அழகிப் போட்டிக்கு எதிராக : மாவோயிஸ்ட் எம்.பீ கள்

07.08.2008 வியாழக்கிழமை நடைபெறவிருந்த நேபாள அழகிப்போட்டி காலவரையறையின்றி ஒத்திப் போடப்பட்டுள்ளது. ‘மறைந்திருக்கும் புதையல்’ என்ற தலைப்பில் நடைபெறவிருந்த இந்த அழகிப் போட்டிக்கு எதிராக நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் பெண் எம்.பி.க்கள் ஆர்த்தெழுந்ததையடுத்து போட்டி கைவிடப்பட்டது. கேளிக்கைப் பொருளாகப் பெண்களின் உடல்கள் காட்டப்படுவதை நாம் வன்மையாக எதிர்க்கிறோம் என்று மாவோயிஸ்ட் கட்சி எம்.பி.யான செல்வி.அம்ரிதா தாபா தெரிவித்தார். ‘நேபாளத்தின் புதிய சமஷ்டி ஜனநாயக முடியரவில் இவ்வாறான அழகிப் போட்டிகள் தேவையில்லை. பெண்களைக் கேளிக்கைப் பொருளாக்கி அங்கங்களைக் காட்டும் ஆபாசம் தேவையில்லை. நாம் அழகிப் போட்டி நடைபெற அனுமதிக்க மாட்டோம்” என்றம் செல்வி அம்ரிதா எம்.பி. கூறினார். “முதலாளித்துவ சக்திகளின் ரசனைக்காக நடத்தப்படும், பெண்களுக்கு எதிரான நிகழ்ச்சியே அழகிப் போட்டி” என்றும் அவர் சொன்னார். புத்திக் கூர்மையை விட உடல் அழகுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் அழகிப் போட்டியை நாம் முற்றுமுழுதாக வெறுக்கிறோம் என்ற மற்றொரு பெண் எம்.பி. சொன்னார்.