அழிக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களும் ஆர்ப்பாட்டமும்.

இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பதும் இலங்கை மக்கள் மீதான அரச பாசிசத்தின் கோரம் என்பதும் எந்தத் தடையுமின்றி நாளாந்தம் மக்களை சூறையாடிக்கொண்டிருக்கிறது. தமிழ்ப் பேசும் மக்கள் இக்கட்டான காலகட்டம் ஒன்றை கடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது பல்வேறு வழிகளில் கட்டவிழ்த்து விடப்பட்டிருகும் அடக்குமுறை என்பது மனித குலம் வெட்கித் தலைகுனியும் வகையில் நிகழ்த்தப்படுகிறது. ஒவ்வொரு காலையிம் மரண பயத்தோடு துயிலெழும் வன்னியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் மரணத்துள் வாழ்கிறார்கள். துப்பாக்கி முனையில் நாளாந்த வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் வட்டகு மக்க்ள் மீதான உளவியல் போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. கிழக்கில் பட்டினிச் சாவை எதிர்நோக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பிள்ளையான் ஆட்சித் தீக்குள் எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்துவைக்கப்படுள்ள ஆயிரக்கணக்கான கைதிகள் மக்கள் விரோதிகளின் சிறைக்குள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். நாளாந்தம் திட்டமிட்ட குடியேற்றங்கள் புற்றுநோய் போல தமிழ்ப் பிரதேசங்களை தின்றுகொண்டிருக்கிறது. மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர்.

அரச துணைக் குழுக்கள் தமது அபிவிருத்தி, மீள் கட்டமைப்பு என்ற தலையங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஆதரிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசின் எடுபிடியாக மாறிவிட்டது.

அழிக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களுக்காகக் எங்காவது மூலையில் நிசப்தத்தோடு நிசப்தமாய்ச் சில குரல்கள் மட்டும்தான் ஒலிக்கின்றன. தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்கள் குறிக்கத் தக்கன. புலம் பெயர் நாடுகளில் புலி சார் அமைப்புக்கள், நாடுகடந்த தமிழீழம் எல்லாமே மௌனமாய் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இப்போது நடந்துகொண்டிருக்கும் இலங்கை அரசின் இனச்சுத்திகரிப்பை உலகெங்குமுள்ள மனிதாபிமானிகளுக்கு உரக்கச் சொல்லவேண்டும். பலஸ்தீனம் அழிக்கபடும் போதெல்லாம் உலக மனிதாபிமனிகள் தெருவில் இறங்கிக் குரல்கொடுப்பதைப் பார்த்திருக்கிறோம். ஈழம் மக்களின் அழிப்பை நாம் உலக மக்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும்.

எமது நியாயத்தை அவர்களிடம் கூற வேண்டும். இந்த வகையில் புதிய திசைகள் 21.08.2010 அன்று லண்டனில் இலங்கை அரசின் அடக்கு முறைகளுக்கு எதிரான ஆர்ப்பட்டத்தையும் பிரசார நிகழ்வையும் ஏற்பாடு செய்துள்ளது.

முற்போக்கு நேபாள சமூகம் என்ற அமைப்பு இந்த ஆர்ப்பட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது. பிரித்தானிய போல்சுவிக் கட்சி தனது ஆதரவையும் பங்களிப்பையும் வழங்க உறுதிசெய்துள்ளதாக புதிய திசைகள் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை தமிழ் நாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தினரும்  ஆதரவுப் போராட்டம் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர். முத்துக் குமாரின் மரண ஊர்வலத்தில் வை.கோ, நெடுமாறன் போன்ற சந்தர்ப்பவாதிகளை எதிர்த்து அந்த ஊர்வலத்தை எழுச்சியாக நடத்தியவர்கள் மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

2 thoughts on “அழிக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களும் ஆர்ப்பாட்டமும்.”

  1. மக்கள் கலை இலக்கிய கழகம் வாழ்க !!

  2. புதிய திசைகள் சரியான திசையில் பயணம் செய்வது போல் தெரிகிறது. எமக்கு நேபாளம் போன்ற போராட்டம் வென்ற நாடுகளின் உறவுகள் தேவைதான்.

Comments are closed.