அனேகமாக எல்லா பின்நவீனத்துவ வாதிகளும் பிழைப்புவாதிகளே! : மருதையன்

மக்கள் கலை இலக்கியக் கழகம் தமிழ் நாட்டின் வாக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட அரசியல் இயக்கமாகும். ஈழப் படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தமிழ் நாட்டின் ஆட்சி அதிகாரம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களைத் திட்டமிட்டுச் சீகுலைத்தது. தமது அணிசேர்க்கையினூடாக சந்தர்ப்பவாதக் கட்சிகள் இப் பிரச்சனையைக் கைவிட்டு அரசியல் வியாபாரப் பேரம் பேசின. இந்த நிலையில் மக்களை நம்பியிருந்த வாக்கு அரசியலுக்கு உட்படாத இடதுசாரிக் குழுக்களின் போராட்டங்கள் மட்டுமே சரணடைவுகளுக்கும் விட்டுக்கொடுப்புகளையும் மீறி நடைபெற்றன. இவற்றுள் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பங்கு குறித்துக் காட்டத்தக்கது. இதன் மாநிலச் செயலாளர் மருதையனின் நீண்ட நேர்காணல் மூன்று பிரிவுகளக வகைப்படுத்தப் படுகிறது.
1. இந்திய கம்யூனிச இயக்கங்களின் வரலாறு.
2. தமிழ் நாட்டில் பின் நவீனத்துவம்.
3. இலங்கை இனப்படுகொலையின் போதான தமிழ் நாட்டுக் கட்சிகளின் போராட்டம்.
இம்மூன்று பகுதிகளில் இரண்டாவது பகுதி இங்கே தரப்பட்டுள்ளது…. இன்னும் வரும்…

இனியொரு: ஏனைய மாநிலங்களைப் போலல்லாது தமிழ் நாட்டில் மார்க்சியம் தவிர்ந்த பின்நவீனத்துவம் பொன்ற ஏனைய ஐரோப்பிய தத்துவங்கள் செல்வாக்குச் செலுத்துவதன் காரணம் என்ன?

பின்நவீனத்துவம் போன்ற கருத்துக்கள் 90 களில்தான் முன்வர ஆரம்பித்தின. எனினும் 80 களின் ஆரம்பங்களிலேயே ஞானி maruthaiyanஎஸ்.என்.நாகராஜன் போன்றோர் கிழை மார்க்சியம் போன்ற கருத்துக்களையும் பின்னர் எஸ்.வி.ஆர் இருத்தலியல்வாதம் போன்ற கருத்துகளையும் முன்வைத்தனர். இவை அனைத்தும் கட்சிக்கு அப்பாற்பட்டு மார்க்சியத்தை வளர்ப்பது என்ற பெயரிலேயே முன்வைக்கப்பட்டன.

இனியொரு : பின்நவீனத்துவம் கம்யூனிச எதிர்ப்பாக வளர்க்கப்பட்டது பற்றி..?

90 களில் நிறப்பிரிகைப் பத்திரிகை இன்றைய பின்னவீனத்துவ வாதிகளின் தோற்றத்திற்குப் பெரும் பாத்திரம் வகித்தது. குறிப்பாக அ.மார்க்ஸ் ரவிக்குமார் போன்றவர்கள் மக்கள் யுத்தக் குழு (PWG) சார்ந்த பண்பாட்டமைப்பில் இயங்கியவர்கள். 85 இல் அவ்வமைப்பில் ஏற்பட்ட பிளவிற்குப் பின் அதிலிருந்து வெளியேறினார்கள். இவ்வாறு வெளியேறியவர்கள் நிறப்பிரிகை பத்திரிகையை ஆரம்பித்தார்கள். அப்பத்திரிகையின் ஆரம்ப இதழ்களில் கம்யூனிசத்தின் குறைபாடுகள் குறித்த விமர்சனங்களில்தான் முதலில் ஈடுபட்டனர். அதாவது கம்யூனசத்தின் மீதான விமர்சனம், புரட்சியை வலுப்படுத்தலுக்கான முயற்சி என்றே ஆரம்பிக்கிறார்கள்.
ஆனால் இப்பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று வெளியீடுகளுக்குள்ளாகவே, நேரடியான கம்யூனிச எதிர்ப்பு நிலையை முன்வைக்கிறார்கள். வழமை போலவே அவர்கள் ஸ்டாலின் எதிர்ப்பில் ஆரம்பிக்கிறார்கள். முதலில் ஆரம்பிக்கும் போது மார்க்சியத்தைச் செழுமைப்படுத்துவது என்ற கோஷத்துடனேயே ஆரம்பித்தார்கள். 90 களில் ரஷ்ய மற்றும் கிழக்கைரோப்பிய நாடுகளின் போலிக் கம்யூனிசத்தின் வீழ்ச்சியும், பெரஸ்ட்ரோய்கா, கிளாஸ்நாஸ்த் போன்றவையும் புதிய கம்யுனிச மாற்றங்கள் என இவர்களால் கொண்டாடப்பட்டன. ஆனால் மிகக் குறுகிய காலத்திலேயே, எல்லா மாக்ரோக்களுக்கும் எதிராக மைக்கிரோ, “பெருங் கதையாடலுக்கெதிராக சிறுகதையாடல், என பேசத்தொடங்கினார்கள்.

தலித் அரசியலும் பின்நவீனத்துவமும் குறித்து..?

90 களில் இந்தியாவில் உருவான தலித் அமைப்புக்களுடன் அடையாள அரசியலை இணைத்தும், பின் நவீனத்துவம் தான் தலித்துக்களின் சித்தாந்தம் என்ற வகையிலும் தமது மார்க்சிய எதிர்ப்பு அரசியலை நகர்த்திச் சென்றனர். மண்டல் கமிசன் அறிக்கைக்கு எதிரான பார்ப்பனக் கட்சிகளின் போராட்டங்கள் இதற்கு கூடுதல் பின்புலமாக அமைந்தது.

பின்னவீனத்துவம் ஒரு சித்தாந்தம் என்ற வகையில் தனியாக வலிமை பெற்றது என்பதைக் காட்டிலும், அதை ஏறத்தாழ தலித் இயக்கங்களின் சித்தாந்தமாகவே ஆக்குவது, தலித்துகளுக்கு இதில் தான் விமோசம் இருக்கிறது என்பதாகச் சித்தரிப்பது போன்ற நடவடிக்கைகளூடாக தமிழ் நாட்டில் பின்நவீனத்துவம் மேலதிகச் செல்வாக்குப் பெற்றது போலக் காட்டப்பட்டது. தமிழ் நாடு தவிர்த்து ஆந்திராவிலும் இது குறித்தளவு செல்வாக்குப் பெற்றிருந்ததது.

இவர்களுக்கு முன்னாலேயே பிரபலமான புத்திஜீவிகள் என்று கருதப்படும் ஆஷிஸ் நந்தி, டி.என்.மதன் போன்றோர் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். செக்குலரிசத்திற்கு எதிரான இவர்களது கருத்துக்கள் முக்கியமானவை. இந்து மதவெறி இங்கு கோலோச்சிய போது இதே பின்நவீனத்துவ அளவுகோல்களைப் பாவித்து, செக்குலரிசம் என்பது ஒரு மெட்டா நரேட்டிவ் என்றும் அது ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது இந்திய நிலைமைகளுக்கு பொருந்தாது என்றும் இந்திய மதசார்பின்மை என்று ஒன்று தனியாக உள்ளது என்றும் இவர்கள் சொன்னார்கள். மாற்றாக அவர்கள் காந்திய மதசார்பின்மையை முன்வைக்கிறார்கள். அதாவது எல்லா மதங்களிலிருந்தும் அரசு சமதூரத்தில் இருப்பது என்ற கொள்கையை அவர்கள் முன்வைக்கிறார்கள். இதைத் தான் நாம் போலி மதசார்பின்மை என்கிறோம். இவர்களுடைய கருத்துகள் மறைமுகமாக ஆர்.எஸ்.எஸ் இற்குப் பயன்படக்கூடிய வகையிலேயே இருந்தன.

இதே வகையான ஒரு போக்கைத் தான் தமிழ் நாட்டில் பின்நவீனத்துவ வாதிகள் பிரதினிதித்துவப்படுத்தினார்கள். குறிப்பாக இங்கு தலித் இளைஞர்களை அணிதிரட்டுவதற்கான வழிமுறையாகப் பயன்படுத்தினார்கள். கம்யூனிச அமைப்புக்களில் இருக்கக்கூடிய தலித் இளைஞர்களை அவ்வமைப்புக்களிலிருந்து வெளியேறக் கோரினார்கள்.
அவ்விளைஞர்களை அணுகி, கம்யூனிசம் என்பது அவர்களுக்கு விமோசனம் தராது, வர்க்கம் என்பது பெருங்கதையாடல், அது தலித்துக்களுக்கு உதவாது என்று ஆரம்பித்த இவர்களில் அணுகுமுறை நடைமுறையில் எங்கு சென்றதென்றால், தலித் உட்பிரிவுகள் ஒருவரை ஒருவர் நம்ப முடியாது என்று அவர்களுக்கிடையிலான மோதலாக மாறியது. பின் நவீனத்துவத்தின் அடையாள அரசியலும், மைக்ரோவும் கீழே கிழே சென்று இவ்வாறான பிளவுகளுக்கு வழிவகுத்தது. இதன் காரணமாகவே இறுதியில் இது செல்வாக்கிழந்தது. இதுதான் தமிழ் நாட்டுப் பின்நவீனத்துவ செல்வாக்கின் சுருக்கமான வரலாறு.

எந்தப் பெறுமானங்களுமின்றிய விடயங்களைக் கூட இவர்கள் பின் நவீனத்துவம் என்று கொண்டாடியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ஒரு பாடல் இருக்கிறது. ” போத்திகினும் படுத்துக்கலாம் படுத்துகினும் போத்திகலாம்” என்ற பாடலை அ.மார்க்ஸ் பின் நவீனத்துவப் பாடல் என்கிறார். யாரோ குடிபோதையில் எழுதிய வரிகள எல்லாம் பின் நவீனத்துவத்துள் அடங்கிவிடுகிறது. இதை வைத்துக் கொண்டு பின் நவீனத்துவம் எல்லாத் துறைகளிலும் நுழைந்து விட்டதாக வேறு பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள்.

