பனிகள் விடயத்தில்  எதிர்நிலைப்பாடு .
   அதுவே இந்தியா என்றால்  பன்னாட்டு கம்ப்னிகல் விடயத்தில் பம்முவது.
   இதிலும் உங்கள் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வந்து விட்டதே ?

   1. அகதிகள்,பயங்கரவாத்ம்,பணச்சலவை,கறுப்புப்பணம்,  ஈழத்தமிழர்
    சிலரின்  பல்தேசியக்  கம்பனிகள்  ஏமாற்றுப்பேர்வழிகள்,தமிழரின் அழிவில்  சுகவாழ்வு வாழும் தமிழ்    இவை பற்ரியதே  எனது  விவாதம்.

    1.                                நீங்கள் குறிப்பிட்ட எல்லைக்குள்நிறு கொண்டு என்னால் விவாதம் பண்ண முடியாது . இந்தியாவைப்பற்றி நாம் கருத்து சொல்லமுட்யாதென ஒருவர் தெரிவித்தால் அதற்கு பதிலடி கொடுப்பேன் .நீங்கள் உங்களது விவாத எல்லையை தாண்டி  மூக்கை நுழைப்பதும் நுழைக்காததம் உங்கள் இஷ்டம்..

     1. தாராளமாக  எந்த  தலைவரைப்பற்றியும்
      நாட்டைபற்றியும்  கருத்து யாரும் சொல்லலாம்.
      அதுவே  ஜனநாயகம். ஆனால்   தமிழீழ போராட்டத்தின் போது மட்டும்
      எதுவித  கருத்துக்கழும் யாரும் சொல்ல அனுமதிக்கப்படவில்லை. அது
      ஈழ்த்தமிழர்களின்  ஜனநயகம்.

      அவ்வாறான  ஒரு  இனத்தை சேர்ந்தவ்ர்கள்  மற்றவர்களைப்
      பற்ரி  கருத்துச் சொல்வதன் அர்த்தம் என்ன?  பிறர் மீது
      குற்ரம் சாட்டுவதும், குறை சொல்ல்வதுமே  எங்கள் தொழில்
      அதிலிருந்து  நாங்கள்  விடுபட்டால்  பிழைப்பே  கெட்டுப்போகும் என்ப்து
      போலுள்ளது. துரையப்பா முதல் இன்று வரை துரோகி பட்டங்கள் தமிழரிற்கே  சூட்டி  தாம் வாழப்பழகியவ்ர்கள் அல்லவா?

 4. ##   தமிழீழ போராட்டத்தின் போது மட்டும்
  எதுவித  கருத்துக்கழும் யாரும் சொல்ல அனுமதிக்கப்படவில்லை. அது
  ஈழ்த்தமிழர்களின்  ஜனநயகம். ##

  உங்களைப்போன்ற  விடுதலைப்போராட்ட எதிரிகளும் , ஊடகங்களும் போராட்ட காலமான 30 வருடங்களும்  சும்மாவா இருந்தீர்கள் ?

  விடுதலைப்போராட்டத்தையே  கரித்துக்கொட்டி கொச்சை படுத்தியவர்கள் ஈழத்தமிழர் ஜனநாயகம் பற்றி வாய் கிழிய பேசுகின்றனர் .

  ## ஒரு  இனத்தை சேர்ந்தவ்ர்கள்  மற்றவர்களைப்
  பற்ரி  கருத்துச் சொல்வதன் அர்த்தம் என்ன?  ##

  ஒருநாட்டில் ஒரு இனம்  போராடும்போது இன்னொருநாட்டிலிருந்து   கொண்டு அந்த போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கு அவர்களுக்கு எல்லா ஜனனாயக உரிமகளுமிருக்கிறது .

  ஆனால் அந்தாநாட்டின் சுதந்திரம் பற்றியும் காந்தி பற்றியு ம்  பேசினால்  அவ்வாறு இதே இணைய தளத்தில் வக்கணையாக   ஈழத்தைப்பற்றியும் போராட்டத்தை [பற்றியும்    பேசிய ஒருவர்  எமதுநாட்டை பற்றி பேசுவதற்கு நீ யார் எனக்கேட் கிறார் ?

  ஈழ  ஜனனாயகம் பற்றி  வாய் கிழிய பேசுபவர் இந்த  இந்திய ஜனநாயகம் பற்றி  வாய் பேசாது  ஜால்ரா அடித்துக்கொண்டு  ஈழ  ஜனநாயகம் பற்றி  வக்கணை பேசுகிறார் .

Comments are closed.