அபலைப்பெண்ணிற்கு நீதி சொல்வார்களா?: அலெக்ஸ் இரவி

 ஓர் நடிகை புகார் செய்யாமலே ஓர் திருட்டு வீடியாவை வைத்து, பணம் சம்பாதிக்கும் சன் டிவியோ, நக்கீரன் பத்திரிகையோ, மற்றும் தலைப்பு செய்தியாகப் போட்டு வியாபாரத்தை கூட்டும் பத்திரிகையாளர்களோ, இந்த மாதர் அமைப்புகள் என்று சொல்லும் அமைப்புகளோ இந்த அபலைப் பெண்ணிற்கு நீதிக்கு போராடுவார்களா? இல்லை ஈழத்தமிழர், ஈழத்தமிழர்…. என்று கூக்குரல் போடும் அரசியல்வாதிகள்  தண்டிக்கப்பட வேண்டியவர்கள் நீதிக்கு முன் இட்டுச்சென்று தண்டனை வான்கிக்கொடுப்பார்களா?

அல்லது இன்று ஈழ அகதிப் பெண்ணை பாலியல் வன்முறை செய்த தமிழக போலிசாரை அவ் உயர் அதிகாரிகள் விசாரித்து அவ் அவலைப்பெண்ணிற்கு நீதி சொல்வார்களா?

இந்த இலட்சணத்தில், பெண்கள் அமைப்புகள் எதுவும் இதுவரை புகார் கொடுக்கதாத நிலையில், மாதர் அமைப்புகள் எதுவும் இதுவரை புகார் கொடுக்கதாத நிலையில்  நடிகை ரஞ்சிதா செய்தியை பிரபல்யப்படுத்துவது இது ஓர் அரசியல் சாயம்பூசப்பட்டதாகவே தெரிகின்ற நிலையில் அப்பாவிப் பெண்கள் என்றால் இவர்கட்கு இளிச்சவாய். அதற்கு மேலே “சர்வதேச பெண்கள் தினத்திற்கு முண்டியடித்து ஜெயலலிதா உட்பட வாழ்த்து செய்திகள்???

அதிலும் வைகோ தனது வாழ்த்து செய்தியில் சொல்கிறார், “உலகிலேயே எங்கும் நடந்திராத வீரகாவியத்தை ஈழத்துப் பெண்கள் போர்க்களத்தில் படைத்தனர். மகளிருக்கு எதிரான குற்றம் புரிவோரைக் கடும் தண்டனைக்கு ஆளாக்க வேண்டும். பெண்ணின் பெருமை சிறக்கட்டும். பெண் உரிமை வெல்லட்டும்.”……இதெல்லாம் இந்தப் பேசலாம் எதற்க்காக? எம் ஈழத்துப் பெண்கள் தங்கள் நாட்டில் படும் அவலம் தெரியவில்லையோ?

அவர்களின் வாழ்த்துச் செய்திகளை வாசியுங்கள்: http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=17042

சத்ய சாயிபாபாவின் மடத்தில் இறந்து யேர்மனியப் பெண் பற்றியும், பற்றைக்குள் கிடந்தது எடுக்கப்பட்ட அவரின் ககைப்பை பற்றியும் என்ன நடந்தது? அதன் பின் ஒரு முறை அவரை கொல்ல சென்றவர்களை பாதுகாவலர் கைது செய்யாமல் சுட்டுக் கொன்றது ஏன்? அதற்கு விசாரணை நடந்ததா? ஏன் மூடி மறைக்கப்பட்டது?
 
இந்தியாவின் பெரும் அரசியல் தலைவர்கள் (முன்னால் ஜனாதிபதி ஒருவர் கூட), போலிஸ் முக்கியஸ்தர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள் அவரின் பக்தர்கள் ஆகும். ஏன், நாத்திக திராவிடத் தலைவர் கருணாநிதி அவரை சென்னையில் வரவேற்றது……………பணமும், செல்வாக்கும், அரசியலும் பத்தும் என்ன….. நூறும், ஆயிரமும் செய்யும்.
 