பின் நவீனத்துவம் என்பது ஏகாதிபத்தியத்தினால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு ஆளும் வர்க்கத் தத்துவம். இதன் சாராம்சம் வெறிகொண்ட கம்யூனிச எதிர்ப்பாகும். பெருங்கதையாடலை எதிர்ப்பது என்ற பெயரில் துரோகத்தையும் பிழைப்பு வாதத்தையும், சுயநலத்தையும், குழு நலனை முன்னிருத்துவதையும் யாரோடும் சமரசம் செய்து கொள்வதையும் பொறுக்கித் தின்பதையும் ஒரு கலக நடவடிக்கை போலச் சித்தரித்ததுதான் இதன் சாதனை.

ரவிகுமார் போன்றோர் வெளிப்படையாக தம்மை மார்க்சிய எதிரிகளாகப் பிரகடனம் செய்து கொள்கிறார்கள். அ.மார்க்ஸ் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி தன்னை மார்க்சிய எதிரியல்ல என்றும் சொல்லிக்கொள்ளும் சந்தர்ப்பவாதி. அவர் இதுவா அதுவா என்று கேட்டால் அவர் இதுவும் அதுவும் என்பார். அதுதானே பின் நவீனத்துவத்தின் விடை. முதலாளித்துவம் இன்று வரலாறு காணாத நெருக்கடிகுள்ளாகிருக்கிறது. முதலாளித்துவம் முதலாளித்துவ நாடுகளிலிலேயே இன்று அம்பலப்படிருக்கிறது. மார்க்சியத்திற்கெதிரான சித்தாந்தங்கள் முடிபுக்கு வர, மீண்டும் மார்க்சியத்தின்பால் ஒரு ஈடுபாடு உருவாக, இவ்வாறான சூழலில் இவர்களின் சிலர் “மறுபடி மார்க்சியத்திற்கு” என்ற கோஷத்தை முன்வைக்கிறார்கள். இது ஒருவகையான கவர்ச்சிகரமான மோசடி நடவடிக்கையாகும்.
இதனால் இவர்கள் பின்னவீனத்துவத்தைக் கைவிட்டுவிட்டார்கள் என்றெல்லாம் இல்லை அப்பப்போ எதெது சந்தையில் விலை போகுமோ அதையெல்லாம அவர்கள அணிந்து கொள்வார்கள்.
இந்த பின்னவீனத்துவ வாதிகளின் பட்டியல் ஒன்றைத் தயாரித்துப் பாருங்கள்,அநேகமாக எல்லோருமே பிழைப்புவாதிகாளாகத் தான் முடிபுற்றிருக்கிறார்கள்.

தமது சொந்த வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொண்டு எந்தவிதமான தியாகங்களோ இழப்புக்களோ இன்றி சமூக வாழ்வை நடத்துவதற்கு இந்தத் தத்துவம் இவர்களுக்குத் தோதாக அமைந்துவிடுகிறது. மறுபுறத்தில் பிழைப்பு வாதத்தையே ஒருகலகம் போல சித்தரிப்பது, எதிரிகளை அண்டிப் பிழைப்பது என்பவைதான் இவர்களின் சாராம்சம்.

தலித்தியத்தை இங்கு முதலில் பிரச்சாரம் செய்தவர்கள் மதுரை அரசரடி, இறையியல் மையத்தினர். தென்னிந்திய திருச்சபையின் இந்த நிறுவனம்தான் தென் தமிழ் நாட்டின் என்.ஜீ.ஓ தலைமயகமாக அமைந்தது. இந்த இறையியற் கல்லூரியானது திருமாவளவன் போன்றோரை வளர்ப்பதில் தீர்மானகரமான பாத்திரம் வகித்திருக்கிறது. பின் நவீனத்துவம் போன்ற சரக்குகளைக் கடைவிரிக்கும் கூட்டங்களிலும் என்.ஜீ.ஓ களின் கூட்டங்களிலும் ஆய்வரங்குகளிலும் பல பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் பங்குபற்றிருக்கிறார்கள்.
அ.மார்க்ஸ் போன்றவர்கள் மனித உரிமை பற்றிப் பேசுகிறார்கள். அது தொடர்பான சில நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக அ.மார்க்சைப் பொறுத்தவரை அவருடைய இடது ஆதரவாளர்கள் மத்தியில் அவருக்கு ஒரு அங்கீகாரம் தேடிக்கொள்வதே அடிப்படை நோக்கமாக இருக்கிறது. தவிர, என்.ஜீ.ஓ கள் இவ்வாறான உண்மையறியும் குழுக்களைப் பயன்படுத்த எப்போதும் தயாராகவே உள்ளன. இவ்வாறான குழுக்களில் மார்க்ஸ் மட்டும் செல்வதில்லை. என்.ஜீ.ஓ சார்ந்த மனித உரிமை அமைப்புக்கள் எல்லாம் பங்காற்றுகின்றன. இவற்றிற்கெல்லாம யார் யார் பண உதவி தருகிறார்கள் என்று அறுதியிட்டுக் கூறமுடியாது. ஆனால் இவ்வமைப்புகள் பலவற்றை ஒழுங்கமைப்பதெல்லாம் பண உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் என்.ஜீ.ஓ கள்தான்.

புலம்பெயர் நாடுகளில் உருவாகியுள்ள தலித் அமைப்புக்கள் பற்றி?

தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறை, தீண்டாமை என்பவை யதார்த்தமாக இருக்கின்ற ஒரு ஒடுக்கு முறை. இவை இல்லையென்று யாரும் வாதிடமுடியாது. இந்தத் தீண்டாமை பற்றிய பிரச்சனை என்பது ஒரு நெடிய போராட்டத்தின் வழியிலேயே தீர்க்கப்படலாம்.
இந்தியாவைப் பொறுத்த வரையில் கம்யூனிஸ்ட்டுகள் அவர்களது பிரச்சனையைத் தீர்க்கவில்லை அல்லது தீர்மானகரமான தீர்வை முன்வைக்கவிலை என்பதே தலித் அமைப்புக்களின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.

தவிர, தலித் பிரச்சனை என்பது தலித்துக்களுக்குத் தான் தெரியும் அவர்கள் மட்டுமே அதை உணர்ந்துகொள்ள முடியும் என்றும் தலித்தியம் பேசுவோர் முன் வைக்கிறார்கள். இவ்வாறான தீவிர அரசியலைப் பேசியே திருமாவளவன் போன்றோர் அரசியலுக்கு வருகிறார்கள். இப்போது அவர், காங்கிரஸ், அ.தி.மு.க, தி.மு.க போன்ற எல்லோரோடும் கூட்டுக்குப் போய்விட்டார். ஒரு வகையில் தலித்துக்களை இன்னமும் விரைவாகவும் அழுத்தமாகவும் நிறுவன மயப்படுத்துவதற்குத் இது பயன்பட்டிருக்கிறது என்பது மட்டுமல்ல அவர்களிடையேயான பிளவுகளை அதிகப்படுத்தவும் பயன்பட்டிருக்கிறது.
இதே விடயத்தை ஐரோப்பாவை நோக்கிப் புலம் பெயர்ந்த தமிழர்கள் மறுபடி ஆரம்பித்திருக்கிறார்கள் என்றால், அதன் அர்த்தங்கள் எனக்குப் புரியவில்லை.
ஆனால தமிழ் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம் இவற்றின் எல்லைகளிலிருந்தே தலித் பிரச்சனை அணுகப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. ஆனால் பெருங் கதையாடலுக்கு எதிராக என்ற அடிப்படையில் தான் இப்பிரச்சனை முன் வைக்கப்படுகிறது. இது தமிழ் நாட்டைப் போலவே அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இவ்வாறு நாம் கூறுவதால் தலித் பிரச்சனையை நிராகரிப்பது என்பது பொருளல்ல. தீண்டாமை என்ற கொடுமையைக் குறைத்து மதிப்பிடுவதாகவும் இதற்குப் பொருளல்ல. ஆனால் அவர்கள் கூறுகின்ற வகையில் அதற்குத் தீர்வு கிடையாது என்பதே எமது நிலைப்பாடு.
சிங்களப் பேரின வாதத்தின் பின்னால் நிறுவனப் படுவதனூடாக தீண்டாமை ஒழியும் என்ற கருத்துக் கூட முன்வைக்கப்படுகிறது. மனிதப் படுகொலை நடத்தும் சிங்களப் பேரின வாத அரசு தலித் மக்கள் மீதான கொடுமையை ஒழிக்கும் என்பது கற்பனைகு எட்டாத மூட நம்பிக்கையாகும்.

தலித் பிரச்சினை என்பதே சிறுபான்மை மக்கள் மீது பெரும்பான்மையினர் செலுத்தும் அநீதியான ஒடுக்குமுறை. ஆகவே தீண்டாமை ஒழிப்பு என்பது பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவின்றி வெற்றிபெற முடியாது. வர்க்க ரீதியான ஒடுக்கப்பட்ட மக்களின் இணைவு மட்டுமே தீண்டாமையை ஒழிப்பதற்கான அடிப்படையாக அமைய முடியும். இந்தியாவில் முஸ்லீம் மக்கள் மட்டும் தனித்து நின்று இந்து மதவெறியை அழிக்க முடியுமா? இதே போலத்தான் பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்கள் தலித் மக்களுடன் இணைந்தே தீண்டாமையை ஒழிக்க முடியும். இவ்வாறு தான் தமிழ் நாட்டில் நாம் வேலைசெய்த இடங்களில் தீண்டாமையை இவ்வாறுதான் ஒழித்திருக்கிறோம்.
.

இந்தியாவிலேயே இப்படித்தான் தலித் போராட்டங்களை முன்னெடுக்கமுடியும் எனும் போது இலங்கையில் மட்டும் இது எவ்வாறு வேறுபடும். இலங்கையில் தலித்துக்கள் பெரும்பான்மையா என்ன?

