அரச தொழில் துறைகளில் தமிழ் பேசுவோர் புறக்கணிக்கப்பு : தமிழ்த் தலைவர்கள் அறிக்கைகள் ?

அண்மைக்காலங்களில் அரசினால் வழங்கப்பட்டு வரும் புதிய தொழில் நியமனங்களில் தமிழர்கள் பறக்கணிக்கப்பட்டு வருகின்றமை பற்றிப் பல தகவல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தன. அரச நிர்வாக சேவைக்கான நியமனம் , வட மாகாணத்திற்கான நில அளவையாளர் நியமனம் என்பவற்றில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தமை பற்றி ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இவ்விடயம் தொடர்பாக தமிழ் அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தற்போது விசனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பாராபட்சமாக நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது, இதனை ஒர்; அநீதியாகவும் அநியாhயமாகவும் நோக்க வேண்டும், இவ்வாறான நடவடிக்கைகள் தமிழ் பேசும் மக்களை வெகுவாகப் பாதிக்கும் எனக் கூறியிருப்பதுடன் இவ்வாறான விரும்பத்தகாத செயற்பாடுகள் தொடராமல் இருப்பதற்கு ஜனாதிபதி உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்திருக்கிறார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹஸனலி, இந்தச் சிறிய இடைவெளிக்குள்ளேயே இவ்வாறு என்றால் மூன்று நான்கு வருடங்களில் இதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் எனவும் அந்தந்த மாவட்டத்தில் வாழும் மக்களின் இனவிகிதாசாரத்துக்கு ஏற்ப தொழில் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.
ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் யோராஜன், வட, கிழக்கில் சிங்கள உத்தியோகத்தர்களை மட்டும் அரசாங்கம் நியமிக்க முயற்சிக்கவில்லை, இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களையும் வட, கிழக்கு மாகாணங்களில் முக்கிய பதவிகளில் அரசாங்கம் நியமித்துவருகிறது எனத் தெரிவித்திருக்கிறார்.
புளொட் இயக்கத் தலைவர் சித்தார்த்தன், அரசாங்கத்தின் இந்த புறக்கணிப்பு நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம், எமது எதிர்பையும் வெளிப்படுத்துகிறோம் எனக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
த.தே.வி,கூ. செயலாளர் சிவாஜிலிங்கம் இவை கவலை தரும் விடயங்களாகும், இவ்வாறு ஒடுக்குமுறைகளைக் கையாளும் சிங்களத் தேசிய இனம் ஒடுக்கப்படும் இனமான தமிழ், முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த இளைஞர்களை ஒரு தீவிரப்பாதைக்கு இட்டுச் சென்று இன்னொரு கிளர்ச்சிக்கு வித்திடுவதாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இணக்க அரசியலைப் பற்றிப் பேசிவருகிற தமிழ்த் தலைவர்கள் வழமை போல இது குறித்து மௌனமாகவே இருந்து வருகின்றனர். எதிர்ப்பரசியல் மற்றும் அழுத்த அரசியலைப் பேசி வருகிற தமிழ்த் தலைவர்கள் இவ்வாறு அறிக்கைகளை விடுத்து தாம் இவற்றை எதிர்ப்பதாகக் காட்டியுள்ளனர்.
இதற்கிடையில் வீரகேசரி ஆசிரியர் தனது பகுதியில், யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெற்ற இனவாத நோக்கிலான சில விடயங்களை படடியலிட்டுச் சுட்டிக்காட்டியிருப்பதுடன், ‘ அரச தரப்பிலிருந்து அனைத்தினையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் இவர்கள் (அரச ஆதரவு தலைமைகள்) இந்த விடயங்கள் தொடர்பாக என்ன செய்தார்கள். எதனைச் சிந்தித்தார்கள் என்றால் ஒன்றுமே இலலை என்பதே பதிலாக வரும்” ‘இந்த விடயங்கள் தொடர்பாக அரசு சாரா தமிழ்க் கட்சிகள் குரல் கொடுத்தும் அவற்றின் தொண்டைகள் கிழ்ந்தனவே தவிர, உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை” எனவும் குறிப்பிட்டிருக்கிறார். தனது பகுதியின் இறுதியில் ” தமிழ்த்; தலைமைகள் இனியாவது சிந்திச்சுச் செயற்பட வேண்டும், தமக்கு நீதி கிடைக்காதா உரிமை கிடைக்காதா என்று ஏங்கி நிற்கும் தாம் சார்ந்த சமூகத்தைப் பற்றிச் சிந்தித்து தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும், அல்லது செய்பவனை விட்டு விட்டு ஒதுங்கிக் கொள்வதும் சிறந்ததே” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.