இந்திய மனம்.. அ‌ச்சுறு‌த்த முடியாது, தொடர்ந்து போராடுவோம்!: சீமா‌ன்

தமிழகப் பொலீசார் சீமானைத் தேடிவரும் நிலையில் அவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.  சீமானின் அறிக்கை:

தமிழக மீனவர் செல்லப்பன் சிங்கள கடற்படையினரால் கொல்லப்பட்டது குறித்து நான் பேசிய பேச்சுக்காக, என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மத்திய அரசு துளியும் கவலைப்படவில்லை. ஆனால் நான் பேசிய பேச்சுக்கள், சிங்களவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுவதாக கூறி என்னை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் ஒரு மாணவன் தாக்கப்பட்டால் கொதிக்கும் இந்திய மனம், எண்ணற்ற மீனவர்களின் உயிருக்கு சிறு அசைவை‌க் கூட தெரிவிக்க மறுக்கிறது.

இன விடியலுக்கான பணியை செய்தே தீருவோம். அடக்குமுறை சட்டங்களால் எங்களை அச்சுறுத்த முடியாது. இதற்கு அஞ்சாமல் தொடர்ந்து போராடுவோம்.

என் மீதான வழக்கை சட்டப்படி சந்திப்பேன்.

3 thoughts on “இந்திய மனம்.. அ‌ச்சுறு‌த்த முடியாது, தொடர்ந்து போராடுவோம்!: சீமா‌ன்”

  1. கருணாநிதி சாவதற்கு முன்பு தனது வீழ்ச்சியை கண்டு தான் சாவார்.

  2. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்றூ உலகெங்கும் உள்ள தமிழ்ரின் உள்ளங்கவர்ந்தவர்.உலகில் தமிழைத் செம்மொழியாக்கிய உத்தமர்.ஈழத்தமிழனுக்காய் தனது பதவியை மாத்திரமல்ல ஆட்சியையே இழந்தவர் தமிழுக்காக வீழ்வார் என சரியாகவே கணீத்துள்ளீர்கள் யோகன்.எழுகின்ற சூரியன் விழுவதாய்த் தெரிந்தாலும் அது கதிரவனாய்க் காலையில் நிமிர்வதில்லையா அது போல் கலைஜரும் காலையும் மாலையும்.வீழ்ச்சி என்பது தமிழுக்கு இல்லை.

    1. அப்போ தமிழ் எழா விட்டாலும், கருணாநிதி தூங்கி எழுந்துகொண்டு தமிழகத்தை மொட்டையடித்து மஞ்சள் துண்டுக்குள் சொருகிக் கொண்டு தான் இருப்பார் என்கிறிர்கள்!

      எங்கேயோ ஏதோ களிமன் பற்றி இந்த இணையத்தளத்தில் எழுதியிருந்தீர்கள் என்று நினைவு.

Comments are closed.