மாவோயிஸ்டுக்களின் அரசியல் மீது எமக்கு விமர்சனம் இருந்தாலும், பீகாரிலும், தெலுங்கானாவிலும், ஆந்திராவிலும் இந்த அணுகுமுறையின் மூலம் தான் அவர்கள் தீண்டாமையை ஒழித்திருக்கிறார்கள். நாம் பல இடங்களில் கோயி நுழைவுப் போராட்டம், கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கான போராட்டம், சாலையில் நடமாடுவதற்கான போராட்டம் போன்ற பல போராட்டங்களை நாம் நடாத்தி வெற்றி கண்டிருக்கிறோம், இவ்வாறான எல்லாப் போராட்டங்களிலுமே ஏனைய சாதியினரைச் சேர்ந்த தோழர்களும் பங்குபற்றியிருக்கிறார்கள். இதனால் எமது போராட்டங்கள் எந்த ஒரு இடத்திலும் சாதிக் கலவரமாக மாற்றப்பட்டது கிடையாது.
இங்கு தமிழ் நாட்டில் நாம் நாடாத்திய போராட்டங்கள் வெற்றியடைய காரணம் இதுதான். தலித் மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் இடங்களில் வேண்டுமானால் தலித் அமைப்புகள் கூறும் அரசியல் எடுபடலாம். ஆனால் பெரும்பாலான இடங்களில் தலித் மக்கள் சிறுபான்மையாகத்தானே வாழ்கிறார்கள். அங்கே தலித் மக்கள் தம் சொந்த அனுபவத்திலிருந்தே இதனை நிராகரிப்பார்கள்.

கம்யூனிஸ்டுகளைப் பற்றி இன்று இவர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தலித் மக்களுக்கு எதிரான ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறையை எதிர்த்து முறியடித்திருப்பவர்கள் கம்யூனிஸ்டு இயக்கத்தினர்தான். இதை யாரும் மறுக்க இயலாது. தலித் மக்களைப் பொருத்தவரை சாதிக்கும் வர்க்கத்துக்கும் இடையில் சீனப்பெருஞ்சுவர் எதுவும் இல்லை. அவர்கள் வர்க்கரீதியாகவும் சாதி ரீதியாகவும் ஒடுக்கப்படுபவர்கள். ஒரு தலித் உள்ளூர் சாதி ஆதிக்க பண்ணையாரை எதிர்த்து நின்று கூலி உயர்வு கேட்கிறார் என்றால், அது வெறும் கூலிப்போராட்டம் அல்ல. அது ஒரே நேரத்தில் சாதி ஆதிக்கத்தை எதிர்க்கும் போராட்டமாகவும் இருக்கிறது.

சாதி ஒழிப்புக்கும் தீண்டாமை ஒழிப்புக்கும் வர்க்கப்போராட்டம்தான் அறுதித் தீர்வு என்றாலும், ஒன்று மற்றதைத் தொடரும் என்று இதனை எந்திரகதியாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அவ்வாறு நாங்கள் கருதவும் இல்லை. ஆதிக்கசாதிகளைச் சேர்ந்த ஏழை விவசாயிகள், தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்குத் துணை நிற்கிறார்கள் என்றால் நாங்கள் தலித் மக்களுடன் இணைந்து நின்று அவர்களை எதிர்த்துப் போராடியிருக்கிறோம். அவர்கள் மனம் மாறும் வரை தீண்டாமையை சகித்துக் கொள்ளுமாறு நாங்கள் எப்போதும் கூறியதில்லை. சொல்லப்போனால் தமிழகத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஊராட்சிகளில் தலித் தலைவரை தேர்ந்தெடுக்க கூடாது என்று தேவர் சாதியினர் (ஏழைகள்தான்) வெறி கொண்டு நின்ற போது அதனை எதிர்த்திருக்கிறோம். “தலித் மக்கள் மீது சமூக ஒடுக்குமுறையை நிலைநிறுத்த வேண்டும் என்று கூறும் சாதியினருக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்” என்று தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்திருக்கிறோம்.

உதாரணமாக உங்கள் அமைப்பின் ஒரு போராட்டத்தைக் கூறலாமே?

தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைய ராஜாவினுடைய ஊரான பண்ணைப் புரத்தில் நடந்த போராட்டதைக் குறிப்பிடலாம். அந்தப் பண்ணைப் புரத்திலுள்ள தேனீர்க்கடையில் தாழ்த்தப் பட்டவர்களுக்குத் தனிக் குவளையில் தான் தேனீர் வழங்கப்படும். இளையராஜா பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர். அங்கு பள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் எண்ணிக்கையில் சற்று அதிகமாக உள்ளதால் அவர்களுக்குத் தனிக்குவளை கிடையாது.

இந்தத் தனிக்குவளை அகற்றுவதற்கான போராட்டத்தில் முக்கியமாகப் பங்கேற்றுக்கொண்ட தோழர்கள் பக்கதிலுள்ள கூடலூர் என்ற கிராமத்தைச் சார்ந்தவர்கள். அவர்களில் அதிகமாக அனைவருமே தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள். அந்த வட்டாரத்தில் சாதி ஆதிக்கத்தை நிலை நாட்டும் சாதி அதுதான். தேவர் சாதி வெறிக்குப் பெயர் போன ஊரே கூடலூர்தான். அந்த தேனீர்க்கடையில் நடந்த தள்ளுமுள்ளு மோதல்களில் நமது தோழர்களை போலீசார் அடித்து இழுத்துச் சென்றனர். இந்த சம்பவம் நடந்த நேரத்தில் இளைய ராஜாவின் மனைவி மற்றும் யுவன் சங்கர்ராஜா ஆகியோர் கூப்பிடு தூரத்தில் காரில் ஏறுவதற்காகக் காத்திருந்தனர். அப்போது சம்பவத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். இளைய ராஜா அந்த ஊர்ப் பண்ணையாரின் நண்பராக மாறிவிட்டார் என்பது வேறு கதை.
இங்கு குறிப்பிடத் தக்க விடயம் என்னவென்றால் பறையர் சமூகத்தைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் இந்தப்போராட்டத்தில் அன்றைக்கு பெரியளவில் பங்கேற்றுக் கொள்ளவில்லை.

ஆனால் இந்தப் போராட்டம் முடிவடைந்து இந்தப் பிரச்சனை ஒரு பேசப்படுகிற சம்பவமாகிவிட்டது. இந்த நிலையில் இளைய ராஜாவின் நண்பரான பண்ணையார் இந்த ஊரில் தீண்டாமைக் கொடுமையெல்லாம் இல்லை தனிக்குவளை இல்லை என்று பறையர் சாதியினர் மத்தியில் கையெழுத்து வேட்டை நடத்த முனைந்தார். இந்த சூழ் நிலையில் அடக்குமுறைக்க்கு நாளாந்தம் உட்படுத்தப்படும், பண்ணையாரில் தங்கிவாழ்கின்ற தாழ்த்தப்பட்ட சாதியினர் அனைவருமே பண்ணையாரை எதிர்த்து நின்றனர். கையெழுத்துப் போடுவதற்கு யாருமே சம்மதிக்கவில்லை.
இவ்வாறு இம்மக்களை அவர்களது அடக்குமுறைக்கெதிராகப் போராட வெளிக்கொண்டு வந்ததென்பது மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கிறோம்.
வராலாறு முழுவது நிலப்பிரபுவை மறுத்தேயிராத இந்த சமூகம் முதல்தடைவையாகத் தெருவிற்குவந்து மறுப்புத் தெரிவித்தது என்பது தான் அங்கு நமக்குக் கிடைத்த பெரு வெற்றி.

தேசியம் கற்பிதம் என்பது பற்றி..?

இலங்கையில் அதைப் பேசுகிறார்கள் என்றால் வேடிக்கைதான். தேசியம் கற்பிதம் என்று ஒடுக்கப்படும் தமிழர்கள் மத்தியில் சொல்வது இருக்கட்டும். ஒடுக்கும் சிங்கள அரசிடம் இவர்கள் சமரசத்தைக் கோருகிறார்கள். ஏன் சிங்கள அரசிடம் சமரசம் செய்வதற்கு முன்னர் அவர்களுடைய சிங்கள தேசியமும் கற்பிதம் என்று பேசக்கூடாது?

33 thoughts on “அனேகமாக எல்லா பின்நவீனத்துவ வாதிகளும் பிழைப்புவாதிகளே! : மருதையன்

 1. பின் நவீனத்துவம் குறித்து மருதையாவின் கருத்து அவரது பலகீனத்தை காட்டுகிறது.தலித்தியத்தையும்,தலித் அமைப்புகளையும் குறித்த அணுகலும் அவ்வாறே உள்ளது.அவர் சொல்வது போன்றதல்ல பின்நவீனத்துவமும்,தலித்தியமும் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயமே.புத்திஜீவிகளுக்கும் களப்பணியாளர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் ஒழிய வேண்டுமெனில் இரண்டையும் சம அளவில் உள்வாங்க வேண்டியது முக்கியமான ஒன்றாகும்

 2. //அனைவருக்கும் தெரிந்த விசயமே.//

  உங்கள் அனைவரும் என்பதுள் அடங்காதவர்கள் யாவர், அடங்கியோர் யாவர்?

 3. “தமிழ் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம் இவற்றின் எல்லைகளிலிருந்தே தலித் பிரச்சனை அணுகப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.”

  என் கருத்தும்.

 4. ‘இவர்களுடைய கருத்துகள் மறைமுகமாக ஆர்.எஸ்.எஸ் இற்குப் பயன்படக்கூடிய வகையிலேயே இருந்தன.

  இதே வகையான ஒரு போக்கைத் தான் தமிழ் நாட்டில் பின்நவீனத்துவ வாதிகள் பிரதினிதித்துவப்படுத்தினார்கள்’

  மருதையனுக்கு ஏராளமான குழப்பங்கள். அஷிஸ்நந்தியும், ம்தனும் முன் வைத்தது மதச்சார்பின்மை குறித்த விமர்சனம்.நந்தி பாஜக, இந்த்துவத்தை கடுமையாக விமர்சிப்பவர்.நந்தி பின்நவீனத்துவவாதி என்று கூறிக் கொள்பவரல்ல. தமிழ்நாட்டில் பின்நவீனத்துபம் குறித்து பலர் எழுதியுள்ள ந்-இலையில் அ.மார்க்ஸ், ரவிக்குமாரை மட்டும் குறிப்பிடுவது ஏன்.

 5. தேவை…
  இதுபோன்ற
  தைரியமான கட்டுரை.