“ஸ்ரீசத்திய சாயி சேவா அமைப்பு மூலம் சுமார் ரூ.200 கோடி செலவில் கால்வாய் பலப்படுத்தப்பட்டது. பூண் டிக்கு வரும் நீரின் வேகத்தை தாங்கும் அளவிற்கு கால்வாயின் கரைகள் மேம் படுத்தப்பட்டன”.

“சாய்பாபாவின் முயற்சியால் சென்னை மக்களுக்கு கிருஷ்ணா நீர் கிடைத்ததையொட்டி அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் 21-ந் தேதி காலை 11 மணிக்கு சென்னை மக்கள் சார்பாக நடத்தப்படுகிறது. முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். விழாவில் சத்ய சாயிபாபா கலந்து கொள்கிறார்”.
ஆதாரமும் சுவாரஸ்யமும்:  http://idlyvadai.blogspot.com/2007/01/blog-post_17.html
http://idlyvadai.blogspot.com/2007/01/blog-post_12.html
 
 
இந்த இலட்சணத்தில் யாரோ ஓர் நடிகைக்காக இந்த சன் டிவி யில் எத்தனை முக்கியத்துவம்? அதை விட ஈழப்பிரச்சனையை வைத்து வியாபாரம் செய்யும் நக்கீரன் பத்திரிகையும் நடிகை ரஞ்சிதாவை வைத்து முழு வீடியோ பார்க்க log  in  செய்யும்படி. மாறன் குடும்பத்தில் ஒருவரோ, அல்லது நக்கீரன் கோபால் குடும்பத்தில் ஒருவரோ இந்த நித்தியானந்தாவின் சீடராக இப்படி நடிகை ரஞ்சிதாவின் இடத்தில் இருந்தால் இவ்வளவு விளம்பரம் செய்து இருப்பார்களா?
 
பெண்ணியல் வாதி கனிமொழி எங்கு சென்றுவிட்டார்? அத்துடன் ஈழத்தமிழருக்காக குரல் கொடுப்பவர்.

நேற்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடிய உயர் மத்திய தரப்பு மாதர் அமைப்புகள்,  உயர்தரப்பு மாதர் அமைப்புகள் இந்தப் பெண்ணின் நீதிக்காக குரல் கொடுப்பார்களா?
 
மறு பக்கத்தில், மேல்மருவத்தூரில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா மிகுந்த உற்சாகத்துடன் ஒருவார விழாவாக கொண்டாடப்பட்டது. அவரது 70வது பிறந்தநாளாகிய இன்று அவரை அலங்கரிக்கப்பட்ட மலர் அலங்கார ரதத்தில் பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். விழா சிறப்பு மலரை வெளியிட்டு அருள்தரிசனம் தந்த அடிகளாரிடம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அருளாசி பெற்றனர்.
 
பிப்ரவரி 13 முதல் 15 தேதிவரை நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமில் 5000 பேருக்கு மேல் பங்கேற்று சிகிச்சை பெற்ற மக்கள் நலப் பணியுடன் விழா நிகழ்ச்சிகள் துவங்கின. பிப்ரவரி 25 முதல் தொடர் அன்னதானம், கலச வேள்வி பூசை, சிறப்பு பாத பூசைகள், தினசரி பல்வேறு சிறப்பு கலைநிகழ்ச்சிகள், தங்கரதத்தில் வரவேற்பு, ரூ.1கோடி மதிப்பிலான மக்கள் நலப்பணிகள், வானத்தில் வண்ணக் கதிரொளிக் காட்சிகள் என தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. .
அருளாசி மேடையில் பிறந்தநாள் விழா சிறப்பு மலரை அடிகளார் வெளியிட தமிழக விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி எம். தணிகாசலம் முதலியோர் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து அங்கு காத்துக் கொண்டிருந்த பல்துறைப் பிரமுகர்களும், அரசு உயர் அதிகாரிகளும் ஆசி பெற்றனர்.

