அராஜக உற்பத்தியை ஊக்குவிக்கிறது- உலக வங்கி.

நவீனத்துவ காலனித்துவ கொள்கைக்கான தூண்டிலாகச் செய்லபடும் ஐ,எம்.எப்ஃ எனப்படும் உலக வங்கி ஆசியப்பொருளாதாரம் குறித்த தன் பார்வை வெளியிட்டுள்ளது. ஆசியா குறித்து அது ” திடீர் பொருளாதார மாற்றம் என்பது சாதகமானதாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கலாம். தென் கொரியாவின் தெஜியான் நகரில் ஆசிய சர்வதேச மாநாடு, திங்கள்கிழமை தொடங்கியது. 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஐஎம்எஃப் மேலாண்மை இயக்குநர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் பேசியது: இப்போது பெரும்பாலான ஆசிய நாடுகள் பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வருகின்றன. இதனால் சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் ஏற்படும் சரிவுகள் ஈடுகட்டப்படுகிறது. ஆசிய நாடுகள் எதிர்காலத்தில் ஏற்படும் திடீர் பொருளாதார மாற்றங்களை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும். வேகமாக வளர்ந்து வரும் நாடுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து முதலீட்டை ஈர்ப்பதே பிரச்னையாக இருக்கிறது. 2010-ல் ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று ஐஎம்எஃப் கடந்த வாரம் மதிப்பிட்டது. கடந்த ஏப்ரலில் இந்த மதிப்பீடு 7 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தது. சர்வதேச பொருளாதாரத்தில் இப்போது ஆசிய கண்டத்தின் ஆதிக்கமே அதிகமுள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆசிய நாடுகள் தங்களது வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ள உள்நாட்டில் உற்பத்திப் பொருள்களுக்கான தேவையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆசிய கண்டத்தில் நாட்டுக்கு நாடு பொருளாதார நிலை மாறுபடுகிறது. ஒவ்வொரு நாடும் வெவ்வேறு வேகத்தில் வளர்ந்து வருகின்றன. இந்த சூழ்நிலை சற்று சவாலானது என்றார் டொமினிக்.