 6. //RANGA on August 16, 2009 7:26 pm
  துடைப்பானின் முன்னாள் நண்பர் கோஸ்டியை சேர்ந்த மகிந்தா அரசின் எடுபிடியாக மாறிவிட்ட சுசீந்திரன் அன்ட் கோ திருவனந்தபுரத்தில் சென்ற மாதம் கூட்டிய கூட்டம் பற்றி துடைப்பானுக்கு தெரியாதோ? இந்த கூட்டத்திற்கு இலங்கை சேர்மனி லண்டனிலிருந்து பல அரச எடுபிடிகள் கலந்துகொண்டார்கள். இலங்கையிலிருந்து 50க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் போக்குவரத்து பயணச் செலவு தங்குமிட வசதி செய்து கொடுக்கப்ட்டது. மூன்று நாட்கள் கூட்டம் நடைபெற்றது. தமிழ் நாட்டில் நடாத்தினால் விசயம் வெளிவந்து பிரச்சனை வரும் என்பதால் திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்டது. இதற்கு இந்திய ரூபா 60லட்சம் செலவளிக்கப்ட்டதாக கணக்கு. சுசீந்திரன் காடடில் நல்ல மழை.//

  அ.மார்க்ஸ்சை தோழர் மருதையன் பிழைப்புவாதி என்று குறிப்பிடுவது 100வீதம் சரியானது. மேற்காணும் பின்னூட்டத்தில் காணப்படும் சுசீந்தரன் என்ற புகலிட பிழைப்புவாதி கேரளாவில் கூட்டிய சிறீலங்கா பேரினவாத அரசு சார்பு கூட்டத்தில் கலந்துகொள்ள ஐரோப்பாவிலிருந்தும் இலங்கையிலும் இருந்து வரவழைக்கப்பட்ட அரச கைக்கூலி பிழைப்புவாதிகளோடு அ.மார்க்ஸ் சென்னையில் கூடிக்கூலாவித் திரிந்ததும் இந்த கைக்கூலிகளில் சிலர் பிழைப்புவாதி அ.மார்க்ஸின் வீட்டில் தங்கியிருந்ததும் தெரிந்தவிடயம். அப்படி இருக்க அ.மார்க்ஸ் பிழைப்புவாதி அல்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும். ?

 7. ////அனைவருக்கும் தெரிந்த விசயமே.//

  உங்கள் அனைவரும் என்பதுள் அடங்காதவர்கள் யாவர், அடங்கியோர் யாவர்?// மு.மயூரன்

  நல்ல கேள்வி மயூரன். முஜிபுர் ரஹ்மானின் மீ-கவிதைகளைப் பன்முகத்தில் படித்திருக்கிறேன். மொழி/வார்த்தைகள் தொடர்பில் செறிவுத்தன்மை பற்றி ஜூலியா கிறிஸ்தவாவிடம் படிச்சதை எல்லாம் மறந்து, அல்லது மிகவும் இலகுவாய் Theory of Inclusion இன் அறச்சிக்கலை மறந்து `அனைவரும்/அனைவருக்கும்` என்று விளாசித்தள்ளுவது எரிச்சலாய்த்தான் இருக்கு. ugh

  அப்புறம் மருதையன், ஹிஹி, மார்க்ஸின் வாதங்களுக்கு முன்னால் நிற்க இவராலும் இயலவில்லை. 🙁 சிக்கல் என்னென்றால், 90க்குப் பிந்தைய தமிழ் அறிவுச் சூழல்கள், தவிர்க்கமுடியாமலே மார்க்ஸ்(இதர)-இன் வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்ட eerie postmodern meta-architectures. இதுக்குள்ள, மருதையனின் வார்த்தைகளும் கூட சுவாரசியமான additions தான்.

  பின் நவீன நிலவரம் என்னைப் பொறுத்தவரை தன்னிலை சார்ந்தது. என்னுடையது பின்நவீனத் தன்னிலை(?, maybe தன்னிலைகள், er)…. அது ஒரு தியரி, கலைக் கோட்பாடு, சித்தாந்தம், huh? எனக்குத் தெரியாது, தெரிந்து கொள்ள நேரம்/விருப்பம்/அக்கறை எதுவும் இல்லை. என்னுடன் Facebookஇல் YoVille விளையாட ஆர் ரெடி?

 8. //இலங்கையில் அதைப் (தேசியம் ஒரு கற்பிதம்)பேசுகிறார்கள் என்றால் வேடிக்கைதான். // மருதையன்
  -இலங்கையில் நான் அதைப் பேசுவது குறித்து இந்த்தியாவில் இருக்கிற மருதையன் பேசுகிறார் என்றால் அதி வேடிக்கைதான் போங்கள். >.<

 9. maran / ranga…
  எங்களிடம் அறிவுசீவி பெரெஸ் ஹில்டன்களுக்கு/Paris Hilton illai) எப்போதும் பஞ்சம் வராது உங்கள் புண்ணியத்தில்.
  சோவியத்Vsஎம்15-பாஸ்ரர்நாக், ஓர்வெல் இரகசியங்களின் சர்ச்சைகளின் வாசிப்பு இன்பத்தை நல்குவதாய் நினைத்து நீங்கள் ரைப் அடிப்பதில், Perez hiltonஇற்கும் டெய்லி மெயிலுக்கும் பிறந்த விலங்கை ஞாபகப் படுத்துகிறீர்கள்!!!!

 10. reader,

  /மருதையனுக்கு ஏராளமான குழப்பங்கள். அஷிஸ்நந்தியும், ம்தனும் முன் வைத்தது மதச்சார்பின்மை குறித்த விமர்சனம்.நந்தி பாஜக, இந்த்துவத்தை கடுமையாக விமர்சிப்பவர்.நந்தி பின்நவீனத்துவவாதி என்று கூறிக் கொள்பவரல்ல./

  உங்களுக்குத்தான் குழப்பம் போலிருக்கு.

  மருதையன் இங்கே அப்படி எங்கே சொன்னார்?

 11. //தமிழ்நாட்டில் பின்நவீனத்துபம் குறித்து பலர் எழுதியுள்ள ந்-இலையில் அ.மார்க்ஸ், ரவிக்குமாரை மட்டும் குறிப்பிடுவது ஏன்.// Reader
  கேள்விப்பட்டது இவ்விரண்டு நாமங்களையும் தான். tsk tsk.

  சோவியத் புரட்சி என்பது அராஜக ஸ்ராலின் தான்…. லியோன் ட்ரொஸ்கி? huh? who?

 12. சும்மா மூளை களன்றது போல கன்னா பின்னா என்று பேசுவதெல்லாம் பின்நவீனத்துவம் என்று சொன்னார்கள் இந்த ஹரி அதுக்கு நல்ல உதரணம்!

  1. அருமை ஹரி தானாகவே அம்பலம் ஆகிரார்

 13. Ahoy Thanga!
  Hahaha, Muchas Gracias, if you’re reading a post-modern condition in my words. AREGATO mi corazon. >.<

  and si, ennudaiya muuLai, athu kalandu udainthu sithaRi, into pixels of nonsense. Did you see that surreal explosion? I see you, in the very same virtual landscape, wandering into the pile of pixels and words. Oh well, you'll never sense this place of our standing.
  Define me in pixels, again and THAT too is postmodern for my Anglophile Crackhead X]
  !
  [To IniOru: believe me i am not on crack]

 14. காலத்தின் ஓட்டத்தில் மக்களிடமிருந்து திரண்டெழும் கருத்துக்களும் அதிலிருந்து உருவாகும் கோட்பாடுகளும் எப்போதும் சுயநலமாயும் “பொய்”யாயும் ஏமாற்றாயும் இருக்குமென்றில்லை.

  “தீமை” யும் “தவறான” அதிகாரமும் கொண்டவர்கள் சில கோட்பாடுகளை வேண்டுமென்றே உருவாக்கி விதைக்கின்றனர். அவை மட்டும் தான் தீமைக்கும் தவறான அதிகாரத்துக்கும் துணைபோகவேண்டுமென்றில்லை.

  மக்களிடமிருந்து திரண்டெழும் கோட்பாடுகளில் தமக்குச் சாதகமானவற்றை தீமையும் தவறான அதிகாரமும் கண்டெடுத்து வளர்த்தெடுத்துப் பயன்படுத்த ஆரம்பிக்கும்.

  பொருள் முதல்வாதக்கோட்பாடுகளையே கூட மத அதிகாரங்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தியிருக்கின்றன.

  மதக்கோட்பாடுகளை மட்டுமல்ல மார்க்சியத்தையே கூட ஏகாதிபத்தியங்களும் முதலாளிய அதிகாரங்களும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்கின்றன.

  திரித்தலும், மறைத்தலும், தேர்ந்தெடுத்தவற்றை மட்டும் சொல்தலும் என்று பல உத்திகள் இங்கே பயன்படுத்தப்படுகின்றன.

  இந்த அடிப்படையில் பின்னவீனத்துவம் என்ற சொல்லால் விளங்கப்படுத்தப்படும் கருத்துக்களின் தொகுப்பில் பல கூறுகள் உலகமயமாக்கம், ஏகாதிபத்தியம், ஒடுக்குமுறைகளுக்கு மிகவும் பயன்படத்தக்கனவாக இருக்கின்றன.

  மிக மிக முக்கியமாக மூலதன அதிகாரத்துக்கான கோட்பாட்டு ரீதியான மிக அபாயகரமான தீவிரமான அச்சுறுத்தலாக அமையும் மார்க்சியத்தை ஆழமான அறிஞர்களும் மயங்கும்படி எதிர்கொள்ள அது உதவுகிறது. இது மூலதன அதிகாரத்துக்குக் கிடைத்த “வரலாற்று போனஸ்”

  மேற்கண்ட உத்திகளோடு ஏகாதிபத்தியங்களும் தவறான அதிகாரங்களும் பின்னவீனத்தையும் வளர்த்தெடுக்க விரும்புகின்றன. பரவச்செய்ய உதவுகின்றன. ஒரு புதிய fashion போல மூர்க்கமான பின்னவீனப் பரவல் அறியும் ஆர்வலர் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட உலகமயமாக்கமும் அதிகாரங்களும் விரும்புகின்றன.

  குர் ஆனை இவ்வாறு தவறாகப் பயன்படுத்தினால் குர் ஆனை வைத்தே திரிபுகளை , தடம்புரண்ட இடங்களை அம்பலப்படுத்தி முறியடித்துவிடக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு.