மேலும் அறிய: http://www.kalaikesari.com/culture/culturenews/Results.asp?key_c=54
 
இவருக்கும்உலகம் பூராகவும் கிளைகள் உள்ள நிலையிலும், பல ஈழத்தமிழர்கள் போட்டி போட்டு கிளைகள் (டொராண்டோவிலேயே ஒன்றில் இருந்து பிரிந்து என்று மூன்று கிளைகள்) அமைத்து வழிபடும் நிலையிலும், கூடுதலாக செவ்வாடை பெண்களையே கொண்டுள்ளதாலும் இவ் ஆன்மீக வாதி தானும் இப்பெண்ணிர்காக குரல் கொடுப்பாரா? இல்லை…….. ஏன் நமக்கு வம்பு என்று விட்டுவிடுவார்கள்.   அப்பெண்ணின் குடும்பத்தார் என்ன நன்கொடை கொடுக்கப்போகிறார்களா?

“ராமேஸ்வரம்” திரைப்படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. “நந்தா”, “கன்னத்தில் முத்தமிட்டால”; அந்த வரிசையில் இன்று “ராமேஸ்வரம்”. ஈழத்தமிழரின் அகதி நிலையை எடுத்துக்காட்டும் திரைப்படமாக இந்திய இயக்குனர்களால் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் இவை. இந்த மூன்று திரைப்படங்களிலும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இந்தியர்கள் ஈழத்து அகதிகளுக்கு எந்த அளவிற்கு உதவி செய்யத் தவிக்கின்றார்கள் என்பதே.”

“நான் படித்த கட்டுரைகள், சிறுகதைகளிலில் இருந்தும், தனிப்பட்ட முறையில் கேட்டறிந்த சம்பவங்களில் இருந்தும் ராமேஸ்வரத்தில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்கள் எந்த அடிப்படைத் தேவையும் பூர்த்தி செய்யப்படாமலும், அதே வேளை பலவிதமாக வன்முறைக்குள்ளாக்கப்பட்டும் வருகின்றார்கள் என்பதே. ஆனால் மேற்கூறப்பட்ட எந்த ஒரு திரைப்படத்திலும் அதற்கான அடையாளங்கள் எதுவும் காட்டப்படவில்லை. தமிழ்நாட்டின் அரசியல் அட்டூழியங்கள், வன்முறைகள், போன்றவற்றை படத்திற்குப் படம் புடம்போட்டுக் காட்டும் எந்த ஒரு இயக்குனரும் ரமேஸ்வரத்தில் ஈழத்து அகதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சிறிதேனும் காட்டுவதற்கு எதற்காக அஞ்சுகின்றார்கள்?” http://karupu.blogspot.com/2008/04/blog-post.html

இப்படியும் ஓர் குமுறல், ஆனால் இதுதான் நிஜம். ஈழத்தமிழரை வைத்து சம்பாதிப்பவர்கள் இந்தியாவில் இருக்கும் ஈழத்தமிழருக்கு என்ன செய்கிறார்கள்? இதற்கு மேலையும் பணத்திக்காக எத்தனையோ நடக்கிறது. பிணத்தின் மேலேயே பணம் கறப்பவர்கள்.

அதே நேரத்தில் “எந்த ஒரு மனிதப் பிறப்புக்கும் தன் சொந்த நாட்டில் வாழ்வது தான் கௌரவம்;பாதுகாப்பு. ஆனால் ஈழத் தமிழனுக்கென்று ஒரு பாழ் விதி எழுதி வைத்திருக்கிறான் கடவுள் அகதிகளாக அலைய வேண்டுமென்று. சொந்த மண்ணிலேயே வாழும் உரிமையோ, தகுதியோ இல்லாதவனாக அகதியாக்கப்பட வேண்டுமென்ற கொடும் விதி எழுதியவன் எவனோ அவனை நான் மதியேன்!”
 