  தெளிவாக வரையறுக்கப்பட்ட மெய்யியல் நிபந்தனைகளோடு வளர்ந்துவரும் மார்க்சியம் போன்ற வளர்நிலைக் கோட்பாடுகளையும் தவறாகப் பயன்படுத்தும்போது அம்பலப்பட்டுவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கின்றன.

  பின்னவீனம் இந்த அபாயங்கள் இல்லாத மிகவும் லாவகமாக ஏகாதிபத்தியங்களால், தவறான அதிகாரங்களால் பயன்படுத்தப்படத்தக்க எண்ணப்போக்காக இருக்கிறது. அடிப்படை நிபந்தனைகள், இலட்சியம், “இதுதான் பின்னவீனம், இதுவல்ல” போன்ற வாதங்களுக்கு அங்கே இடமில்லாத நிலை தொடக்கம் அதன் துகள்களாகவும் வடிவமற்ற மாறும் திரட்சிகளாகவும் இயங்கும் தன்மை வரை மிகவும் லாவகமானது.

  பிரச்சினை என்னவென்றால்,

  தமிச்சூழலுக்கு பின்னவீனத்தை இறக்குமதி செய்தவர்கள் பின்னவீனமாய் இனங்காட்டப்படும் கூறுகளின் மூலங்களையும் அவற்றை உருவாக்கிய மக்கள் கூட்டத்தையும் அவர்களுக்கும் அந்தக் கருத்துகளுக்குமான உறவையும் விட்டுவிட்டு அல்லது வசதியாக மறைத்துவிட்டு, ஏகாதிபத்தியங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட கருத்துக்களையும், கூறுகளையும், தன்மைகளையும் இறக்குமதி செய்து இங்கே fashion ஆக்கினார்கள்.

  கொக்கெய்ன் இன் மருத்துவ பலாபலன்கள் பற்றிய விவாதங்களை விட்டுவிட்டு கொக்கா கோலாவை இங்கே விற்பனை செய்தார்கள். அவர்கள் சுற்றுலாப்போனபோது கண்ணில் படக்கூடியதாக இருததும் இலகுவாய்க்கிடைத்ததும் நல்ல பரவலாக கடைவிரிக்கப்பட்டிருந்த கொக்கா கோலாதான்.

  1. பின்னவீனத்துவத்தை, கோட்பாடாகவும் அதன் கூறுகளாகவும் ஏகாதிபத்தியமும் உலகமயமாக்கமும் ஆசீர்வதிக்கவில்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள் தருக.

  2. பின்னவீனத்துவத்தை, கோட்பாடாகவும் அதன் கூறுகளாகவும் ஏகாதிபத்தியமும் உலகமயமாக்கமும் முதலாளியமும் தீவிரமாக அச்சத்தோடு எதிர்க்கின்றன என்பாற்கு எடுத்துக்காட்டுகள் தருக.

  3. தமிழ்ச்சூழலில் பின்னவீனத்துவ வாதிகளின் அத்தனை எழுத்துக்களையும் ஒரு கணக்கெடுப்புக்கு உட்படுத்தினால், அதில் மார்க்சிய எதிர்ப்பா, ஏகாதிபத்திய முதலாளிய எதிர்ப்பா அதிகமாயிருக்கும்?

  4. பெருவெளி என்கிற கிழக்கிலங்கையில் இருந்து வெளியான இஸ்லாத்தை நியாயப்படுத்துவதற்கான சஞ்சிகை ஏன் பின்னவீனத்துவத்தை போற்றிப்புரந்தேத்திக் கைக்கொண்டது?

  5. பின்னவீன வருகைக்கு முன் ஏகாதிபத்தியம் மார்க்சியத்தை கோட்பாட்டு ரீதியாக எதிர்கொள்ள வைத்த வாதங்கள் என்ன? வருகைக்குப்பின் வைக்கும் வாதங்கள் என்ன?

  குறிப்பு:

  * மேற்கோளுக்குள் தரப்பட்ட சில சொற்கள் abstract ஆக மேலோட்டமான பொதுவான அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டன.

  * கொகாகோலா எடுத்துக்காட்டு மிக மிக மேலோட்டமானது. சொல்லவந்த கருத்தோடு புணரும் ஆணும் பெண்ணும் போல பொருந்திக்கொள்ள வேண்டுமென்றில்லை (இந்த எடுத்துக்காட்டும் இந்த விசயத்துக்கு ;))

 15. இணையம் நடத்துபவா;களுக்கு நல்லநோக்கமாவது இருக்கவேண்டும். தனிநபர்களை நோக்கி குறிவைத்து சுயஇன்பம் காணுவது அற்பத்தனமானது. கையில இணையம் நாங்கள் நினைச்சத எழுதலாம் அல்லத அதை ஊக்கப்படுத்தலாம் என்ற அற்பத்தனம் தயவுசெய்துவேண்டாம். இதுபோன்ற கயமைத்தனங்களால் இணையத்தளங்களிலே வெறுப்பு வந்துவிடுகிறது. ஒருவரை அடையாளப்படுத்தவேண்டும் என்றால் பகிரங்கமாக நேராக செய்யுங்கள். அதில் உங்கள் நோ;மையும் இருக்கும்.

 16. ஓ தோழர் மயூரன்! <3 :))

  //1. பின்னவீனத்துவத்தை, கோட்பாடாகவும் அதன் கூறுகளாகவும் ஏகாதிபத்தியமும் உலகமயமாக்கமும் ஆசீர்வதிக்கவில்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள் தருக.//
  முதலில் பின்நவீனத்துவம் என்பது ஒரு கோட்பாடு என்பதுடன் எனக்கு உடன்பாடில்லை. அது ஒரு நிலவரம். இது குறித்தான/பற்றிய எழுத்துக்கள் எல்லாம் அந்த நிலவரம் குறித்த அறிக்கைகளே. இந்த நிலவரம் ஏதோ லியோத்தார்டின் புத்தகத்துடன் பிறக்கிறது என்று சொல்கிறார்கள். என்னைக் கேட்டால், சுடலையில் கால் நீட்டிக் கிடந்து பேயை நோக்கி `எற்றெற்று` பாடிய ஔவைக் கிழவி is the postmodern shizz. Trust me.
  முதலாளித்துவ கடவுளர்கள் எதைத்தான் ஆசீர்வதிக்கவில்லை. நிக்கோலஸ் சார்க்கோஸி பர்தா வேண்டாமென்பார். கார்லா ப்ரூனி அதை ராடிக்கல் ஃபாஷன் என்பார். You have a religious industry. சே கூவேராவை எடுத்துக் கொள்ளுங்கள். ஒக்ஸ்ஃபோர்ட் தெரு கடைகளுக்குள் நுழைந்தால் ஜோர்ஜ் ஜி கஸ்டநாடாவின் காற்சட்டை கட்டாயம் ஈரமாகும் 😉 🙂 சே ரீஷேர்ட், சே கொஃபீ மக், சே ப்ரஸ்லேற்… முதலாளித்துவம் எதைத்தான் ஆசீர்வதிக்கவில்லை… wtf

  //2. பின்னவீனத்துவத்தை, கோட்பாடாகவும் அதன் கூறுகளாகவும் ஏகாதிபத்தியமும் உலகமயமாக்கமும் முதலாளியமும் தீவிரமாக அச்சத்தோடு எதிர்க்கின்றன என்பாற்கு எடுத்துக்காட்டுகள் தருக.//
  AL / OL question papers. O.o 90களுக்குப் பிந்தைய மார்க்சிய உறுத்தல்களையும் தான் அவர்கள் கண்டுகொள்கிறார்கள் இல்லை. சோவியத் உடைவுக்கு முன்னர் மார்க்சிசம் ஒரு `அரசு` வடிவில் இருந்தது. அரசு என்பது அதிகாரம், சரி? ஆகவே, பயம் இருந்தது. தீவிரமான அச்சத்தோடு எதிர்கொண்டார்கள். க்யூபா, அதே பழைய கதை. அதிகாரம் இருக்கிறது. ஆகவே தீவிர எதிர்கொள்ளல்கள். பின் நவீன தேசம் ஒன்றை உருவாக்கி என்னை ஜனாதிபதியாக்குங்கள்!!!!! (:preeening: eeeee: அவர்கள் மெய்நடுங்கி விதிர்விதிர்த்து… 000000. HAHA, its hilarious பின்நவீனர்களுக்கு அதிகாரமும் ஒரு தேசமும் வேணும். then thou shall know 😛

  //3. தமிழ்ச்சூழலில் பின்னவீனத்துவ வாதிகளின் அத்தனை எழுத்துக்களையும் ஒரு கணக்கெடுப்புக்கு உட்படுத்தினால், அதில் மார்க்சிய எதிர்ப்பா, ஏகாதிபத்திய முதலாளிய எதிர்ப்பா அதிகமாயிருக்கும்?//
  நான் வாசித்தறிய எல்லாம் இடதுசாரி ஆடுகள். நல்லி குப்புசாமி செட்டியின் ad-ஐ தனது தளத்தில் வைத்திருக்கும் சாரு உட்பட 😉 உண்மையாவே, ரெஜியை விடவா இவர்கள் சோவியத்தை துவைத்தார்கள்? மார்க்சிய எதிர்ப்பு தூக்கலாய் தெரிய காரணம் என்னெண்டால், it's the theory they are occupied with. Its their home, home with troubled history. என்னை எடுத்துக் கொள்ளுங்கள், இந்த ஈழத்தமிழர்களைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருப்பதே 2 வருஷ தொழிலாய் இருக்கிறது. (புலியும் பூனையும் என்று ஒரே ugh…) இதற்காய் என்னை நீங்கள் சிங்களவன் என்று சொல்வீர்களா என்ன? :(((

  //4. பெருவெளி என்கிற கிழக்கிலங்கையில் இருந்து வெளியான இஸ்லாத்தை நியாயப்படுத்துவதற்கான சஞ்சிகை ஏன் பின்னவீனத்துவத்தை போற்றிப்புரந்தேத்திக் கைக்கொண்டது?//
  ஓஹ்ஹ், I LOVE THEM, குறிப்பாய் மஜீத்-உம் ரியாஸ் குரானாவும். அரசியல் திட்டமாய் பின்நவீனத்துவம் அவர்களுக்கு கைகொடுக்கவே இல்லை. முரண்பாடென்றால் ஒரே முரண்பாடு. அதில் `வித்தியாசம்` `முரண்` ஆகியவற்றை demonstrate பண்ணி குரானா எழுதிய கட்டுரை நல்லம். முக்கியமாய் religio-linguistic differences. மதம் கட்டமைக்கும் மொழியமைப்பு சார்ந்த வித்தியாசம்?? அது உண்மைதான் இல்லையா? பிறகு இந்த முரண்களை சீர் செய்வமெண்டு றஊப் வெளிக்கிட்ட கட்டுரையும் மிக நல்லது. முரணிணைவு இதர இதர… DAMN மயூரன், இதுகளை எல்லாம் விட்டுட்டு அவர்களை Islamic Glorification என்று சொல்ல எப்பிடி மனம் வந்தது? அப்புறம் இஸ்லாமை நியாயப்படுத்துவதில் என்ன தவறிருக்க முடியும்? தாரிக் அலி/பாத்திமா மெர்னிஸியை கூப்பிட விரும்புகிறேன்.