“உயிர் தப்பி ஓடி வர ஈழத் தமிழனுக்கு பரப்பளவுகள் குறைந்து கொண்டே போகிறது. ஒன்று தமிழகத்தை நோக்கி ஓடி வர வேண்டும்; அல்லது இலங்கையின்  கொழும்பை நோக்கி பயணிக்க முனைய வேண்டும். அகதியாக கொழும்பில் இருக்க முடியாது; அங்கே தமிழனை விரோதியாகத் தான் பார்ப்பார்களே தவிர அகதியாக புகலிடம் கொடுக்கமாட்டார்கள். ஆக..எஞ்சியிருப்பது 24 மைல் கடல் தாண்டிய தூரத்திலிருக்கும் தமிழகம் மாத்திரமே!! என்றைக்கு உயிருக்காக ஓடி  வர நினைத்தோமோ அன்றைக்கே எமது நிலை அண்டிப் பிழைக்கும் நிலைக்கு வந்துவிட்டது என்று தெரிந்தே தான் அகதியாக ஓடி வருகிறோம்”.

“எங்கே தமிழன் அடித்து துரத்தப்படும் போதும் ஐயோ என்று ஓடி வருவது தமிழகத்தை நோக்கித் தான்.  நடுக்கடலில் உயிருக்காகத் தத்தளிக்கும் நீச்சல் தெரியாத எந்த பிறவியும்  கைக்கு எந்த ஒரு பொருள் கிடைத்தாலும் அதைப் பற்றி கரையேறித் தப்பிவிடத் தான் எத்தனிக்கும். அப்படியொரு சூழ்நிலை தான் எந்த ஒரு அகதிக்கும்.
முதலில் உயிரைக் காப்பாற்றினால் போதும் என்ற நிலை. தவிப்பு.. ஓடி வந்து விடுகிறோம். வந்த பின் உயிர் வாழ வேண்டுமென்றால் எத்தனை இன்னல்களையும் தாங்கித் தானாக வேண்டும். எத்தனை அவமானங்களையும் சகித்துத் தானாக வேண்டும்.  நாம் தான்  எல்லாமிழந்துவிட்டோமே? எம்மைத் திரும்பக் கட்டியெழுப்பவோ நாம் இன்னார் என்று அடையாளம் காட்டவோ இனி என்ன இருக்கிறது, உயிரைத் தவிர…? பாழாய்ப் போன வயிறும், உயிரும் இருந்து தொலைக்கிறதே… என்ன செய்வது?”

ஆனாலும்………….

“எப்போது எமக்கான சுயம் கிடைக்குமோ அப்போது தான் அகதி என்ற வார்த்தை தமிழினத்தின் வரலாற்றிலிருந்து அகற்றப்படும்.  கற்பனை செய்து பாருங்கள்..அகதிகளாக தமிழகம் வருவதை விட , சுதந்திரமானவர்களாக தொப்புள் கொடியுறவுகளிடம் வரும் போது  ஈழத் தமிழனுக்கு எத்தகைய ஆத்ம திருப்தி கிட்டும் என்று??. அந்த சந்தோசத்தின் அளவீடு என்பதே தனித்துவமானதாயிருக்கும்.”

“எப்போது தமிழினம் தன் சொந்த மண்ணில் சுதந்திரமாக சுவாசிக்க முடியுமோ அப்போது தான் அகதி என்ற நிலைபாடு எம்மை விட்டுப் போகும்.”

“அதற்கான வழிமுறையை ஈழத் தமிழன் அமைக்க முற்பட்டால் தடைக்கல் ஏன் மற்றவர்கள் போட நினைக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு தார்மீகமான , மனிதாபிமான, உணர்வுமிகுந்தவர்கள் நியாயமான பதில் தரமுடியுமா?”  என்று ஓர் அகதியின் எதிர்பார்ப்பு. http://groups.google.ge/group/piravakam/msg/2b11ee3d3391b823

இதற்கு இன்று நமது தாயகத்தில் வாக்கு வேட்டைக்காக இறங்கியிருக்கும் எமது வேட்டையாளர்கள் (ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட தமிழ் வேட்டையாளர்கள்) குரல் கொடுப்பார்களா? அல்லது அரசாங்கதுதுடன் இணைந்து உள்ளவர்கள், ஜனாதிபதி தெரிவில் மக்களுடன் சேர்ந்து மகிழ்ச்சிக் கடலில் குளித்தவர்கள், நிருபாமாவை சந்தித்தவர்கள், நல்லிணக்க, சமூக நலத்துறை அமைச்சர்கள் குரல் கொடுத்து இவ் நம்  தொப்புள் கொடியுறவுகளை அவர் தம்  தொப்புள் கொடியுறவுகளிடம் சேர்ப்பார்களா? முயற்சி தன்னும் எடுப்பார்களா?
 
இன்று இவ் வாக்கு வேட்டையாடும், வேட்டையாளர்கள் இவர்களை தாயகம் அழைத்து மீள் குடியேற்றினால் அவ் இரண்டு இலட்ச்சத்திர்க்கும் மேற்ப்பட்ட வாக்குகளும் இவர்களுக்குத்தானே, அதைதன்னும் சிந்திக்கிறார்களா? இதைப்பற்றி பலதடவை எடுத்துக் கூறியுள்ளேன். தற்போது தமிழ் நாட்டு அரசியலை விட கேவலமாகிய அரசியலாகிவிட்டது.

குஷ்புவிற்கு, ராதிகாவிற்கு, நமீதாவிற்கு, நயன்தாராவிற்கு ஓர் பிரச்சனைஎன்றால் தமிழகமே திரண்டு எழும்!

ஏன் நம் நாட்டிலும் வசந்தம் கொண்டாடுபவர்கள் அவர்களைக் கூப்பிட்டு அரங்கேற்றி மாலைகள் , பூச்செண்டு கொடுத்து வாழ்த்துவார்கள். அதுமட்டுமா இதை எதோ ஈழத்தமிழரின் அடிப்படைப் பிரச்சனை எல்லாம் தீர்ந்து விட்டதாக பிரச்சாரம் செய்யும் இணையதளங்கள் வேறு. கூலிக்கு மாரடிப்பவர்களை, கவர்ச்சியை காட்டுபவர்களை இவ்வளவு பணம் செலவழித்து கூப்பிடுகிறவர்கள், ஏன் நம் தொப்புள்கொடி உறவுகளைக் கூப்பிடக்கூடாது……. முயற்ச்சிக்கக்கூடாது? அவர்களும் தமது திறமைகளை வெளிக்கொண்டுவருவார்கள் தானே! அவர்கள் உங்களுக்கு கவர்ச்சியில்லையா?

வாழ்க தமிழகம்! வாழ்க ஈழத்தமிழ் எழுச்சி!

எல்லாவற்றிக்கும் மனிதாபிமானம் வேண்டும்!

– அலெக்ஸ் இரவி

More news in
http://inioru.com/?p=11243
http://inioru.com/?p=11266
http://www.athirady.info/archives/63033

7 thoughts on “அபலைப்பெண்ணிற்கு நீதி சொல்வார்களா?: அலெக்ஸ் இரவி”

 1. நியாமான கேள்விகள்…….
  //

  வாழ்க தமிழகம்! வாழ்க ஈழத்தமிழ் எழுச்சி!
  //

 2. Shantidevi (name changed), a Sri Lankan refugee, committed self-immolation after a Sub Inspector allegedly outraged her modesty inside the police station in Karur, Tamil Nadu on March 7, the Times of India reported today.

  According to the report she is battling for her life in a government hospital. The 27-year-old was staying in a refugee camp near Chennai.