  //5. பின்னவீன வருகைக்கு முன் ஏகாதிபத்தியம் மார்க்சியத்தை கோட்பாட்டு ரீதியாக எதிர்கொள்ள வைத்த வாதங்கள் என்ன? வருகைக்குப்பின் வைக்கும் வாதங்கள் என்ன?//
  Herge இன் ரின்ரின் கொமிக்ஸ் வாசித்தீர்களா? 70களில் என்று நினைக்கிறன். TinTin in Soviet எண்டு சொல்லி… அது முன்னம். இப்ப எல்லாம், மார்க்ஸியத்தை கோட்பாட்டு ரீதியாய் அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஃப்ரான்ஸிஸ் ஃப்புக்குயாமாவுக்கு வேறு வேலைகள் இருக்கு. இஸ்லாமோபோபியா க்ஷெனெபோபியா அன்ன பிற போபியாக்களை விதைப்பது போன்ற முக்கியமான வேலைகள். க்யூபாவைப் பார்த்துக் கொள்ள ஒபாமா இருக்கிறாரே! Sugar Coated Liberal

  ———————————————
  //சொல்லவந்த கருத்தோடு புணரும் ஆணும் பெண்ணும் போல பொருந்திக்கொள்ள வேண்டுமென்றில்லை//
  ஹஹா, அவர்கள் பொருந்துவதே இல்லை. சில நிமிடங்களுக்கு பிறகு விலகி விடுகிறார்கள். ஓஒ, அர்த்தங்கள் எவ்வளவு தற்காலிகமானவை. ஓ மயூரன், நீங்கள் எவ்வளவு பின்நவீனமானவர்!!!

  அப்புறம், அரிகாட்டோ :)) நீங்கள் ட்விட்டியிருக்காவிடில் இங்கு நான் அலட்டிக் கொண்டிருக்கமாட்டேன். it feels good, though the moderator thinks i'm nuts. 🙁

 17. //தனிநபர்களை நோக்கி குறிவைத்து சுயஇன்பம் காணுவது அற்பத்தனமானது. //
  wtf! its good. jkjk, or you mean like instead of individuals its better to jerk off to a group of ppl?
  Gangbang, rofl!!

 18. [to ini oru: I can’t see my lengthier re:mauran comment, but I posted another comment and it appears on the page with its status of moderation. I’m CONFUSED. anyways, I type the same thing again, if you did get my last comment, please ignore this one. So sorry, I’m technically retarded.]

  ஓ தோழர் மயூரன்!! :)) > 1. பின்னவீனத்துவத்தை, கோட்பாடாகவும் அதன் கூறுகளாகவும் ஏகாதிபத்தியமும் உலகமயமாக்கமும் ஆசீர்வதிக்கவில்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள் தருக? <>2. பின்னவீனத்துவத்தை, கோட்பாடாகவும் அதன் கூறுகளாகவும் ஏகாதிபத்தியமும் உலகமயமாக்கமும் முதலாளியமும் தீவிரமாக அச்சத்தோடு எதிர்க்கின்றன என்பாற்கு எடுத்துக்காட்டுகள் தருக.<>3. தமிழ்ச்சூழலில் பின்னவீனத்துவ வாதிகளின் அத்தனை எழுத்துக்களையும் ஒரு கணக்கெடுப்புக்கு உட்படுத்தினால், அதில் மார்க்சிய எதிர்ப்பா, ஏகாதிபத்திய முதலாளிய எதிர்ப்பா அதிகமாயிருக்கும்?<.>>4. பெருவெளி என்கிற கிழக்கிலங்கையில் இருந்து வெளியான இஸ்லாத்தை நியாயப்படுத்துவதற்கான சஞ்சிகை ஏன் பின்னவீனத்துவத்தை போற்றிப்புரந்தேத்திக் கைக்கொண்டது?<<>5. பின்னவீன வருகைக்கு முன் ஏகாதிபத்தியம் மார்க்சியத்தை கோட்பாட்டு ரீதியாக எதிர்கொள்ள வைத்த வாதங்கள் என்ன? வருகைக்குப்பின் வைக்கும் வாதங்கள் என்ன?<<
  60களில்(?) TinTin வாசித்தீர்களா? குறிப்பாய் சோவியத்-இல் TiTin? அல்லது சீன் கொனெரிக்கும் ரோஜர் மூருக்கும் எதிராய் சீன மூஞ்சிகள்? அது அப்போது!
  இப்போதெல்லாம் மார்க்சிசத்தை எதிர்கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை என்று நினைக்கிறேன். லிபரல்களிடம் anti-capitalism நன்றாகவே ஊறிப் போய்விட்டது. ஆக இடதுசாரியிஸம் has lost its 'foreign' face. சொம்ஸ்கியாய் இருந்தாலென்ன நஓமி க்ளேய்னாக இருந்தாலென்ன கண்டு கொள்ள மாட்டார்கள். I mean like, அவர்கள் அதை எதிர்கொள்வதில் சிரத்தை எடுப்பதை விட வேறு வேலைத்திட்டங்களில் இருக்கிறார்கள். உதாரணமாய் ஒபாமா Health Reforms கொண்டு வர நினைத்தால் அதை கருத்தியல் ரீதியாய் சாய்ப்பதை விட மெக்சிக்கன், கறுப்பின நபர்கள் abuse பண்ணுவார்க என்று சொல்லி ஏமாற்றுவதுஇலகுவாய் இருக்கிறது. இதனால் தான் மிஸ் கலிபோர்னியாவும் ஆன் கவுல்ச்சரும் மீடியாவில் முன்னுக்கு வருகிறார்கள். நஓமி க்ளெய்ன் எல்லாம் நியூ யோர்க் ரைம்ஸ்-க்குத் தான் லாயக்கு. இதில் சொம்ஸ்கிக்கு இடம் ஏது?
  சுலபமாய் சொல்வதென்றால், மாஸ் மீடியா திசை திருப்பல்கள். வாதங்கள், ஒ மயூரன், கைவிடுங்கள், வாதங்கள் ஒருபோதும் ஒன்றையும் பண்ணிப் புடுங்கவில்லை. ரின்ரின் -உம் ரோஜர் மூரும் தான் சோவியத்தை கவிழ்த்தார்கள், கூடவே ஒத்தாசைக்கு ஒர்வெல்லும் சோல்செனித்சினும், பாஸ்ரர்நாக்கும் இருந்தார்கள்.

  ///கொகாகோலா எடுத்துக்காட்டு மிக மிக மேலோட்டமானது. சொல்லவந்த கருத்தோடு புணரும் ஆணும் பெண்ணும் போல பொருந்திக்கொள்ள வேண்டுமென்றில்லை//
  ஹஹாஹா, அவர்கள் ஒருபோதும் பொருந்துவதே இல்லை. நீங்கள் சொல்வது கூட சில நிமிடங்களே நீடிக்கிற ஒன்றுதானே. ஓ, அர்த்தங்கள் எவ்வளவு தற்காலிகமானவை. Mauran, you've gone postmodern in those two lines.

 19. [to ini oru: I can’t see my lengthier re:mauran comment, but I posted another comment and it appears on the page with its status of moderation. I’m CONFUSED. anyways, I type the same thing again, if you did get my last comment, please ignore this one. So sorry, I’m technically retarded.]

  ஓ தோழர் மயூரன்!! :)) > 1. பின்னவீனத்துவத்தை, கோட்பாடாகவும் அதன் கூறுகளாகவும் ஏகாதிபத்தியமும் உலகமயமாக்கமும் ஆசீர்வதிக்கவில்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள் தருக? <>2. பின்னவீனத்துவத்தை, கோட்பாடாகவும் அதன் கூறுகளாகவும் ஏகாதிபத்தியமும் உலகமயமாக்கமும் முதலாளியமும் தீவிரமாக அச்சத்தோடு எதிர்க்கின்றன என்பாற்கு எடுத்துக்காட்டுகள் தருக.<>3. தமிழ்ச்சூழலில் பின்னவீனத்துவ வாதிகளின் அத்தனை எழுத்துக்களையும் ஒரு கணக்கெடுப்புக்கு உட்படுத்தினால், அதில் மார்க்சிய எதிர்ப்பா, ஏகாதிபத்திய முதலாளிய எதிர்ப்பா அதிகமாயிருக்கும்?<.>>4. பெருவெளி என்கிற கிழக்கிலங்கையில் இருந்து வெளியான இஸ்லாத்தை நியாயப்படுத்துவதற்கான சஞ்சிகை ஏன் பின்னவீனத்துவத்தை போற்றிப்புரந்தேத்திக் கைக்கொண்டது?<<>5. பின்னவீன வருகைக்கு முன் ஏகாதிபத்தியம் மார்க்சியத்தை கோட்பாட்டு ரீதியாக எதிர்கொள்ள வைத்த வாதங்கள் என்ன? வருகைக்குப்பின் வைக்கும் வாதங்கள் என்ன?<<
  60களில்(?) TinTin வாசித்தீர்களா? குறிப்பாய் சோவியத்-இல் TiTin? அல்லது சீன் கொனெரிக்கும் ரோஜர் மூருக்கும் எதிராய் சீன மூஞ்சிகள்? அது அப்போது!
  இப்போதெல்லாம் மார்க்சிசத்தை எதிர்கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை என்று நினைக்கிறேன். லிபரல்களிடம் anti-capitalism நன்றாகவே ஊறிப் போய்விட்டது. ஆக இடதுசாரியிஸம் has lost its 'foreign' face. சொம்ஸ்கியாய் இருந்தாலென்ன நஓமி க்ளேய்னாக இருந்தாலென்ன கண்டு கொள்ள மாட்டார்கள். I mean like, அவர்கள் அதை எதிர்கொள்வதில் சிரத்தை எடுப்பதை விட வேறு வேலைத்திட்டங்களில் இருக்கிறார்கள். உதாரணமாய் ஒபாமா Health Reforms கொண்டு வர நினைத்தால் அதை கருத்தியல் ரீதியாய் சாய்ப்பதை விட மெக்சிக்கன், கறுப்பின நபர்கள் abuse பண்ணுவார்க என்று சொல்லி ஏமாற்றுவதுஇலகுவாய் இருக்கிறது. இதனால் தான் மிஸ் கலிபோர்னியாவும் ஆன் கவுல்ச்சரும் மீடியாவில் முன்னுக்கு வருகிறார்கள். நஓமி க்ளெய்ன் எல்லாம் நியூ யோர்க் ரைம்ஸ்-க்குத் தான் லாயக்கு. இதில் சொம்ஸ்கிக்கு இடம் ஏது?
  சுலபமாய் சொல்வதென்றால், மாஸ் மீடியா திசை திருப்பல்கள். வாதங்கள், ஒஹ் மயூரன், கைவிடுங்கள், வாதங்கள் ஒருபோதும் ஒன்றையும் பண்ணிப் புடுங்கவில்லை. ரின்ரின் -உம் ரோஜர் மூரும் தான் சோவியத்தை கவிழ்த்தார்கள், கூடவே ஒத்தாசைக்கு ஒர்வெல்லும் சோல்செனித்சினும், பாஸ்ரர்நாக்கும் இருந்தார்கள்.

  ///கொகாகோலா எடுத்துக்காட்டு மிக மிக மேலோட்டமானது. சொல்லவந்த கருத்தோடு புணரும் ஆணும் பெண்ணும் போல பொருந்திக்கொள்ள வேண்டுமென்றில்லை//
  ஹஹாஹா, அவர்கள் ஒருபோதும் பொருந்துவதே இல்லை. நீங்கள் சொல்வது கூட சில நிமிடங்களே நீடிக்கிற ஒன்றுதானே. ஓ, அர்த்தங்கள் எவ்வளவு தற்காலிகமானவை. Mauran, you've gone postmodern in those two lines.

 20. lawd, GUYS! where the phuck is my comment? You published the gangbang joke, but NOT this re:MAURAN one, wtf really! I’m copy-pasting it onemore time (assuming that it might have got lost), if you’re not gonna let it show, I’ll have my owm ways (miraddal, hehe)

  ஓ தோழர் மயூரன்!! :)) > 1. பின்னவீனத்துவத்தை, கோட்பாடாகவும் அதன் கூறுகளாகவும் ஏகாதிபத்தியமும் உலகமயமாக்கமும் ஆசீர்வதிக்கவில்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள் தருக? <>2. பின்னவீனத்துவத்தை, கோட்பாடாகவும் அதன் கூறுகளாகவும் ஏகாதிபத்தியமும் உலகமயமாக்கமும் முதலாளியமும் தீவிரமாக அச்சத்தோடு எதிர்க்கின்றன என்பாற்கு எடுத்துக்காட்டுகள் தருக.<>3. தமிழ்ச்சூழலில் பின்னவீனத்துவ வாதிகளின் அத்தனை எழுத்துக்களையும் ஒரு கணக்கெடுப்புக்கு உட்படுத்தினால், அதில் மார்க்சிய எதிர்ப்பா, ஏகாதிபத்திய முதலாளிய எதிர்ப்பா அதிகமாயிருக்கும்?<.>>4. பெருவெளி என்கிற கிழக்கிலங்கையில் இருந்து வெளியான இஸ்லாத்தை நியாயப்படுத்துவதற்கான சஞ்சிகை ஏன் பின்னவீனத்துவத்தை போற்றிப்புரந்தேத்திக் கைக்கொண்டது?<<>5. பின்னவீன வருகைக்கு முன் ஏகாதிபத்தியம் மார்க்சியத்தை கோட்பாட்டு ரீதியாக எதிர்கொள்ள வைத்த வாதங்கள் என்ன? வருகைக்குப்பின் வைக்கும் வாதங்கள் என்ன?<<
  60களில்(?) TinTin வாசித்தீர்களா? குறிப்பாய் சோவியத்-இல் TiTin? அல்லது சீன் கொனெரிக்கும் ரோஜர் மூருக்கும் எதிராய் சீன மூஞ்சிகள்? அது அப்போது!
  இப்போதெல்லாம் மார்க்சிசத்தை எதிர்கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை என்று நினைக்கிறேன். லிபரல்களிடம் anti-capitalism நன்றாகவே ஊறிப் போய்விட்டது. ஆக இடதுசாரியிஸம் has lost its 'foreign' face. சொம்ஸ்கியாய் இருந்தாலென்ன நஓமி க்ளேய்னாக இருந்தாலென்ன கண்டு கொள்ள மாட்டார்கள். I mean like, அவர்கள் அதை எதிர்கொள்வதில் சிரத்தை எடுப்பதை விட வேறு வேலைத்திட்டங்களில் இருக்கிறார்கள். உதாரணமாய் ஒபாமா Health Reforms கொண்டு வர நினைத்தால் அதை கருத்தியல் ரீதியாய் சாய்ப்பதை விட மெக்சிக்கன், கறுப்பின நபர்கள் abuse பண்ணுவார்க என்று சொல்லி ஏமாற்றுவதுஇலகுவாய் இருக்கிறது. இதனால் தான் மிஸ் கலிபோர்னியாவும் ஆன் கவுல்ச்சரும் மீடியாவில் முன்னுக்கு வருகிறார்கள். நஓமி க்ளெய்ன் எல்லாம் நியூ யோர்க் ரைம்ஸ்-க்குத் தான் லாயக்கு. இதில் சொம்ஸ்கிக்கு இடம் ஏது?
  சுலபமாய் சொல்வதென்றால், மாஸ் மீடியா திசை திருப்பல்கள். வாதங்கள், ஒஹ் மயூரன், கைவிடுங்கள், வாதங்கள் ஒருபோதும் ஒன்றையும் பண்ணிப் புடுங்கவில்லை. ரின்ரின் -உம் ரோஜர் மூரும் தான் சோவியத்தை கவிழ்த்தார்கள், கூடவே ஒத்தாசைக்கு ஒர்வெல்லும் சோல்செனித்சினும், பாஸ்ரர்நாக்கும் இருந்தார்கள்.

  ///கொகாகோலா எடுத்துக்காட்டு மிக மிக மேலோட்டமானது. சொல்லவந்த கருத்தோடு புணரும் ஆணும் பெண்ணும் போல பொருந்திக்கொள்ள வேண்டுமென்றில்லை//
  ஹஹாஹா, அவர்கள் ஒருபோதும் பொருந்துவதே இல்லை. நீங்கள் சொல்வது கூட சில நிமிடங்களே நீடிக்கிற ஒன்றுதானே. ஓ, அர்த்தங்கள் எவ்வளவு தற்காலிகமானவை. Mauran, you've gone postmodern in those two lines.

 21. mr. hari!!!!!!
  just because you happend to live in lanka, whatever bluddy and idiotic things you say for your survaival canot be justified. why dont you be a little sensinle.
  maruthaiyan could have unleashed the shabby survaival tactice of other such writers like prem ramesh and m.g. suresh.

 22. ” தைரியமான கட்டுரை.”
  க்கும்…. .
  இது கட்டுரையா கவிதையா?

 23. அடேங்கப்பா … சில்லறைப் பயல் ஹரி இங்கே போஸ்ட் மார்டனிசம் குறித்து புகுந்து விளையாடியிருக்காப்புல இருக்கு 😉 மருதைய்யன் மாதிரி மட மா – லெ ஆக்கள் கிடைச்சால் ஹரி மாதிரியான ‘தீவிர’ போஸ்ட் மாடர்னிஸ்டுகளுக்கு கொண்டாட்டம்தான் … மயூரனுக்கு ஃபேஸ்புக்குல விவாதிக்கலாமா எண்டு சாவாலெல்லாம் விடுறாப்புல …. அயோக்கிய சிகாமணிகளோட சகவாசம் … என்ன பண்றது … ஒரு இடத்தில் பேசுவதை இன்னொரு இடத்தில் யாரும் கவனித்திருக்க மாட்டார்கள் என்ற நினைப்பு … திரு. ஹரி … are u serious about what u r contesting about? R u open for dialogue … or else u r open for a open debate … i leave it to ur discretion the space in which we can discuss – debate – confront so that we can make issues clear to others …. this is an invitation … r u open? 🙂 – valar …

 24. ஐயோ ஹரி
  //ஒரு இடத்தில் பேசுவதை இன்னொரு இடத்தில் யாரும் கவனித்திருக்க மாட்டார்கள் என்ற நினைப்பு … திரு. ஹரி … அரெ உ செரிஒஉச் அபொஉட் ந்கட் உ ர் சொன்டெச்டிங் அபொஉட்? ற் உ ஒபென் fஒர் டிஅலொகுஎ //
  என்னையா வளர்மதி கரியே பூசிவிட்டார் போலிருக்கிறது.
  பேஸ் புக்கு அட்வேர்ட் கொடுத்தது போதும் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லியாவது கரியைத் துடைத்துக்கொள்ளலாமே.?

 25. //திரு. ஹரி … are u serious about what u r contesting about? R u open for dialogue … or else u r open for a open debate … i leave it to ur discretion the space in which we can discuss – debate – confront so that we can make issues clear to others …. this is an invitation … r u open? 🙂 – valar//

  rofl, is that Valarmathi? then I shall be a sillaraip payal, arr. Your words do define me, illaiyaa valar? Seems like we have put so much faith in verbal definitions so that you can curse and feel better. what a pathetic creature you are…. but i love it, just like the way I love epic failures. =)
  and this this cyberspace, i’m all aware of the traces I’m making. its no secret. I tried to synchronize all these blah-bla at one place and failed (miserably, again). check the unchecked places if you can, you know tumblr, stumble upon and i do have several dating-site accounts, wants to spy on them as well?