  According to lawyers, police tried to prevent her from giving a “dying declaration” to a magistrate, and that what had been recorded was a watered down version obtained under duress and coercion. – Daily Mirror

 3. அபலைப் பெண்களீன் எண்ணீக்கை என்பது தமிழ்னாட்டில் மிக அதிகம் இதில் இலங்கைத் தமிழ் என்றூ தேடிப்பிடிப்பதிலை.இவருடைய விதி பாதிக்கப்பட்டு விட்டார்.வேதனையும்,சொதனையுமான சம்பவமாகி விட்டது.முள்ளீல் நடக்கும்போது அவதானமாக இல்லாது இருந்து விட்டு முள்லை குற்றம் சொன்னால் எப்படி.நமீதா,ராதிகா கூட ஒரு வகையில் அபலைப்பெண்கலே.

 4. தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் தங்கியுள்ள அகதி முகாமில் தங்கியிருந்த பெண் மீது தமிழக காவல்துறையினர் மேற்கொண்ட பாலியல் துன்புறுத்தல்களை தொடர்ந்து தற்கொலைக்கு முயன்ற அந்த பெண் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

  தமிழகத்தில் உள்ள கரூர் பகுதியில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் தங்கியுள்ள முகாமில் உள்ள பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற தமிழக காவல்துறையினர் அவர் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டிருந்தனர்.

  காவல்நிலையத்தை சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட இந்த துன்புறுத்தல்களால் மயக்கமடைந்த பெண்ணை அவர்கள் முகாம் பகுதியில் அனாதரவாக கைவிட்டு சென்றிருந்தனர்.

  காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால் மனமுடைந்த குமார் பத்மதேவி (28) என்ற ஈழத்தமிழ் பெண் தனக்கு தனே தீமூட்டி தற்கொலை செய்ய முயன்றிருந்தார். எனினும் அயலவர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் (28) வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

  தன்னை தனியார் வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்ற தமிழக காவல்துறையினர் பலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டதாகவும், அதனை வெளியே தெரிவித்தால் தனது கணவனை சுட்டு கொன்றுவிடுவதாகவும் மனித உரிமை செயற்பாட்டாளர்களிடம் பத்மதேவி தெரிவித்தள்ளார்.

  இதனிடையே பத்மதேவியின் உடலை காவல்துறையினர் தகனம் செய்யக்கூடாது என்ற கோரிக்கைகளை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் விடுத்த போதும் அதனை அவர்கள் பொருட்படுத்தாதது அதிக சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

  ஈழத்தமிழ் மக்களை தீண்டத்தகாதவர்களாக நடாத்திவரும் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு அகதிகளாக சென்றுள்ள அப்பாவி மக்கள் மீது பல தரப்பட்ட வன்முறைகளை அண்மைக்காலமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  தொடர்பான செய்திக்கும் படத்திற்கும்:
  http://www.lankasrinews.net/view.php?2bIAQAe0d1lmI0ecLBYK4a4V54Acd2cYB2dc2Amd2a444OX3e230Mm30

 5. அப்பனே சாமி! “சிலோன் அகதிங்க” மேலான அதிகாரிகளின் கொடுமைகள் கட்டுக்கடங்கா.ஆயிரத்தில் ஒன்று தான் வெளியே தெரிகிறது என்பதே உண்மைநிலை. பனையால் விழுந்தவனை ஏறி மிதிப்பதில்நம்மவரக்கு நிகர் வேறுன்றோ?

 6. கரூரில் தீக்குளித்து இறந்த இலங்கை அகதிகள் முகாம் பெண்ணின் உடல் திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது.

  ​ ​ கரூர் ராயனூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் குமார் என்ற தற்கொலைக் குமார் ​(32).​ இவர் காந்திகிராமம் இரட்டைக்கொலை வழக்கில் கைதாகி,​​ திருச்சி மத்திய சிறையில் உள்ளார்.

  இந்நிலையில், இவரது மனைவி பத்மாதேவி என்ற தேவியை ​(26) பசுபதிபாளையம் போலீஸôர் மார்ச் 7 ஆம் தேதி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

  ​ ​ காவல் நிலையத்திலிருந்து அன்று மாலை வீடு திரும்பிய தேவி,​​ மண்ணெண்ணெó ஊற்றித் தீக்குளித்தார்.​ இதையடுத்து கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்,​​ சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

  ​ ​ இதையடுத்து,​​ அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க கரூர்,​​ திருமாநிலையூர்,​​ ராயனூர் பகுதிகளில் ஏராளமான போலீஸôர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

  ​ ​ திங்கள்கிழமை காலை கரூர் அரசு மருத்துவமனை முன்பு ராயனூர் அகதிகள் முகாம் வாசிகள் குவிந்தனர்.​ பலாத்கார முயற்சியால் தேவியின் சாவுக்குக் காரணமான போலீஸôர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்;​ இறுதிச் சடங்கில் சிறையிலிருக்கும் குமார் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

  ​ ​ இதையடுத்து கரூர் சார்ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஹனீஷ்சாப்ரா,​​ துணைக் காவல் கண்காணிப்பாளர் ஞான.​ சிவக்குமார் ஆகியோர் முகாம்வாசிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

  ​ ​ அப்போது,​​ குமாரை திருச்சி மத்திய சிறையிலிருந்து வெளியே எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மற்ற கோரிக்கைகள் மீதும் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.​ இதையடுத்து குமாரை சிறையிலிருந்து வெளியே கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

  ​ ​ பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர்,​​ தேவியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு,​​ அங்கிருந்து பாலம்மாள் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

  ​ ​ போலீஸ் வாகனத்தில் திருச்சியிலிருந்து வந்த குமார்,​​ தனது மனைவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.​ இதையடுத்து,​​ மின் மயானத்தில் உடல் எரியூட்டப்பட்டது.

  ​ ​ தொடர்ந்து,​​ ராயனூர் முகாம் பகுதியில் ஏராளமான போலீஸôர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.​ தேவியின் இறப்பிற்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக முகாமின் வாயிலில் கருப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது.

 7. தமிழக பொலிஸ் அதிகாரிகள் மூன்று பேரினால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதினால் தற்கொலை செய்து கொண்ட இலங்கை தமிழ் பெண்ணுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்துக்கு தமிழக அரசாங்கம் தடைவிதித்துள்ளது.

  இலங்கையை சேர்ந்த குமார் பத்மாவதி என்ற அவர், அகதி முகாமில் வசித்த வந்த வேiளியில் தமிழகத்தின் மூன்று பொலிஸ் அதிகாரிகள் அவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர்.

  இந்த நிலையில் இதற்கு எதிராக இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காததை முன்னிட்டு, மனித உரிமைகள் பாதுகாப்பகம் மற்றம், பெரியார் திராவிட கட்சி என்பன ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று ஏற்பாடு செய்திருந்தன.

  எனினும் அதற்கு தமிழக பொலிஸாரும், அரசாங்கமும் அனுமதி வழங்கவில்லை என செய்தியாளர் சந்திப்பின் போது, பெரியார் கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

  28 வயதுடைய குமார் பத்மாவதி, கரூர் வைத்தியசாலையில் வைத்து தமது மரணப்படுக்கையில் கொடுத்த வாக்குமூலத்தில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் தம்மை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக தெரிவித்திருந்தார்.

  எனினும் இதுவரையில் எந்த நடவடிக்கையையும் இதற்கு எதிராக தமிழக பொலிசார் மேற்கொள்ளவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  எனினும் இதற்கான அனுமதியை வழங்க பொலிஸார் மறுத்துள்ளனர். இதன் பின்னணியில் தமிழக அரசாங்கமே செயற்பட்டுள்ளதாக கொளத்தூர் மணி தெரவித்துள்ளார்.

  எனவே இது தொடர்பில் விசாரணை நடத்தி, சரியான தண்டனை வழங்க மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

Comments are closed.