  //மயூரனுக்கு ஃபேஸ்புக்குல விவாதிக்கலாமா எண்டு சாவாலெல்லாம் விடுறாப்புல …. //
  Mauran is not a buddy on facebook. I never use facebook for discussions, you crack heads. Facebook for me is a search engine that finds you one night stands. And mainly I use it to play online games. If you’re using it for philosophical purposes and then of yourse, its an existentialist cookie that fills you gaping wound of eerie emptiness.
  This is why i eliminated all these dickhead writers from my list. But I do keep shoba sakthi there, cuz i still have a crush on him, tsk tsk… Wait, lemme think, Who else is there, oh two or three ppl who happen to be writers, but i keep them there because I think they are handsome enough to be there. lol
  Mauran udan naan kathaippathai ellam aaavenDU paarththu ingkayum vanthu thalaiyai nuLaiththu, ohhh how pathetic valar. I do feel sorry for you… sigh.
  twitter-layum uLavu paarppingaLo… gosh. I’m famous. =) rawr

  //R u open for dialogue … or else u r open for a open debate …//
  no Valar, i’m sorry. I have no intentions to engage with f-ing morons. Thats exactly what you’ve become in recent years.

  and Thee,
  oru Skype call enables indian feedbacks, how wonderful!! Its utter waste, neengkaL valar-ai kooddi vanthu adikka viddu, haha ROFL indeed
  //என்னையா வளர்மதி கரியே பூசிவிட்டார் போலிருக்கிறது.//
  nope, he is an epic fail. He has no powers to damage my psyche, it takes a lot to make me feel that way Thee. Reading Valar, I had no anger but a warm feeling towards him. A mild sense of helplessness and pity. but you, ugh, what shall i say, oh well, all i need is another ffing moron with amoeba-tic names/identies. What shall i say? ummm, okay you made me cry. now go and feel better about your argumentative skills. good luck
  ——
  and aregato, i’m finding a space to brag blah blah and kill my hours. Long live Postmodernist ppl

 26. Hari, i expected this from you 🙂 And don’t forget that other people too can you call you back ‘** head’ and all … And thanks for your compliment – stating me an ‘epic failure’. You are not even my political experience’s and work’s age. I have no regrets calling you silly *** because you are such a person, a go getter who has no regrets in taking advantage of any person who comes in your life and you would define it as ‘post modern self’ ! And yes, for you even facebook is a dating site … i know that 😉 You are nothing more than a brahminical kind taking advantage of post modern nuances to your own advantage!!! Thanks for letting me know that you are not ready for any debate … bye.

 27. //a go getter who has no regrets in taking advantage of any person who comes in your life and you would define it as ‘post modern self’ !//
  ah, you know me don’t you! bravo! =) I hope you know the mythical tale of an ennuch who collected dicks. My bag is full of them… its a very long list! (and it does have some bitchy c****, but I’m very kind to them, they are like my mom’s!) Taking advantage? ha, I paid them well my dear. I have bills if you need. do another skype call to clarify things (not to me, but to that gossip reporter from the damned cuntry of EElam)

  discussion? oh Valar, come as you are, then we shall. Please don’t be such a pathetic puppet. ew.

  //a brahminical kind taking advantage //
  haha, I laughed at this. really, you know me? at least one fool in this world recognize me as such. Thank You.

  and look, london has so much to offer. weekends are amazing. The last thing I need is to talk with you. I had to come here because some idiot got me reading s*** on the mail. Otherwise I wouldn’t be here typing blah blah. Next time, i won’t be bothered to click as i’ll be drooling on something much juicier. so don’t spill nonsese.
  better take care and put your intllect back in track so that i can love you once again. 🙂

 28. வர்க்க முரண்பாடுகளை ஒழிக்காமல், சாதியத்தை ஒழிக்க முடியும் என மார்க்சிய-லெனினிய பாதையில் ப்யணித்ததாய் பேசப்படும் தோழர்.ரவிக்குமார் போன்றவர்கள் சிந்திக்கத்தான் வேண்டும்.
  அதே நேரத்தில் ஈழ நிலைப்பாட்டில் மண்ணுக்கேத்த மார்க்சியம் என்ற வார்த்தை தோல்வியடைந்து விட்டதை போன்றுதான் உணர்கிறேன். பின் நவீனத்துவ வாதிகள் பிழைப்புவாதிகளே என்பதை எல்லாம் என்பதைவிட சில குழுக்களை பிரித்துப் பார்க்க வேண்டிய தருணம் இது

 29. oh this poor fella hari… too pathetic that this chap is suffering from dementia at such a young age as this…

 30. /இந்தத் தனிக்குவளை அகற்றுவதற்கான போராட்டத்தில் முக்கியமாகப் பங்கேற்றுக்கொண்ட தோழர்கள் பக்கதிலுள்ள கூடலூர் என்ற கிராமத்தைச் சார்ந்தவர்கள். அவர்களில் அதிகமாக அனைவருமே தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள். அந்த வட்டாரத்தில் சாதி ஆதிக்கத்தை நிலை நாட்டும் சாதி அதுதான். தேவர் சாதி வெறிக்குப் பெயர் போன ஊரே கூடலூர்தான். அந்த தேனீர்க்கடையில் நடந்த தள்ளுமுள்ளு மோதல்களில் நமது தோழர்களை போலீசார் அடித்து இழுத்துச் சென்றனர். இந்த சம்பவம் நடந்த நேரத்தில் இளைய ராஜாவின் மனைவி மற்றும் யுவன் சங்கர்ராஜா ஆகியோர் கூப்பிடு தூரத்தில் காரில் ஏறுவதற்காகக் காத்திருந்தனர். அப்போது சம்பவத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். இளைய ராஜா அந்த ஊர்ப் பண்ணையாரின் நண்பராக மாறிவிட்டார் என்பது வேறு கதை.
  இங்கு குறிப்பிடத் தக்க விடயம் என்னவென்றால் பறையர் சமூகத்தைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் இந்தப்போராட்டத்தில் அன்றைக்கு பெரியளவில் பங்கேற்றுக் கொள்ளவில்லை/–திரு மருதையன்.
  The Hindu’s(NEWS PAPER) adventurousness began to decline in the 1900s and so did its circulation, which was down to 800 copies when the sole proprietor decided to sell out. The purchaser was The Hindu’s Legal Adviser from 1895, S. Kasturi Ranga Iyengar, a politically ambitious lawyer who had migrated from a Kumbakonam village to practise in Coimbatore and from thence to Madras. Kasturi Ranga Iyengar’s ancestors had served the courts of Vijayanagar and Mahratta Tanjore.He traded law, in which his success was middling but his interest minimal, for journalism, pursuing his penchant for politics honed in Coimbatore and by his association with the `Egmore Group’ led by C. Sankaran Nair and Dr T.M. Nair.The partnership between Veeraraghavachariar and Subramania Aiyer was dissolved in October 1898. Aiyer quit the paper and Veeraraghavachariar became the sole owner and appointed C. Karunakara Menon as editor.
  The first issue of The Hindu was published on September 20, 1878, by a group of six young men, led by G. Subramania Aiyer, a radical social reformer and school teacher from Thiruvaiyyar near Thanjavur. Aiyer, then 23, along with his 21-year-old fellow-tutor and friend at Pachaiyappa’s College, M. Veeraraghavachariar of Chingleput, and four law students, T.T. Rangachariar, P.V. Rangachariar, D. Kesava Rao Pantulu and N. Subba Rao Pantulu were members of the Triplicane Literary Society. The British-controlled English language local newspapers had been campaigning against the appointment of the first Indian, T. Muthuswami Iyer, to the Bench of the Madras High Court in 1878. “The Triplicane Six,” in an attempt to counter the dominant attitudes in the English language press started The Hindu on one British rupee and twelve annas of borrowed money.Subramania Iyer was born in January 1855 in Tiruvadi in the then Tanjore district.The Hindu made its presence felt for the first time since its inception. Subramania Iyer was known for his fiery articles with plenty of sting. Subramania Iyer actively supported the cause of India’s freedom and used his newspaper to protest British Imperialism. In 1897, when Bal Gangadhar Tilak was arrested by British authorities, The Hindu vehementy condemned the arrest. On December 3, 1883, the paper moved to 100 Mount Road and established its own press called ‘The National Press’.Subramania Iyer campaigned vehemently for reforms in Hindu society. He supported widow remarriage and desired to abolish untouchability and child marriages. Subramania Iyer arranged for the remarriage of his eldest daughter, Sivapriyammal, who had been widowed at the age of 13, to a boy in Bombay during the 1889 Congress session.Subramania Iyer wrote in The Hindu that,”the degraded condition” of Dalits was “notorious and the peculiarities of The Hindu social system are such that from this system no hope whatever of their amelioration can be entertained.” It seemed hopeless, he commented, for Dalits “to expect redemption from anything that The Hindu might do” and “no amount of admiration for our religion will bring social salvation to these poor people”.In 1898, Subramania Iyer relinquished his claims over ‘The Hindu’ and concentrated his energies on Swadesamitran, the Tamil language newspaper which he had started in 1882. When he left The Hindu in 1898, he made the Swadesamitran, a tri-weekly and, in 1899, a daily, the first in Tamil.
  Subramania Aiyar’s pen “dipped in a paste of the extra-pungent thin green chillies” – as Subramania Bharati described his Editor’s writing style – got him in trouble with the British in 1908. He suffered jail terms and persecutions which gradually broke his health.
  In late 1980s when its ownership passed into the hands of the family’s younger members, a change in political leaning was observed. Worldpress.org lists The Hindu as a left-leaning independent newspaper.This political polarization is supposed to have taken place since N. Ram took over as editor-in-chief. Joint Managing Director N. Murali said in July 2003, “It is true that our readers have been complaining that some of our reports are partial and lack objectivity.But it also depends on reader beliefs.” However it is considered that as long Ram heads the newspaper,it will be predominantly leftist and even adopting a pro-China standpoint.”The younger generation of The Hindu’s editors have also contributed much to its commercial success.

Comments are closed.